புகைவண்டியின் சிந்து contents.html about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் கடவுள் துணை. தென்னிந்தியா றெயில்வே என்னும் கர்னாடகப் புகைவண்டியின் சிந்து. சென்னை-சூளை சங்கநிதிவிளக்க அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

தென்னிந்தியா றெயில்பாரடி — பெண்ணேயிது தெற்கேபோகும்நேரடி மன்னர்கள்தான் தூதிக்கும் மதிறாஸ்கருகாக உன்னிதமாகவே யுகமையாயேர்ப்பட்ட ­— (தெ) மண்டலத்தோர்புகழும் மறாஸ்எழும்பூரினில் கண்டவர்வியப்படைக் கருதிநியமித்த — (தெ) சட்டமுடன்ஸ்டேஷன் பட்டணத்தோற்போற்ற திட்டமதாகவே கட்டியிருக்கிற ­— (தெ) கண்ணாடிகதவுகள் கனத்த ஆபீசுகள் விண்ணாடரும்மெச்ச விதமாகயேற்பட்ட — (தெ) கைகாட்டிமரங்களும் கனத்த ஆளுகளும் பைகாண்சினே கர்முதல் பலருமிருக்கிற — (தெ) இஞ்சின்வண்டிமுதல் இணையில்லாவண்டிகள் அஞ்சுதலில்லாமல் தங்கியிருக்கிற — (நெ) டிக்கட்டுகள் வாங்கி இக்கட்டில்லாமலே பக்குவமாகவே தக்கபடிபோவோம் — (தெ) சைதாப்பேட்டைஸ்டேஷன் சார்ந்த பரங்கிமலை பயிலாகிறெயில்வண்டி பார்மீதிலேபோகும் — (தெ) பல்லாவரம்பாரு பக்கத்தில்வண்டலூரு எல்லார்தங்குங்கூடு வாஞ்சேரியிதுபாரு — (தெ) அங்கமதுயீடேற ஆண்டவனைப்போற்றும் சிங்கபெருமாள்கோயில் ஸ்டேஷனிதுபாரு — (தெ) தங்கபிளப்பாரி தாகவிடாய்தீர செங்கற்பட்டுஸ்டேஷன் சிறப்பதாய்நாம்வந்தோம் — (தெ) கோர்ட்டுமுதலான தூக்குமரங்களும் மேட்டிமையாய்ச்செயில் தாட்டியாய்த்தோற்றுது — (தெ) பொன்விளைந்தகளத்தூரு புகலரியமதுறாந்தம் தன்மையுள்ள தாசீல்தார்நடத்துங்கச்சேரி — (தெ) அச்சரபாக்கமிது அடர்ந்துவரும்றெயில்வண்டி இச்சைபுடமன் மாற்றும் இணையில்லாஸ்டேஷனிது — (தெ) ஒலக்கூறுதாண்டிநாம் ஒயிலானதிண்டிவனம் கலக்கமிலாத்தாலுக்கா கட்டழகிவந்தோம்பார் — (தெ) புதுமையுள்ளசத்திரத்தில் போஜனம்நாம்செய்து இதமுடன்றெயிலேறி இக்ஷணம்போகலாம் — (தெ) மானிலந்தான்புகழும் மயிலமெனுந்தலத்தில் கானமயில் மீதேறும் கர்[ந்]த்தனிருக்கிறார் — (தெ) கண்டுபணிந்தால் கர்மவினைகள்போகும் வண்டுநிகர்விழியாலே மாங்குயில்மொழியாலே — (தெ) விக்கிரவாண்டி விழுப்புரந்தாண்டி பக்கத்திலே பண்றொட்டி பண்புள்ளஸ்டேஷனிது — (தெ) நெல்லிக்குப்பமெனும் நேரானவூர்து அல்லலகற்றுந்திருப்பா திருப்புலியூரிது — (தெ) பேடைமயிற்கண்ணாளே பிரியாதேசெந்தேனே கூடலூர்ஸ்டேஷனைக் குறிப்பாகபோரு — (தெ) ஆலப்பாக்கமிது அடுத்தபரங்கிபேட்டை