ராமாயணம் contents.xml about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் ஸ்ரீராமஜெயம். ஸ்ரீ ராமாயண ஏத்தப்பாட்டு. சென்னை சூளை பெரியநாயகியம்மன் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

காப்பு வெண்பா. ஸ்ரீ ராமாவென்றுரைக்கில் செல்வந்தழைத்தோங்கும் ஸ்ரீ ராமாவென்றால் சிறப்புண்டாம் — என்னாளும் ஸ்ரீராமர் அன்பர்களை ஆதரிப்பான்நாயேன் துன்பத்தைத் தீர்த்தபரன் துணை. பிள்ளையாரேவாரும் பிழைவாராமற்காரும் காரும்பகவானே வாரும்பெருமானே பெருமாள்கதையை பிசகாமல்பாட சரமாகநின்றார் தசரதனார்செல்வம் ஜெகமெங்குஞ்சொல்ல அகம்யேறிவாழ்க அலையாறிசூழ்ந்தார் அயோத்திமாநகரை வண்மையுடனாண்டு வாழுந்தசரதனும் வருபதாயிரத்து வருடமேகநாகி வரசுபுரிதிங்கள வட்டக்குடைநீழல் திரமுடனுலகம் செங்கோல் தனைக்கொண்டு (ஒருவதியாலொண்ணு) ஒருமழைபொழிய உஞ்சென்னெல்விளைய ஓங்கிடுசுமித்திரை ஓதுங்கோசலகை உத்தமிமூவரும் புத்திரனில்லாமல் சித்தமதுநொந்து தசரதருந்தாமும் விசனமடைந்தாரே (இருபதியாலொண்ணு) இவர் குருவதிஷ்டர் திருவடிபணிந்து எந்தன்முனிநாதா மைந்தனில்லையென்று சிந்தைமிகநொந்தார் தசரதருமப்போ தேவர்பலர்கூடி ஆவலாய்அரக்கர் அக்ரமத்தாலே (முப்பதியாலொண்ணு) முறையால்திருமாலு ஒருகெருடன்பேரில் வருகுறவானோர்கள் வானவரேநானும் வாழும்புவிமேலே வரதன்தசரதற்கு ஒருமதலையாக உதிப்பன்புவிமீதில் கானகத்தில்சென்று வானரங்களாக (நாற்பதியாலொண்ணு) நல்லத்திருமாலும் சொல்லியபடியே துதிமிகுத்ததேவர் தொல்புவியில்வந்தார் தோன்றும்வானவர்கள் துளபமால்சொற்கேட்டு சுகமுடனிருக்க சுகமுனிவதிஷ்டர் தவனிலையில் கண்டு (ஐம்பதியாலொண்ணு) அரசனிடஞ்சென்று அருந்தவமுனியும் புத்திரகாமேட்டி புதியயாகம்செய்தால் புத்திரன்வுதிப்பான் கர்த்தனருளாலே கலைக்கோட்டுமுனியால் கனல்யாகமுடித்தார் கனவைகுந்தநாதன் காணவேயுதித்தார் (அறுபதியாலொண்ணு) ஆதிசேடனாகும் அரியலட்சுமணறாய் ஆழிதிருசங்கும் பரதர்சத்துருவாய் பாங்குடன்வுதித்தார் பாலறாம்வயதில் பலகலைபடித்து பாங்குபெருராமர் பகரும் விஸ்வாமித்திரர் (எழுபதியாலொண்ணு) யேகிபின்சென்று இந்தவனந் தன்னில் வந்ததாடகையை வலுமையுடன்வென்று வருகும்வழிதன்னில் வகலிகை தன்சாபம் இவர்அடியினால்யெழுப்பி வன்னகர்மிதுலை