பார்த்தசாரதி-ஆசிரிய விருத்தம் contents.xml about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் ஸ்ரீராமஜெயம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் பேரில் ஆசிரிய விருத்தம். ஆதியாய் நின்றதோ ரண்ணலே கண்ணணே யண்டர்கட்க முதளித்தாய், ஆனந்தகோவிந்த மாதவா துளவுமலரணி கேசவா முகுந்தா, நீதியாய் நின்ற தாசர்க்கு வரமீந்திடும் நிட்கள பதுமநாபா, நீலவண்ணா ஹரி வைகுந்தவாசனே நிறைந்த கல்யாணலீலா, சோதியே யமரர்துதி செய்திடும்பாதனே துய்யனே பரந்தாமனே, சுத்தனேகர்த்தனே பக்தர்கண்மனதினிற் றுலங்கிடு மாதிமூர்த்தி, பாரதிமதிதனை யணியும் பரனமர்கூரனே பகர்திருவல்லிக்கேணிவாழ், பங்கயக்கண்ண ருக்மணிதேவி நேயனே பார்த்தசாரதி மாயனே. — 1 மச்சியா கூருமா வராக நரசிங்க வாமனா பரசுராமா மங்கையாஞ் சீதையிடதுங்க ரகுராமா பலகிருஷ்ணா கற்கியே, வச்ரகோ தண்டமணிகையனே துய்யனே மாவலியை சிறையில்வைத்த, மாதவாபலகோடி சூரியப்பிரகாசனே மகாவசுரர்குலமறுத்தாய், தற்சொரூபமாகி வந்தானைக் காத்தவா சங்குக்கரமேந்திடும், தற்பரா கோவர்த்தனகிரியேந்தி யாயரொடுசகலபசு நிறைகள் காத்தாய், பச்சையாலிலையின்மேற் றுயில் கொண்டவா மறைகள் பகர் திருவல்லிக்கேணிவாழ், பங்கயக்கண்ண ருக்மணிதேவிநேயனே பார்த்தசாரதி மாயனே. — 2 எட்டென் றிரண்டென்றுமறியாத சிறியனே னென்னபிழைசெய்தாலுநீ, எல்லாம் பொறுத்து நின் கருணை கூர்ந்தடியேனை யாளுவாயேழைபங்கா, வட்டவாரிதியுலகி லுனையன்றிவேறுதுவி மதுசூதனவறிகிலேன், வாசுதேவானந்தகோபாலமைந்தனே மன்மதனையீன்ற சோதி, துஷ்டநிக்ரகனே சிஷ்டபரிபாலனே துணையாக நின்றபொருளே, தொண்டர்கள் பணிந்திடுமுலாசனே தசரதன் துய்யமகனாயயோத்திப், பட்டந்தரித்துலகை யாண்டிடும்பரமனே பகர்திருவல்லிக்கேணிவாழ், பங்கயக்கண்ண ருக்மணிதேவி நேயனே பார்த்தசாரதிமாயனே. — 3 தீரனாந்தசரதன் வயிற்றிற் பிறந்துபின் சீதை யைமணம்புணர்ந்து, சீராமயோத்தியில் வந்துதாய் சொற்படித் தண்டகாரணியமேவி, சார்வானமுனிவ[ர்]க்கபயவஸ்தமதீந்துசதிவாலி தனைவதைத்துத்த், தக்ஷணஞ் சுக்ரீவனுக்கரசு தந்துபின் சாகரத்தனைகட்டியே, பேராதகொடுமையு மிராவணனையும் படைகளைமாள வேரறுத்துப் பெருவிபீஷணனுக் கிலங்கைதந்தே மமலர் பெண்ணுடனயோத்திவந்து, பார்தன்னை முடிசூடியாண்ட ஸ்ரீராமனே பகர் திருவல்லிக்கேணிவாழ், பங்கயக்கண்ண ருக்மணிதேவி நேயனே பார்த்தசாரதி மாயனே. — 4 முத்துநவரத்ன மணிவைத்திழைத்த கிரீடமுடி மீதுசோதிமின்ன, முழுமதிமுகத்தினிற்றிரு நாமமுன்னவே முன்கையிற் சங்கமின்ன, சுத்ததிருமேனியில் வச்ரக்கபாயினொடு துலங்குமாரங்கண்மின்னத், தஞ்சமென்றோர்களுக் சஞ்சலெனவந்தருள் சக்ரகரமெய் ப்ரதாபா, [பக்]த்தர்கள் பணிகின்ற பதமலரெனக்குநீர் பகர்திருவல்லிக்கேணிவாழ், பங்கயக்கண்ண ருக்மணி தேவிநேயனே பார்த்தசாரதிமாயனே. — 5 