தங்கச்சிந்து
contents.html
about_the_book.html
preface.html
ஏற்றப்பாட்டுகள்
௳
முருகர் துணை.
எட்டிகுடி வடிவேலர்பேரில்
தங்கச்சிந்து.
சென்னை — சூளை
பெரியநாயகியம்மன் அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது
1923
84, ஆண்டியப்ப நாய்க்கன் தெரு, சூளை மதராஸ்
காப்பு.
விண்ணவர் பணிந்துபோற்றும்
விஜயநன் பதியின்மேவும்
வண்ணமா யூரவீர
வரததண்டா யுதன்மேல்
திண்ணமாய் தங்கச்சிந்தைச்
செப்பியெந் நாளும்போற்ற
விண்ணெலாம் பரவுமோன
வேழமா முகன் காப்பாமே
இ-ம்-காப்பி-தாளம் — ஆதி-கண்ணிகள்
ஓம்நமசிவாயனடி உற்பனவுபாயனடி
தாமாசபாதனடி — ஞானத்தங்கம்
தத்துவபோதனடி — ௧
எட்டிகுடிவேலனடி யெங்கள் முருகேசனடி
அஷ்டதிக்கெங்கும்பரவி — ஞானத்தங்கம்
அடியாரைக்கார்ப்பவண்டி — ௨
தணிகைமுருகேசனடி தற்பரவுல்லாசனடி
பணிபவர் தன்னேசனடி — ஞானத்தங்கம்
பன்னிருகைவேலனடி — ௩
வேலின்முதல்வனடி வித்தகன்புதல்வனடி
மாலின்மருகனடி — ஞானத்தங்கம்
மந்திரமுருகனடி — ௪
சங்கரன்பாலனடி சாமிகுருசீலனடி
துங்கமறைமூலனடி — ஞானத்தங்கம்
சூரர்குலகாலனடி — ௫
வீராதிவீரனடி விஜயகெம்பீரனடி
தீராதிதீரனடி — ஞானத்தங்கம்
வென்குமரவேலனடி — ௬
வரைமீதுவாசனடி மங்களவுல்லாசனடி
துரைராஜராஜனடி — ஞானத்தங்கம்
தூயகுமரேசனடி — ௭
கார்த்திகைகுமாரனடி காரணவிஸ்தாரனடி
பார்த்திபசிங்காரனடி — ஞானத்தங்கம்
பார்புகழ்செந்தூரனடி — ௮
கௌரிதன்மைந்தனடி கவிவலர்சொந்தனடி
மௌலிகொள்கந்தனடி — ஞானத்தங்கம்
மந்திரவானந்தனடி — ௯
சடாக்ஷரத்தையனடி சாமிமுருகையனடி
கடாக்ஷிக்குமெய்யனடி — ஞானத்தங்கம்
கலையுணர்துய்யனடி — ௰
சண்டப்பிரஈண்டனடி செளரியவுத்தண்டனடி
தொண்டர்க்குநேசனடி — ஞானத்தங்கம்
துய்யஜெகதீசனடி — ௧௧
பாண்டரங்கன்பாலனடி பார்புகழ்விசாலனடி
வேண்டுகின்றோர் துன்பமெல்லாம் — ஞானத்தங்கம்
விலக்குமபிரதாபனடி — ௧௨
கன்னியுமைபாலனடி காரணவிசாலனடி
சென்னிமலைவேலனடி — ஞானத்தங்கம்
திவ்வியமனுகூலனடி — ௧௩
கோசலைதன்பேரனடி கோலமயில்வீரனடி
வாசவனமருகனடி — ஞானத்தங்கம்
வடிவேல்முருகனடி — ௧௪
மாமோனதீபனடி வாசமலர்நீபனடி
தாமோதரன்றனக்கு — ஞானத்தங்கம்
தான்மருகனானோனடி — ௧௫
சத்துருசங்காரனடி சாமிகுமாரனடி
சித்திரமயில்வீரனடி — ஞானத்தங்கம்
செந்தமிழ்க்குதாரனடி — ௧௬
இரம்பைமுதலோர்நடிக்க நாரதரிசைபடிக்க
உம்பர்தொழவீற்றிருக்கும் — ஞானத்தங்கம்
ஒயில்முருகேசனடி — ௧௭
அத்வைதபோதனடி அசுரவிநோதனடி
தத்துவபரிசுத்தனடி — ஞானத்தங்கம்
சற்குணப்பிரசித்தனடி — ௧௮
மாமௌனயோகிகட்கு மந்திரவடிவாய்விளங்குஞ்
சோமமுகநேமனடி — ஞானத்தங்கம்
சுரலோகபூபனடி — ௧௯
ஞானமுழுதும்படைத்த நாதாந்தபோதனடி
கோலமயில்வாகனடி — ஞானத்தங்கம்
குறவள்ளிமோகனடி — ௨௦
அண்ணாமலைநாதரிடத் தன்பினொடுவீற்றிருக்கும்
உண்ணாமுலைமைந்தனடி — ஞானத்தங்கம்
உச்சிதசுகந்தனடி — ௨௧
வீரவாகுமுன்னுதித்த வேதாந்தமூர்த்தியடி
காரணவினோதனடி — ஞானத்தங்கம்
கலைக்ஞானபோதனடி — ௨௨
சுந்தரமிகுந்துலவுங் காரணசிவகயில
சுந்தரதயாளனடி — ஞானத்தங்கம்
தொண்டர்பணிதாளனடி — ௨௩
மண்டலமளந்ததிரு மாலின்மருகனடி
