Tamil Arts Volume33
தமிழரின் தொன்மை - பூம்புகார்
செல்வராஜ் சபாபதி
கடல்கோளால் சிதைந்த புகார்நகரப்பகுதிகள்
புகார்நகரம் சங்க காலத்தின் இறுதியில் மிகவும் விரிந்து பரந்து பட்ட ஊராகத் திகழ்ந்துள்ளது. அத்தகைய புகார் நகரம் சோழன் கிள்ளிவளவன் காலத்தில் இந்திரவிழா கொண்டாட மறந்தமையால் கடல்கோல் இப்புகார் நகரை ஆட்கொண்டது என மணிமேகலை கூறுகிறது. கடல்கோளால் முழுவதும் அழியாமல் போன புகார்நகரின் ஒரு பகுதியான மருவூர்ப்பாக்கமே கடலால் கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும் என்பது பட்டினப்பாலை, சிலம்பு, மணிமேகலை போன்ற இலக்கியங்களையும் வரலாற்றுக் குறிப்புகளையும் ஒப்பு நோக்கும் பொழுது அறியமுடிகின்றது.
“சேந்நெலஞ் செறுவின் அன்னந்துஞ்சும்
பூக்கெழுபடப்பைச் சாய்க்காட்டன்ன” — அகம் 73
என்றும் அடுத்து கூறும் பொழுது “நெடுங்கதிர்க் கழனித் தண்சாய்க்கானம்”-அகம்220 பாடல்களிலும் குறிக்கப்படுவதைக் காணலாம். சாய்க்காடு என்பது புகார் நகர எல்லையில் அமைந்த பகுதியாகும். இவ்வூர் புகார் நகரின் ஒரு பகுதியே என்பதை தண்புகார்ச் சாய்க்காட் டெந்தலைவன்” என்றும்,அடுத்து “காவிரிபூம்பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி” என்ற திருஞானசம்பந்தர் திருப்பதிகத்தொடராலும் அறிய முடிகின்றது. சாய்க்காட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் புகார்நகரத்து தாய்தெய்வமாகிய சம்பாபதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளதைக் காணலாம்.
சம்பாபதி அம்மன் :
நிலத்தில் வாழ் நன்மக்களுக்கு ஏற்படும் துன்பங்களைப்போக்கி அவர்களைக் காப்பாற்றிய பெண்தெய்வம் சம்பாபதி அம்மன் ஆவாள். மணிமேகலா எனும் பெண்தெய்வத்தை மணிமேகலை நுரலில் “கடல் காவலுக்காக இந்திரனால் நிறுவப்பட்டவள்” என்று போற்றியதாக குறிப்பிடப்படுகின்றது. நாவலோக்கிய மாபெருந்தீவினுள் காவல் தெய்வமாக வீற்றிருப்பவள் என்று சம்பாபதி அம்மனைக் கூறப்படுவதாலே இத்தெய்வம் நாவலந்தீவு அதாவது இந்தியா முழுமைக்கும் காவல் தெய்வமாக அமைந்தது. இமயமலையிலினின்று இத்தெய்வம் தமிழ்நாட்டிற்கு வந்ததாலும் நாவல் மரத்தில் கீழே தங்கி கொடியவர்களால் ஏற்படும் துன்பங்களைப் போக்க இத்தெய்வம் தவம் கிடந்ததாகவும் கூறப்படுகின்றது.
“இளங்கதிர் ஞாயிறு என்றும் தோற்றத்து
விளங்கொளி மேனி விரிசடை யாட்டி
பொன்திகழ் நெடுவரை யுச்சித் தோன்றித்
தென்றிசைப் பெயர்ந்த இத்தீவுத் தெய்வம்
சாகைச் சம்பு தன்கீழ் நின்று
மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு
வெந்திறல் அரக்கர்க்கு வெம்பகை நோற்ற
சம்பு என்பாள் சம்பாபதி யினள்”
(மணி பதிகம்.1-8.)
இத்தகு சிறப்பு வாய்ந்த சம்பாபதி அம்மனை சம்பாபதித்தெய்வம், முந்தைமுதல்வி, முதுமூதாட்டி, தொன்மூதாட்டி, முதியாள், அருந்தவமிதியோள், என்று இத்தாய்தெய்வத்தைப் பல்வேறு பெயரிட்டுப் பாராட்டி வணங்கியுள்ளனர் என மணிமேகலைக் குறிக்கிறது. சம்பாபதி தெய்வம் குறித்த செய்திகளனைத்தும் மணிமேகலையில் சக்கரவளாகக்கோட்டம் எனும் காதையில் கூறப்படுகின்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் இவள் வீற்றிருந்த வனம் சம்பாபதிவனம் என்றழைக்கப்பட்டது. இக்கோயிலைச் சக்கரவளாகக்கோட்டம் என்றும் இவள் உறைந்த இடம் குச்சரக்குடிகை என்றும் அழைக்கப்பட்டது. இக்கோயில் சுடுகாட்டுக்கு அருகில் அமைந்திருந்தமையால் சுடுகாட்டுக்கோட்டம் என்றும் அப்பகுதி மக்களால் அழைக்கப்பெற்றது. இக்கோட்டத்தில் பௌத்தர்கள் கண்ட உலகத்தின் அமைப்பு மண்ணில் செய்து காட்டப்பெற்றிருந்தது. இது செழுங்கொடிவாயில், நலங்கிளர்வாயில், வௌ;ளிடைவாயில், பயங்கரமான தோற்றத்தைக் கொண்டு கரங்களில் பாசத்தையும் சூலத்தையும் ஏந்தி நிற்கும் வாயில், ஆகிய நான்கு வாயில்களையும் கொண்டு விளங்கியது. இவற்றில் கடல்சூழ்ந்த மேருமலையும் அதன் அருகே நிற்கும் எழுவகை குன்றங்களும் நால்வகை மக்கள் நிறைந்த பெருந்தீவும், ஆயிரக்கணக்கான தீவுகளும் அவற்றில் வாழ்கின்ற உயிரினங்களும். அவை உறையும் இடங்களையும் அழகுறக் காட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் பௌத்தசமயத்தை ஒட்டி அமைந்த ஒரு தொன்மைமிக்க பௌத்த பெண்தெய்வத்தை மணிமேகலை காப்பியத்திலே நாம் தௌ;ளத் தெளிவாக காணலாம். மேலும் மணிமேகலையில், சம்பாபதித்தெய்வம் சக்கரவளாகக் கோட்டத்தில் அமைந்திருக்கும் எல்லா பெண்தெய்வங்களுக்கும் தலைமைப் பெண்தெய்வமாக விளங்கியவள் என்று போற்றப்படுகிறது. இவை தாய்தெய்வத்தை பௌத்தசமயம் எவ்வாறெல்லாம் போற்றி வழிபட்டது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. தற்பொழுது காவிரிபூம்பட்டினத்தில் சாயாவனம் என்றழைக்கப்படும் பகுதியில் சம்பாபதி அம்மன் கோயில் ஒன்று உள்ளது. இதனை இப்பகுதி மக்கள் பிடாரி கோயில் என்று அழைத்துவருகின்றனர். பிடாரி என்பது பீடையை (துன்பத்தை)அரிப்பவள்(போக்குபவள்) எனவேதான் பிடாரி எனக் குறிப்பிடுவர்.