ஏற்றப்பாட்டு contents.xml about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் கடவுள் துணை. மார்க்கண்டேயர் எமனைக்கண்டு. புலம்பலும் — பூசையும். மருத்துவதியம்மன் புலம்பலும் அடங்கியிருக்கின்றன. சென்னை பூமகள்விலாச அச்சுக்கூடுத்தில் பதிப்பிக்கப்பட்டது 1923 நெ-24, தாண்டவராயப்பிள்ளை வீதி
Contents | Home

விநாயகர் துதி — விருத்தம். சீரான திருக்கடையூ ரமுர்தலிங்க நாதரது செயலைவாழ்த்தி, பேறான செந்தமிழால் மார்க்கண்ட நாடகத்தின் பெருமைகூற, தீராதவினை யெவையும் தீர்க்கும பிராமிமுதற் செல்வனான, காரானை மாமுகத்தோன் கருணைமிகு கமலபதம் காப்புத்தானே. மார்க்கண்டேயர்சொல் — விருத்தம். கையில் மான்மழுவுமேந்துங் கடவுளே கடையூர் வாழும், தையலையிடத்தில்வைத்த தற்பரா என்னசெய்வேன், துய்யமாங்கதையுஞ் சூலபாசங்கொண்டென் னைக்கண்டு, மைநாகபர்வதம்போல் மறலியும் வாரானையோ. மார்க்கண்டேயர் தாயார் — புலம்பல். அப்பா மார்க்கண்டா என் கண்மணியே அடா ஒப்பில்லா தவத்தினால் உதித்தசெங்கனியே — ஓ உன்னைப்பிரிந் திருப்பேனோ தனியேமகனே அடா தனியே சுதனே அடா (அ) அப்பாமகனே யுன்னைப் பிரிந்து என்னாவி தரித்திடுமோ ஐயனே யென்னுள்ளம் நையுமே — அப்பாவுன்னையும் கோலமாங் கலியாணஞ்செய்து கண்ணாலை பார்க்கிலையேயடா — கொற்றவரவயிற்பற்றுதே — மிகக்கற்றவர் — கொடும்பாவியான் பெற்றகடனைத் தீர்க்கிலையோ (அ) சாலவுந்தவத்தால் வந்துதித்த கோலமாங்குமராசற்குணா — உன்னைப்பிரிந்து எப்படி உயிர் தரித்திருப்பேன். மார்க்கண்டேயர் சொல்லுதல் தங்கமெட்டு, நான் சிவபூசைசெய்து எமனை விலக்கிக் கொண்டுபோகும் வழிதேடிக்கொள்வேன் என்னம்மணி புலம்பி யழாகாதே, அல்லும்பகலும் நான் அரனைப்பூசைசெய்து வல்வினைத் தீர்த்துக்கொள்வேன், என்னம்மணி புலம்பி அழுகாதே. புலம்பல்—தரு—இ-ம் — வராளி—அடதாளம் கண்ணிகள். கடையூர் தனிலே காலனென்மேலே கடுகியேவாரானே அவனைக் கண்டவுடனே கலங்குதே என்மனங்காருங் கங்காதரனே (கடை) படையுடனே வாரான்—சடசடென நேராய் என் சடலமெல்லாம் படபடென்ன கடவுளே நானென்ன செய்வேன் (கடை) இந்த எமன்வதையைத் தீர்க்க இதுசமயமையாயவன் இரைந்து கொண்டென் றன்மீதினில்வாரா னென்றுயர் தீரும் ஐயா மைந்தனெனைக்கண்டு தண்டுகையிற்கொண்டு கொண்டலைப்போலே கர்ச்சித்து கண்ட னெதிராக வாரான் அடடாபயலே விடுவேனாவென்றவ (கடை) னக்கிரமத்துடனே அவன் அதட்டிக்கொண்டென்றன் மீதினில்வாரா னண்டம் வெடித்திடவே ஐயனேவென்னுள்ளம் நையுதே என்செய்வேன் தையலரைப் பாகம்வைத்த மெய்யாயெனைக்காக்க வேணும் (கடை) நம்புமடியார் துன்பம் தீர்க்குநான்மறைப்பொருளே இந்த நமனுக்கஞ்சியே வருந்துவேன் றன்னை நன்மையாகக் காத்தருளே அம்புவியோர்நெஞ்சம் பதைபதைத்திட ஆக்கிரமத்துடனே வாரான் கொக்கரித்துக் கொண்டெதிரே (கடை) சண்டனெனைக்கண்டு கொண்டுபோவேனென்று சமர்த்தாய்ப்பேசுகிறான் — அந்த சண்டனை உதைத்து தொண்டனையாளும் சாமியமிர்தலிங்கா சஞ்சலமாகுது சங்கராசம்போ மிஞ்சிவராமுன்னம் தஞ்சமெனைக்காரும் (கடை) மார்க்கண்டேயர்—பூசை. தரு—இ—ம்—சோகவராளி—ஆதிதாளம். கண்ணிகள். காலனிதோவாரானே கடைக்கண்பார் கடையூரானே ஆலகாலம்போற்சீறி அதட்டிக்கிடாவிலேறி சூலங்கையினில் கொண்டு துரத்திவாரானேயின்று பாலனெனையேகிட்டிப் பருத்தகண்ணைமிரட்டி. தரு—இ—ம்—கரகப்பியா—அடதாளம். கண்ணிகள். இந்தயெமனென்னுயிரை கொள்வனென்கிறானே ஈசாகடையூர்வாழ் செகதீசா நானென் செய்வேன் அந்தகன்வாரானிதோ சுவாமியுந்தன் கண்ணால்பாராயோ ஐயாமழுகையா யெனதையா எனையாளும் பார்க்கப்பயமாகுதே எமன்தோற்கும்படி எனக்கு பாருங்கலி தீரும் வினை தீரும் என்னைக்கண்பாரும் கார்க்கக்கடனுனக்கே கடையூரிலமுர்தலிங்கா காலனிதோசூலமுடன் ஆலகாலம் போல்வாரான். இது—கட்டியக்காரன்சொல்—விருத்தம். எமனைக்கண்டபால னிப்படிவருந்தும்போது காலனை யெரித்தயெங்கள் கடவுளுமவனைப்பார்த்து எமனையுதைத்தேயுன்னை யின்பமாய்வைப்பேன் பூசை நேசமாய்ச் செய்வாஎன்ன நிமிஷத்திற்செய்குவேனே. பூசை—தரு—திபதை—நீலாம்புரி—அடதாளம். காலன்வாராமலென்னைக் காப்பாற்றுவாயென்றே கந்தமலரெடுத்துச் சூடுவேன் — சுவாமி மூலகரணமான முதலேகடையூரீசா முல்லைமலரெடுத்துச் சூடுவேன் — ௧ கன்றிவருங்காலனைக் காலாலுதைத்தேயென்னை காப்பாயெனவேமலர் சூடுவேன் — சுவாமி என்றுபதினாறாக ஈவாய் கடையூர்வாழும் ஈசாமலரெடுத்துச் சூடுவேன் — ௨ பாலன்றனக்குமுடிவளைத்த பொருளேயுன்னை பக்ஷமுடன் மலரால் சூடுவேன் — சுவாமி வேலன்றனையளித்த விமலாகடையூரீசா வெட்சிமலரெடுத்துச் சூடுவேன் — ௩ பார்வதியைப்பாகத்தில் வைத்தப்பரனேயுன்னை பாரிசாதமலரால் சூடுவேன் — சுவாமி சீர்கழுங்கடையூர் வாழும்முதலேயுன்னை செண்பகமலரெடுத்துச் சூடுவேன் — ௪ கமலாலயன்மால் போற்றுங் கருணைக்கடலேயுன்னை