pATal68 pATal67.html pATal68.html contents.html ஏரெழுபது மகாகவி கம்பர் வேறு. 69. வாழ்த்து.
பொருளடக்கம் | 68. மெய்ப்பேறு. | அகெடமி

வேறு. 69. வாழ்த்து. பார்வாழி நான்மறைநூற் பகுணிதரா குதிவாழி கார்வாழி வளவர்பிரான் காவேரி நதிவாழி பேர்வாழி பெருக்காளர் பெருஞ்செல்வக் கிளைவாழி ஏர்வாழி யிசைவாழி யெழுபத்தொன் பதுநாடே. (இ—ள்.) பார் வாழி — உலகம் வாழ்வதாகுக; நால் மறை நூல் பருணிதர் ஆகுதி வாழி — நான்குவேதங்களிலும்வல்ல ஞான பரிபாகமுடைய அந்தணர்களின் வேள்வியாகுதிகள் வாழ்வதாகுக; கார் வாழி — மேகம் [மழைபொழிந்து] வாழ்வதாகுக; வளவ பிரான் காவேரி நதி வாழி — சோழவரசனது [நாட்டிற் பாயும்] காவேரிநதி வாழ்வதாகுக; பெருக்காளர் பேர் வாழி — வேளாளர்களின் புகழ் வாழ்வதாகுக; பெரும் செல்வக் கிளை வாழி — (அவ் வேளாளரது) பெருத்த செல்வத்தையுடைய சுற்றத்தவர் வாழ்வ தாகுக; ஏர் வாழி — (அவர்களது) ஏர் வாழ்வதாகுக; எழுபத் தொன்பது நாடு இசை வாழி — சோழப் பேரரசுக்குட்பட்ட) எழுபத்தொன்பது நாடுகளின் புகழ் வாழ்வதாகுக; (எ - று.) கிளைசுற்றத்தார்க்கு ஆகுபெயர். இசைவாழி யென்றது, “இசையாற் றிசைபோயதாதலின்”. இவ்வாழ்த்து இந்நூற்கு மங்கல முடிபாயிற்று. — (69) ஏரெழுபது முற்றிற்று.
பொருளடக்கம் | 68. மெய்ப்பேறு. | அகெடமி