நடபாயச்சிந்து.
contents.html
about_the_book.html
preface.html
ஏற்றப்பாட்டுகள்
௳
திரு அல்லிக்கேணி
ஸ்ரீபார்த்தசாரதிப்பெருமாள்
நடபாயச்சிந்து.
சென்னை
பூமகள்விலாச அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது
1923
நெ-24, தாண்டவராயப்பிள்ளை வீதி.
வெண்பா.
அற்புதமாகவே அன்பனாள்வார்செட்டி
செப்பெரியபங்களாவும் செய்துவைத்த — மெம்பொரு[ரு]ளாம்
பார்த்தனிடச்சாரதியிப் பவனிவருமானந்தம்
நேத்திரத்தால்காணு நின்று.
இ-ம்- இந்துஸ்தான்.
பல்லவி.
காவித்திருபங்களா அத்தாவில்வசந்தமாக
காரணபார்த்தசாரதி வரும்பவனி — (காவித்)
அநுபல்லவி
காவித்தென்னஞ்சோலை வாழைக்கமுகம்சாலை
கநிபலாஅகில்புன்னை விருக்ஷத்தில்கூவி
குயில்கள்கொஞ்சிஆடி மயில்களமிஞ்சுநாடி
கெம்பீரத்துடன் வாராரே — (காவித்)
சரணங்கள்.
சித்திரவிசித்திர தேவர்மகிழ்கின்ற
சிப்பிகள்சமைத்தோர் மாளிகை
லஸ்தர்குளோபுடன் சரகுளோபுகள்தொ[ங்க]
லக்ஷணமானதோர் படங்களும்தூக்கி — (காவித்)
அண்டமளாவிய அரும்பச்சைபந்தலிலே
அனேகவாழைமரம் தூக்கியே
கண்கொண்டகாட்சியாய் கதிர்சுடர்தீபங்கள்
காட்சியிதுவேகாட்சி காணவே — (காவித்)
இருபுரமும்தடாகம் இரங்கும்நடபாயி
அல்லிசெந்தாமரை பூர்க்கவும்
கரும்வண்டுதும்பிரண்டு விரும்பியதேனையுண்டு
கதிச்சுழன்றுகீதம் பாடவும் — (காவித்)
மேளவாத்தியமுழங்க மேலோர்கண்டுபுகழ
வெற்றிவிமானத்தில் ஏகிட
ஆலவட்டம்குடை கௌரிவெண்சாமரைகள்
அன்பாய்பந்நீர் கொண்டு வீசவும் — (காவித்)
வேதவேதியர் வேதம்புரியவும்
விஷ்ணுநாமம் பக்தர்பாடவும்
பேதகமில்லாதெய்வ ரம்பையர்போலுமே
பெண்கள்பிடித்து நின்றாடவும் — (காவித்)
அதிரவெடிகளும் புருசுபாணங்களும்
அனேகவிதகம்ப பாணமும்மதியென
பிரம்மிக்கமத்தாப்பு சோதியால்
மண்டலமெங்கும் பிரகாசிக்க — (காவித்)
தாமிஷமில்லாமல் சர்வோத்திரட்களும்
சரணாகெதியென்று துதிக்கவே
சுவாமிபிள்ளைசீஷன் யானுந்துதித்திட
சனார்த்தவனா யெனையாளவேணுமே — (காவித்)
நடபாயச்சிந்து முற்றிற்று.