ஏற்றப்பாட்டு contents.html about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் கடவுள் துணை. ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் வள்ளியம்மையைச் சிறையெடுத்த கொப்பிப்பாட்டு. சென்னை பெரியநாயகியம்மன் அச்சுக்கூடுத்தில் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

காப்பு வெண்பா. வெள்ளை விடையேறும் வேணியானார்மகிழும் கொள்ளுமுருகன்வள்ளிகொப்பிதனை உள்ளமதில் சிந்தித்துயா னுரைக்கச் சித்திமுத்திதானளிக்குங் கந்தருக்குமுன்பிறந்தோன் காப்பு. கொப்பியள்ளோ - கொப்பியென்றுபாருங்கடி கோமளப்பெண்களே நீங்கள் கொப்பியள்ளோ. கொ ஆதிகணபதிதன் அடியிணையைநான்றொழுவேன் — கொ கொ ஆறுமுகவேலவரே ஆண்டவரேநான்சரணம் கொ வாணிசரஸ்வதியே வாக்கருளவே ணுமம்மா கொ கந்தரின்மேல்கொப்பிபாட கனிவுடனே துணை யிருப்பாய் கொ வள்ளியின்மேல்கொப்பிபாட வக்துநீ துணையிருப்பாய் கொ ஆதியிலோர்மறையவர் அன்புள்ள விபுதையரை கொ கந்தர்வவிபுதையரை கருதியுறவாடினாரே — ஈஸ்வரா கொ விபுதைவயற்றிலேதான் வீரியகர்ப்பந்தரித்து கொ கோமளமயிலைப்போலே குமரியென்றுபெண்பிறந்து கொ கந்தருக்குவென்றுசொல்லி கன்னியும்வளர்ந்த பின்பு கொ வேலரைக்கல்யாணம்செய்ய வீரியதபசிருந்தாள் — ஈஸ்வரா கொ தபசுசெய்யும்குமரிபக்கல் சண்முகனார்வந்து நின்று கொ என்னவரம்வேணுமென்று இன்பமுடன் கேட்டார் கொ எந்தனைக்கலியாணம்செய்து உந்தன்கூடச்சேருமென்றாள் கொ அந்தவார்த்தைகேட்டுமுருவர் ஆயாசத்தைமனதிலெண்ணி கொ நாயகிதெய்வானையர்க்கு நம்பிக்கைநான்செய்து வந்தேன் கொ கந்தருவப்பெண்ணானதால் உந்தனைமணமேசெய்வேன் கொ மான்வயிற்றிற்பிறந்தாயானால் மனம்புரிவனென்றுசொன்னார் கொ உறுதிசொல்லிகுமரியர்க்கு உத்தமர் தணிகைச்சேர்ந்தார் கொ குமரேசர்போனபின்பு குமறி தன்னுயிரை விட்டாளீஸ்வரா கொ அப்பொழுதுமாயவரும் ஆலோசனை மனதிலெண்ணி கொ மாயவரும்மங்கையரும் மானாகவடிவங்கொண்டு கொ பாரிலுள்ளோர் தான்புகழ பாங்குடன்மருவிருந்தார் கொ மானின்வயிற்றிலேதான் மயிலணையுந்தானுதித்தாள் கொ வள்ளிக்கொடியின்மீதில் வந்துபிறந்தபின்பு கொ வேடுவர்களப்பொழுது வேட்டையாடிவருகையிலே கொ கானகத்தில்வேடுவர்கள் கண்டார்கள் குழந்தை தன்னை கொ மகாதேவாருளினாலே மைந்தனிருக்குதென்று — ஈஸ்வரா கொ குழந்தையைத்தாமெடுத்து கொப்பெனவேயோடிவந்தார் கொ மனைவியைத்தாமழைத்து மதலையைக்கைகொடுத்தார் கொ கன்னியரைவாங்கிமாது கனிகையால் முத்தமிட்டு கொ வள்ளிக்கொடிமீதிருந்தமையால் வண்மையுடன் குழந்தைக்கப்போ கொ வள்ளியென்றுபேர்கொடுத்து வளர்த்தார்குழந்தை தன்னை கொ பன்னிருவயது