நன்னகர் அடைந்து (எண்பதிபாலொண்ணு) இயல்புடனேவில்லை நயமுடன்வளைத்து இன்பமொழிச்சீதை அன்புடன் மணந்து அந்தவழிதன்னில் வந்தபாசுராமர் வல்லமையடக்கி வில்லையும் ஓடித்து அயோத்திமாநகரில் வாழ்ந்திருந்தநாளில் (தொண்ணூருட லொண்ணு) சொன்னதசரதனும் மன்னன்ஸ்ரீரரமனுக்கே மணிமுடிதரிக்க மனதெண்ணியிருக்க மனக்கபடுகூநி மாயத்தையரிந்து மாதவிகைகேயி போதனைகளாலே சேதியையுரைத்தாள் ௱ — பிள்ளையாரேவாரி பின்னுமந்தக்கூனி கைகைபுத்தியைக்கலைத்து உன்மகன்பாதர்க் கென் செய்குவாய் பெண்ணே என்னடிபோவென்று அன்னவள்கைகேசி மன்னவனைநோக்கி வந்தனைச்செய்தாளே அந்தகைகைதானும் (ஒருபதியாலொண்ணு) உன்மகன்பரதன் தன்முடிதரிக்க தாரும்வாமென்றாள் தீரமுடன்கைகை தசரதன்திகைத்து சிந்தையில்மயங்கி தியங்கியேயிருந்தாள் தெரிவைகைகைதானும் ஸ்ரீராமரையழைத்து (இருபதியாலொண்ணு) இப்பதினாலாண்டு ஒப்புடன்வனத்தில் ஒருமையுடன்போக அருமைலட்சுமணரும் அணிகுழலாள் சீதை அனைவரும்வனத்தில் இனமுடன் திரிந்தார் இந்தவகையாலே ஈன்றதாய்கோசலை (முப்பதியாலொண்ணு) மூவர்தாயிமாரும் முகத்தில்கண்ணீர்சோர முதல்வன்தசரதனும் முகுந்தன்பதிசென்றார் முகில்வண்ணன்பரதன் நகரயோத்தி நீங்கி நல்லரதமேரி நதிக்கரையில்வந்து நற்குகனைக்கண்டு (நாற்பதியாலொண்ணு) நல்ல நதிகடந்து நல்லசித்திரகூடம் நாடியேபரதன் ராமனைப்பணிந்து தந்தையும்யிறந்த தக்கசேதிசொன்னான் அயோத்தியைஆளும் அண்ணனே நீவாரும் அன்னை சொற்படியே (ஐம்பதியாலொண்ணு) அன்னரசை ஆள்வாய் அன்புடன்பாதர் அரியரகுராமர் அவ்வனத்தைநீங்கி விராடனையேகொன்று தண்டகவனத்தில் சேர்ந்தாகுராமர் செங்கனிகளுண்டு அகஸ்தியனைக்கண்டு அம்புவில்லுங்கொண்டு (அறுபதியாலொண்ணு) அவ்வனத்தைவிட்டு சுந்தரச்சடாயுவை சுகமுடனேகண்டு துரிதமாய் நடந்து கோதாவரிதாண்டி லட்சுமணர்செய்த பஞ்சவடிதன்னில் ஸ்ரீராமருமிருந்தார் (எழுபதியாலொண்ணு) இளையபெருமாளும் காய்கனிகொடுக்க ராமன்சீதையுண்டு நலமுடனிருந்தார் சூர்ப்பநகைவந்தாள் ராமனையேகண்டாள் சோபனஞ்செய்யென்றான் சூர்ப்பநகைமூக்கை தொட்டரிந்தான் மன்னன் (எண்பதியாலொண்ணு) எழுந்தலரியோடி விழுந்துசூர்ப்பநகை கரதூஷணாளோடு கலங்கியுரைத்தாளே கரதூஷணாளும் கடுஞ்சமர்புரிந்து ராமர்கையால்மாண்டார் மாயைசூர்ப்பனகை ராவணனைக்கண்டாள் (தொண்ணூருட