◀ Prev 📑 Contents Next ▶ 📖 3D Flipbook

4. அறவோர் புகழ்ந்த வாய்கோலன்னே

அரசின் குறிக்கோள்

அரசின் குறிக்கோள் என்ன? அரசன் எத்தன்மையனாய் இருத்தல் வேண்டும் என்பதைக் குறிக்கும் இலக்கணங்களாக இவற்றைக் கொள்ளலாம். இவ்வாறு ஆன்றோர் வகுத்த இலக்கணம் இருக்க, தமிழக அரசு எவ்வாறு இயன்றது என்றும் அறிய பல சான்றுகள் உள்ளன. அரசர்கள் போரில் ஈடுபட்டு அடைந்த வெற்றி தோல்விகளும், அதனால் நாடுகளுக்கு ஏற்பட்ட உயர்வும் அழிவுமே புறப்பாட்டுகளிலும், மெய்க்கீர்த்திகளிலும் இடம் பெற்றுள்ளன என்று கருதக்கூடாது. அரசர்களுக்குள் ஏற்பட்ட போர்களுக்கும் வெற்றிகளுக்குமே வரலாற்று நூல்களில் அதிக இடம் அளிக்கப்பட்டுள்ளன. அவ்வளவுதான். மன்னர்களிடம் இருக்க வேண்டிய தன்மைகளில் வீரம் சிறப்பாகப் போற்றப்பட்டது என்னவோ உண்மை. ஆயினும் அவர்கள் குடிகளைப் புரந்ததும், குடிகளிடத்தில் கொண்ட அன்பும், அறத்தை நிலை நிறுத்திய செயல்களும், ஆன்றோர் பேணியதும், நாட்டின் வருவாயைப் பெருக்க அவர்கள் கொண்ட முயற்சிகளும் பெரும்பாலும் எல்லாப் பாக்களிலும், மெய்க்கீர்த்திகளிலும் இடம் பெற்றுள்ளன. தனிப்பட்ட அரசர்களைப் பற்றிய புறப்பாக்களும், பிற்காலத்தில் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் காணப்படும் மெய்க்கீர்த்திகளும், அந்தந்த அரசர்கள் எதைத் தங்கள் குறிக்கோளாகக் கொண்டு, அவை நிலவ ஆட்சி புரிந்தனர் என்று அறிய ஏதுவாகவுள்ளன.

சங்கலால மன்னரின் குறிக்கோள்:

சங்கலாலத்து வாழந்த மன்னர்களின் தன்மையை புறநானூறும் பதிற்றுப்பத்தும், சிலம்பும் மேகலையும் சிறப்பாகப் பல இடங்களில் குறித்துள்ளன. அரசனது தொழில் கொடியவற்றை நாட்டிலிருந்து அகற்றி, அறத்தை நிலைநிறுத்தி, தன் காவலுக்குத் தேவையான பொருளை மக்களிடமிருந்து பெற்றுக் காத்தலாகும் என்பதை “கொடியது கடிந்து கோல் திருத்தி படுவ துண்டு பகலாற்றி” என்று மாந்தரஞ் சேரலிரும் பொறையை குறுங்கோழியூர்க் கீழார் கூறுவதிலிருந்து அறியலாம்.
கோப்பெருஞ்சோழனை போத்தியர் புகழ்வதும் அக்கால மன்னர்களது தன்மைக்கு எடுத்துக்காட்டாம். பாடுவாருக்கு புகழ் அளித்தான். ஆடுவாருக்கு அன்பு அளித்தான். மகளிருக்கு இன்பம் அளிப்பதில் வல்லவனாயும், வீரரில் வீரனாயும், கற்றறிந்தோர்களின் புகலிடமாயும், அறவோர் போற்றும் புகழ்மிக்கவனாயும் வாழ்ந்தான் என்று:- பாடுநர்க்கீந்த பல் புகழன்னே ஆடுநர்க் கீந்த பேரன்பின்னேஅறவோர் புகழ்ந்த வாய்கோலன்னே திறவொர் புகழ்ந்த திண்ணன் பினனேமகளிர் சாயல் மைந்தர்கு மைந்து துகளறு சாயல் உயர்ந்தோர் புக்கில் எனப்படுவதால் அறியலாம். குடிமக்களுடைய நலனையே என்றும் மனத்தில் இருத்தி சங்ககால மன்னர் ஆண்டனர். தன்குடிமக்கள் தன்னைக் கொடியவன் என்று கூறுவதைத் தமக்கு மிகவும் இழிவு என மன்னர் கருதினர். பாண்டியன் நெடுஞ்செழியன் நான் மாற்றாரை வெல்லாவிட்டால் என் குடிமக்கள் கண்ணீர் விட்டு கொடியன் எம் இறை என்று தூற்றட்டும் என்று கூறும் புறப்பாட்டு (72) இதையே வலியுறுத்துகிறது. என்னிழல் வாழுநர் சென்னிழல் காணாதுகொடியன் எம் இறை எனக் கண்ணீர் பர்ப்பிக்குடிபழி தூற்றும் கோலேனாகுக என்று அமைகிறது அப்பாட்டு. செங்கோல் செலுத்தும் அரசர்க்கு (1) கோபம் (2) அளவிறந்து ஒருவரை உவத்தல் (3) பகைவருக்கு அஞ்சுதல் (4) பொருளிடத்தில் அளவுக்கு மிஞ்சிய பற்று (5) அளவுக்கு மிஞ்சிய தண்டனை முதலிய வேண்டப்படாத குற்றங்கள் எனப் பதிற்றுப்பத்து கூறும் (பதி. பத். 22). அந்தணர் கூறிய வழியில் செயல்களைச் செய்து நல்ல ஆசிரியரைப் பெற்று, கிடைக்காத அரும் பொருள்களை எல்லாம் மக்களுக்குக் கிடைக்கும்படி செய்து குடிகளின் செல்வத்தைப் பெருக்கி நல்ல நூல்களைக் கற்று, புகழை நிலை நிறுத்தி வீரர்கள் எல்லாம் உன் மொழி கேட்க அழகிய மகளிர் அளிக்கும் மதுவுண்டு மகிழ்ந்து விளங்குவாயாக என மாங்குடி மருதனார் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியுள்ளது, சங்க கால மன்னர் எத்தன்மையைச் சிறப்பாகப் போற்றினர் என்பதற்கு எடுத்துக்காட்டாகும். (மதுரை. காஞ் - 765-780). தன் ஆட்சியின் கீழ் வரும் மக்கள் பிறரை நலியாமலும், பிறர் பொருளை விரும்பாமலும், குற்றமற்ற அறிவினராய் அறநெறியில் ஒழுகி விரும்புகின்ற மனைவியரைப் பிரியாமல் இல்லறம் நடத்தி, விருந்தினருக்குப் பகுந்து எஞ்சியதை உண்டு பிணியில்லாமல் வாழ வகை செய்தனர் செல்கெழு குட்டுவனின் முன்னோர் (பதி. பத். 22-79). பகைவர் செய்த குற்றத்திற்கு அவர் நாட்டை அகப்படுத்திய போதிலும், அப்பகைவரிடத்தும் கோபம் கொள்ளாத உன் குணத்தை என்னென்று போற்றுவேன் எனக் காப்பியனார் நார்முடிச் சேரலைப் போற்றுகிறார் (பதி. பத். 33-15).

