ஞானக் குழந்தை நாட்டிய இலக்கியம் வித்யாவாசஸ்பதி டாக்டர் இரா. நாகசாமி ஞானக் குழந்தை அங்கம் இரண்டு பொருளடக்கம் | அங்கம் ஒன்று | அங்கம் மூன்று
காட்சி 4 திருத்தாளம் பெற்றது திருஞானசம்பந்தர் வளர்ந்து வருகிறார். திருக்கோலக்கா என்னும் பதிக்கு எழுந்தருளி “மடையில் வாளைபாய” என்னும் பதிகம் பாடத் தொடங்குகிறார். சிறுவர் தன் கையினால் தாளம் போட்டுக் கொண்டு பாடுவதைக் கண்டு சிவபெருமானும் தேவியும் எழுந்தருளி “நமசிவாய” என்னும் பெயர் பொறித்த தங்கத்தினால் ஆன தாளம் அளிக்கின்றனர். அன்றிலிருந்து ஞானசம்பந்தர், தாளம் ஏந்திப் பதிகள் தோறும் சென்று பரமனைத் தமிழிசையால் பாடுகிறார். பண் : தக்கேசி காம்போதி — ரூபகம் மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக்கா வுளான் சடையும் பிறையும் சாம்பற் பூச்சும்கீள் உடையும் கொண்ட உருவம் என்கொலோ ? பெண்தான் பாகமாகப், பிறைச்சென்னி கொண்டான், கோலக்காவு கோயிலாக் கண்டான் பாதம் கையால் கூப்பவே உண்டான் நஞ்சை உலகம் உய்யவே.
பொருளடக்கம் | அங்கம் ஒன்று | அங்கம் மூன்று