அன்னங்கள் போன்மாத ராடலும்பாடலுமனேக விதவாத்தியங்களும், அண்டர்கள் செவிடுபட தேவகோஷ்டங்களும் அடியார்கடொழுதேத்தலும், சின்னங்ககபூத்தபோ லேணிப்பந்தங்களும் தினுசு தினுசாம்பந்தமும், சித்ராபாணங்களும் புருசுமுதல் வெடிகளுஞ் சிறக்கமத்தாப்பிலங்க, உந்நதக்கவரிடால் வட்டங்குடைகளொளிர்மதி யெனப்பிடிக்க, ஓங்குகருடாதியர் மேற்பவனிவந்திடு முல்லாசமென்ன சொல்வேன், பன்னு தமிழாழ்வார்கள் பன்னிருவர் பாடலும்பகர் திருவல்லிக்கேணிவாழ், பங்கயக்கண்ண ருக்மணிதேவி நேயனே பார்த்தசாரதிமாயனே. — 6 கல்லாகிலுங் கரையுமெனதுமன முன்றன்மேற் கரையா திருந்ததென்னோ, கபடமோவஞ்சனைக் காரணமதோவெனைக் காக்கவுங் கடமையிலையோ, பொல்லாதவறியனோ யெனைச் சூழ்ந்து போராடுதென்ன செய்வேன், போற்றினேனெனது கலிதீர்த்தாண்டுகொளல் வேண்டும் புருஷோத்தமா நிசங்காண், சல்லாபமாகவே சகலசௌபாக்கியமும் தந்திடுந் தருமமூர்த்தி, சாலோக சாமீப சாரூப சாயுஜ்ய தற்பராயுன்னையானும், பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டுபாடினேன் பகர்திருவல்லிக்கேணிவாழ், பங்கயக்கண்ண ருக்மணி தேவிநேயனே பார்த்தசாரதிமாயனே. — 7 தஞ்சமென்றுன்பாதம் நெஞ்சில்வைத் திடுமெனைச் சற்றுமருள் செய்யாததுன் தருமமோ, வதுவுமென் கருமமாவிப்படித் தவிக்கவிடுவது நீதியோ, வஞ்சனைகளோவுனது நெஞ்சிரங்காததோ மதியிலேன் கதியுமிதுவோ, மைந்தனைப் பெற்றோர் வளர்த்திடுவ தில்லையோ வாதுநான் செய்யலாமோ, கஞ்சனையுதைத்து காளியன்மே னடித்தவெங்காரணா பாரளந்தகண்ணனே, வண்ணனே பந்நகச்சயனனேகாயாவின்மலர் வண்ணனே, பஞ்சவர்தமக் குதவுபாரத முடித்தபின் பகர்திருவல்லிக்கேணிவாழ், பங்கயக்கண்ண ருக்மண தேவிநேயனே பார்த்தசாரதிமாயனே. — 8 தேவதேவா நமோ நாராயணாசகல ஜெகநிவாசா பொன்னிசூழ், ஸ்ரீரங்கநாதனே சாரங்கவாமனே செலவாசனார்த்தனாவெனக், கூவினேனுனதிரு நாமகீர்த்தன மெலாங் கொண்டுநின் பாதகமலக், குற்றேவல் செயவெனது கொடுவினை களைந்துநின் குளிர்நோக்கி யென்னையாள்வாய், தாவில்சீர்த் தூணதிற் றோன்று மரிமூர்த்தியே தருணமிதுவே, சச்சிதானந்தனே மெச்சுகோவிந்தனே சாயுச்சிய வைகுந்தனே, பாவலர்கள் பாடலுடனடியார்முன் றோன்றுவாய் பகர் திருவலிக்கேணிவாழ், பங்கயக்கண்ண ருக்மணிதேவிநேயனே பார்த்தசாரதிமாயனே. — 9 தந்தைநீதாயுநீ சகலமுந்தந்திடுஞ் சற்குருவுநீ மனமுநீ, சகவுறவுமுறையும்நீ சாதனப்பொருளுநீ சத்துவமுநீ பத்திநீ, எந்தன்மீதிரங்கி ரட்சிக்கு மெய்க் கடவுநீ எமது குலதெய்வமும்நீ, எப்பொருளுநீ மோட்சகாரணநீ யயனையீன்றிடும்பரமுநீ சுந்தரச்சீவநீ மண்ணுநீ விண்ணுநீ சுகதுக்க கருமம்நீ, சுபமுநீ யசுபநீசோதிநீ புனலுநீ சொற்பகப்பொருளும்நீயே, பைந்தமிழ்ப்பத்தும்நான் பாடியது நினதருள் பகர்திருவலிக்கேணிவாழ் பங்கயக்கண்ண ருக்மணிதேவிநேயனே பார்த்தசாரதிமாயனே. — 10 பார்த்தசாரதிவிருத்தம் முற்றிற்று.