பல்லவனின் குறிக்கோள்:

பல்லவ மன்னர்கள் வெளியிட்ட பல செப்பேடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் சில சொற்றொடர்கள் பல மன்னர்களுக்குத் திரும்பத்திரும்ப குறிக்கப்படுகின்றன இதிலிருந்து இச்சொற்றொடர்களில் காண்பவற்றை இவர்கள் தங்களது குறிகோள்களாகக் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது. “கடவுளிடம் என்றும் நிறைந்த பக்தியினால் அனைத்து மங்கலங்களையும் அடைந்தவன்; ஐம்பொறிகளை அடக்கியவன்; முன்னோர் வழியைப் பின்பற்றுவதில் ஈடுபட்டவன்; முன்னர் திகழ்ந்த ராஜரிஷிகளின் குணங்களையும் ஆற்றல்களையும் அடைந்தவன்; தன் குழந்தைகளிடத்தில் தோன்றும் அன்பை, தன் குடிகளிடத்தில் எப்போதும் கொண்டவன்; கலி காலத்தின் குற்றத்தால் தாழ்ந்த அறத்தை உயர்த்துவதிலேயே எப்பொழுதும் முனைந்து நிற்பவன்; ஆசையும் குரோதமும், கோபமும், காமமும், அச்சமும் அறவே அற்றவன்; தாழ்ந்த அரசகுலங்களை நிலைநிறுத்துவதைத் தொழிலாய்க் கொண்டவன்; அறிஞ்ர்களுக்கு கல்பமரம் போன்றவன்; அறத்தினுக்கு இருப்பிடம்; செல்வத்தின் இருக்கை; இறையையும், த்விஜர்களையும், குரவர்களையும், முதியவ்ர்களையும் போற்றுபவன்; வினயம் நிறைந்து நிற்பவன்; அமுதத்துக்குச் சமமான அன்பையும் விழத்துக்குச் சமமான உத்ஸாஹ சக்தி என்று மூன்று சக்திகள் நிறைந்தவன்; தன் புலவலியால் அடைந்த க்ஷ¡த்ர தபோநிதி; புயவலியால் அரசமண்டலங்களை வணக்கியவன்; சத்யபிரதிஞன்; ஒழுக்கம் நிறைந்தவன்; அறம்பெருக விரும்புவோன்; விதிக்கப்பட்ட எல்லா குணங்களையும் உடையவன்” என்று பல பல்லவ மன்னர்கள் குறிக்கப்படுகின்றனர். தாங்கள் ராஜரிஷிகளாகத் திகழவேண்டும் என்பது இவர்களது குறிக்கோள்.

