முருகர் சிந்து contents.html about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் முருகர் துணை திருப்போரூர் முருகர் சிந்து. சென்னை சூளை பெரியநாயகியம்மன் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

சுந்திரமுருகர் சிந்தெனும்பாட்டை விந்தையதாயுரைக்க — விநாயகா உன்டிையுந்துணையே — ௧ திருத்தனி[ணி]முருகா திருமகன்மருகா வருத்தஞ்செய்யாமலிப்போ — முருகையா வந்தெனையாளுமையா — ௨ தணிகாசலவாசா தெய்வானைநேசா பணியுமடியேனிடர் — முருகையா போக்கியெனையாளுமையா — ௩ எட்டிகுடிவேலா உமையவல்லிபாலா சிட்டர்தொழுஞ்சீலா — முருகையா சிறியேனை வந்தாளுமையா — ௪ செந்திற்பதியானே சேவற்கொடியானே இந்திரர்போற்றும்வேல் — முருகையா எளியேனைக்காருமையா — ௫ சிங்காரவேலா சூரர்கள்காலா கங்காதரன்பாலா — முருகையா கருணை புரிந்தாளுமையா — ௬ பழனிமலையாண்டி பாதமதைவேண்டி தொண்டனடியோனிடர் — முருகையா தொல்வினையைத் தீருமையா — ௭ திருப்போரூரானே திருச்செந்திலூரானே வருத்தப்படுவோனை — முருகையா வந்தாண்டுகொள்ளுமையா — ௮ சண்முகதேவா சாஹித்யபாவா உன்மனமுமிறங்கி — முருகையா உகந்தெனையாளுமையா — ௯ கந்தாகுகனே கதிர்வேல்முருகா எந்தாயிதுவேதருணம் — முருகையா இணையடி தந்தாளுமையா — ௰ ஆறுமுகநாதா அடியேன்மேல்வாதா வேறு முகம்பாராமல் — முருகையா வந்தெனையாளுமையா — ௧௧ உன்பதந்தானே உருதியாய்நானே எண்ணித்துதிப்பதற்கு — முருகையா எண்ணிமனந்தாளுமையா — ௧௨ எந்தன்மீதே னித்தனைவாது சந்தஞ்செய்யாது — முருகையா சற்றுமுகம்பாருமையா — ௧௩ உனையன்றிவேறே தெய்வமுண்டோகூறு எனைவந்தாளுகற்கே — முருகையா இதுசமயம்பாருமையா — ௧௪ உந்தனைத்தேடி உருகினேன்வாடி வந்தனையேநாடி — முருகையா வரமருள்கோடியையா — ௧௫ கல்விப்பொருளால் கருத்தில்துதிக்கில் செல்வப்பொருளளித்து — முருகையா செல்வனையாளுமையா — ௧௬ பாவியிலும்பாவி பாரிலுனைத்தாவி கூவிக்கதறுமுந்தன் — முருகையா குழவியெனையாளுமையா — ௧௭ பவளச்செவ்வாயா பார்புகழ்தூயா மூவர்கள்சகாயா — முருகையா மூத்திதந்தாளுமையா — ௧௮ மாமலர்ப்பாதா மறையவர்போதா தாமதஞ்செய்யாமல் — முருகையா தமியேனைக்காருமையா — ௧௯ புள்ளிமயிலேறும் வள்ளிமணவாளா வள்ளமுகவழகா — முருகையா வடியேனைக்காருமையா — ௨௦ சுரர்துதிநாதா நிரைததுபோதா மருமலர்பாதாவுந்தன் — முருகையா மனமகிழ்ந்தெனையாளையா — ௨௧ அல்லும்பகலும் அறுபதுநாழிகை அல்லல்படுமெனையும் — முருகையா ஆதரித்தாளுமையா — ௨௨ விளங்கியவேதம் விண்ணோர்கணிதம் களங்கமறபோற்றிப்பதம் — முருகையா