குள்ளத்தாராசிந்து contents.html about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் சிவமயம். குள்ளத்தாராசிந்து சென்னை — சூளை நிரஞ்சனவிலாச அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

விநாயகர் வணக்கம். விருத்தம். சிந்துசூழுலகிலுள்ளோர் திரௌபலங்கொள்ளவேண்டி விந்தைசேர்மனதுக்கோதும் வியன்மதி மாலைதன்னை கந்தமார்சிந்தாய்கூறக் கரிமுக னுபயபொற்பூங் கொந்தலர்க்கழலைகளுங் கூப்பியேபுணிகுவாமால். தூன்முகம் சிந்து கண்ணிகள் சித்திவிநாயகனை ஏ குள்ளத்தாரா நீ சிந்தைதனிலேவகிப்பாய் ஏ குள்ளத்தார நீ ஏகுலிக்கி தில்லாலே நீ முன்னாலே நான்பின்னாலே சிந்தை தனிலேவகிப்பாய் ஏ குள்ளத்தாரா — ௧ பாடலீசன் பொற்பதத்தை ஏ குள்ளத்தாரா நீ பக்தியுடன் போற்றிசெய்வாய் ஏ குள்ளத்தாரா — ௨ பேர்பெரியநாயகியை ஏ குள்ளத்தாரா நீ வெற்றியுடன்போற்றிசெய்வாய் ஏ குள்ளத்தாரா — ௩ வேலவனைப்போற்றிடுவாய் குள்ளத்தாரா நீ வினைகளகன்றிடுவாய் குள்ளத்தாரா — ௪ வள்ளிதெய்வானைபதங் குள்ளத்தாரா நீ வண்மையுடன்போற்றிசெய்வாய் குள்ளத்தாரா — ௫ ஆதிமூலப்பொருளை குள்ளத்தாரா நீ யன்புடனேபோற்றிசெய்வாய் குள்ளத்தாரா — ௬ செந்திருவின் பொற்பதத்தைக் குள்ளத்தாரா நீ சிந்தையிலிருத்திடுவாய் குள்ளத்தாரா — ௭ தாயார்சரஸ்வதியை குள்ளத்தாரா நீ சந்ததமும்போற்றிசெய்வாய் குள்ளத்தாரா — ௮ ஆருயிர்க்குருதுணையாங் குள்ளத்தாரா என் தன்பின்வழியேநடங்கிற் குள்ளத்தாரா — ௯ சந்த்ரகாந்தமேடையுண்டு குள்ளத்தாரா வதைச் சாரவும்பொன்னேணியுண்டு குள்ளத்தாரா — ௰ பன்னிருகால்வாசியுண்டு குள்ளத்தாரா வத்தப் பற்றப்பரிசுத்தனுண்டு குள்ளத்தாரா — ௧௧ சோமவட்டமாம்பதியிற் குள்ளத்தாரா நீ சுகித்தமுர்தமுண்டிருப்பாய் குள்ளத்தாரா — ௧௨ ஏமனுமடறுவானோ குள்ளத்தாரா நீ என்வழிநடப்பையாகில் குள்ளத்தாரர — ௧௩ இந்திரப்பட்டமும்பெறுவாய் குள்ளத்தாராசொல் இருவினையகன்றீடுவாய் குள்ளத்தாரா — ௧௪ கட்டிலுண்டுமெத்தையுண்டு குள்ளத்தாரா நாம் கலந்துசுகிக்கலாமே குள்ளத்தாரா — ௧௫ தலையிலணிந்துகொள்ளக் குள்ளத்தாரா ரத்ன சடைபில்லைதானுமுண்டு குள்ளத்தார — ௧௬ சடைநாகந்தானுமுண்டு குள்ளத்தார வதைச் சார்ந்தகுச்சுகுப்பியுண்டு குள்ளத்தாரா — ௧௭ காதிலணிந்துகொள்ளக் குள்ளத்தாரா நல்ல கம்மல்சிமிக்கியுண்டு குள்ளத்தாரா — ௧௮ கொப்புமுருகுமுண்டு குள்ளத்தாரா நற் கொந்தளப்பொன்னோலையுண்டு குள்ளத்தாரா — ௧௯ கத்திரிப்பாவலுடனே குள்ளத்தாரா நல்ல கனத்தசம்புலுமுண்டு குள்ளத்தார — ௨௦ நத்தூமூக்குத்தியுண்டு குள்ளத்தாரா நீ நாணயமாய்பூட்டிக்கொள்ளக் குள்ளத்தார — ௨௧ கழுத்திலணிந்துகொள்ளக் குள்ளத்தாரா உயர் கண்டசரமாலையுண்டு குள்ளத்தாரா — ௨௨ கைக்குத்தங்கக்காப்புமுண்டு குள்ளத்தாரா கனத்தகொலுசுமுண்டு குள்ளத்தாரா — ௨௩ இடையிலணிந்துகொள்ளக் குள்ளத்தாரா இசைந்ஒட்டியாணமுண்டு