சென்று பருவபக்குவமானபின்பு கொ கானகத்தினைப்புனத்தில் கன்னி ஆயாலோட்டிருந்தாள் கொ வள்ளிப்புனத்தருகே வந்தாரேநாரதர்தானும் — ஈஸ்வரா கொ பூவையழகைக்கண்டு பொற்படங்கள் தானெழுதி கொ கானகப்புனத்தைவிட்டு கந்தருக்குமுன்னே வந்தார் கொ பொற்படங்கொடுத்துவங்கு போயிவந்த சேதிசொன்னார் கொ சேதிதனை கேட்டுமுருகர் சீக்கிரத்தில் தானெழுந்து கொ மன்மதவேடனைப்போல் மால்மருகன்ரூபங்கொண்டார் கொ தினைப்புனத்தில் வள்ளியரை தேடிவந்தார்வேல் முருகர் கொ வள்ளியரைக்கண்டுவேலர் துள்ளிப்போய் மூர்ச்சையானார் கொ கலைகள்தெளிந்துமுருகர் கன்னியுடனே துரைப்பார் கொ அகடானவார்த்தைகளை ஆண்டவனார்கூறலுற்றார் கொ அந்தவார்த்தைகேட்டுவள்ளி அலறிப்புலம்பலுற்றாள் — ஈஸ்வரா கொ வேடரானவேலவரும் வேறுவேஷங்கொண்டாரப்போ கொ வளையல்காரசெட்டியைப்போல் வளையலென்றுகூறிவந்தார் கொ வளையலென்றசத்தங்கேட்டு வள்ளியும்பரணிறங்கி கொ தேனுக்கும் தினைமாவுக்கும் தேன்மொழிவளையல்கேட்டாள் கொ மாணிக்கவளையல்தாரேன் மருவிருப்போம்வாடியென்றான் கொ அகடானவார்த்தைகேட்டு அண்ணமாரைத்தானழைத்தாள் கொ வள்ளியுடன்சத்தங்கேட்டு வனவேடர் ஓடிவந்தார் கொ வேடர்கள் வார்த்தைக்கண்டு வேங்கைமரமானார்வேலர் கொ வேங்கைமரத்தைக்கண்டு வெட்டவந்தார்வேடுவர்கள் கொ அண்ணமார்க்குமுன்னேவந்து அருங்கிளியுமே துரைப்பாள் கொ எந்தனுக்குநிழலாக விருக்கட்டுமண்ணாவே யென்றாள் கொ வள்ளிவார்த்தைகேட்டுவேடர் வனந்தனிலே தானடந்தார் கொ வேங்கைமரமானவேலர் விருத்தாப்பியசங்கமானார் கொ தம்பிரானைக்கண்டுவேடர் தங்கைக்குத் துணையாமென்று கொ தெளிந்தஜங்கமமென்று தினைப்புனத்தில் கூட்டிவந்தார் கொ வள்ளிக்கு துணையாகவைத்து வந்துவிட்டார்கானகத்தில் கொ கன்னியரைவசமாக்கக் கந்தரும்மனதிலெண்ணி — ஈஸ்வரா கொ தண்ணீர்வேணுமென்றுசொல்லி தம்பிரா னுங்கேட்கலுற்றான் கொ சுனையருகில்வள்ளிசென்றாள் துதித்தார்வேலர்விநாயகரை கொ அண்ணாவேகணபதியே யானையாகவரவேணுமென்றார் கொ மதயானைரூபங்கொண்டு வந்தாரேவிநாயகரும் கொ ஆனையைக்கண்டுமேவள்ளி அலறியே ஓடிவந்தாள் — ஈஸ்வரா கொ தம்பிரானேகாருமென்று தழுவியேகட்டிக்கொண்டாள் கொ ஆனையைத்தானமர்த்தி ஆறுமுகம்வடிவு கொண்டார் — ஈஸ்வரா கொ ஆறுமுகத்தைக்கண்டு ஆனந்தங்கொண்டாளேவள்ளி கொ சண்முகரும்வள்ளியரும் சந்தோஷங்களான பின்பு — ஈஸ்வரா கொ இப்போபோனால் வேலவரே எப்போவருவீரென்றாள் கொ நாளையராத்திரிக்கு நலமுடனேவாரேனென்று கொ வள்ளியர்க்குறுதிசொல்லி வந்தார் வேலர்வேடர் முன்னே கொ அந்தணரைப்போலேவேலர் தந்திரபஞ்சாங்கம்சொன்னார் கொ கந்தனென்றகன்னக்காரன் கன்னியரைக்கன்னமிட்டு