மருதநிலத்துப்பெண்தெய்வமாவாள். சம்பாபதி அம்மன் கோயிலுக்கு கிழக்கே காவிரியின் கரையில் அமைந்தபூவனம் மணிமேகலையில் குறிப்பிடும் பழைய உவவனமாக இருத்தல் வேண்டும். சாய்க்காட்டினை அடுத்து தற்பொழுது காணப்படும் வௌ;ளையன் இருப்பு என வழங்கபட்டுவரும் இடம் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்ட வால்வளைமேனி வாலியோனாகிய பலதேவன்கோயில் இருந்த இடமாகும். காவிரியின் தென்கரையில் திருவலம்புரத்திற்குக் கிழக்கே அமைந்துள்ள வானகிரி என்ற ஊர் பத்துப்பாட்டு இலக்கியத்தில் ஒன்றாகிய பட்டினப்பாலையில் “இருகாமத்திணையேரி” என்ற தொடர் கூறப்படும் பகுதியில் நச்சினார்க்கினியர் மற்றும் பிற உரை ஆசிரியர்கள் விளக்கம் கூறும் பொழுது வளகாமரேரி வணிகாமரேரி என்னும் இரண்டினுள் வணிகாமரேரியாகவே இந்த வாணகிரி இருத்தல் வேண்டும். ஆய்விற்குறிய பகுதியாக சிலவற்றைக் குறிக்கும் பொழுது அப்பகுதி மீனவர்கள் பயன்படுத்தம் சொற்கள் வியப்பூட்டம் வகையில் அமைந்துள்ளது. அவற்றில் கப்பகரப்பு மற்றும் கரையபார் என்ற சொற்களாலும். இவ்விரண்டு பகுதிகளிலும் மீன்கள் ஏராளமாகக் காணாப்படும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்குச் சென்று மீன்பிடித்தல் வழக்கமாகும். அங்குள்ள மீனவர்களைக் கேட்கும் பொழுது இப்பகுதியில் கோயில் இருந்து மூழ்கிவிட்டது என்றும் அதிக அளவில் இடிபாடுகளும,; தூசிகளும் தங்குமிடத்தில்தான் அதிக அளவில் மீன்கள் வசிக்கும் எனவே இப்பகுதியில் பழைய கட்டுமானங்கள் உள்ளது என்றும் குறிப்பாக கோயில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். கரையிலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் வடகிழக்கே கட்டுமரம் வாயிலாக சென்றால் நான்குபாகம் அளவில் கோயிற்கோபுரத்தின் உச்சி தட்டுவதாகவும் பதினேழு பாகம் அளவில் சென்றால் அதன் அடித்தளம் காணப்படுவதாகவும் இந்த இடத்தைச் சுற்றிலும் சுமார் 50மீட்டர் சுற்றளவில் கோயிலின் பகுதிகள் அமைந்திருத்தல் வேண்டும் என்றும். இங்கு கடலுக்கு அடியில் இருந்தும் நிலம் அகழ்ந்த பொழுதும் பல சிற்பங்களும், செப்புபபடிங்களும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அடுத்து குறிப்பிடும் சொல் கப்பகரப்பு என்று ஓர் இடத்தைக் குறிப்பர். இப்பகுதியில் ஒரு காலத்தில் துறைமுகம் அமைந்திருந்ததாகவும் பெரும் புயலடித்தபொழுது அப்புயலில் சிக்கிய கப்பலொன்று அவ்விடத்தில் மூழ்கிவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அதே போன்று தற்பொழுது அதனடிப்படையில் வாணகிரியில் இருந்து சுமார் சிறிது தொலைவில் கப்பல் ஒன்று மூழ்கி இருந்ததை ஆழ்கடல் அகழாய்வு வாயிலாக வெளிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். “நெய்தலங்கானல் நெடியோய்” என இளஞ்சேட்சென்னிக்குரியதாகப் புறநானுரற்றுப்பாடல் குறிக்கும் ஊர். இப்பொழுது காவிரிபூம்பட்டினத்தின் வடக்கே கடற்கரையை அடுத்து நெய்தவாசல் என்ற பெயரில் இன்றும் அழைக்கப்பட்டு வருகின்றதைக் காணலாம். “கைதைவேலி நெய்தலங்கானல்” என இளங்கேவடிகளாற் குறிக்கப்பெற்ற இப்பகுதி அடிகள் காலத்தில் சோமகுண்டம், சூரியகுண்டம் ஆகிய தீர்த்தங்களையும், காமவேள்கோட்டத்தையும் தன்பாற் கொண்டு விளங்கியுள்ளது. இந்நெய்தலங்கானலை உள்ளிட்ட மருவூர்ப்பாக்கம் புகாரின் கிழக்குப்பகுதி சங்க காலத்தில் கிள்ளிவளவன் ஆட்சிபுரிந்த சமயத்தில் கடல்கோளால் அழிந்து மறைந்தன என்பதும் எஞ்சிய பகுதியே இன்று நெய்தவாசல் என்ற பெயரில் அமைந்துள்ள ஊராகும்.
‘கடலொடு காவிரி சென்றலைக்கு முன்றில்
முடலவிழ் நெய்தலங் கானல் தடமுள
சோமகுண்டஞ் சூரியகுண்டத் துறை மூழ்கிக்
காமவேள் கோட்டந் தொழுதார் கணவரொடு
தாமின் புறுவ ருலகத்துத் தையலார்
போகஞ் செய் பூமியினும் போய்ப் பிறப்பர்’
சிலம்பு – கானாத்திரம் - 57-62.
