மணிப்ரவாளப் பதிகம் contents.html about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் கடவுள் துணை. திருப்போரூர் மணிப்ரவாளப் பதிகம். இவை பிருங்கிமாநகரம் வேம்புலிமுதலியாரவர்கள்குமாரர் நமசிவாய முதலியாரவர்களது சென்னை சூளை நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

உனதுநகரொருந ளிருந்தபேர்யமராஜ னூரிலொரு நிமிஷமுமிரா லுன்கோயிலொருதாஞ் சுற்றினோர் விண்ணுலகி லும்பாபடை சுற்றவாழ்வாச நினது திருவடிவையொரு போதுகண்டவர்கள்பின் னொடும்பவச் சலதிகாணார் நித்தமுமுனைத்தொழும் பத்தசனர்பேருபெறு நிச்சயித் தோதவசமோ கனகமயகேயூர கனபுசத்துவாதசா சலதகங் காநந்தனா கலசகுசயுகள்கச் சளவிலோசனசபர கன்னிகா சீவரமணா ஜனபதசமஸ்தஜன துரிதாந்தகாரமே சனசந்திர நிபசண்முகா சகலமுனிஜனவினுத தருணரவிகிரணகண சமரபுரிவருகுமரனே — ௧ வெற்பரையன்மங்கையார் பொற்பிளங்கொங்கைமேன் மேருகிரிவில்லிபுஜமேல் வெகுவிதாநடம்புரிய மேகாரதுரகத்தின் மேலருமறைத் தலையின்மேற் பற்பலமகாபுண்ணிய சிகரிமேணிக்குமுன் பாதயுகளத்தைநித்தம் பாவியேனிதயஞ் சுமந்திடப்பெறுதவப் பயனையே தென்றுசொல்வேன் கற்பகாடவிவாச கல்யாணசுரராச கன்னிகாமணி நாயகா கனமானகும்ப லம்போதரகசானனக் கணபதிக்கொரு சோதரா சம்பமுடிமேலொடு சரணபங்கேருகச் சக்ரபாணிக்கு மருகா சகலமுனிசனவினுத தருணரவிகிரணகண சமரபுரி வருகுமரனே — ௨ பித்தமதிசாரஞ் சுரஞ்சூலைகாமாலை பெருவயிறு குன்மமூலம் பீனசங்குட்டஞ்சயகண்டமாலையெழு பிளவையோ டுலகிலின்ன மெத்தனை வியாதியுண் டத்தனையுநின்கோயி லெதிர்நின்ற மனிதர்தம்பா லிமைப்பொழுதுநில்லாது விட்டகலுமுன்மகிமை யெம்பாலுரைக்க வசமோ சுத்தகின்னரகருட கந்தருவசேவிதா தேவதாசார்வபௌமா சிங்காரகனசிங் கிணிசாலகனகோஷ்ட திவ்வியசரணாம் போருகா சப்தமூலமுமொரு கொடியில்வலம்வருசதூர சாமகான ப்ரமோதா சகலமுனிசனவினுத தருணாவிகிரணகண சமரபுரி வருகுமரனே — ௩ சீதரனுநான்முகனு மொருசற்றுமறியாத திருவடியு முருயுமுடையோன் செவியினிற்பிரணவம் பொருள்வடித்துரைஞான தேசிகோத்தமனீமெனப் பூதலமெலாமெச்சி புலவர்சொல்வினவியும் புண்ணியா வனைப்பரம் பொருளெனக்கருதாது பரதேவரைத்தொழும் புல்லர்க்கும் வினை தீருமோ பரதகநிராசர்குல சூரசங்கிராமமலர் பதுமவனிதைக்கு மருகா பரிமளகதம்பப்ர குணபூஷணமிருக பதிமுக சிரச்சேதனா சாதுசனபோஷனா சகரைதாமப்ரபுட சச்சிதா நந்தரூபா சகலமுனிசன வினுத தருணரவிகிரணகண சமரபுரிவருகுமானே. — ௪ அயில்வேல்விடுத்தசுரர் குலமானமிக்கபே ரடவியத் தனையுந் துணித் தகலுருவிசும்புலகி லமார்குடியேறவோ ரயிராணி கண்டதிலே வெயில்வீசுமங்கிலிய மீந்துநிலைநிற்கமணி விழியாயிரம் பெற்றவன் வீராசுதொழிபுரிய வைத்தாயுனைப்போல மேன்மைபெறு தேவரெவர்காண் கயிலாசபதிசுதா கனநடிக்கிடத்வசா கல்ஹரா சூனப்ரியா காங்கேயசதகோடி கந்தர்ப்பசவரூப கார்த்திகைக் குரியபுத்ரா கயிலாசபதிசுதா தனையநிருபாகிர்பா சாரநயன தவாதசா சகலமுனிசனவினுத தருணரவிகிரணகண சமரபுரி வருகுமானே. — ௫ கஞ்சமலர் நிகருமிருதாளுஞ்சதங்கையுங் கனராக வர்னத்துகில், கட்டுதிருவரையுமரை ஞணூமிள வெயில் வீச