வள்ளியம்மன் ஆயாலோட்டம்
contents.html
about_the_book.html
preface.html
ஏற்றப்பாட்டுகள்
௳
கடவுள் துணை.
வள்ளியம்மன் ஆயாலோட்டம்
குறவஞ்சி.
சென்னை — சூளை
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது
1923
காருலவும்பூவுலகைக் கனிக்காயவலம்வந்த
சீருலவும்போரூரன் றேவியெனத்தார்புனைந்த
மங்கைவள்ளிநாயகியின் மாகுரத்தைப்பாடுதற்குத்
துங்கவைங்கரன்றாள் துணை.
குறம்.
தினதந்தினா தினதெந்தினா தினதெந்தினா தினனா
தென்னாதி னாதினனா தினதந்தினா தினனா
சித்தர்கள்வாழ் மலையருயருகில் சிறந்தநல்ல வனத்தில்
தேவிவள்ளி மான்வயிற்றில் திருவுருவா யமைந்தாள் — தின
மான்வயிற்றில் வந்துதித்த வஞ்சிகுற வள்ளி
வானமிர்தம் வேண்டியவள் வாய்விட்டழுக லுமே — தின
நம்பிராசன் சேனைகளும் நல்லமைந்தர் தாமும்
நாடியந்த வனந்தனிலே யோடிவந்தா ரவர்கள் — தின
வனவேட்டை யாடியவர் வருகின்ற போது
வள்ளிபசி யால்மெலிந்து துள்ளியழு தாளே — தின
அழுதகுரல் கேட்டவேடர் ஆச்சரியங் கொண்டு
அதிதுரித மாகவள்ளி யருகில்வந்துநின்று — தின
மான்வயிற்றில் வந்துதித்த வஞ்சிதனைக் கண்டு
மறவனவன் மனைவியவள் வாரியெடுத் தணைத்தாள் — தின
வாரி யெடுத்துமவள் மடிமீதி லமர்த்தி
வன்னமுகந் தான்துடைத்துக் கண்ணைமுத்த மிட்டு — தின
வார்காது மூக்குருவி வடிவுகளுஞ் செய்து
வாழ்த்தவள்ளி யென்றுசொல்லிப் பேருமிட்டா ரப்போ — தின .
ஒய்யார நெற்றிலே சுட்டிகளுங் கட்டி
ஓசையுள்ள தண்டைகொலுசு பாதத்தி லணிந்து — தின
தளராமல் பசியாற்றித் தையல்வள்ளி தன்னை
தாமிருக்குங் குடிசைக்குள்ளே கொண்டுசென்றா — தின
வர்னப்பொன் தொட்டிலிலே மாதரசை வளர்த்தி
வகைவகையாய்த் தாலாட்டி மகிழ்ந்திருந்தா ரப்போ — தின
மணிகுலுங்கு தொட்டிலிலே மானீன்ற மகளும்
மாயநித்திரை செய்துபின்பு தூயகண்கள் விழித்தாள் — தின
வாரியெடுத்துக் குறத்தி மடிமீதில் வளர்த்தி
வாய்த்துடைத்து முத்தமிட்டு வள்ளியரைக் கொஞ்சி — தின
நாளொரு மேனியுமாய் நலமுடனே வள்ளி
நாயகியும் வேலவற்கு மீறிவளர்ந் தாளே — தின
ஓராண்டு ஈராண்டு மூவாண்டு சென்று
உயர்ந்தநல்ல சந்திரன்போல் ஓங்கிவளர்ந் தாளே — தின
ஐந்திரண்டு வயதுதனில் கொஞ்சிவிளை யாடி
ஆறிரண்டு வயதுதனில் குறக்கூடை யேந்தி — தின
கொஞ்சிக்கொஞ்சிக் குறியுரைத்துக் கோதைவளர் நாளில்
கொம்பனையாள் வள்ளியரைத் தினைப்புளத்துக் கனுப்ப — தின
ஏழுபே ரண்ணமார்கள் இவளருகில் வந்து
இளங்கொடியாள்வள்ளியரைத் தினைப்புனத்துக்கழைக்க — தின
நல்லதென்று அண்ணருக்கு நாயகியா ளுரைத்து
நடந்தாளே யிடைகுலுங்க நங்கையரு மப்போ — தின
காடுவெட்டி முள்பொறுக்கக் கதித்ததினைப்புனத்தில்
கன்னிவள்ளி ஆயாலோட்டக் கடுகிநடந் தாளே — தின
மேடுவெட்டி முள்பொறுக்கி விரைத்ததினைப் புனத்தில்
மெல்லிவள்ளி ஆயாலோட்ட மெள்ளநடந் தாளே — தின
கொஞ்சித்தழை தானொடித்துக் கொற்றவர்கள் வேடர்
கொம்பனையாள் வள்ளியற்கும் பரணைகட்டி யமைத்தார் — தின
அண்ணமா ரமைத்துவைத்த அழகுள்ள பரணையில்
அம்மைவள்ளி நாயகியும் ஆயாலோட்டி யிருந்தாள் — தின
தேவாரம்.