நெய்தவாசல் பகுதியில் வாழும் மீனவர்கள் கூறுவதாவது “கரையபார்”என்ற சொல். அதற்கு காரணம் நெய்தவாசலுக்கும் காவிரிபூம்பட்டினத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் குறிப்பாக தற்பொழுது(1984) கண்ணகி சிலை வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து வடகிழக்காக கடலில் சுமார் 5.5.கிலோமீட்டர் தொலைவில் பண்டைய புகார் நகரின் தொன்மையான கட்டடங்களும், காமவேள்கோட்டம் தொழுத கோயில்களும் இருந்தன என்பதற்கு அவர்கள் கூறும் அடையாளம் ஆகும். இக்கடல்பகுதியில் படகில் சென்று மீன்பிடிக்கும்பொழுது முற்காலக்கட்டடப்பகுதிகள் இன்றளவும் சில தட்டுப்படுகின்றன என்றும் கூறுகின்றார்கள். சில வருடங்களுக்கு முன்னர் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற பொழுது வெண்கலத்தால் ஆன கலியாணசுந்தரர் திருவுருவமும் அம்மாள் திருவுருவ கற்சிற்பமும் எடுக்கப்பட்டன. அத்திருவுருவங்கள் அன்னப்பன்பேட்டை கலிக்காமூர்த்தி திருக்கோயில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. புகார் நகரக்கோயில்களாக சிலம்பு குறிப்பிடுபவையும் இந்திர விழாவும்.
“அமரர்தருக்கோட்டம்,வௌ;ளையானைக்கோட்டம்,
புகர்வௌ;ளை நகர்தம்கோட்டம்,பகல்வாயில்
உச்சிக்கிழான்கோட்டம்,ஊர்க்கோட்டம்,வேற்கோட்டம்,
வச்சிரக்கோட்டம்,புறம்பணையான் வாழ்கோட்டம்,
நிக்கந்தக்கோட்டம்,நிலாக்கோட்டம்”.
சிலம்பு – கனாத்திறம் 9-13.
மணிவண்ணன் கோட்டம், இந்திரவிகாரம் என்பன காவிரிபூம்பட்டினத்தில் அமைந்திருந்தன என்றும். அமரர்தருகோட்டம் என்பது தேவருலகத்திலுள்ள கற்பகத்தருவை வழிபடும் அமைப்பைக் குறிப்பிடுவதாகும். வௌ;ளைநாகர் என்பது பலதேவர்க்குரிய பெயராகும். பலதேவர் இருந்த இடம்தான் தற்பொழுது வௌ;ளையன் இருப்பு என அழைக்கப்படுகின்றது. ஊர்க்கோட்டம் என்பது இறைவன் எழுந்தருளிய “ஸ்ரீகைலாயம் நிற்கும் கோயில்” என குறிப்பர். பிறவாயாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானுக்குரிய திருக்கோயில் காவிரிபூம்பட்டினமாகிய இம்மூதூரில் நடுநாயகமாக வீற்றுள்ளார் என்பதை உணர்தல் வேண்டும். கடல்கொண்டது போக எஞ்சிய நிலையில் காவிரிபூம்பட்டினம் என்ற பெயரைக் காக்கும் வகையில் நிலப்பரப்பில் நடுநாயகமாகத் திகழ்ந்து கம்பீரமாக வீழுற்றிருந்து அருளும் சிவபெருமான் காணப்படும் இடம்தான் பல்லவனீச்சுரம் என்ற திருக்கோயிலாகும் வச்சிரக்கோட்டம் என்பது இந்திரனது படைக்கலமாகிய வச்சிராயுதத்தை வைத்து வழிபடும் கோயிலாகும். இந்திரவிழாவை எடுக்குமுன் இவ்வூர் மக்கள் நாளங்காடியிலும், ஐவகை மன்றங்களிலும் பலியிட்டு, வச்சிராயுதம் அமைந்துள்ள கோயிலிலுள்ள முரசினைப் பட்டத்து யானையின் மேலேற்றிக் கொண்டு ஐராவதத்தின் மேல் கோயிலிற்சென்று இந்திரனுக்குச் செய்யவிருக்கும் விழாவின் தொடக்கத்தையும,; முடிவையும் அறிவித்துக் கற்பகத்தருநிற்கும் கோயிலின் முன்னர் அட்டமங்கலத்தோடு ஐராவதம் எழுதிய கொடியையும் ஏற்றுவித்து ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும் சூழ்ந்துவரச் சங்கமத்துறையிற் குளிர்ந்த தீர்த்தநீரை ஆயிரத்தெட்டு அரசர்களது முடிபொறிக்கப்பட்ட பொற்குடத்திற் கொணர்ந்து விண்ணவர் தலைவனாகிய இந்திரனை நீராட்டி விழாக் கொண்டாடினர் என்று சிலப்பு கூறுகின்றது. தமிழ்கூறு நல்லுலகத்தின் தொன்மை தமிழர் நாகரீகம் பற்றிய தடயங்களை இன்றைய இந்தியாவிலும் குறிப்பாக தென்னிந்தியாவிலும் அதனை ஒட்டிய கடற்கரைப்பகுதிகளில் மட்டும் தேடினால் போதாது. உலகின் முதல் பெருங்கண்டத்தில் இருந்துதான் உலகின் முதன்மொழி பேசிய தமிழனின் வரலாற்றைத் தொடங்கவேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்னும் கனியன் பூங்குன்றனார் கூற்று உண்மையே. உலக மக்கள் நாம் அனைவரும் ஒரே கண்டத்தில் உதித்துப்பிறந்தவர். எனவே மாந்தர்குல வரலாற்றில் கடலடியில் கண்டெடுக்கப்பட்ட தடயங்களில் தமிழனின் தொன்மைத்தடயங்கள் தென்படுகின்றனவா என்று தேடித் திரிந்தாகவேண்டும். இதுவரை கண்டெடுக்கப்பட்ட நாகரீகங்களில் தமிழ் கூறும் நல்லுலகை நாம் கண்டு ஆய்ந்தாகவேண்டும். இன்னும்அதிகமாக கடலின் மடியில் ஆதாரம் தேடி கண்டுபிடித்து அதனை நம் தமிழ்மக்களுக்கு தெரிவித்தாக வேண்டும்.
தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கிய அட்லாண்டிக் என்ற பெருங்கண்டம், அட்லாண்டிக் பெருங்கடலின் அலைகளால் விழுங்கப்பட்டு காணாமற்போயின. அதனைக் கடலகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் வல்லுநர்கள் அந்த கண்டத்தை கரீபியன் பகுதியில் கடலுக்கடியில் கண்டெடுத்துள்ளனர் என பிரிட்டனின் புகழ்மிக்க நாளேடு டெய்லி மிர்ரர்(னுயடைலஆசைசழச) செய்தி வெளியிட்டது. கடலடியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஒரு நகரின் அழிவை அச்செய்தி வெளியிட்டது. இதன்காலம் பொ.ஆ.மு.350 ஆண்டுகள் ஆகும். எகிப்திய நாகரீகத்திற்கு முற்பட்ட பிரமிடுகள் அங்கே கண்டுபிடிக்கப்பட்டன. அவை காலத்தால் பொ.ஆ.மு.2600 அண்டுகள் என்று ஆய்வாளர்கள் குறித்தனர்.
கோண்டுவானா, இலெமூரியா, மூ பிறகு குமரிக்கண்டம் என்று பல பெயர்களில் சொல்லப்படுவதெல்லாம் தமிழர் வாழ்ந்த நிலமே. கடல் மட்டம் உயர்ந்து வந்ததால் இரு முறை தமிழச்சங்கம் இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறுவர். 10,000 ஆண்டுகள் நீடித்த தமிழ்ச்சங்கம் பற்றித் தமிழர் மரபில் பேசப்படுவது உண்டு. தென்துருவம் வரை நீண்டிருந்த நாடாக மாலத்தீவையும் இலங்கையையும் உள்ளடக்கிய பெருநிலபரப்பாகக் குமரிக்கண்டம் என்று அழைக்கப்படும் நாம் இழந்த தமிழர் நிலமிருந்தது என்பர். தொன்மங்களும் இலக்கியங்களும் சொல்வது நிலவியல் சான்றுகளுடன் ஒப்பீடு செய்யத்தக்கதாக இருக்குமாயின் அதைக் கற்பனை என்று நமது அறிவியலார் முடிவு செய்தலாகாது. இந்திய வரலாற்றைப் பல்லாயிரம் ஆண்டுகள் விரிவாக்கும் சான்றுகள் கடலடியில் மடிந்து கிடக்கின்றன. அவற்றை பலவற்றை வெளியே கண்டறிந்து தமிழுலகிற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேடினால் இன்னும் பல தொன்மச் சின்னங்கள் தமிழனின் சிறப்பை வெளிக்காட்டுபவைகள் கிடைப்டபதற்கு வழிவகையுண்டு என்பதை டாக்டர்.கொண்ராட் எல்சுட் தெளிவாகக் கூறுகின்றார்.
நமது குமரிக்கண்டத்தை வங்காளவிரிகுடாவில் அரபிக்கடலில், இந்துமாகடகடலில் தேடியாகவேண்டும். மேலும் அதனை விரிவுபடுத்தி தென்சீனக் கடலின் பகுதியிலும் ஆய்வு நடத்தியாக வேண்டும். 1970 முதல் நிகழ்ந்த ஆய்வுகள் உலகில் மூன்று காலக்டகட்டங்களில் நமது நாட்டை ஆழிப்பேரலைகள் அதாவது கடற்கோள்களத் தாக்கி அழித்த நிகழ்வுகள் நடந்ததாக கூறுவர். இன்றைக்கு சுமார் 15000 – 14000 ஆண்டுகட்கு முன்பும், 12000 – 11000 ஆண்டுகட்கு முன்பும் 8000 – 7000 ஆண்டுகட்கு முன்பும் முப்பெரும் கடலழிவுகளை உலகம் எதிர்கொண்டது. புளாட்டோ வுiஅந நெறள யனெ உசவையைள என்ற நுரலில் அட்லாண்டிக் பெருவௌ;ளம் ஏற்பட்டதாகச் சொல்லப்படும். இயற்கைப்பேரிடர் 12000 – 11000 ஆண்டுகட்கிடையே நிகழ்ந்ததெனக் கூறலாம்.
தமிழலக்கியங்கள் குமரிக்கண்டம் பற்றியும் கடல்கோள்கள் பற்றியும் கூறுவதும் இதே காலத்தில்தான் என்று இதனை டீiனெiபெ வாந ஆலவா யனெ ளுஉநைnஉந ழக குடழழன என்ற கட்டுரையில் ர்யசசல லுழரபெ குறிப்பிடுகின்றார்.
குமரிக்கண்டம் என்பது தென்சீனக் கடல் மடியில் ஒளிந்திருக்கும் என்பதையும் நாம் கருத்தில் கொண்டு ஆய்வை மேற்கொள்ளுதல் அவசியமாகும். அறிய கருவிகள் வந்துவிட்டன. நீர்மூழ்கிக் கலன்களும் வந்துவிட்டன. கடலடியில் அமிழ்ந்து விட்ட நமது கலன்களைத் தேடியவர்கள் கற்சிலைகளையும் கோட்டைகளையும் தற்செயலாகக் கண்டெடுத்தனர். எனவே மறைந்த நகரங்களை கடலடியில் தேடி வெளிக்கொணர்தல் நமது தலையாய கடமையன்றோ.
கடல்மடியில் புதைந்திட்ட நம்பழந்தமிழ்நாட்டை இலக்கியங்கள் அழகாகவும், தெளிவாகவும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அறிவியல் துணைகொண்டு அமிழ்ந்து கிடைக்கும் ஆழ்கடலில் இருந்து அரியதோர் வரலாற்று உண்மையைநாம் மீட்டெடுத்தாக வேண்டும். நாம் நமது தமிழரது பெருமையை குமரி, பூம்புகார், மாமல்லை போன்ற இடங்களில் புதைந்து கிடைக்கும் இடிபாடு கொண்ட கட்டடங்களையும் அதன்வழியே வரலாற்று தகவல்களையும் மீட்டெடுக்கவேண்டும். அவ்வரலாற்று உண்மையை தமிழக்கும் தமிழருக்கும் தமிழ்நாகரீகத்திற்கும் அடையாளச் சின்னங்களாக நாம் உருவாக்கித் தருதல் வேண்டும். கிடைத்த உண்மைகளை மறைத்தல் நியாயமா!. உண்மையைக் கூறாமல் விட்டால் தமிழ்ச்சமுதாயம் என்னை மன்னிக்குமா?