கதம்பமலரெடுத்துச் சூடுவேன் — சுவாமி விமலாகடையூர்வாழும் வேதப்பொருளேயுன்னை விதவிதமாய்மலரால் சூடுவேன் — ௫ இ-ம்—பண்—சாதாரி. தலையே நீவணங்காய் தலைமாலை தலைக்கணிந்து தலையாலேபலிதேருந் தலைவனைத்தலையே நீவணங்காய், கண்காள் காண்மின்களோ கடனஞ்சுண்ட கண்டன்றன் யெண்டோள்வீசி நின்றாடும்பிரான்றனைக் கண்காள் காண்மின்களோ, செவிகாள் கேண்மின்களோ—சிவ—னெம்மிறை செம்பவள—வெரிபோன்மேனிப் பிரான்றிறமெப்போதும் செவிகாள்கேண்மின்களோ, மூக்கேநீ முரலாய்—முதுகாடுறைமுக்கணனை, வாக்கேநோக்கிய மங்கைமணாளனை மூக்கேமுறலாய் வாயேவாழ்த்துகண்டாய் மத—யானையுரிபோர்த்துப் பேய்வாழ் காட்டகத்தாடும்ப பிரான்றன்னை வாயேவாழ்த்து கண்டாய், நெஞ்சேநீநினையாய்—நீயுன்புன்சடை நின்மலனை, மஞ்சாடுமலைமங்கைமணாளனை நெஞ்சேநீநினையாய், கைகாள்கூப்பித் தொழீர்காடி—மாமலர்தூவிடுநின்றி—பைவாய்ப்பரம்பரங்காரத்த பரமனை கைகாள்கூப்பித்தொழீர் ஆக்கையாற்பயனென்—அரன்—கோயில்வலம்வந்து—பூக்கை யாலட்டிப்போற்றி யென்னாவிதவாக்கையாற் பயனென், கால்களால் பயனென் கறைக்கண்டநுறைகோயில் கோலக்கோபுரக் கோகரணஞ் சூழக்கால்களாற் பயனென், உற்றாராருளரோ உயிர்கொண்டுபோம்பொழுது—குற்றாலத்துரை கூத்தனல்லாமனக் குற்றராருளரோ, இறுமாந்திருப்பன் கொலோ ஈசன்பலகணத்தெண்ணப்பட்டு, சிறுமானேந்தி தன்சேவடிகீழ்ச்சென்றங்கிறுமாந் திருப்பன்கொலோ தேடிக்கண்டுக்கொண்டேன். திருமாலொடு நான்முகனும் தேடித்தேடொணாத்தேவனை யென்னுள்ளே தேடிக்கண்டுகொண்டேன். மார்க்கண்டேயர் எமனுக்குச்சொல்—தரு. இ—ம்—கமாஸ்—ஆதிதாளம், பல்லவி. ஆரென்றுநினைத்தாயடா எமா—யெங்களமுர் தகண்டீசரான ஆண்டவரருகிருக்க — ஆரெ அநுபல்லவி. காரணங்கடந்தபரி பூரணமதாய்நிறைந்த ஆரணமந்தப்பொருளைச் சாறுமடியார்களிடம் கோரரூபமாகவந்து சீரும்புலிபோல்நின்று வீரியமாய்வார்த்தை சொன்ன சூரியன் மகனே போடா சரணங்கள். அண்டபுவனங்களெல்லாம் கண்டிடும்பேர்களொடுங்க, வண்டனைப்போல் வார்த்தைபேசி சந்தாநீ வந்தாய் உன்னை, கண்டஞ்சுவனோ போடாநீ தண்டுமுண்டுமாய்ப் பேசாதே, பண்டுமுப்புரமெரித்தாற் தொண்ட னென்றறியாமலே. சாமிசொல் — விருத்தம். பாலனேபயப்படாதே பகர்ந்தநல்வய தீரெட்டும் ஞாலத்தோரறியத்தந்தோம் நாளென்றும்பதினாறாக காலனுக்கஞ்சவேண்டாங் காகுத்தனயன் கொண்டாட சீலமாங்கைலை தந்தோம் திருப்பதம்பூசிப்பாயே. முற்றிற்று.
Contents | Home