ஏற்றப்பாட்டு contents.xml about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் ஸ்ரீ விவேகவிளக்கக் கீர்த்தனம். சென்னை பாரதி அச்சுக்கூடுத்திற் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

இ-ம்-முகாரி-அடதாளம்-கண்ணிகள். எதுவேணும்கேள் மனமே-பாவிமனமே உனக்கெதுவேண்டாம் சொல்மனமே. கதியென்று கணநாதன் துதிசெய்து பணிந்திட கர்மவினை களறுமே — அயன் விதியன்றிவேறொரு சதிகர்ப்பனைகள் யாரும் வேரறுந்தோடிடுமே. — எது நன்மார்க்கமாகவே யென்னாளுமிருந்திட நாதனருள் வேணுமா — இல்லாமல் துன்மார்க்கமாக வலைந்து திரிந்திடும் துஷ்டருறவுவேணுமா. — எது சோதிசுடர்ப்பொருள் ஆதிசிவகுரு சண்முகனருளவேணுமா — இல்லாமல் மாதரைக்கைகோர்த்து மண்டலம் திரிகின்ற மடையருறவுவேணுமா. — எது பையரவ மணிந்த பக்தரக்ஷகரெனும் பரமதயாளன் வேணுமா — இல்லாமல் மையிட்டுக்கண்காட்டி சாடைகள் செய்திடும் மங்கையுரவுவேணுமா. — எது மச்சாவதாரஞ்செய் தீனரட்சகனெனும் மால்மருகோன்வேணுமா — இல்லாமல் பிச்சையென்று வருவோரை மயிர்பிடித்தடித்திடும் பேயருறவுவேணுமா. — எது ஆடையளித்துடல் அன்னங்கொடுத்திடும் ஆண்டவனருள்வேணுமா — இல்லாமல் சாடைகள் செய்து கண்ணால்மயக்கிடும் தாசியுறவுவேணுமா. — எது கனிமாங்கனிக்காகப் பூவலம் வருங்கதிர் காமன் கருணைவேணுமா — இல்லாமல் அனியாயமா யேழைகள் மேல்பகை தொடுத்து அலங்கோலஞ் செய்பவன் வேணுமா. — எது தன் மானம்பிறர்மானம் என்று என்னாளும் தற்காத்திடுபவன்வேணுமா — இல்லாமல் சன்மார்க்கமில்லா தலைந்துத் திரிந்திடும் சண்டாளருறவுவேணுமா. — எது எந்தவகையாலும் மனைவிமக்களைக் காப்பாற்றி ஈடேற்றும் வகைவேணுமா — இல்லாமல் சொந்தமனைவிக்குச் சோறுதண்ணீரிடாமல் சோரமான விவேணுமா. — எது ஆறுமுகம்படைத்த ஐயன்றிருவடியை அனுஷ்டித்தல் தான்வேணுமா — இல்லாமல் தாறுமாறாகத்திரியும் தருதைையப்போல் சண்டாளருறவுவேனுமா. — எது உத்தமருடன் சேர்ந்து உண்மையைப்பாவித்து உலகநடைவேணுமா — இல்லாமல் மத்தகஜம்போல் கொழுத்துத் தலைமீதில் மண்போட்டுக் கொள்ளவேணுமா. — எது எச்சமயத்திற்கும் எங்கும் நிறைவுள்ளோன் ஏகன்பதம்வேணுமா — இல்லாமல் இச்சையில்லாமற் சிவபூசைசெய்திடும் ஈனருறவுவேனுமா. — எது ஆலம்போலச்சீறி சாலன்பாசந்தனிற் கட்டுண்டுழலவேணுமா — இல்லாமல் காலந் தனையளந்த மால்முருகேசன் மலர்ப் பாதபங்கயம்வேணுமா. — (எதுவேணும்) விவேகவிளக்கக் கீர்த்தனம் முற்றிற்று.
Contents | Home