குடிகளிடம் அன்பு:

குடிகளிடத்தில் இவர்கள் கொண்ட அன்பைப் பலவாறாக செப்பேடுகள் குறிக்கின்றன. மக்களை நன்கு பரிபாலிப்பதே தன் தொழிலாக, சத்யவிரதமாக, தீ¨க்ஷ ஏற்றவன்; எல்லாக்குடிகளின் கண்களுக்கும் இதயங்களுக்கும் வசந்தமாதம் போல் இன்பம் அளிப்பஅன்; தன் புயவலியால் புரக்கப்பெற்ற புரங்களிலும் ஜானபதங்களிலும் உள்ளோர் மகிழும் பேறு பெற்றவன்; குடிமக்களின் அன்புப் பெருக்கைப் பெற்றுள்ளதால் குறைவற்ற செல்வம் உடையவன்; தன் குழந்தைகளிடத்தில் தோன்றும் அன்பையே தன் குடிகளிடத்தில் எப்பொழுதும் கொண்டவன்; தனது நற்குணங்களால் குடிமக்களுக்கு இன்னர் ஏதுமின்றி போக்கடிபவன் என்றும், பல்லவருக்கு குடிகள்பாலுள்ள அன்பு பல முறை குறிக்கப்பட்டுள்ளது.
இக்குலத்தில் பிரம்மணியம் இல்லாதவனோ, யாகம் செய்யாதவனோ, முறையற்ற வகையில் சேனையை விடுத்த வனோ, புலன்களை அடக்கியதாக நடிப்பவனோ, கொடையாளி அல்லாதவனோ, பொய்பேசும் நாவை உடையவனோ போரைக்கண்டு அஞ்சுபவனோ யாரும் இருந்ததில்லை என ஒரு செய்யுள் அழகாகக் கூறுகிறது.

கல்வி:

நந்திவர்மன் பல்லவமல்லன் கவிதை இயற்றுவதில் வால்மீகிக்குச் சமமானவன் என்றும், அரசியலில் பிரஹஸ் ஈடானவன் என்றும் குறிக்கப்படுகிறான். தெள்ளற்றெறிந்த நந்திவர்மனை நந்திகலம்பகம் ‘சினக்கலியின் ‘அறம் பெருகும் தனிசெங்கோலன்’ என்றும், ‘பகையின்றி பார் காக்கும் பல்லவர் கோன்’, செங்கை முகில் அனைய கொடைச் செம்பொன் பெய் ஏகத்தியாகி என்றும் ‘ஏழைமார் துணை’ என்றும் போற்றுவது குறிப்பிடத்தக்கது.
பல்லவ மன்னர்கள் கல்வியில் சிறந்த ஈடுபாடு கொண்டவர்கள், எல்லா சாத்திரங்களையும், சத்திரங்களையும் (படைக்கலன்களையும்) கற்றறிந்தவர்கள் என்று அவர்கள் புகழப்படுகின்றனர். எல்லா சாத்திரங்களின் பொருளையும் அறுதியிட்டு அறிவதில் வல்லவன் என்று விஜயஸ்கந்தவர்மன் என்னும் மன்னன் புகழப்படுகிறான். காவிய நாடகங்களை இயற்றுவதில் வல்லவன் என்றும் கடினமான யாப்புடைய செய்யுட்களை இயற்றுவர்தில் சமர்த்தன் என்றும் நந்திவர்மன் போற்றப்படுகிறான். தொல்லை நூல் முழுதுங்கண்டான் என்பதும் நூற்கடற் புலவன் என்பதும் தெள்ளாற்றெறிந்த நந்தி பெற்ற பெயர்களாம்.

கலப்பை கொடுத்தல்:

பல்லவர் அக்னிஷ்டோமம், வாஜபேயம், அச்வமேதம் போன்ற வேள்விகளில் பல செய்தனர். இதை அக்கிட்டோம வாஜஏய அச்சமேதயாஜி என்னும் தொடர்களால் அறிகிறோம். ‘பல அச்வமேதம் முதலிய வேளிர்களில் நீர் ஆட்டப்பெற்ற வல்லவர்களான பலலவர்கள்’ என்று இவர்களை ஒரு செப்பேடு குறிக்கிறது. சிம்மவர்மன் என்ற மன்னன் பத்து அச்வமேதபாகங்கள் செய்ததாக சிவன்வாயில் கல்வெட்டுக் குறிக்கிறது. பல வேள்விகள் புரிந்ததால் தங்களைப் பரமபிரும்மண்யர்கள் என்று இவர்களை கூறுக்கொண்டனர். பலமுறை அளித்த கோதானம், முதலியவற்றால், நாள்தோறும் பெருகுகின்ற அறத்தை உடையவர்கள் என்றும் இவர்கள் குறிக்கப்படுகின்றனர். ஒரு மன்னனை கோப் பொன்னும், நூறாயிரம் பசுக்கலும், நூறாயிரம் கல்ப்பைகளும் அளித்தவன் என்று ஹிரஹடஹல்லி செப்பேடு கூறுகிறது. கலப்பைகளை தான செய்வது ஒரு சிறந்த வேள்வியாகக் கருதப்பட்டது எனது இதிலிருந்து தெரிகிறது. பல்லவர்கள் காடுவெட்டிகள் என்று குறிக்கப்பட்டனர். காடுகளை அழித்து பல்லாயிரக்கணக்கான வேலி நிலங்களை விளை நிலங்களாகச் செய்வதற்கே இவர்கள் அளித்த கலப்பைகள் பயன்பட்டன என்பது தெளிவு. இது ‘நாஞ்சில் அல்லது படையும் அறியார்” என்னும் சங்க மரபையே நினைவுறுத்துகிறது.