கள்ளராமசுரர்காலா கங்கைவேணியர்க்குப்பாலா
புள்ளிமாமயிலிலேறும் புனிதனேபோரூரானே
வள்ளிநாயகியாள்காத்த வளமைசேர்தினைப்புனத்தில்
தள்ளுநற்குறத்தைப்பாடத் தேசிகாவருள்செய்வாயே
குறம்.
பத்தினியாள் வள்ளியரும் பரணதிலே யேறி
பாமசிவன் தன்னருளால் ஆயாலோட்டு கின்றாள் — தின
சிவப்புக் கவணதனைச் செங்கையினா லெடுத்து
தேவிவள்ளி நாயகியுஞ் சீக்கிரமா யெறிந்தாள் — தின
தங்கக் கவணெடுத்துத் தையலந்த வள்ளி
தந்தையைப்போல் வாய்திறந்து ஆயாலோட்டுகின்றாள் — தின
ஆயக்கிளி நீலக்கிளி — ஆலாலோ ஆலோ
அச்சமுள்ள பச்சைக்கிளி — ஆலாலோ ஆலோ — தின
புதுநீர்க் கிளிகளாம் — ஆலாலோ ஆலோ
தூதுவர்னப் பூங்கிளிகாள் — ஆலாலோ ஆலோ — தின
வெள்ளைவர்னக் கிளிகளா — ஆலாலோ ஆலோ
விருந்துமேயும் பூங்கிளிகாள் — ஆலாலோ ஆலோ — தின
பச்சைவானப் பூங்கிளிகாள் — ஆலாலோ ஆலோ
பறந்துமேயும் பூங்கிளிசாள — ஆலாலோ ஆலோ — தின
சிவப்புவர்னக் கிளிகளா — ஆலாலோ ஆலோ
சேர்ந்துமேயும் பூங்கிளிகாள் — ஆலாலோ ஆலோ — தின
ஊதாநிறக் கிளிகளா — ஆலாலோ ஆலோ
உகந்துமேயும் பூங்கிளிகாள் — ஆலாலோ ஆலோ — தின
பஞ்சவர்னக் கிளிகளா — ஆலாலோ ஆலோ
பறந்துமேயும் பூங்கிளிகாள் — ஆலாலோ ஆலோ — தின
சிட்டுநல்ல குருவிகளா — ஆலாலோ ஆலோ
சிறுகுருவி பெருங்குருவி — ஆலாலோ ஆலோ — தின
மயினாக் குருவிகளா — ஆலாலோ ஆலோ
மஞ்சட் குருவிகளா — ஆலாலோ ஆலோ — தின
காக்காய் கழுகுகளா — ஆலாலோ ஆலோ
காட்டில்வாழும் பட்சிகளா — ஆலாலோ ஆலோ — தின
கொக்குகளா கோழிகளா — ஆலாலோ ஆலோ
கோகினங்களா அன்னஙகளா — ஆலாலோ ஆலோ — தின
வட்சிகளா பறவைகளா — ஆலாலோ ஆலோ
பறந்துமேயும் பூங்கிளிகாள் — ஆலாலோ ஆலோ — தின
அன்னங்களா மயிலினங்களா — ஆலாலோ ஆலோ
அழகுள்ள கோரங்களா — ஆலாலோ ஆலோ — தின
புள்ளினங்காள் குயிலினங்காள் — ஆலாலோ ஆலோ
வனத்தில்மேயும் பட்சிகளா — ஆலாலோ ஆலோ — தின
சேர்ந்துமவ ளாயாலோட்டிக் சிந்தைமிகக் களித்து
தினப்புனத்தில் தோழியுடன் தானிருக்கும் வேளை — தின
ஆயாலோட்டும் வள்ளிகுறல் அறிந்துவடி வேலர்
அருமுனிவர் தமைகழைத்து ஆலோசனை கேட்டு — தின
மயிலேறித் திருநீரிட்டு வடிவேலர் தாமும்
மாதுவள்ளி தினைப்புனத்தில் வந்துநின்றா ரங்கே — தின
வள்ளியரைக் கண்டப்போ வடிவேலர் மயங்க
மனதுமிரங்கி வார்த்தைசொல்லி வடிவேலர் நின்றார் — தின
புத்தகத்தை மாற்றடிக்கும் பொக்காலி னழகும்
பூஞ்ச[சி]லம்பு தண்டைகளும் பொறபீலி யழகும் — தின
குரும[ம்]பிநிழை காதழகும் கும்பஸ்தனத் தழகும்
கோத்தமுத்து சரமதுபோல் கொம்பனைபல் வழகும் — தின
முருக்கம்பூ இதழழகும் முத்துநிகர் பல்லும்
மெய்க்குழலின் திருமேனி யனிச்சமபூ நிற்கும் — தின
அழகைக்கண்டு வேல்முருக ராசைமிகக் கொண்டு
அம்மைவள்ளி நாயகியை யழகுமணம் புரிந்தார் — தின
மாலையிட்டு வடிவேலர் மனமகிழ்ந்து அப்போ
மாதுவள்ளி யுடனாக வந்தார்திருத் தணிகை — தின
வள்ளிகுறம் பாடினவர் வடிவேல ரருளால்
மாறாமல்வையகத்தில் வாழிவாழிவாழி — தின
வள்ளியம்மன் ஆயாலோட்டம் குறவஞ்சி முற்றிற்று.