pATal36 pATal35.html pATal36.html pATal37.html ஏரெழுபது மகாகவி கம்பர் 36. பயிர்விளைத்தற் சிறப்பு.
பொருளடக்கம் | 35. நடவுமுனைச் சிறப்பு. | 37. பயிர்முதற் சிறப்பு. | அகெடமி

பயிரை நன்கு விளையுமாறு செய்யுந் தொழிலின் சிறப்பைக் கூறுவது. 36. பயிர்விளைத்தற் சிறப்பு. ஏராலே சேறாக்கி யெருவாலே கருவாக்கி நீராலே பைங்கூழை நிலைப்பிப்பார் தமையன்றிக் காராலே காவேரி நதியாலே காசினியில் ஆராலே பசிதீர்வார் அகலிடத்திற் பிறந்தோரே. (இ—ள்.) ஏராலே சேறு ஆக்கி — ஏரைக்கொண்டு உழுவதால் சேறு செய்து, எருவாலே கரு ஆக்கி — எருவிடுதலாலே கருவேறச் செய்து, நீராலே — நீரை உரிய காலங்களிற் பாய்ச்சுதலால், பைங் கூழை நிலைப்பிப்பார் தமை — பசுமையான பயிரை நிலைக்க [நன்கு விளையுமாறு] செய்விப்பவர்களாகிய வேளாளரை, அன்றி — அல்லாமல், அகல் இடத்தில் பிறந்தோர் — பரந்த இந்தப்பூவுலகத்திலே தோன்றிய மானுடர், காசினியில் — இந்தப்பூமியில், ஆராலே — யாவரால், பசி தீர்வார் — பசிநீங்கப்பெறுவர்? காராலே — மேகத்தினாலே, (பசிதீர்வாரா?), காவேரிந்தியாலே — காவிரியாற்றினாற் (பசி தீர்வாரா)? (எ - று.) மழைபெய்யினும் காவேரிபெருகிவரினும் வேளாளர் பயிர் விளைக்காவிட்டால் உண்ண உணவின்றி உலகத்தவர் பசித்திருக்க வேண்டிவரு மாதலின், உலகத்திற்பிறந்தோர் பசிதீர்வது, வேளாளர் பயிரை விளைத்தலினாலேயேயா மென்றார். எருஇடாவிட்டால் கரு வீறுபெற்றுத்தோன்றா வாதலால், “எருவாலே கருவாக்கிர்” என்றது: “ஏரினுநன்றாலெருவிடுதல்” என்றார், திருவள்ளுவரும். கரு — பயிரின் கதிரினுட்பிடிக்கும் மணி. — (36)
பொருளடக்கம் | 35. நடவுமுனைச் சிறப்பு. | 37. பயிர்முதற் சிறப்பு. | அகெடமி