பாண்டியரின் குறிக்கோள்:

பல்லவர்களைப் போலவே தமிழகத்தின் தென் பகுதியை ஆண்ட பாண்டியர்களும் தங்களது செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் குறித்துள்ளனர். மனுவிதித்த வழியிலே நின்று முன்னோரைப் போற்றி, பண்டித வத்ஸலனாக பராந்தக நெடுஞ்சடையன் ஆண்டான் என்று, “மனுதர்சித மார்கத்தினால் குருசரிதம் கொண்டாடி கண்டக சோதனை தான் செய்துகடல் ஞாலம் முழுதளிக்கும் பாண்டியநாதன் பண்டிதவத் ஸலன்” என்று அவனைப் புகழ்கின்றன ஸ்ரீவரமங்கலம் செப்பேடுகள். ஓராயிரம் வேள்விகளைப் பாண்டியர் செய்தனர் என்று சிறியச் சின்னமனூர் செப்பேடுகள் கூறுகின்றன (ஓராயிரம் க்ரது செய்தும்). மாறவர்மன் ஹிரண்யக்ருப்பம் இருமுறையும், கோசஹஸ்ரமும் துலாபாரமும் செய்து இந்திரன் போல் அமர்ந்திருந்தான் என சிறியச் சின்னமனூர் செப்பேடுகள் கூறுகின்றன. “தராசுரத்து இடரகல தனவர்ஷம் பொழிதற்கு வலாஹத்தின் விரதம் பூண்டு, துலாபாரம் இனிதேறி சரண்யனாய் உலகளித்து ஹிரண்யகர்ப்பமிருகால் புக்கு கோசஹஸ்ரத் துடக்கத்துக்கு குருதானம் பல செய்து வாஸவன் போல் வீற்றிருந்தான்” (சிறியச் சின்னமனூர்). கலியின் கல்மஷத்தை அறவே நீக்கி அற்பமில்லா திரவியம் கொடுத்தான் என்று மற்றொரு மன்னன் புகழப்படுகிறான். அவனி மண்டலமுடனோம்பி அருள் பயந்து கற்பகத்தின் விரதங் கொண்டு கலிகல்மஷமற நீக்கி அற்பமில்லா திரவியம் கொடுத்து அவனிசுரர் இடர் நீக்கினான் எனக் கூறுகின்றன.
பராந்தக வீரநாராயணன் “ஆறு பலதலைகண்டும் அமராலயம் பல செய்தும், எண்ணிறந்த பிரமதேயமும் எண்ணிறந்த தடாகங்களும் இருநிலத்தும் இயற்றுவித்தான்” என்று தளவாய்புரம் செப்பேடுகள் கூறுகின்றன. அரிகேசரி பராங்குசமாறவர்மனைப் போற்றி இயற்றப்பட்ட நூல் பாண்டிக்கோவை. அதில் மாறவர்மன் “தீந்தமிழின் பொருள்போல் இனிதாய் புகழ் மன்னன்’ என்றும், ‘தொன்னூல் புலவர் ஆயும் தமிழ் அரிகேசரி’ என்ரும் ‘லலிதேய செங்கோல் நடாவுவான்’ என்றும் போற்றப்படுவதிலிருந்து அவனுக்குத் தமிழ் மொழியிடமிருந்த ஈடுபாடு விளங்குகிறது. கி.பி. 13ம் நூற்றாண்டில் பாண்டியப் பேரரசு மீண்டும் நிலைபெற்றபோது ஆண்ட மன்னர்களின் மெய்க்கீர்த்திகளிலும், அவர்களது குறிக்கோள்கள் குறிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். “மூவகைத்தமிழும் முறையில் விளங்க, நால்வகை வேதமும் நவின்றுடன் வளர, ஐவகை வேள்வியும் செய்வினை இயற்ற, அறுவகைச் சமயமும் அழகுடன் திகழ, எழுவகப்பாடலும் இயலுடன் பரவ” மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆண்டான் என ஆறிகிறோம். மாபெரும் வீரனாக விளங்கிய சடாவர்மன் சுந்தரபாண்டியன், ‘ஒருமை மனத்திருபிறப்பின் முத்தீயின் நால்வேதத் தருமறையோ ரைவேள்வி யாறங்க முடன் சிறப்ப, அருந்தமிழ் ஆரியமும் அருசமயத்தற நெறியும் திருந்துகின்ற மனு நெறியும் திறம்பாது தழைத்தோங்க” ஆண்டான் என அவன் மெய்க்கீர்த்தி கூறுகிறாது’ ‘தென்கடலை வடகடலைத் தெளிவுறத் தெரிந்தவன்’ பராக்ரம பாண்டியன். ‘முத்தமிழும் மனுநூலும் நான்மறை முழுதும் எந்தவிச்சமயமும் இனிதுடன் விளங்க’ ஆண்டவன் மாறவர்மன் குலசேகரன். வீரபாண்டியன் கல்வியிறி சிறந்தவனாக, நீதி நூல்கள், புராணங்கள், பாதஞ்சல யோக சூத்திரம் முதலியவற்றிலும் முத்தமிழிலும் சிறந்தவனாக இருந்தான். “தமிழ்கள் மூன்றும் வரிசையிலமைந்த வடநூல் வகையும், நீதிநூலையும் மேதகுபுராணமும், பாதஞ்சல முதல் பனுவற் பயன்களும் மெய்மை யுணர்ந்து” என்று அவன் மெய்க்கீர்த்தி கூறுகிறது.

