ஞானக் குழந்தை
நாட்டிய இலக்கியம்
வித்யாவாசஸ்பதி டாக்டர் இரா. நாகசாமி
ஞானக் குழந்தை
அங்கம் ஏழு
பொருளடக்கம் |
அங்கம் ஆறு
காட்சி — 16
நல்லூர்ப் பெருமணம்
திருஞானசம்பந்தருக்குத் திருமணம் செய்ய நிச்சயிக்கிறார்கள். நல்லூரைச் சேர்ந்த நம்பாண்டார் நம்பி என்பவரின் பெண்ணை, நல்லூரில் விதிப்படி திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்துக்கு வந்த அனைவரும் சிவபெருமானின் சோதியில் கலக்கிறார்கள். ஞானசம்பந்தர், “கல்லூர்ப் பெருமணம் வேண்டா” என்னும் பதிகம் பாடித் தன் மனைவியுடன் சோதியுட் கலக்கிறார்.
பண் அந்தாளிக் குறிஞ்சி — ஆதி
கல்லூர்ப் பெருமணம்
வேண்டாக் கழுமலம்
பல்லூர்ப் பெருமணம்
பாட்டுமெய் ஆய்த்தில
சொல்லூர்ப் பெருமணம்
சூடலரே தொண்டர்
நல்லூர்ப் பெருமணம்
மேய நம்பனே
மங்களம்
வாழ்க அந்தணர்
வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல்
வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம்
அரன் நாமமே
சூழ்க வையகமும்
துயர் தீர்கவே
கௌணியன் இரா. நாகசாமி இயற்றிய “ஞானக் குழந்தை” நாட்டிய நாடகம் முற்றும்.
பொருளடக்கம் |
அங்கம் ஆறு