chap_6_5
chapter_6_4.html
chapter_6_5.html
chapter_7.html
TIRUKKUṞAḶ
An Abridgement of Śāstras
R. Nagaswamy
6.5 காமத்துப்பால் உரைக்கொத்து
பரிமேலழகர்:
களவியல்
இனி அப்பொருளைத் துணைக்காரணமாக உடைத்தாய். இம்மையே பயப்பதாய் இன்பம் கூறுவான் எடுத்துக் கொண்டார். ஈண்டு இன்பம் என்றது ஒருகாலத்து ஒரு பொருளான் ஐம்புலனும் நுகர்தற் சிறப்புடைத்தாய காம இன்பத்திணை. இச்சிறப்புப்பற்றி வடநூலுள் போசராசனும் 'சுவை பல' என்று கூறுவார் கூறுக; யாம் கூறுவது இன்பச்சுவை ஒன்றனையுமே என இதனையே மிகுத்துக் கூறினான். இது புணர்ச்சி, பிரிவு என இருவகை படும் ஏனை இருத்தல், இரங்கல், ஊடல் என்பனவோ எனின் இவர் பொருட்பாகு பாட்டினை அறம் பொருள் இன்பம் என வடநூல் வழக்கு பற்றி ஓதுதலான். அவ்வாறே அவற்றைப் பிரிவின்கண் அடக்கினார் என்க.
பரிபெருமாள்:
காமத்துப்பாலாவது மைந்த்ர்க்கும் மகளிர்க்கும் கலவியனாகிய இன்பப்பகுதி அஃது யாங்ஙனம் கூறினார். எனின், ஒருவனுக்கு இன்பம் நுகர்தற்கு இடம் கன்னியரும், கணிகையரும் பிறர் தாரமும் என மூவகையல்லது இல்லை; அவற்றுள் பிறர்மனைக் கூட்டம் பாவம் தருமென்று அறத்துப்பாலுள் கூறிக் கணிகையர் கூட்டம் பாவம் தருமென்று அறத்துப்பாலுள் கூறிக் கூறினாராதலின், அறனும் பொருளும் இன்பமும் வழுவாமல் வருவது கன்னியர் கூட்டம் என்று அஃது ஈண்டுக் கூறப்பட்டதென்க. அது தான் எட்டு வகைப்படும்; பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தர்வம், ஆசுரம், இராக்கதம், பைசாசம், என அவற்றுள் ஆசுரம் முதலான மூன்றும் ஒருதலை காமம் ஆகலானும். அவையிற்றுக்கு இன்பச்சிறப்பு இன்மையின் காந்தருவ நெறியே ஈண்டுக்கூறப்பட்டது. குறிப்பே பின்னைய நான்கும் பெருந்திணை பெருமே' என்றும் 'காமக்கூட்டம் காணுங்காலை, மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள், துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே' என்றும் இலக்கணம் கூறுதலின் அஃதாவது கொடுப்போரும் அடுப்போரும் இன்றி ஒத்தார் இவர்தாமே கூடுங் கூட்டம்; என்னை அதுவே தானே அவளே தமியார் காணக் காமபுணர்ச்சி க் இருவயின ஒத்தல் என்பவாகலின். இக்சூத்திரம் நாடக வழக்கிற்குக் கூறியது ஆகலின் ஈண்டு உறைக்கின்ற காமமும் நாடக வழக்கோ எனின் இச்சூத்திரம் கூறுகின்ற உரையாசிரியர் உலகத்தோடு ஒத்தும் ஒவ்வாதும் வருமென்று பொதுப்படக் கூறினாராதலின், இஃது உலக வழக்கை நோக்கி எடுத்துக் காட்டப்பட்டதென்க.
இக்காமப்புணர்ச்சியை வடநூலாசிரியர் அராக்த்தார் கூடுங் கூட்டம் என்ப. இதுதான் மூவகைப்படும், அருமையிர் கூடலும் பிரிந்து கூடலும் ஊடிக்கூடலுமென. அருமையிர் கூடுதலாவது கூடுதற்கு எளிது அண்மையில் ஒருவர் ஒருவரைக் கண்ட காலந்தொட்டும் ஒத்த நினைவினராய் நின்று கூடுதல் பிரிந்து கூடுதலாவது இவ்வாறு கூடினார் பின்பு ஒரு காரணத்தால் பிரிந்து அதன்பின் கூடுதல் ஊடிக் கூடலாவது தலைமகன் மாட்டுத் தவறு கண்டு தலைமகளை புலவி நீக்கிக் கூடுதல்.
இவை மூன்று கூட்டமும் இவற்றது நிமித்தமும் இக்காமத்துப்பாலுள் கூறுவது தமிழ்நடையன்றாதலின் இதற்கு இலக்கணம் யாங்கனம் பெறுதுமெனின். இவ்விலக்கணம் தமிழ் நடையாயின அகப்புறமென்று கூறுதல் வேண்டும். அவ்வாறு கூறாது அறம் பொருள் இன்பம் என வடநூல் வழியே கூறினாராதலின் இதற்கு இலக்கணம் வாத்சயாயணம் என்னும் காம தந்திரத்துச்சுரதவிகற்பம் என்னும் அதிகரணத்துள் கண்டுகொள்க. அன்றியும் புணர்தல் பிரிதல்' இருத்தல் இறங்காலும் பிரிந்துழி நிகழுமன்றே; அவற்றைப் பிரிவினுளடக்கிப் புணர்தலும் பிரிதலும் ஊடலும் எனத் தமிழ் நடையிற் கூறினும் இழுக்காது.