எண்ணிறைந்த ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் ஒரே கண்டமே இருந்ததென என்றும் அவை பின்னர் சிதறுண்டு தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்ட்டிகா, மடகாஸ்கர்.இந்தியா எனப்பிரிந்து வந்துள்ளது என்பர். இன்றுள்ள ஆஸ்திரெலியா, அண்டார்டிகா, ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இந்தியா, தென்னமெரிக்கா உள்ளடக்கிய நாடுகள் கோண்டுவானா எனப் பெயரிட்டனர் என்றும் நிலவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே தமிழ்நாட்டின் வரலாறு முழுமையாக இடம்பெறும் வண்ணம் இந்தியவரலாறு குமரி முனையிலிருந்து தொடங்குதல் வேண்டும்.
இன்று தமிழ்வழங்கும் நிலத்திலும் இந்தியக் கடற்கரை ஒட்டிய மறைந்த துறைமுகப்பட்டினங்களான மாமல்லபுரம், வசவசமுத்திரம், அரிக்கமேடு, பூம்புகார், அழகன்குளம், கொற்கை ஆகிய இடங்களில் மேற்கொண்ட அகழாய்வுத் தரவுகளையும். மேலும் சங்க கால பண்பாட்டில் சிறந்து விளங்கிய வணிகப்பெருநகரங்களாகத் திகழ்ந்த ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொற்கை, கீழடி, கொடுமணல், பொருந்தல்,அழகன்குளம் ஆகிய ஊர்களில் மேற்கொண்ட அகழாய்வுத் தரவுகளையும் அதன் கருத்துச் சாராம்சங்களையும், தொல்லியல் கருத்துக்களையும் ஒருங்கினைத்து அவற்றின் வாயிலாக அமையும் வரலாற்று உண்மைச் செய்திகளைக் கொண்டு வரலாறு அமைத்தல் வேண்டும்.
தமிழகத்தில் மேற்கொண்ட அகழாய்வுகளில் மிகவும் இன்றியமையாதவைகளும் அரிய சான்றாதாரங்களையும் வழங்கிய தொல்லியல் தரவுகள் கொண்ட சங்க காலவாழ்விடங்களில் கிடைத்த தொல்பொருட்களையும் இணைத்தல் வேண்டும். அதனடிப்படையில் தமிழகத்தில் மேற்கொண்ட அகழாய்வுகளில் சிறப்பான தடயங்களை நல்கிய ஆதிச்சநல்லூர், கொற்கை, அழகன்குளம், மாங்குடி, கீழடி, பூம்புகார், அருகன்மேடு, மரக்காணம், காஞ்சீபுரம், பல்லவமேடு, பட்டறைப்பெரும்புதூர்,போன்ற இன்னும் பல அரிய தொல்லியல் தடயங்களை வழங்கிய சான்றுகள் அனைத்தும் விடுபடாமல் அப்பகுதிகளை மேற்கொண்ட தொல்லியல் மற்றும் வரலாற்று வல்லுநர்களைக் கொண்டு இந்தியா மற்றும் தமிழக வரலாறு அமைத்தால்தான் உண்மையான வரலாறு நாம் தொகுக்கலாம். அதன்வாயிலாகவே தமிழனின் தொன்மை வெளிப்படும். இவை அனைத்திற்கும் தமிழகத்தில் பூமிக்கு அடியிலும் பாறைக் குகைகளிலும,ஆழ்கடலுக்குள்ளும் காணப்படும் சான்றுகள் தொல்பொருளாகவும், கல்வெட்டாகவும்,கட்டடமாகவும் அமைந்துள்ளன. அவற்றை தகுந்த இடத்தில் இனைத்து வரலாற்றைக் கொண்டு செல்லுதல் அவசியம். அப்பொழுததான் நாம் உண்மையான வரலாற்றை நம் வருங்கால சந்ததியினருக்கு வழங்கிய பெருமைகொண்டவர்களாவோம்.
கீழையூர் படகுத்துறை – அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட பகுதி.
தமிழகத்தில் தமிழரின் தொன்மையை அறியும் பொருட்டும் இலக்கிய கூற்றுகளை மெய்ப்பிக்கும் வகையிலும் மிகவும் விலைமதிப்பு மிக்க பொருட்செலவில் மேற்கொண்டதுதான் ஆழ்கடல் அகழாய்வு ஆகும். அதனடிப்படையில் தமிழகத்தில் பூம்புகார், தரங்கம்பாடி, மாமல்லை, வானகிரி ஆகிய இடங்களில் ஆழ்கடல் அகழாய்வு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மைய அரசின் இந்திய கடலாய்வு நிறுவனத்துடன் இனைந்து மேற்கொண்டு பல அரிய தடயங்களை வெளிக்கொணர்ந்தனர். அந்த தடயங்கள் சுமார் 2500 அண்டுகட்கு முன்பே கோட்டைகளும், பௌத்த விகாரங்களும், படகுத் துறைமுகங்களும் இருந்துள்ளதை வெளிப்படையாக தெரிவித்தன.
படகுத்தறையின் அமைப்பு
படகுத்துறையின் அமைப்பை நோக்கும் பொழுது அதன் வடிவமைப்பு மிகவும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது. மேலும் இது போன்ற அமைப்பில்தான் பிற்காலச்சோழர்கள் கங்கைகொண்டசோழபுரத்தில் சோழகங்கம் ஏரியின் மதகு அமைப்பையும் வடிவமைத்துள்ளனர். எனவே சோழர்கள் சங்க காலம் முதலே நீரப் பாசன அமைப்பு முறையை நன்கு கற்றறிந்துள்ளனர் என்பதை அறிய முடிகின்றது. இவற்றில் கவனிக்கவேண்டியது என்னவெனில் எத்தகைய வேகத்தில் நீர் வரத்து இருந்தாலும் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பும் அரைவட்டவடிவ அமைப்பு தடுப்பு முறையும் அதன் வேகத்தைக் குறைத்து நீரை சீராக வெளியேற்றும் தன்மையை அடையும் என்பதை 2000 ஆண்டுகட்கு முன்பே சங்க காலச்சோழர்கள் கண்டறிந்து செயல்படுத்தி வந்தமையையும் இந்த படகுத்துறை அகழாய்வு வெளிப்படுத்திய கட்டட அமைப்பு நமக்கு நன்கு எடுத்துக் காட்டுகின்றது.
