மீனாட்சியம்மன் contents.xml about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் அம்பிகை துணை மதுரை மீனாட்சியம்மன் சென்னை சூளை பெரியநாயகியம்மன் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

அறுசீரடி யாசிரிய விருத்தம். எனக்குஅயன் விதிப்படியோ பூருவத்தின் செயல்தானோ வேதோவம்மா உனக்கடுமை யானபின்பு யேதுகுறைவந்தாலும் யுனக்கேபாரம் வனக்கிளியே மலர்த்திருவே சொக்கரிடபங்கில்வளர் வனசமாதே யென்மனக்கவலையார்க்குரைப்பேன் யெனக்கிறங்கவேண்டுமம்மா மதுரைவாழ்வே. — 1 இனம்பிரிந்த மானதுபோல் உடல்பதைத்துவலுமையோ டிளைத்தென்னாளும் மனம்பதறி உழன்றுழன்று அடியேனுக்கருள்சொற்ற கல்நெஞ்சோதான் நிசம்படைத்த பெருக்கமதோ திருவனந் தம்பராமுகமோ தாயேயென்மேல் வனம்பரவிக் கடம்பவன சொக்கர்பங்கில்மீனாட்சி மதுரைத்தாயே. — 2 தாயிழன்ற கன்றதுபோல் பரதவித்து நிலைகுலைந்து தவித்தென்னாளும் தீயிலும் மெழுகதுபோ லுருகிமனம்வெருங்கூடாய் திகைத்தேனம்மா தூயமலர் புரந்திருவே நடம்புரியும்பதத்தாளே தோகைமாதே மாயவற்கு சகோதரியே சொக்கர்பங்கில்மீனாட்சி மதுரைத்தாயே. — 3 பொல்லாத நெடுநீவி பழிக்கஞ்சிபழிசுமக்கப் போராய்போராய் சொல்லாத நாளுமுண்டோ சொன்னாலுங்கேட்கிலையோ யென்சொற்கூந்தல் யெல்லாரும் வாழ்ந்திருக்க நானொருவன் தாழ்ந்திருக்க இயலோ அம்மா வல்லாறு களபமுலை மாமயிலே மீனாட்சி மதுரைத்தாயே. — 4 இருபொழுது வருமையினா லனுதினமும்பிணியதனா விளைத்துவாடி உருகுவது அயன்விதியோ அல்லவென்றாலுன்செயலோ உரைக்கமாட்டேன் திருவுருவே அருளொளியே தெள்ளமுர்தேசேயிழையே தேவர்போற்றும் மருவணியுங் குழலணங்கே சொக்கர்பங்கில்மீனாட்சி மதுரைத்தாயே. — 5 நச்சுகின்ற போதுபே ருலகில்மயங்கிவருமையில் னலிந்தென்னாளும் சஞ்சலமே சமுத்திரமாய் அலையதனில் துரும்பதுபோல் தவித்தேனம்மா கொஞ்சுகிலி மொழியாளே கஞ்சமலர்கரத்தாளே தோகைமானே வஞ்சியிடை திருவனங்கை சொக்கர்பங்கில் மீனாட்சி மதுரைத்தாயே. — 6 அதிமதூர விதரணம் பாடுவது உன்செயலோ அதுவல்லாமல் நதிதரித்தோ ரிடப்பாகம் விளங்குகின்றமாமயிலே நளினமானே கெதிபெறவே யடியேனுக் குனதுபதந்தந்தருள்வாய் கிருபைவைத்து மதினுதல்போல் திருவனங்கை சொக்கர்பங்கில்மீனாட்சி மதுரைத்தாயே. — 7 உலையிலிடு மெழுகதுபோ லுருகிமனம் வெங்கூடா யுலர்ந்துவாடி நிலைகுலைந்து மதிமயங்கி நின்று மிகபரதவிக்க நீதியோசொல் கலைமகளே வடிவனங்கை மகலமுகத்திருமாலே கருணையாளே மலைமகளே அகந்தழைக்கும் சொக்கர்பங்கில்மீனாட்சி மதுரைத்தாயே. — 8 இளமைதனில் வருமையினால் மனதுமிகநொந்துருகி இடைந்துவாடி விளைநிலத்தில் களர்விழுந்த வாரதுபோலடியேனும் விளங்கநின்றேன் குளையுடச்சி யன்னநடை குயில்மொழிச்சி நீகருணை கூர்ந்தூாட்சி மழலைமொழி குயிலனங்கை சொக்கர்பங்கில்மீனாட்சி மதுரைத்தாயே. — 9 திடமுடனே யுனைப்பாட செல்வம்வுண்டாம் கல்வியுண்டாம் அடவுடனே யிப்புவியில் யெந்தனுடமொழிக்கிரங்கி அருளேசெய்து சடைமுடியா ரிடப்பாகம் பச்சைநிறமாய்நின்ற தையல்மானே மடமயிலே உன்னுடைய மலர்ப்பாதம் தந்தருள்வாய் மதுரைத்தாயே. — 10 மதுரை மீனாட்சியம்மன் அறுசீரடி யாசிரிய விருத்தம் முற்றிற்று.
Contents | Home