லொண்ணு) தோகைசூர்ப்பநகை பாடுமொழிச்சீதை பர்னசாலைதன்னில் கன்னிகையழகை காணமுடியாது கண்டுவந்தேன்நானும் மானிடர்யிருவர் மானம்குலைத்தாரே மங்கை சொல்கேட்டு ௨௱ — பிள்ளையாரேவாரி பின்னும்ராவணனும் கன்னிசீதைதன்னை காணவேணுமென்று காதல்மிகக்கொண்டு மாமன்மாரீசன் மானாகப்போவென்றான் ராமன்கண்ணெதிரில் மாயமானும்நிற்க மாதுசீதைக்கண்டு (ஒருவதியாலொண்ணு) ஓடிவந்தமானை தேடித்தாரும்யென்றாள் சீதையவள்தானும் ராமரும்யெழுந்து நேமமாய் பொன்மானை நேராகத்தெரித்தி நெடியபாணம் விட்டார் லட்சுமணாவென்று அட்சணமேமானும் (இருபதியாலொண்ணு) இப்படிவிழவே இந்தசொல்லைக்கேட்டாள் அந்தசீதைதானும் இளையபெருமாளை எழுப்பியேயனுப்ப ராவணனும் அப்போ வேருருவம் கொண்டு தேரேசரியேவந்து ஆரம்மணியென்றான் அயோத்தியையாளும் (முப்பதியாலொண்ணு) முனிவர் பெரியோரே முகுந்தனுடதேவி சானகியென்பேரு தவமுனியேகேளும் யிவ்வனந்தனிலே யெழுந்தமுனியோரே எங்குவந்தீரென்ன மங்கைசீதைகேழ்க்க இலங்கையாசாளும் ராவணனானென்றான் (நாற்பதியாரிலாண்ணு) நாதன்வரும்முன்னே பாதகாபோவென்றாள் பாதகராவணன் கட்டுகதையிங்கே காட்டபயமாமோ கடுகினிலத்தோடே கன்னியையெடுத்து கனகதேரில்வைத்து காதகன்சென்றானே (ஐம்பதியாலொண்ணு) அரக்கன் தேரினோடு அணங்குசீதைதானும் அந்தரத்தில்போக சுந்தரச்சடாயும் தோற்மமதுகண்டு துடங்கி சண்டையிட்டான் துஷ்டராவணனும் வெட்டியேகெலித்தான் இஷ்டமாஞ்சடாயும் இவ்வனத்தில் வீழ (அறுபதியா வொண்ணு) அரக்கன்ராவணனும் அணங்குசீதைதன்னை அசோகவனன்த்ன்னில் அருஞ்சிறையில் வைத்தான் அணிதிருசடையும் துணையாகயிருந்தாள் துதிமிகுத்தசீதை மதியதனையேத்த மதுவனம்அசோக வனந்தனிலிருந்தாள் (எழுபதியாலொண்ணு) இளையபெருமாளும் இராமரைப்போய்கண்டு இருவரும் நடந்து மருவிபர்னசாலை சீதையைக்காணாமல் தேடிமனம்நொந்து திகைத்துவரும்போது சேதியைச்சடாய்வு போதனைகள் செய்தார் (எண்பதியாலொண்ணு) சென்றரகுராமர் சென்றவனம் விட்டு சவுரியாளுரைத்த தனிவழியேபோனார் சாரும்அனுமானும் நேராகவந்தான் ஐயன்அதுகண்டு ஆரும்பிள்ளாயென்றான் அஞ்சனாதேவிக்கி அனுமபுத்திரன்நானே (தொண்ணூருடலொண்ணு) சுக்கிரீபனவுங்கள் தோத்தமதைகண்டு துரிதமாகயென்னை தூதனுப்பவந்தேன் சொன்னசொல்லைக்கேட்டு மன்னன்ரகுராமன் சீதையைப்பிரிந்த