கடவுள்மணியாரமார்பும், நெஞ்சமர் விளைக்குமயில் வேண்முதற்பலதானை மேவுபன்னிருகைகளும், மென். முருககவிழ்பே மலர்நறுமீராறு வெற்பனைய திண்டோள்களுஞ், செஞ்சலச குண்டலச் செவிக ளீராறுமருள் சிந்துமீரா றுவிழியுந், திங்கண்முகமாறுஞ் சிரத்திலணி யெழுகொளிச் செம்பொன்முடி யாறுமெளியேன், சஞ்சலந்தீரவே கண்டுபரமானந்த சல்தியிலழுந்தவைப்பாய், சகலமுனிசனவினுத தருணரவிகிரணகண சமரபுரி வருகுமரனே. — ௬ சுரிதியைக் கரைகண்ட கரைகண்ட சதுரானனத்தனுஞ் சடராழிநெடுமாயனுஞ், சூலாயுதத்தனுந் துதிசெயப் பலகோடி சுரர்பணியநரர்பணியவே, கருநிறக்கடனமேலெ ழும்பவளமலை யெனக்கனவேகவெற்றி மயின்மேற், களிகூரநீவரும்பவனியைக்காணாதகண்களுங் கண்களாமோ அருணரத்னப்ரபாகனககுண்டலதரா அகிலாத்மகுலபாலனா, அண்டபரிபூரணானந்திதசரித்திரா அபங்கவீராக்ரகண்யா, சரவணதடோத்பவா சக்கிரபாசாகர சம்புல்லபதுமநயனா சகலமுனிசனவினுத்தருணரவிகிரணகண சமரபுரி வருகுமரனே. — ௭ நலமிகத்தர வல்லகிரக்திகா நட்சத்ரநாளினின்னூர் வந்துதா, னளிற்பனர்சரவணப் பொய்கைதனி லாடியு நறுங்கலாமதியைத்தொடும், பலமதிற்கோயில்வலம் வந்துநின்பதயுகள பங்கயங்கண்டுதொழுதும், பாருகிலுண்டான ஏற்பெற்றபுண்ணியம் பலசுரர் தமக்குமுளதோ கல்ஹாரகலிதசோ பிதகரண்டமணீய கனதுரித திரமிசோமா, கனமலையகிரிவாச முனிஞானதேசிகா கமநீய கோமளாங்கா சலசகத்தகலாத சதுர்முகனுமுச்சரிசடாட்சரா தேவோத்தமா, சகலமுனிசனவினுத தருணாவிகிரணகண சமாபுரி வருகுமரனே. — ௮ உனது செஞ்சேவலங்கொடியொருதரங்கூவிலு லாமீரேழுமதிரு, முனதுமயில்வாகனஞ் சிறைபடித் தெழுமளவிலுயாண்டகோளமிடியும், நினதுவேல் வலியினைச் சொல்லவோ முடியாதுநீரகச் சதுர்முகனையு, நின்சிறு விரற்றலைநகத்தினால் வெல்லுவாய்நின்னை வெல்வாருமுளரோ, வனசரகுலாங்கனாகுசயுகள்பூஷணா மத்தகச வல்லி நாதா வக்ரசிர்ங்கத்வய மகாமேஷவாகனாமஞ்சு விக்ரமசன்னிபா, சனகர்முதனால்வருக் குபதேசகுருவான சங்கரருற்பதேசகா சகலமுனிசனவினுத தருணரவிகிரணகண சமாபுரி வருகுமரனே. — ௯ பலமூடருனது குணசரிதையைப்பாடவப்பாடலைச் செவிடர்வினவப், பாருளோரிகழ்முடவராகினோருன் பெரும்பதியினைக் கண்டளவிலே, வலமாய்வரக் குருடர்கண்டுகொளிகொள வரந்தருவையுன்போலவே, மனமிகவிரங்கி யடியவர்வினைகளைந்து விடவல்ல தெய்வசங்களுண்டோ, திலைகானக்கவிரிநந்தனா பத்தசன சித்தரதசத்ரநிலயா, தேவசேனாதிபா தானவகுலாந்தகா தீனசனதுரிதஹா[ர]ணா, சலசானனப்ரவுட பூசுரோத்தம வந்திய சந்ததோற்சவவைபவா, சகலமுனிசனவினுத தருணரவிகிரணகண சமரபுரி வருகுமரனே. — ௰ பண்டுமொய்யாமொழிப் புல்லனுடனேகாதுபாடி னையிளங்குசங்கப், பலகையிலிருந்திறைவர் பொருளு ரைதெரிந்தனை பணிந்துபுகழ் கீரனகவல், கொண்டனை வழுத்தருண கிரிகவிதை சூடினை குணக்குறுமுனிக்குந் தமிழ், கூறினையுனைப்பாட வொருசற்றுமறிவற்ற கொடியனால் முடியுமோகாண், அண்டர்பலர்கொண்டாடு தென்பரங்குன்று திருவாவினன்குடியோக, மழகானசெந்தில்பழ முதிர்சோலை குன்றுதோறாடலுமுகந்தசதுரா, தண்டுளபமான்மருகவொருகுருகுவரைபகத்தனி வேல்விடுத்த முருகா, சகத[ல]முனிசனவினுத தருணரவிகிரணகண சமரபுரி வருகுமரனே. — ௧௧ மணிப்ரவாளப் பதிகம் முற்றிற்று.
Contents | Home