சோழரின் குறிக்கோள்:

சோழப் பேரரசர்களின் மெய்க்கீர்த்திகளே மிகவும் நயம்பட இயற்றப்பட்டவை. சுமார் கி.பி. 850ல் மீண்டும் நிறுவப்பட்ட சோழப் பேரரசர்களின் முதல்வர்களான விஜயாலயன், ஆதித்தன், பராந்தகன் முதலானோர்களின் மெய்க்கீர்த்திகள் இராஜகேசரி என்றும் பரகேசரி என்றுமே தொடங்குகின்றன. தமிழகத்தின் தவப்புதல்வன் இராஜராஜனே எழில் வாய்ந்த மெய்க்கீர்த்திகளை தொடங்கியவன். இராஜராஜனும் அவனது மகன் இராஜேந்திரனும் தங்களது வெற்றிகளையே மெய்க்கீர்த்திகளில் சிறப்பாகக் கூறியுள்ளனர். இராஜேந்திரனின் மகன் முதல் இராஜதிராஜனின் மெய்க்கீர்த்திகளில் இருந்து அரசர்கள் ஆண்ட முறையும் சிறப்பாகக் குறுக்க பெறுகின்றன. முதல் இராஜரதிராஜன் நாட்டில் ஆறில் ஒன்று வரியாகப் பெற்றான். மனுநெறி விளங்க ஆண்டான். நான்மறையவருக்கு தானங்கள் அளித்தான்.
ஆறில் ஒன்று அவனியுட் கூறுபொருள்களும்உகந்து நான்மறையவர் முகந்து கொளக்கொடுத்துவிசுவலோகத்தும் விளங்க மனுநெறியின் நின்றசுவமே தஞ்செய்தரைசு வீற்றிருந்தான் என அவனது மெய்க்கீர்த்தி கூறுகிறது.

வேத நெறி:

அவனது தம்பி வீரராஜேந்திர சோழன் “வேத நீதியை விளக்கி மீதுயர் வீரத்தனிக்கொடி தியாகக்கொடியோடும், ஏற்பவர் வருக என்று நிற்க மேவரு மனுநெறி விளக்கினான்” என்று அவன் மெய்க்கீர்த்தி புகழ்கிறது மாப்புகழ் மனுவுடன் வளர்த்தவன் அதிராஜேந்திர சோழன். “தருமநெறி நிற்ப மனுநெறி நடாத்தியவன்”