கொ வள்ளியரைக்கன்னமிட்டு கள்ளன்கொண்டுபோகப்போறான் கொ வேடருக்குபஞ்சாங்கம்சொல்லி வேலவரும்போனபின்பு கொ வள்னியரைத்தானழைத்து வைத்தார்வேடர்குகைதனிலே கொ அண்ணமாரெழுவர்களும் அன்புடனேகாத்திருந்தார் கொ அந்திப்பொழுதுசென்று அர்த்தராத்திரியான பின்பு கொ கன்னமிடுங்கள்ளனைப்போல் கந்தரப்போரூபங்கொண்டு கொ வள்ளியரைக்கன்னமிட வந்துநின்றார்குகையருகில் கொ பஞ்சாக்ஷரம்உச்சரித்து பாங்குடனே தூவிவிட்டார் கொ காவலிருந்தவர்கள் கடுகனவே மூர்ச்சையானர் — ஈஸ்வரா கொ கதவைப்பிளந்துவேலர் கன்னியரைக்கொண்டுவந்தார் கொ வள்ளியைசிறையெடுத்து வாரார்தணிகைதேடி — ஈஸ்வரா கொ வெடியாக்குபந்தலிலே வேலவனார்போயமர்ந்தார் கொ வனத்தில்மூர்ச்சை தெளிந்தவேடர் வள்ளியரைத்தேடியவர் கொ வருகிறவழிதனிலே வந்தெதிர்த்தார் வேல்முருகர் கொ கானகத்தில்வேல(ட)வர் கனமூர்ச்சையாகிவிட்டார் கொ அண்ணமாரைக்கண்டுவள்ளி அழுதுபுலம்பினபின் கொ கந்தரைநோக்கியேவள்ளி கடுகவெழுப்புமென்றாள் கொ விபூதியைத்தான்தெளித்து வேடரேயெழுந்திரென்றார் கொ வேலவர்கிருபையாலே வேடுவரெழுந்திருந்தார் — ஈஸ்வரா கொ ஆண்டவரைக்கண்டுவேடர் அடிவணங்கிதெண்டனிட்டார் கொ தமையன்மாரெழுந்தபின்வு சண்முகனார் முன்னேவந்தார் கொ எந்தனைக்கல்யாணம்நீரும் இன்பமுடன்செய்யுமென்றாள் கொ கனதபசுசெய்தாயானால் கன்னியரேவந்து நானும் கொ உந்தனைமணம்புரிந்து சொந்தமுடன்கூட்டிப்போரேன் கொ வள்ளியர்க்குவரர்த்தைசொல்லி வந்துவிட்டார் தணிகைதனில் கொ கந்தரும்போனபிற்பாடு கனதபசுசெய்தாள்வள்ளி கொ வள்ளிசெய்யுந்தபசருகில் வந்தார்கள் தேவரெல்லவரும் கொ தபசுசெய்தகாரியமேன் தையலரே கூறுமென்றார் கொ முருகர்வந்து எந்தனையும் முகூர்த்தஞ்செய்யவேணுமென்றார் கொ கன்னிவார்த்தைகேட்டுதேவர் கந்தருடனே துரைப்பார் கொ மான்வயிற்றிற் பிறந்ததினால் மணம்புரியும் முருகாவென்றார் கொ தெய்வயானையறியாமல் திருமணஞ் செய்யேனென்றார் கொ அந்தவார்த்தை கேட்டுவேலர் அனுப்பினார்நாரதரை கொ நாரதர் தணிகைவந்து நலமாய்தெய்வானையர்க்கு கொ தேறுதலைகள் சொல்லி திரும்பிவந்தார் முருகரண்டை கொ முருகருக்கும்வள்ளியர்க்கும் முகூர்த்தமுஞ்செய்துவைத்து கொ திருக்கலியாணம்செய்து தேவர்களும் போனபின்பு கொ வள்ளிதெய்வானையரும் வடிவேல்முருகருமாய் கொ வாழ்மயிலிலேறியல்லோ வந்தாரேதணிகைதனில் கொ தணிகைமாமலையில்வந்து சம்பிரமுடன் வாழ்ந்திருந்தார் கொ இதைப்பாடிபடித்தவரும் பாங்காய் கொப்பியடித்தவரும் கொ ஆல்போல் தழைத்தல்லவோ அறுகுபோல் வேரோடிவாழ்வார் வள்ளியம்மன் கொப்பிப்பாட்டு முற்றிற்று
Contents | Home