சதாசிவ ரூபம் — மூலமும் உரையும். கணபதி துணை. திருச்சிற்றம்பலம். சிறப்புப்பாயிரம்.
பொருளடக்கம் முகவுரை சதாசிவரூபம்

மலைவளர் குங்கும வன முலை சுரந்த கலைவளர் ஞானங் கதிர்மணி வள்ளத் தந்நிலை யமுதுசெய் தமலனை நோக்கி யென் னுளங் கவர்ந்தவ னிவனென் றேத்திய 5 மறைத்தழிழ்க் கவுணியன் மலர்க்கழல் வணங்கிப் பரை முதற் பஞ்ச சத்தி களையும் விரைவுட னைந்தொழில் விரிப்பது வேண்டி யாக்கி யவர்க ளிடத்தி லருட்சா தாக்கிய மைந்தாய்த் தம்மி லவை திரண் 10 டெழிற்றொழிற் சாதாக் கியமா யதுமிவர் நிழற்கதிர்ச் சகள நிட்கள மாகையிற் சுத்தா சுத்த தத்துவ மிவர்தமை யொத்தா சரிக்கு மொழுக்கமு மிவரே யனைத்தா தார மாகையு மிவர்பாற் 15 றனிச்சிவன் வியாபிக் கின்ற தன்மையு மிவர் தமை யர்ச்சித் தேத்து முறைமையுமங் கவலையில் வாதுளங் காமிக மென்னு மிரண்டு தந்திரத் தெங்கோ னருளாற் றிரண்ட பொருள்களைச் சீர்பெறத் தொகுத்துத் 20 தண்டமிழ்த் தொடையாற் சதாசிவ ரூபமென் றொண்டிறற் பனுவ லுளங்கனிந் துரைத்தோன் ஞானக் குழவியு நாவினுக் கிறைவனு மூனமி லூரனு மொருவடி வாகிச் சிரபுரத் துதித்தோன் றிருநெறிக் காவலன் 25 றருசிவ ஞான சதுர பாடிக னஞ்சுக போத மருள்புரி வள்ளற் கஞ்சுக நாதன் கலைத்தமிழ்க் கடலே. சிறப்புப்பாயிரம் முற்றிற்று.
பொருளடக்கம் முகவுரை சதாசிவரூபம்