இராஜேந்திரன் - முதல் குலோத்துங்கனது மெய்க்கீர்த்தி:-

புகழும் தருமம் புவிதொறும் நிறுத்திவீரமும் தியாகமும் தானமும் கருணையும்உரிமைச் சுற்றமாக .....முன்னை மனுவாறு பெருக கலியாறு வறப்ப
ஆண்டான் எனக் கூறுகிறது. அவன் அருமை மகன் விக்கிரமன் மன்னுயிர்க் கெல்லாம் இன்னுயிர்த்தாய் போல் தண்ணளி பரப்பி மண்முழுதுங்களிப்ப மனுநெறி வளர்த்த் தன் கோயிற்கொற்றவாசற்புறத்து மணி நாவொடுங்க முரசுகள் முழங்க விசையமும் புகழும் மென்மேலும் ஓங்க ஆண்டான். அவனுக்குப்பின் வந்த சிவ நெறிச்செம்மல் இரண்டாம் குலோத்துங்கன் பசிபகையானது தீது நீங்க, மன்னுயிர் தழைப்ப, மனுவாறு விளங்க மாதவர் தவமும் மங்கையர் கற்பும் ஆதி அந்தனர் ஆகுதிக்கனலும் மீதெழு கொண்டல் வீசுதன் மேதினி வளருஞ்சாதி ஒழுக்கமும், நீதி அறமும் பிறழாது நிகர ஆண்டான் என்று அவன் மெய்க்கீர்த்தி குறிக்கிறது சோழர் மெய்க்கீர்த்திகளில், முத்தமிழுக்கும் தலைவன் என்று பெயர்பூண்ட இரண்டாம் இராஜராஜனுடைய மெய்க்கீர்த்திகளே, அரசனின் பண்பை மிகமிகத் தெளிவாகக் குறிக்கின்றன. ஆதியுகங் கொழுந்துவிட்டுத் தழைத்தோங்க, மாரி வாய்த்து வளம் சுரக்க, தாரணியோர் பிணி நீங்க, நல்லதோர் தன் கற்புயர, நான்மறையோர் தொழில் வளர, எல்லோருந் தனித் தனியே வாழ்ந்தனமென மன மகிழ்ந்து, ஒருவருடன் ஒருவருக்கும், ஒன்றினுடன் ஒன்றினுக்கும் வெருவரு பகைமை மனத்தின்றி விழைந்து காதலுடன் சேர, இந்திரன் முதல் திசாபாலர் எண் மரும் ஒருவடிவாகி இந்த படிதர நின்று மனுவானை நடாத்தினான் என்று கூறுகிறது. இவன் காக்கும் திரு நாட்டில் இயல்பிது என்று நின்று, காவல் நெறிபூண்டு மேலும் மனுநெறியல்லது நினையாது தந்தையிலோர்க்குத் தந்தையாகியும், தாயிலோர்க்குத் தாயாகியும், மைந்தரிலோர்க்கு மைந்தராகியும் விழி பெற்ற பயன் எனவும் அமையப் பெற்ற அருள் எனவும், மொழி பொருளாம் இவனெனவும் முகம் பெற்ற பனுவல் எனவும், எத்துறைக்கும் இறைவன் எனவும், வரஞ்செய்யும் பெருந்தவமெனவும், முத்தமிழ்க்கும் தலைவன் எனவும், மூன்றுலகின் முதல்வன், எனவும் அரசியற்கை முறை நிறுத்தி அல்லவை கடிந்து ஆறு உய்த்து, பொருகலியின் இருளகற்றி ஆண்டான் எனவும் அவன் மெய்க்கீர்த்திகள் பாடுகின்றன. இவன் மக்களோடு ஒன்றியவனாய் தந்தையாயும், தாயாயும், மைந்தனாயும் வாழ்ந்தான் என்பது குறிக்கத்தக்கது. நாட்டில் உட்பகையின்றி, எல்லோரும் தனித்தனியே வாழ்ந்தனம் என மனமகிஉம்படி ஆண்டான் என்பது மக்களிடத்த இவனுக்கிருந்து அன்பையும், அவர்களது சுதந்திர வாழ்வில் இவன் கொண்ட ஆர்வத்ஹையும் வெளிப்படுத்துகிறது. முடியரசாயிருப்பினும் பண்டைத் தமிழரசு மக்களது சுதந்திரத்தை எவ்வாறு மதித்தது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

மனுநெறி:

இரண்டாவது இராஜாதிராஜனின் கல்வெட்டில் “சமயமாறும் தலை எடுப்பத் தருமமும் அருமறையு மோங்கி அமையில்லா மனுவொழுக்கம் ஆதியாம் படி நிலைநிற்க, ஓர்ப்பினும் தம்முறுகனவிலும் ஒன்றோடொன்று பகையின்றிப் போர்ப்புலியும், புல்வாயும் புக்கொருதுறை நீறுண்ண, பொன்னி நதியும் பொய்யாது, புயலும் புனலோவாது, மன்னிய நதி வளம் பெருக்க விளை வயல் எவ்வனஞ் சுரக்கப் போக பூமி இது வென்னப் போகமெல்லாம் வந்தீண்டி, ஏகவாணை அரசுரிமை எழில் பொழில்களும் பெற்றதென்ன” ஆண்டான் எனக் குறிக்கின்றன. மக்கள் போகமெல்லாம் பெற்று சுகவாழ்வு வாழ்வதே மன்ன ஆற்றும் தொந்தனே இவன் கருதியதை இது குறிக்கிறது. மூன்றாம் குலோத்துங்கன் புயல் பெருக வளம் பெருக பொய்யாத நான் மறையின் செயல் வாய்ப்ப மனுவின் நெறிதழைத் தோங்க ஆண்டான். மூன்றாம் இராஜராஜன் பொருவில் மனுநெறி வாழ நடுவுனின்று குடிகாத்து நன்றார்றும் திறம் பெருகு கதிதிழைத்த உட்பதையும் புறப்பதையும் அறக்கடிந்து ஆண்டான்.
மேற்குறித்த சோழ மன்னர்களது மெஉய்க்கீர்த்திகள் ஒவ்வொன்றிலும் மனுநெறி சிறக்க ஆண்டனர் எனக் குறிக்கப்ப்பட்டுள்ளது சிறப்புடையதாகும். சோழப் பேரரசர்கள் நான்மறயோரை சிறப்ப்புடையோராகக் கருதினர் என்பது அவர்கள் வேள்வி செய்வதற்கு வெண்டிய உதவி செய்தனர் என்பதும், ஒவ்வொரு மெய்க்க்கீர்த்திகளிலும் குறிக்கப்படுவதால் தெரிகிறது. சாதி முறையை ஏற்று, சாதி ஒழுக்கத்தை நிலை நிறுத்தினரென்பது தெளிவு. குடிமக்களுடையே உட்பகை ஏதுமின்றி காத்து எல்லா யோகங்களும் மக்கள் பெற வகை செய்தனர்.