இவையனைத்தும் தமிழரின் வரலாற்றை எழுதவும், இந்திய வரலாற்றை ஒருங்கினைக்கவும் பயன்படும். அவ்வாறு பயன்படுத்தப்பட்டால் தொன்மையான வரலாற்று உண்மைகள் தக்க சான்றுகளுடன் நிரூபிக்கப்படும். நில அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் வல்லுநரான எஸ்ஆர்.ராவ் அவர்களே அழ்கடல் அகழாய்வும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்தகைய பெருந்தகையாருடன் இனைந்து பூமு;புகார் ஆழ்கடல் அகழாய்வுப்பணியை நானும்(ச.செல்வராஜ்) மேற்கொண்டதை என்னும் பொழுது மெய்சிலிர்க்கின்றது.
நிலத்தின் மீது மெற்கொண்ட அகழாய்வில் பௌத்தவிகாரமும் பௌத்தத்தறவிகள் தங்கியமையும் தக்க தொல்பொருட்களுடன் நிரூபனமாயின. அடுத்து கடற்கரையில் படகுத்துறை ஒன்றை மத்திய அரசும் மேலூ; அருகே ஒரு படகுத்துறையை தமிழநாடு அரசும் மேற்கொண்ட அகழாய்வுகளில் வெளிப்படுத்தி தமிழரின் கடல்கடந்த வணிகத்தை 2500 ஆண்டுகட்கு முன்னரே திறம்பட செயல்பட்டு வந்துள்ளதை இவை எவ்வித கருத்துச்சலனமுமின்றி தௌ;ளத்தெளிவாக எடுத்தியம்பியுள்ளது.
புத்தபாதம் பளிங்கு சுடுமண்பாவை
மேலையூர் - அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட படகுத்துறைப் பகுதி.
திரு.இராமமூர்த்தி, ச.செல்வராஜ் அகழாய்வாளர், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.
இவை தமிழருக்கம், தமிழ்நாட்டிற்கும் பெருமை சோ;ப்பன ஆகும். தமிழகத்தை தன்னுள்ளே கொண்டுள்ள இந்தியத் திருநாட்டிற்கும் பெருமை சோ;ப்பனவைதானே. எனவே இந்தியத்திருநாட்டின் பழமையான பண்பாடு நிறைந்த பூமியாக தமிழகமும,; தமிழகத்தில் பூம்புகாரும் இருந்துள்ளன என்பதும் இப்பகுதிக்கு அயல்நாடுகளிலிருந்து பல அந்நியர்கள் வணிகம் பொருட்டு வந்துள்ளனர், வந்து பூம்புகாரிலேயே தங்கியுள்ளனர் என்பதும் அவர்கள் விட்டுச்சென்ற தடயங்களை தொல்லியல் சான்றாக பூம்புகார் அகழாய்வில் சேகரித்து அதனை உரியமுறையில் பதிவு செய்து காட்டியுள்ளமையால் அவை அனைத்தும் உறதிபூண்டுகின்றது என்பது உண்மையாகும்.
காவிரிபூம்பட்டினம்,பல்லவனீஸ்வரம் - பௌத்தவிகாரம் (அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட பகுதி).
பொ.ஆ.மு.7500 ஆம் ஆண்டில் கடலில் மூழ்கிய நகரங்களை கூச்சரநாட்டின் கட்சு வளைகுடாவில் கண்டெடக்கப்பட்டதென்று தி. இந்தியா டுடே வார இதழில் பிப்ரவரி 11 ம் நாள் 2002 ஆம் ஆண்டு வெளியிட்டது. திராவிட நாகரீகத்தின் தொட்டிலான சிந்துசமவெளி நாகரீகம் பொ.ஆ.மு.2500 ஆண்டு எனவும் அதைப்பின்னுக்கத் தள்ளி கூச்சரத்தில் 7500 பொ.ஆ.மு. என்பதை கடலடி நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டதாக மடடுமே செய்தி வெளியானது. கூச்சரத்தில் கண்டு ஆய்வு செய்த குழுவே பூம்புகாரையும் ஆய்வு செய்து பொ.ஆ.மு.9500 ஆண்டுகள் என்று கூறியபொழுது அச்செய்தியை தினமணி நாளேட்டைத் தவிர வேறு எவரும் வெளியிடவில்லை. வரலாற்று ஆய்வுத்தகவல்கள் மறைக்கப்படுவது ஏன் என்பது புலப்படவில்லை. எனவே வரலாறு கண்டறியும் நோக்கோடு இப்பகுதியை ஆய்விற்கு எடுத்துக் கொண்டு உண்மை வரலாற்றைக் கண்டறியலாமே. அவைதானே உண்மையான ஆய்வாகும்.
கட்சு வளைகுடாவில் குசராத் மாநிலத்தில் கடலாய்வு மேற்கொள்ளப்பட்டது. அத்துறை வல்லுநர்கள் பொ.ஆ.மு.10,000 ஆண்டில் இன்றுள்ள கடல் மட்டத்தை விட அன்று கடல்மட்டம் 60 மீட்டர் தாழ்ந்திருந்தது என்றனர். இந்தியாவின் வடமேற்கில் இவை கண்டறியப்பட்டது. தென்னிந்தியாவில் இத்தகு கடலாவு நடைபெறவில்லை. இருப்பினும் குசராத்தில் கண்டறியப்பட்ட உண்மைகள் தமிழகத்திற்கும் சற்றேரக்குறைய பொருந்தும் என்று கிரகாம் ஆன்காக் தனது ஆய்வில் இக்கருத்தை தெளிவாக எடுத்துக் கூறியள்ளார். எனவே தமிழனின் தொன்மையை ஆயிரம் கரங்கள் கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்பது போல எத்தகைய இடர் ஏற்படினும் தமிழர்தம் தொன்மையை யாராலும் மறைக்க இயலாது என்பது தின்னம்.அதன் விளைவுதான் தமிழகத்தில் தொல்லியல்துறை மேற்கொண்ட ஆழ்கடல்அகழாய்வு. இவ்வகழாய்வு அனைவரையும் திகைக்க வைத்துவிட்டது. தொகை பெரியது எனவே மாநில அரசுக்கு இதுபோன்ற பெரிய பட்ஜெட் நிதி ஒதுக்கீடு கிடைப்பது அரிது. ஆனால் அன்றைய முதல்வர் தமிழார்வமிக்க பேரரிஞர் பெருமகனார் டாக்டர்.கலைஞர்.மு.கருணாநிதி அவர்கள் ஒருகோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிதுவங்க ஆணையும், அனுமதியும் வழங்கினார்கள். அனுமதி கிடைத்துவிட்டால் தமிழர் பண்பாட்டை வெளிச்சம்போட்டுக்காட்ட இதுவே தக்க தருணம் என்று தொல்லியல் வல்லுநர்கள் குழு தங்களது ஆய்வை உடனடியாகத் தொடங்கியது.