சேதியையுரைத்தான் ௩௱ — பிள்ளையாரேவாரி பின்னுமனுமானும் பெரியரூபம்காட்டி சுக்கிரீபனைக்கண்டு தெசரதகுமாரர் ஜெயமிகுந்தராமர் சேவித்துநீர்வாரும் சேதியையுரைத்தேன் ஆதியனும்மானும் (ஒருவதியாலொண்ணு) வோங்கியேசுக்ரீபன் பாங்குபெரவந்த பாரளந்தமாயன் பாதமேபணிந்து வாலிசெய்யுந்தங்கை வகையுடனேசென்றான் வந்தராமச்சந்திரன் வாலிதனைக்கொன்று கிஷ்கிந்தைநகரை சுக்கிரீபன்ஆள (இருபதியாலொண்ணு) இந்தவானரங்கள் எழுவதுமேவெள்ளம் யெங்குநிரைந்தாரே மதங்கம்மாமலைமேல் வந்தபின்புராமர் செந்திருவாள்சீதை சேதியையரிய செய்வீர்கள்போக தென்திசைக்கனுமன் (முப்பதியாலொண்ணு) மோதிரம்கையேந்தி விஸ்வரூபம்கொண்டு வேகமாய்கடலை மைனாகமலைதாண்டி மானகரிலங்கை வாசல்வழிவந்து யிலங்கனியைகொன்று யிலங்கையில் புகுந்து யிலங்கையெங்குந்தேடி (நாற்பதியாலொண்ணு) நாடியனுமானும் தேடித்திரிந்தானே அசோகவனந்தன்னில் அணிகுழலாள்சீதை அன்புடன்யிருக்க அனுமானும்பணிந்தே கணையாழிகொடுத்தான் களிப்புடனேசீதை கணவனைநினைந்து கண்ணில்நீர்சொரிந்தாள் (ஐம்பதியாலொண்ணு) அவர்வரவைசொல்லி அன்னைதுயர்மாத்தி அந்தசீதைதந்த அடையாளங்கள்வாங்கி அனுமாரும்திரும்ப அசோகவனந்தன்னை அழித்துவரும்நாளில் அந்ததூதர்கண்டு அரக்கனோடேசொன்னார் (அறுபதியாலொண்ணு) அரக்கன்ராவணனும் அனுப்பியிந்திரசித்தை அனுமெனொசண்டை நாகபாசத்தாலே நலமுடனேகட்ட நற்கெருடநாலே நாகமதுசாக ஆரடாநீயென்று அரக்கரதுகேழ்க்க ராவணத்துரும்பே ராமதூதநானே (எழுபதியாலொண்ணு) எம்பேரு அனுமான் ஈனப்புத்தியாலே மானமில்லாதுரோகி மாதுநீதிருட நீதியோவுனக்கு நீபிழைப்பதில்லை நில்லடாகைகுத்தில் வல்லமைராவணா சொல்லடாநீயென்றான் தூதனனுமானும் (எண்பதியாலொண்ணு) என்ன சொன்னாய் தூதாய் என்றவனெழுந்து அந்த அனுமானை வாலினில்கொளுத்த வணிகுழலாள்சீதை வாலைகொளுத்தாமல் வக்கினியைவேண்ட வளமிகுத்திலங்கை வனுமந்தன்தீயிட்டான் (தொண்ணூருடலொண்ணு) துஷ்டராவணனுக்கு இஷ்டமானலங்கை நட்டமேயடைய நல்ல அனுமானும் சீதைதிசைநோக்கி சேவித்துபணிந்து தென் திசைக்குபோன செயமிகுத்த தூதன் திரும்பியேவந்தானே ராமரைக்கண்டானே சேதியைச் சொன்னானே ௪௱ — பிள்ளையாரேவாரி பிரியமுடன் சீதை பெரியதோர்வனத்தில் அரிய கணையாழி அன்புடன் கொடுத்தாள் பரிவுடனே ராமர் பாதமேபணிந்து