அமரர்பேணியும் ஆவுதியருத்தியும்’

அரசர்கள் இருவகை வேள்வி வேட்டனர். அறக்ள வேஎள்வி என்றும் மறக்கள வேள்வி என்றும் அவை அழைக்கப்பட்டன. போரில் வெற்றி கண்ட காலத்து துணித்த மார்றானின் தலையை அடுப்பாக அமைத்து குருதியை உடலாகவும், துண்டிக்கப்பட்ட கரத்தை துடுப்பாகவும் கொண்டு போர்க் களத்தில் வேள்வி செய்வது ஒரு மரபு. இதையே மறக்கள வேள்வி என்பர். பாண்டியன் தலையாளங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் கனவேள்வி வேட்டான் என்று மாங்குடிக் கிழார் கூறுவர். இதே நிகழ்ச்சியை மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனாரும் கூறியுள்ளார்.

வேள்வி வேட்டல்:

தேவர்களை வேண்டி தீயில் வேட்பது அறக்கள வேள்வி. இவ்வாறு தீயில் வேட ஆரியரிடம் நிலவிய பண்பு. சங்ககாலத் தமிழகத்தில் ஆண்ட பேரரசர்கள் அனைவரும் வேள்வி வேட்டிருந்தனர். சங்க காலத்திலேயே ஆரிய தமிழுடன் இணைந்து ஒன்றாகி நின்றது என்பதை இது காட்டுகிறது. ஒரு மன்னனின் குடிகளில் பல்வேறு வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவோர் இருப்பர். மன்னன் தன்க்கென ஒரு சமயத்தை பின்பற்றிய போதிலும், தன் குடிகளின் சமயங்கள் அனைத்தையும் போற்றினான். அவற்றில் தானும் பங்கு கொண்டான். நான்மறையாளரைச் சுற்றமாகக் கொண்டு, அடிபணிந்த அரசர் ஏவல் செய்ய, தலையாலங்கானத்துச் செறுவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அறக்கள வேள்வி செய்தான் என மாங்குடிக் கிழார் கூறுவார் (புறம். 29). பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி பலயாகங்களைச் செய்ததால் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி எனப் பெயர் பெற்றான் (புறம். 15). இது போன்று சங்ககாலப் பேரரசர்கள் அனைவரும் வேள்வி வேட்டனர். கரிகால் பெருவளத்தான் பருந்துவடிவில் செய்யப்பட்ட வேள்விக் குண்டத்தில் யூபத்தை நாட்டி வேத வேள்வித் தொழிலாகிய யாகத்தை முடித்தான். அப்போது குற்றமற்ற அவனது குலமகளிர்கள் அவனருகே நின்றனர் (புறம் 224).
தூவியற் கொள்கை துகளறு மகளிரொடுபருதியுருவிற் பல்படைப் புரிசைஎருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்வேத வேள்வி தொழில் முடித்த தூஉம்.................(புறம். 224) இவனது குலத்தில் வந்த பெருநற்கிள்ளி, இராஜ சூயம் என்னும் அரசர்குரிய சிறந்த வேள்வி வேட்டு ‘இராஜசூயம் வேட பெருநற்கிள்ளி’ எனப் பெயர் பெற்றான். பல சேர மன்னர்கள் வேள்வி வேட்டனர். பல்யானை செல்கெழு குட்டுவன் கெளதமனாருக்காக பார்ப்பாரில் பெரியோரைக் கேட்டு பத்துப் பெருவேள்வி வேட்பித்தான். (பதி. பத். - பதிகம் 3) பெருஞ்சேரல்லிரும் பொறை வேள்விக்குரிய விதிகளைக் கேட்டு வேள்வி வேட்பதற்கு முன்பு தான் இருக்க வேண்டிய விரதங்களை முறைப்படி முடித்து வேள்வி முடித்தான் (பதி. பதி. 