தொல்லியல் ஆழ்கடல்அகழாய்வின் பயன் - புகார் நகரம் வெளிப்பாடு பூம்புகார் அகழாய்வு வழங்கும் தகவல்கள் :
- பொ.ஆ.மு. 10,000 ஆண்டுகளில் நாகரீகத்தில் சிறந்திருந்தனர்.
- மிக உயர்ந்த மாடமாளிகைகளும் அகன்ற தெருக்களும் அறியப்படுவதால் நன்கு திட்டமிட்டு பூம்புகார் நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.
- சுட்ட செங்கற்கள் கிடைத்ததால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.
- கடல்நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது (400 அடி என்றும் கூறப்படுகின்றது)
- குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.
- பொ.ஆ.மு.10,000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச்செய்தி உறுதி செய்கின்றது.
- புதியதமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.
- இந்தியப்பெருங்கடல்,வங்க, அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.
- உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.
- பொ.ஆ.மு. 17,000 – 10,000 ஆண்டுகளில்பனிப்பாறைகள் உருகியதால் கடல் நீர் உயர்ந்து உயர்ந்து உலகின் பல நாடுகள் அழிந்து போயின.
- 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறிதாக அழித்தொழித்தது.
- சிந்துவெளிக்கு முற்பட்டதும் உயர்ந்ததுமான நாகரீகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.
- இயற்கையின் மாறுபாடுகளால் நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
புகார் அழ்கடல்அகழாய்வில் கோவா,தேசியகடலாய்வு நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் இணைந்து நடத்தியது. அதில் தமிழ்நாடு தொல்லியல் சார்பாக அழ்கடல்மூழ்குநராகவும் தொல்லியல் ஆய்வாளராகவும் பணியாற்றிய ச.செல்வராஜ்(இந்நுரலாசிரியர்);
ஆழ்கடல் ஆய்வில் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை சேகரித்த தொல்பொருட்கள் :
பல்வேறு தொல்பொருட்களையம் கட்டடங்களின் பகுதிகளையும் கண்டறிந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது.உலகிலேயே தொன்மையான நகர நாகரீகம் காவிரிபூம்பட்டினம் நகரமே என இங்கலாந்து ஆழ்கடல் வல்லுநர் கிரஹாம் ஹான்காக் என்பவர் தனது ஆய்வில் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார்.
கடல்கொண்ட நகரம் பூம்புகார் அயல்நாட்டார் ஆய்வு அறிக்கை தொகுப்பு
கிரகாம்உறான்காக் அண்மையில் பூம்புகார்பகுதியில் அகழாய்வு மேற்கொண்ட கிரஉறாம்உறான்காக்(; புசயாயஅர்யnஉழஉம) என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர் தனது முறையான ஆய்வுகளுக்குபபிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டுள்ளார். கிரஉறாம்உறான்காக் தொன்மை நம்பிக்கைகள், நினைவுக்கற்கள், பண்டைய வானியல் சோதிடத் தரவுகள் போன்ற பழமைக்கு மாறான ஆய்வுகளில் ஈடுபடுபவர். அவர் பூம்புகார் ஆழ்கடல் ஆய்வு தமிழ்நாடு அரசு மேற்கொண்டதையும் அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளையும் கண்டு இதன் மீது ஈர்ப்பு கொண்டு இதன் உண்மைத்தன்மையை வெளிக்கொணரவேண்டும் என பேராவல் கொண்டு பூம்புகார் ஆழ்கடல் ஆய்வை இவர் 2000 ஆம் ஆண்டு துவக்கி நடத்தினார். அவற்றின் முடிவுகளை 18-12-2002 நாள் தினமலர் நாளேட்டில் வெளியிட்டுள்ளார்கள் அதன் சாரம் இங்கு தகவலுக்காக வழங்கப்படுகின்றது.
நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிரமாண்டமான நகரம்தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகரநாகரீகமாக இருத்தல் வேண்டும் என்று இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஉறாம்உறான்காக் என்பவர் தனது ஆய்வில் கண்டறிந்துள்ளார் அவர் கண்டறிந்தவற்றை தற்பொழுது வெளிப்படுத்தியுள்ளார்.
இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு பூம்புகார் கடற்பகுதியில் மேற்கொண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மைகளைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான மெசபடோமியா(தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாகரீகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத்தெரிவிக்கின்றது.
கிரஉறாம்உறான்காக் என்பவர் இங்கிலாந்தைச் சார்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள “தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்”(யேவழையெட ஐளெவவைரவந ழக ழஉநயழெபெசயிரல) என்ற கடலாய்வு நிறுவனம் கடந்த 1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியைில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.
இத்துடன் நீரில் சுமார் 25 அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85 அடி நீளமும். 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கியிருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக் குறை காரணமாக பாதியில் நிறுத்திக்கொண்டது.
இந்நிலையில் கடந்த 2000 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த கிராஉறாம்உறானகாக், தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப்பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்ததும் அவர் இங்கிலாந்தைச் சார்ந்த “லர்னிங் சானல்” என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதி உதவியுடன் இந்திய ஆழ்கடல்ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001 ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். இந்த ஆராய்ச்சிக்கு அதிநவீன “சைடு ஸ்கேன் சோனார்” என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்டமான நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை கிரகாம்உறான்காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.
இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த உறான்உறகாக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு “ஐஸ் ஏஜ்” எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக பனிப்பாறைகள் உறுகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.(ஏற்கனவே தமிழ்நாடு அரசு தெரிவித்த ஆய்வின் கருத்தக்களையே அவர்களும் தெரிவித்தனர்).
இத்தகைய பனிக்கட்டி உருகும் நிலை சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவி;க்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டு கிடப்பதைக் காணும்பொழுது இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு மூழ்கியிருத்தல் கூடும் என்று இங்கிலாந்து ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் உறான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதனமீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, உறான்காக்கின் கருத்து சரியானதுதான் என்பதை உறுதிப்படுத்தினார்.
சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும் அதனை வைத்து பார்க்கும் பொழுது இந்தநகரம் 11,500 ஆண்டுகால பழமைவாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார்.
மேலும் பூம்புகார் நகரநாகரீகம் உறரப்பா,மொகஞ்சதாரோ ஆகிய நாகரீகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஉறாம்உறாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில்”அண்டர்வோர்ல்ட்” என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர். உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஉறாம்உறான்காக் வெளியிட்டார்.
மேலைநாட்டு வரலாற்று மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் பூம்புகரின் பக்கம் திரும்பியுள்ளது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பூம்புகார் பற்றி தெரிந்து கொள்ள எந்த விருப்பமும் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குறிய உண்மை. மூழ்கிப் போனது பூம்புகார் நகரம்மட்டுமல்ல தற்பொழுது இருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகரம் ஆகும். சோழமன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுகநகரமாக விளங்கிய பூம்புகார், பண்டைய காலத்தில் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் போற்றப்பட்டுள்ள ஒன்றாகும்.கலைஞரின் கனவுத் திட்டமும் அதுவே ஆகும். பாரதிதாசன் பல்கலைக்கழகம் முனைவர் இராமசாமி அவர்கள் தலைமையில் மேற்கொண்ட புகார்நகரின் ஆழ்கடல் ஆய்வு அறிக்கை அண்மையில் வெளிவந்தது. அதன் குறிப்பாவது பூம்புகார் நாகரீகம் 15,000 ஆண்டுகட்கு முற்பட்டது என்பது நவீன கடல்சார் அறிவியல் தொழில்நுட்பத்தின் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளது என முனைவர் இராமசாமி,ஒருங்கிணைப்பாளர். பூம்பகார் ஆய்வுத்திட்டம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். தற்பேதைய புகார் கடற்கரையிலிருந்து சுமார் 10கி.மீ. தொலைவில் 250 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் பண்டைய தொன்மையான புகார் நகரம் இருந்துள்ளது என்பதை ஆய்வில் அறியமுடிந்தது. இரண்டு ஆண்டுகால ஆய்வின் முடிவாக அறிப்பட்டதாக பாரதிதாசன்பல்கலைக்கழகம் வெளிப்படுத்தியுள்ளது. புநுPஊழு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உலக கடலாய்வுகளின் ஒப்பீட்டின்படி பூம்புகார் நகரம் 15000 அண்டுகள் பழமையானது என அறியமுடிவதாக தெரிவித்துள்ளனர்.
மண்டலஉதவி இயக்குநர்(ப.நி), தொல்லியல்துறை, சென்னை-126.
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டத்தில் அமைந்துள்ள கே.ஆர்.தோப்பூர் என்ற அழகிய கிராமத்தை பூர்வீகமாக கொண்ட இவர் 15-04-1953 ஆம் ஆண்டு கே.எம்.சபாபதிமுதலியார் அவர்களுக்கும், திருமதி பாப்பாத்தி அம்மாள் அவர்களுக்கும் மகனாகப்பிறந்தார். 1971-1974 ஆம் ஆண்டு இளங்கலைபட்டத்தை கிருஷ்ணகிரி கலைக்கல்லாரியிலும், 1974-1976 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பண்டைய வரலாறும் தொல்லியலும் என்ற பாடப்பிரிவில் முது கலைப்பட்டத்தையும் பெற்றார். இவர் 1979 முதல் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறையில் மாவட்டத்தொல்லியல் அலுவலராக தென்னாற்காடு மாவட்டத்தில், சிதம்பரம் தலைமையிடத்தில் பணியில் சோ;ந்தார். 2011ஆம் ஆண்டு வயதுமுதிர்வு காரணமாக மண்டலஉதவி இயக்குநர் பதவியில் இருந்து பணி ஓய்வு பெற்றார். 32 ஆண்டுகள் தொல்லியல், கல்வெட்டு, அகழாய்வு கட்டடக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றில் திறம்பட பணியாற்றினார். இவரது குறிப்பிடத்தக்க சிறப்பு பனி அகழாய்வு. இவர் காஞ்சீபுரம், கரூர், கங்கை கொண்ட சோழபுரம், பூம்புகார், படைவீடு, கண்ணனுரர்(சமயபுரம்), அழகன்குளம், செம்பியன்கண்டியூர், தலைச்செங்காடு, மாங்குளம், மாங்குடி, பரிக்குளம், மோதூர், போன்ற பல நிலஅகழாய்வுகளில் பணியாற்றியுள்ளார். பூம்புகார் அகழாய்வில் ஆழ்கடல் அகழாய்வாளராகவும், மூழு;குநராகவும் பனிபுரிந்து பல அரிய சங்ககால வாழ்விடப்பகுதிகளை வெளிக்கொணர்ந்துள்ளார். நாம்தமிழர் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்துள்ள தொல்லியல் ஒரு அறிமுகம், செம்பியன்மாதேவி, புதையுண்ட தமிழகம், குந்தவைப்பிராட்டியார், காந்தளுர்சாலைக் கலமறுத்தருளிய ஸ்ரீராஜராஜன், தமிழர்பண்பாட்டின்வெளிச்சம்-மட்கலன்கள், தாய்தெய்வங்கள்,அஜந்தா எல்லோரா, தகடூர்நாட்டுக்கோயில்கள்,கடல்கொண்ட நகரம் - பூம்புகார் தொல்பொருள் கலைக்களஞ்சியம் போன்ற நுரல்கள் குறிப்பிடத்தக்கதாகும். வரலாறு,தொல்லியல் இவற்றில் மிகுந்த ஈடுபாட்டோடு தொடர்ந்து பனியாற்றி வருகின்றார்.2020 ஆம் ஆண்டு கனடா தமிழ்ச்சங்கம் நடத்திய மாநாட்டில் பங்கேற்று எனது தொல்லியல்ஆய்வு நுரல்களை வழங்கி மாநாட்டில் உரையாற்றினேன். கனடாவில் நடைபெற்ற தமிழ் உலகமரபுமாநாட்டு விழாவில் பங்கேற்று அங்கு உலகமரபுக்காவலர் விருதைப் பெற்றுள்ளேன்.தற்பொழுது தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறையின் சேலம் மண்டலத்தின் தொல்லியல் ஆலோசகராக பணியாற்றி வருகின்றார்.
Selvaraj.sabapathi@gmail.com 919443764046