பார்த்துவந்தேனென்று கணையாழிகொடுத்தான் காளை அனுமானும் (ஒருவதியாலொண்மை) ஒருமிக்கவேகூடி ஒருகடல்கரையில் வந்து நின்றார்ராமர் வானரங்களோடு வாரெல்லாமரிந்து போரரக்கனதானும் பெரிய மந்திரியோடு பேசியேயிருந்தார் (இருபதியாலொண்ணு) யிருந்தவிபூஷணர் அரித்தர்க்கன்நெஞ்சை வருந்தியே ஜானகியை அருஞ்சிறைவிடென அரக்கனுங்கோபித்து அவளை விடேனென்றான் அரக்கநுரைத்தானே அப்போவிபூஷணர் அரக்கனையேநீக்கி ராமரைப்பணிந்தார் (முப்பதியாலொண்ணு) முகுந்தன்ரகுராமர் திருவணையைகட்டி திருக்கடலைத்தாண்டி ஜெயமிகுத்தராமர் வானரப்படையும் வரக்கன் கோவிலேற அரக்கரது கண்டு அலியயுத்தஞ்செய்தான் வானரங்களோடு வரதன் ராமன் கண்டு (நாற்பதியாலொண்ணு) நல்லரகுராமர் வல்லயுத்தஞ்செய்தார் பாவிராவணனும் படையெடுத்துவந்து பாரயுத்தஞ்செய்தார் பாங்குடன்பெருராமர் பலகணைதொடுத்து பாணத்தாலர்ந்தார் (ஐம்பதியாலொண்ணு) அந்தராவணனுக் கழகுதேறும்போச்சி அந்தராவணனும் ஐயநெதிர்நின்றான் இன்றுபோய் நாளை இனிவருவாய் நீயே என்றார் ரகுராமர் (அறுபதியாலொண்ணு) அரக்கனோடிவந்து அனுப்பியிந்திரசித்தை அவனுஞ்சண்டையிட்டான் அந்தராமறோடு கும்பகர்ணன்வந்து கூடச்சமர்செய்தான் ஜெயமிகுத்தராமர் சேனைகளை கூட்டி ஒருகணையினாலே ஓங்கி அடித்தாரே (எழுபதியாலொண்ணு) யிவர்கள் மாண்டசேதி ராவணனுங்கேட்டு மூலபெலசண்டை முன்னரக்கன் செய்தான் மன்னன் ராமர்கண்டு மாபடையைக்கூட்டி மண்டலம்நடுங்க விண்டலம்குலுங்க அந்தராவணனை அரிய தலைபத்தும் அந்தராமர்கொய்தார் ( எண்பதியாலொண்ணு) எங்கள் விபூஷணர்க் இலங்கைப்பட்டங்கட்டி இருந்து அரசாண்டார் சீதையோடுராமர் சேர்ந்தவரும் நாளில் சேதுவையைக்கண்டு செய்தவிருந்துண்டு செயம்பெற அனுமான் சேதிவந்து சொன்னான் (தொண்ணூருடலொண்ணு) சொற்பரதன் கேட்டு தாய்மாருக்குறைக்க தாங்களுங்களிக்க அயோத்திமாநகரில் அனைவர்களும் வந்தார் அரியரகுராமர் அன்புடன்யிருக்க ஆசனம் கொடுக்க அன்புடன்பரதன் அனைவர்களுஞ்சூழ பட்டாபிஷேகமும் பாங்குடனே செய்தார் ராமர்லட்சுமணற்கும் ஜானகிதாயார்க்கும் சகலரும்பணிந்தார் சீதைராமன்வாழ்க ஜெகத்திலுள்ளோர் வாழ்க நம்பினபேர்வாழ்க நாடுகள் செழிக்க நல்லமழைபொழிய ராமர் கதைமுற்றும் நலமுடனேவாழி ஸ்ரீ ராமாயண ஏத்தப்பாட்டு முற்றிற்று.
Contents | Home