காணநான்வாருமையா — ௨௩ மதனவிநோதா மயமலைநாதா நிதமலர்கொண்டுபணி — முருகையா நேயனையாளுமையா — ௨௪ நித்தமுனைத்தேடி யேத்திபதம்பாடி நத்துகின்றவடியேனை — முருகையா நீதியுடனாளுமையா — ௨௫ ஒதுபவர்தங்கள் உள்ளத்திருக்கும் வேதப்பொருளேயெந்தன் — முருகையா வினைதீரப்பாருமையா ­— ௨௬ அல்லிடுநீரா ஆறுமுகத்தீரா துள்ளிமயிலேறிவந்தே — முருகையா தொண்டனைக்காருமையா ­— ௨௭ அஞ்ஞானந்தன்னை அகலும்படிக்குன்னை மெஞ்ஞானத்தாயற்றுக்கும் — முருகையா மைந்தனையாளுமையா — ௨௮ வேதவிநோதா வேந்தர்கணீதா நாதாவுன்பாதமதை — முருகையா நம்பினதினாலெனையாளுமையா — ௨௯ கன்னியரைக்கண்டு காமன்கணைக்கொண்டு உன்னிடபாதம்மறந்து — முருகையா உன்னருள்தாருமையா ­— ௩௦ மங்கையரைப்பாராமல் மயங்கித்திரியாமல் தங்கத்திருவடிகள் — முருகையா தந்தாண்டுகொள்ளுமையா — ௩௧ ஐம்புலனாலே அன்பாயுன்மேலே தென்பாகயான்பாட — முருகையா துன்பமதைத் தீருமையா — ௩௨ ஆனந்தமாக அடியேனுக்காக தானந்தமாகவந்து — முருகையா தமியேனைக்காருமையா — ௩௩ பாலன்படுந்துயரம் பாரெல்லாம்புகழும் கோலப்பதந்தந்து — முருகையா குறைவின்றியாளுமையா — ௩௪ எலிந்துமெலியாமல் நாடோறும்வாடாமல் கலியனும்வாராமல் — முருகையா கார்ப்பதுன்பாரமையா — ௩௫ சிறியவன்யானும் செய்தபிழைதானும் கருணையுடன்பொருத்து — முருகையா கனிவோடுரட்சியுமையா — ௩௬ வஞ்சகந்தீர வடியேன்கடைத்தேற கொஞ்சங்கடைக்கண்வைத்து — முருகையா கிருபைபுரிந்தாளுமையா — ௩௭ சம்சாரந்தன்னில் சார்ந்துலகில் இம்சைப்படுமெனையும் — முருகையா ஈடேறப்பாருமையா — ௩௮ அன்னைதந்தைநீ ஆதரிப்பாயே உன்னையன்றிவேறுதுணை ­— முருகையா ஒருவருமில்லையையா — ௩௯ ப[யம்]த்தியாயுன்னை போற்றவுமென்னை சத்தியமாகவுந்தன் ­— முருகையா சித்தம்வைத்தாளுமையா — ௪௦ பொன்னுலகத்தில் புரந்தானைக்காத்ததுபோல் என்னையுமேகாத்துன் ­— முருகையா இன்பம்வைத்தாளுமையா — ௪௧ நிலமையாயுன்னை நினைத்தோர்கடம்மை உலகிலலையாமல் ­— முருகையா உறுதியுடனாளுமையா — ௪௨ கோடிகொடிபிடிக்க குன்றுபோல்வந்துநீ ஆபத்தைதீர்த்திடுவாய் ­— முருகையா அடியேனைக்காருமையா — ௪௩ சத்திவடிவேலெடுத்து சங்கரனார்தன்மகனே பக்தியுடன்றொழுதேன் ­— முருகையா பட்சம்வைத்துக்காருமையா — ௪௪ வள்ளிமணவாளா வான்[வார்]மயில்வீரா புள்ளிமயிலேறிவரும் — முருகையா என்னைஅன்புடன்காருமையா — ௪௫ பாசமுடனாடும் பக்தர்பவமோடும் தலம்துதிகந்தப்பன்பாடும் — முருகையா தமிழ்நீயருள்தாருமையா — ௪௬ முருகர்சிந்து முற்றிற்று.
Contents | Home