Tamil Arts Volume33
Āditya Vandanam
śrī-yājñavalkya
oṁ namo bhagavate ādityāya-akhila-jagatām
ātma-svarūpeṇa kāla-svarūpeṇa
catur-vidha-bhūta-nikāyānāṁ
brahmādi-stamba-paryantānām
antar-hṛdayeṣu bahir api cākāśa
iva-upādhina-avyavadhīyamāno
bhavān eka eva kṣaṇa-lava-nimeṣa-avayavopacita
saṁvatsara-gaṇena-apām
ādāna-visargābhyām
imāṁ loka-yātrām anuvahati.
உலகெலாம் மெய்யெனவும் காலமெனவும்
நாலாவித உயிரினகூட்டங்களெனவும்
யான் வணங்கும் மறை முதலெழுத்தே
ஆதவனே அயன் முதல் அரும்பும் புல்லீறாக
உள்ளுணர் வெனவும் புறமெனவும்
வெளியென பழுதேயின்றி ஒன்றேயென
தக்க தருணமதில் நீர் கொண்ட ளித்தலால்
செழிக்குமே இவ்வுலகு.
— மோகன் நாகசாமி
காதல் கொண்டனை போலும்மண்மீதே,
கண்பிறழ் வின்றி நோக்குகின்றாயே!
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
மண்டினாள் இதில் ஐயமொன் றில்லை;
சோதி கண்டு முகத்தில் இவட்கே
தோன்று கின்ற புதுநகை யென்னே!
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே
ஆயிரந் தரம் அஞ்சலி செய்வேன்
— சுப்பிரமணிய பாரதி