ஆயிரம் கலை கண்ட அருள்மொழியே வாழி டாக்டர் இரா. நாகசாமி நூலாசிரியர் பொருளடக்கம்
பத்மபூஷண், வித்யாவசஸ்பதி டாக்டர் இரா. நாகசாமி அவர்கள் கோவை மாவட்டம், ஊஞ்சலூரில் 1930ல் பிறந்தவர். சம்ஸ்கிருத மொழியில் எம்.ஏ. பட்டப்படிப்பும், தொல்லியலில் டாக்டர் பட்டமும் பெற்றவர். சங்க இலக்கியம் முதல் அண்மைக் கால இலக்கியம் வரை தமிழில் ஆழ்ந்த புலமை பெற்றவர். குறிப்பாக சைவ இலக்கியங்களில் சிறப்பாக ஈடுபட்டு பல நூல்களை இயற்றிவர். இவரது கட்டுரைகள் யுனெஸ்கோ நிறவனத்தால் 20க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக தொல்லியல் துறையின் முதல் இயக்குநராக பொறுப்பேற்ற இவரது 22ஆண்டு காலப் பணியில் தமிழகம் முழுவதிலும் கல்வெட்டிலும், கலைகளிலும், பெரும் விழிப்பு ணர்ச்சி ஏற்படுத்தியவர். தொல்லியல், காசுகள், கலைகள், கோயில் வழிபாடு, சிற்பம், ஓவியம், இசை, நாட்டியம் ஆகிய பல துறைகளிலும் வல்லுநர். கர்நாடக இசைப் பாடல்கள் பல இயற்றியவர். இராஜராஜவிஜயம், ஞானக்குழந்தை, அப்பர் சரிதம், மணிமேகலை முதலிய பத்துக்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங் களை இயற்றியவர். பண்முறையிலேயே பாடல்களைப் பாடி நாட்டியம் அமைத்தவர். இவரது நாட்டிய நாடகங்கள் ஸ்வீடன், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, கானடா ஆகிய உலக நாடுகளில் மிகவும் சிறப்பாக நடிக்கப்பெற்று புகழ் பெற்றன. பத்தூரில் கிடைத்த நடராஜர் சிலை வழக்கில் இந்திய அரசின் சார்பில் லண்டன் உயர்நீதிமன்றத்தில் சிறப்பாக சாட்சியம் அளித்து நீதிபதிகளின் பாராட்டுகளை பெற்றதோடு வெளிநாடு சென்ற சிலையை இந்தியாவுக்கு மீட்டுத் தந்தவர். சிலை மீட்ட செல்வர் என பொள்ளாச்சி வள்ளல் நா. மகாலிங்கம் அவர்களால் பட்டம் அளித்து சிறப்பிக்கப் பட்டவர். இவரது தொல்லியல் கலை சேவையைப் பாராட்டி தமிழக அரசு “கலைமாமணி” பட்டம் அளித்து சிறப்பித்துள்ளது. இந்திய அரசு 2018ம் ஆண்டு பத்மபூஷண் விருது அளித்து கௌரவித்தது.
பொருளடக்கம்