கொண்டல்பணிவேலனடி — ஞானத்தங்கம்
சுப்ரமண்யலோலனடி — ௨௪
சண்மதஸ்தரெல்லோருந் தாள்பணியும்நாதனடி
வண்மைமிகுதீரனடி — ஞானத்தங்கம்
வாலைகுருபோதனடி — ௨௫
மரகதவஜராபரண மார்பபரதாபனடி
துரகதமயூரனடி — ஞானத்தங்கம்
துஷ்டர்கட்குத்தூரனடி — ௨௬
முப்புரமெரித்ததிரு முக்கணனார்தமக்கு
செப்புகுருராயனடி — ஞானத்தங்கம்
திவ்வியகளிவாயனடி — ௨௭
கொண்டலுலவுமெட்டிக் குன்றில்வளர்கந்தனடி
அண்டருக்கதீபனடி — ஞானத்தங்கம்
அற்புதமயூரனடி — ௨௮
அன்பருக்கன்பனடி ஆதிசுப்ரமண்யனடி
வன்பருக்கதீபனடி — ஞானத்தங்கம்
வடிவேல்ப்ரதாபனடி — ௨௯
திருப்பரங்குன்றமதிற் சின்மயசொரூபமதாய்
விருப்புறுநாதனடி — ஞானத்தங்கம்
வேதமனுநீதனடி — ௩௦
குன்றுதோறும்வாழ்பவண்டி குறமகள்பாசனடி
என்றுமனுகூலனடி — ஞானத்தங்கம்
ஏகாந்தலோலனடி — ௩௧
வாலையுமைகண்ணியாய் வந்துமுருகேசனடி
சோலைமலைவாசனடி — ஞானத்தங்கம்
சோதிப்ரகாசனடி — ௩௨
தேவரிடரைத்தவிர்க்கும் தெய்வானைவேலனடி
காவலனெனைக்கார்க்க — ஞானத்தங்கம்
கருணைப்ரவாகனடி — ௩௩
தேவேந்திரன்பூசைசெய்யுந் தேவாதிதேவனடி
பார்வேந்தர்தான்புகழும் — ஞானத்தங்கம்
பன்னிருகைவேலனடி — ௩௪
ஆவினன்குடியில்வளர் அற்புதவைபோகனடி
பூவினன்பனிந்துபுகழ் — ஞானத்தங்கம்
போதகுருநாதனடி — ௩௫
காகமுனிதுதிக்குங் காரணசொரூபனடி
சுரரனுகூலனடி — ஞானத்தங்கம்
சுப்ரமணியவேலனடி — ௩௬
மேலோர்மனத்திலுரை மேன்மைப்ரதாபனடி
சாலோகமானவர்க்கு — ஞானத்தங்கம்
தந்திடுதயாளனடி — ௩௭
அஷ்டதிசைகளினு மன்பர்தமதுமன
திஷ்டமெலாமுடிக்கும் — ஞானத்தங்கம்
திவ்யப்ரதாபனடி — ௩௮
திருக்கழுக்குன்றிலுறை திவ்யஜெகதீசருக்கு
குருக்களெனவேவந்த — ஞானத்தங்கம்
குமரகுருபோதனடி — ௩௯
வேள்விமலைதனிலே வேங்கைமரமானவண்டி
கேள்விமறையோர்துதிக்கும் — ஞானத்தங்கம்
கீர்த்திப்ரதாபனடி — ௪௦
நற்கீரதேவனுக்கு ஞானமதிற்காசிநதி
முதற்காலமாக்கியருள் — ஞானத்தங்கம்
மோகனகெம்பீரனடி — ௪௧
அண்டபுவனமெங்குநின் றாதரிக்கும்மூர்த்தியடி
வண்டனிநடம்பனடி — ஞானத்தங்கம்
வா[பா]லசுப்ரமணயனடி — ௪௨
மூலாதரப்பொருளாய் மோனகுருவாய்விளங்கும்
வேலாயுதக்கடவுள் — ஞானத்தங்கம்
வேதாந்தமூர்த்தியடி — ௪௩
மோனகுருபரனாய் முத்திதரும்நாதனடி
ஞானவடிவாகவளர் — ஞானத்தங்கம்
நாதாந்ததீரனடி — ௪௪
தில்லைநடராஜருக்கு சேயாகவந்துதொண்டர்
அல்லலெல்லாந்தீர்த்தவண்டி — ஞானத்தங்கம்
ஐயன்காங்கேயனடி — ௪௫
சாகரந்தனிற்சேலாய்த் தானுதித்தமூர்த்தியடி
மோகனவள்ளிதன்னை — ஞானத்தங்கம்
முத்தமிடுங்கர்த்தனடி — ௪௬
அஷ்டதிக்குப்பாலகரும் அன்பொடுதினம்பணியச்
சட்டஞ்செலுத்துகின்ற — ஞானத்தங்கம்
சண்முகவேலனடி — ௪௭
சத்[]தகோடிமந்திரமுந் தானாம்புனிதனடி
எத்திசையுங்கீர்த்திபெற்ற — ஞானத்தங்கம்
எங்கள்முருகேசனடி — ௪௮
கின்னரர்வித்தியாப்ரசங் கீதங்கள்பாடுஞ்சபை
மன்னவனானவண்டி — ஞானத்தங்கம்
மயில்முருகேசனடி — ௪௯
வேலவர்க்குந்தொண்டவனாய் விளங்கும் சோலைமுத்தை
ஆவலாய்கார்க்கவேணும் — ஞானத்தங்கம்
அருள்வேலர்கந்தனடி — ௫௦
மௌனகுருருத்ரமூர்த்தி மதுரகவிக்கருளும்
புனிதமுருகனடி — ஞானத்தங்கம்
போதகுருநாதனடி — ௫௧
தங்கச்சிந்து முற்றிற்று.