கோலமுள்ளகாயலார் குடிகலிருக்கிறார் — (தெ) பார்தனிலுள்ளோர்கள் பத்தியாய்தான்துதிக்கும் சீருள்ளசிதம்பாத் தெரிசனஞ்செய்யடி ­— (தெ) நடராஜர்வீற்றிருக்கும் நலமானசிற்சபையை மடமயிலேநீயும் மனதினிற்போற்றடி — (தெ) தொல்லைவினைகளைத் துரத்திகருவருக்கும் தில்லைமாகாளியின் தெரிசனஞ்செய்யடி — (தெ) கனிவர்க்கங்களுண்டு காசாலட்டுமுண்டு இனிமைப்பிரசாதங்க னிருக்குமிடமுமுண்டு — (தெ) வல்வினையைத்தீர்க்கும் வயித்தீஸ்வரன்கோயில் எல்லையைவிட்டுமகா வேகமாய்த்தான்போகும் — (தெ) மாயவரங்குத்தாலம் வயங்குநரசிங்கபேட்டை தூயஸ்டேஷன்கள் தாண்டிதுரிதமாகப்போகும் — (தெ) திருவிடைமருதூர் தேன்பொழியுங்கும்பகோணம் பருவுஞ்செந்தலைப்பேரூ வந்தோமிப்போதடி — (தெ) பாவவிநாசனம் பகரும்ஐயம்பேட்டை சோபமவைநீக்குஞ் சொகுசுள்ளதஞ்சாவூர் — (தெ) முப்பத்திரண்டும் முதன்மையாய்ச்செய்வித்த தப்பில்லாபோஜராஜன் தங்கியதஞ்சாவூர் — (தெ) சாலியமங்கலம்சார்ந்த அம்மாம்பேட்டை நீடாமங்கலமிது நேர்ந்தகொரடாச்சேரி — (தெ) குளிக்கரைஸ்டேஷனிது குணமுள்ளதிருவாலூர் களிக்கவேதியாகரைக் கண்டுதெரிசிப்போம் — (தெ) இத்தலந்தன்னிலே யிணையில்லாதேருகள் மெத்தவுசித்தமாக மேன்மையாய்த்தோற்றுது — (தெ) அப்புரமிருக்கும் அடைவானஸ்டேஷன்களை தப்பிதமில்லாமல் தன்மையுடன்சொல்வேன் — (தெ) கீவளூர்தானிது கிளாச்சிக்கில்தானிது மேவிநாகப்பட்டணம் மேன்மையுடன்வந்தோ — (தெ) திடமுள்ளதிருச்சினாப் பள்ளிஸ்டேஷ்னிது வடமேற்குறெபில்மாதை வந்துகலக்கும்பாரு — (தெ) பிட்டுக்குமண்சுமந்து பிரம்பாலடிப்பட்ட திட்டமுள்ளசொக்கநாதர் திருமதுரைதலமிது — (தெ) அங்கயற்கண்மீனாட்சி யம்மனிருக்கிற சங்கைகளில்லாத சன்னிதியிற்கோறு — (தெ) திருப்பரங்குன்றம் திருமாநகரம் விருப்பமுள்ளகள்ளுகுடி விருதுபட்டிஸ்டேஷன் — (தெ) துலுக்கபட்டிசாத்தூர் கோவில்பட்டிகுமரபுரம் துடர்ந்துவரும்ஸ்டேஷன் துருசாய்போகும்இஞ்சின் — (தெ) கண்டவர்வியப்படையுங் கடப்பூருஸ்டேஷனிது அண்டையிலிருக்குமணி யாச்சிசத் திரமிது — (தெ) செந்தைகுண்டாதாண்டி சிறப்பானறெயில்வண்டி விந்தைமிகும் திருநெல்வேலியிதோவக்கோம் — (தெ) ஏத்தும்திட்டப்பாறை நேத்தியாய்நாம்வந்து தூத்துக்குடிதுலை தூரமேநாம்வந்தோம் — (தெ) தேசமெங்கும்புகழ் திருவண்ணாமலையில்வாழ் பாசமுடன்வீர பத்திரனியம்பிய — (தெ) தென்னிந்தியா றெயில்வே சிந்து முற்றிற்று. குறிப்பு:- இந்த சிந்து பாடல் 1902ஆம் ஆண்டு சென்னை சுந்தரவிலாச அச்சுகூடத்தில் பதிப்பிக்கப்பட்டதாகவும் அறிகிறோம்.
Contents | Home