குள்ளத்தாரா — ௨௪ பாதசாந்தண்டையுண்டு குள்ளத்தாராக நீ பண்புடனணிந்துகொள்ளக் குள்ளத்தாரா — ௨௫ விரலிற்றரித்திடவுங் குள்ளத்தாரா வெகு விந்தைமோதிரங்களுண்டு குள்ளத்தரரா — ௨௬ இழையாயிரம்பொன்பெற்ற குள்ளத்தாரா உனக்கு சித்திரவண்ணச்சேலையுண்டு குள்ளத்தாரா — ௨௭ சரிகைரவிக்கையுண்டு குள்ளத்தாரா திகழ் தங்கவங்கிபில்லையுண்டு குள்ளத்தாரா — ௨௮ பத்துலட்சம்விலையுள்ள குள்ளத்தாரா உயர் பங்களாக்கள் தானுமுண்டு குள்ளத்தாரா — ௨௯ தங்கத்தாலேகிண்ணியுண்டு குள்ளத்தாரா நீ சாதமருந்திடவே குள்ளத்தாரா — ௩௦ வெள்ளிப்பாத்திரங்களுண்டு குள்ளத்தாரா நீ வேணதையனுபவிப்பாய் குளளத்தாரா — ௩௧ கைப்பிடிக்கக்கால்பிடிக்கக் குள்ளத்தாரா சொலுங் கனத்ததோழிகளுண்டு குள்ளத்தாரா — ௩௨ ஏரிச்சவாரிசெய்யக் குள்ளத்தாரர் உனக் கிசைந்தபல்லாக்குமுண்டு குள்ளத்தாரா — ௩௩ தந்தநாற்காலியுண்டு குள்ளத்தாரா நீ சார்[ய்]ந்துகொண்டிருப்பதற்கு குள்ளத்தார — ௩௪ சோபாக்கள்தானுமுண்டு குள்ளத்தாரா என் சுந்தரியேநீயிருக்கக் குள்ளத்தாரா — ௩௫ பொன்னுஞ்சற்பலகையுண்டு குள்ளத்தாரா என் பொற்கொடியேயாடுதற்கு குள்ளத்தாரா — ௩௬ நன்னயமாய்பேசுதற்கு குள்ளத்தாரா நல்ல நாத்திமானேகருண்டு குள்ளத்தாரா — ௩௭ மாமியுண்டுமாமனுண்டு குள்ளத்தாரா மைத்துனானேகருண்டு குள்ளத்தாரா — ௩௮ சந்துமுண்டுபொந்துமுண்டு குள்ளத்தாரா ஜாடைசெய்துகூப்பிடவுங் குள்ளத்தாரா — ௩௯ தென்னமரச்சோலையுண்டு குள்ளத்தாரா நீ சிந்தைகளித்தாடவடி குள்ளத்தாரர் — ௪௦ பாக்குமரச்சாலையுண்டு குள்ளத்தாரார நீ பந்துவிளையாடவாடி குள்ளக்தார — ௪௧ கற்பகத்தருவுமுண்டு குள்ளத்தாரா நீ கருதியதெல்லாந்தரக் குள்ளத்தாரா — ௪௨ கெடிலந்தியுமுண்டு குள்ளத்தாரா வதின் கிளர்காலுமுண்டு குள்ளத்தாரா ­— ௪௩ உன்னை நம்பிநானிருக்தால் குள்ளத்தாரா இந்த உலகம் பொருக்கலையே குள்ளத்தாரா — ௪௪ அந்தமுள்ளமாதரசே குள்ளத்தாரா யன்புடனருகில்வாராய் குள்ளத்தாரா — ௪௫ கிளனைநேர்மொழியினாளே குள்ளத்தாரா நீ கிருபைசெய்துவாறாயோடி குள்ளத்தாரா — ௪௬ மயில்போலுஞ்சாயலாளே குள்ளத்தாரா என் மனமுருகாதோடி குள்ளத்தாரா — ௪௭ அன்னநடைமாதேயடி குள்ளத்தாரா உன் நகமுமிரங்காதோ குள்ளத்தாரா — ௪௮ அடைக்காயும்வெற்றிலையுந் குள்ளத்தாரா வெனக் கருந்தவரியாயோடி குள்ளத்தாரா — ௪௯ வாசனைதிரவியங்கள் குள்ளத்தாரா நீ வகைவகையாய்ப்பூசிக்கொள்வாய் குள்ளத்தாரா — ௫௦ சண்பகமலர்நிதமும் குள்ளத்தாரா நீ சம்பிரமாய்மூடித்துக்கொள்வாய் குள்ளத்தாரர் — ௫௧ பாடலீசன்பொற்பதத்தைக் குள்ளத்தாரா நீ பத்தியுடன்சேவைசெய்வாய் குள்ளத்தாரா — ௫௨ பாலும்நீறும்போலவடி குள்ளத்தாரா நாம்பண்புடனேவாழ்ந்திருப்போம் குள்ளத்தாரா — ௫௩ மங்களமாய்வாழ்ந்திருப்பாய் குள்ளத்தாரா இந்த வையகமுள்ளவுமடி குள்ளத்தாரா — ௫௪ குள்ளத்தாராசிந்து முற்றிற்று
Contents | Home