pATal22 pATal21.html pATal22.html pATal23.html ஏரெழுபது மகாகவி கம்பர் 22. மண்வெட்டிச்சிறப்பு.
பொருளடக்கம் | 21. படைச்சாலின்சிறப்பு. | 23. வரம்பு கோலுதற்சிறப்பு. | அகெடமி

22. மண்வெட்டிச்சிறப்பு. மட்டிருக்குந் திருமாது மகிழ்ந்திருக்கும் பூமாது முட்டிருக்குஞ் செயமாது முன்னிருப்பார் முதுநிலத்து விட்டிருக்குங் கலிதொலைத்து வேளாளர் தடக்கையினிற் கொட்டிருக்க வொருநாளுங் குறையிருக்க மாட்டாதே. (இ—ள்.) முது நிலத்து — பழைய நிலவுலகத்து, வேளாளர் தட கையினில் — வேளாளர்களின் பெரிய கையினிடத்ததாகிய, கொட்டு — மண்வெட்டிக்கருவி, விட்டிருக்கும் — தங்கியிருக்கும், கலி தொலைத்து— தரித்திரத்தை அறப் போக்கி, இருக்க — (அவர்கள் கைகளைவிட்டு நீங்காவாய்) இருக்க, (அதனால்) ஒரு நாள் உம் குறை இருக்க மாட்டாது — ஒருபோதும் வறுமை யென்பது இருக்கமுடியாது; [அதற்கு மாறாக] மட்டு இருக்கும் திருமாது — தேன்பொருந்திய செந்தாமரைமலரில் எழுந்தருளியிருக்கும் இலக்குமிதேவியும், பூ மகிழ்ந்திருக்கும் மாது — வெண்டாமரைப்பூவில் மகிழ்ச்சியுடன் எழுந்தருளியிருக்கும் சரசுவதி தேவியும், முட்டு இருக்கும் செயமாது — ஆயுதம் ஏந்தியிருக்கும் விசயவிலக்குமி தேவியும், முன் இருப்பார் — முன்வந்து நிற்பார்கள்; (எ - று.) கொட்டுக்கொண்டு நிலத்தைத்திருத்தவே, முதுநிலத்து இறைகொண்ட மூதேவி தொலைய, திருமகள், கலைமகள், செயமகள் மூவரும் முன்நிற்பர் என்பதாம்: இதனால், செல்வம் பெருக, கலைகள்வளர, கொற்றம் உழவிடை விளைதல் பெற வைக்கப் பட்டது. மட்டு - தேன். அதனைக் கொண்ட பூவிற்கு ஆகுபெயர். முட்டு — கருவி, ஆயுதம். “கொற்றரு மிருப்பு முட்டு” என்றது திரு — வாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், 45: 8. கலி — மிடி,தரித்திரம்: “கலிகையா னீக்கல் கடன்” என்றது புறப் பொருள்வெண்பாமாலை. — (22)
பொருளடக்கம் | 21. படைச்சாலின்சிறப்பு. | 23. வரம்பு கோலுதற்சிறப்பு. | அகெடமி