74-1, 2). இளஞ்சேரல்லிரும்பொறை முறைப்படி சாந்தி வேட்டான். சேரன் செங்குட்டுவன் வஞ்சிமா நகரின் வெளியில் குளிர்ந்து பொழில்கள் சூழ்ந்த இடத்தில் வேள்விச்சாலை அமைத்தான். வேள்விமாக்களைக்கேட்டு உரிய முறையில் இராஜசூயம் வேட்டான். அதை ஒட்டி சிறையிலிருந்த எல்லாக் கைதிகளையும் விடுவித்தான். வந்திருந்த மன்னருக் கேற்ப வரிசை முடித்தான். “பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்து தாழ் நீர் வேலி தண் மலர்பூம் பொழில் வேள்விக்கான மாளிகை கட்டி நன் பெரு வேள்வி முடித்தபின்” எனச் சிலம்பு (28-196, 199) கூறுகிறது. அதியமான் நெடுமானஞ்சியின் முன்னோர்கள் “அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும்” சிறப் பெய்தினர் (புறம். 99). வேளிர்கள் வேள்விக் குண்டத்தில் தோன்றியவர் என்ற வரலாறு உண்டு. சங்ககாலத்தில் அரசர் வேள்வி வேட்டலை மிகச்சிறப்பாகக் கருதினர். சங்ககாலத்திற்குப்பின் வந்த பல்லவரும் பாண்டியரும் வேள்வியில் ஈடுபாடு நிறைந்து விளங்கினர். ஒரு பாண்டிய மன்னன் காலையிலும் மாலையிலும் அக்னியில் ஹோமம் செய்தான் என்று தளவாய்புரம் செப்பேடு கூறுகிறது. பாண்டியர்களில் அரிகேசரி மாறவர்மன் ஹிரண்யக்ருப்ப்பம், துலாபாரம், பகுசுவர்ணம் என்பவற்றை செய்தான். தேர்மாறன் என்னும் பாண்டியனும் எண்ணிறந்த கோசஹஸ்ரமும், ஹிரண்ய கருப்பமும், துலாபாரமும் செய்தான் என்று வேள்விக்குடி செப்பேடுகள் குறிக்கின்றன. மாறவர்மன் இராஜசிம்மன் துலாபாரம் செய்தான் என்றும், இருமுறை ஹிரண்யகருப்பம் செய்தான் என்றும் கோசஹஸ்ரத்தின் துடக்கத்திற்காக குருதானம் பல செய்தான் என்றும் சிறியசின்னமனூர் செப்பேடுகள் கூறுகின்றன. பல்லவர்கள் முறைப்படி பல வேள்விகளை வேட்டவர்கள் என்று அவர்களது கல்வெட்டுகள் கூறுகின்றன. சிவ ஸ்கந்தவர்மன் என்பான் அக்னிஷ்டோமம், அச்வமேதம், வாஜபேயம் ஆகிய வேள்விகளை வேட்டான். குமார விஷ்ணு அச்வமேத யாகம் செய்தான். சோமயாகம் செய்யாதவரே பல்லவ குலத்தில் கிடையாது என ஒரு செப்பேடு குறிக்கிறது. அவர்கள் பல வேள்விகளை வேட்டதால் பிரும்மண்யம் நிறைந்தவராய் இருந்தனர். அதனால் பரம பிரும்மண்யர் என்று அழைக்கப்பட்டனர். சோழர்களில் பராந்தகன், இராஜராஜன் முதலியோர் துலாபாரம் புரிந்திருக்கின்றனர். முதல் இராஜாதிராஜன் அச்வமேத யாகம் செய்தான் என அவன் கல்வெட்டுகள் கூறுகின்றன. விஜயாலயன் வழிவந்த சோழப் பெரும் பேரரசர்களில் இராஜாதிராஜன் ஒருவனே அச்வமேத யாகம் செய்தவன். பின்னர் வந்த விஜயநகர மன்னர்கள் ஹிரண்ய கருப்பம், துலாபாரம் ஆய செய்துள்ளனர். பொதுவாகப் பார்க்கும்போது சங்கலால மன்னர்கள் வேத மரபைப் பின்பற்றி வேள்வியே அதிகம் வேட்டனர். வேத மரபு சமுதாயம் முழுவதும் ஊடுருவிப் பரந்து நிறைந்து நின்றது. காலம் செல்லச் செல்ல புராணங்கள் அதிகம் மக்களிடையே பரவின. வேத மரபில் பலவற்றிற்கு பொருள் விளங்காமல் படிப்படியாக மறையத் தலைப்பட்டன. இது பாரதம் முழுவதும் காணப்படும் ஒரு மாற்றம். இம் மாற்றம் தமிழகத்திலும் காணப்படுகிறது. புராணங்களின் அடிப்படையில் கோயில்களில் பல்வேறு உருவங்களை வைத்து வழிபடுவது மேலோங்கத் தலைப்பட்டது. பல்லவர் காலத்திலிருந்து மன்னர்கள் வேள்வி வேட்பதைக் காட்டிலும் சிற்பச் செழுமை வாய்ந்த கோயில்களைக் கட்டுவதில் சிறப்பாக ஈடுபட்டனர். சங்க காலத்தில் பிற்காலத்தைக் காட்டிலும் வேத மரபு நிறைந்து நின்றது.