pATal66 pATal65.html pATal66.html pATal67.html ஏரெழுபது மகாகவி கம்பர் 66. விரைக்கோட்டைச் சிறப்பு.
பொருளடக்கம் | 65. பொலிகோலின் சிறப்பு. | 67. கல்லறைச் சிறப்பு. | அகெடமி

விரைக்கோட்டை — நெல்விதையைவைத்து அவற்றைப் பொதிந்து கட்டுவது. 66. விரைக்கோட்டைச் சிறப்பு. திருத்தோட்டுப் பிரமாவாற் செனிக்கின்ற வுயிர்களுக்கும் உருத்தோட்டும் புகழுக்கும் உரிமைமுறை வளர்க்கின்ற வரைக்கோட்டுத் திணிபுயத்து வளர்பொன்னித் திருநாடர் விரைக்கோட்டை கொண்டன்றோ வேந்தரிடுங் கோட்டைகளே. (இ—ள்.) திரு தோடு — அழகிய இதழ்களைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருக்கின்ற, பிரமாவால் — பிரமதேவனால், செனிக்கின்ற — பிறக்கின்ற, உயிர்களுக்கும் —பிராணிகட்கும், உருத்து — கோபித்து, ஓட்டும் — (வறுமையைப்) போக்குவதனா லுண்டாகின்ற, புகழுக்கும் — கீர்த்திக்கும், உரிமை முறை ­— உரிமையாகிய முறையை, வளர்க்கின்ற, வரை கோடு திணி புயத்து வளர் பொன்னி திரு நாடர் — மலைச்சிகரம்போலச் செறிந்த தோளுடனே வளர்ந்துள்ள சோணாட்டு வேளாளரின், விரை கோட்டை கொண்டு அன்றோ — விதைக்கோட்டையைக் கொண்டல்லவோ, வேந்தர் இடும் கோட்டைகள் — அரசர் கட்டியுள்ள கோட்டைகள், (நிலைத்துள்ளன); (எ - று.) நெற்கோட்டை நிறைய இல்லாவிடின், வேந்தர் கோட்டை நில்லாவாகையால், விரைக்கோட்டை கொண்டே வேந்தர் கோட்டை நிலைக்குமென்றார். விரை = விதை. “உயிர்களுக்கும்”, “புகழுக்கும்” — உம்மைகள் முற்றுப்பொருளன; ஆகவே, வேளாளர் பிரமதேவனாற் படைக்கப்பட்ட எல்லாவுயிர்கட்கும் பசிவருத்தம் நேராதபடி அவ்வருத்தத்தைக்கடிந்து எவ்வளவு புகழைப்பெறலாமோ அத்துணைப் புகழையும் உரிமைமுறையாற் பெற்றிருக்கின்றன ரென்பது முதல்மூன்றடிகளாற் பெறப்படும். தோடு — மலரின் இதழ்: இச்சொல் — மலருக்கு ஆகிவந்தது; சினையாகு பெயர். செனிக்கின்ற — வடமொழித் தாதுவினடியாகப் பிறந்த பெயரெச்சம். — (66)
பொருளடக்கம் | 65. பொலிகோலின் சிறப்பு. | 67. கல்லறைச் சிறப்பு. | அகெடமி