ஸ்ரீகிருஷ்ணலாலி
contents.html
about_the_book.html
preface.html
ஏற்றப்பாட்டுகள்
௳
ஸ்ரீமத் வரவரமுநியே நமா:
சென்னை இந்துபிரிசிங்கொசைட்டி
கோவிந்தராஜு முதலியாரா லியற்றிய
ஸ்ரீகிருஷ்ணலாலி
காப்பு.
வஞ்சித்துறை
திருசடகோபனங்
குருபாரம்வாழ்த்தியே
மருகிருஷ்ணலாலித்
தெருளுடனோதுவாம்
ஸ்ரீகிருஷ்ணலாலி கேதாரம்
சிங்காரப் பண்கள்வாரீர் ஸ்ரீகிருஷ்ண
சீர்மைமலிலாலிகூற
மங்களகரங்கள்வருமே — மாமவன்
மதுமுற்றிலகுமலாலி — ௧
பச்சையுலகம்பமீது — கடைந்திட்ட
பவளபொதிகைபொருத்தி
இச்சையுடன்வச்சிரத்தா — செதுக்கிய
யேமதூண்களுமமர்த்தி — ௨
சுயரூபமெனைக்காட்டினார் — மண்டபஞ்
சுந்தரப்பொன்னினாலே
நயனஞ்செறிமணிக்கோவையு — முத்தார
நன்னயவி தானமீதே — ௩
நவமணித்தொட்டிலுக்கே — உயர்தங்க
நாணயக்கொலுசு மாட்டி
புவனத்தாதிசயிக்க — விச்சித்ர
பூமாலையை சூட்டினார் — ௪
தேவசமுகங்கள் கண்டு — இக்நகர்
தேவேந்திரன்புரமிதென்ன
ஆவலுடனாரதாச — யிசைபாட
அமரருடனங்குவந்தார — ௫
சங்கீதஞ்சகிகள்பாட — கிருஷ்ணர்க்கு
சம்பங்கிதைலமிட்டே
மங்களஸ்நானமகிழ ஆட்டினார்
மங்கையர்களழகுபெறனே — ௬
சொகுசுடகிருஷ்ணருக்கு — மானினிக
டூயபொன்னாடைகட்டி
அகணிதமிகுக்தமணிகள் — ஸ்தாபித்து
ஆரமபூட்டலானார் — ௭
புலிநகக்கொலுசுகளையே — கிருஷ்ணருக்கு
பூட்டியோரிவைமார்கள்
நலிவிலாபாஜி பந்தை — புஜமதனி
நலமுடன்காட்டினார்கள் — ௮
தகதகெனுக்குண்டலத்தை — காதினில்
தரித்துதாமோதரா[ர்]க்கே
நிகநிகெனுமரைஞானுடன் சதங்கையு
நேருடன்கட்டலானார் — ௯
அங்குலியமாதரணையாய் — விரவதனி
லமையவேவரிசையாகச்
சிங்காரமாகசெய்தார் — ஸ்ரீகிருஷ்ணனை
சிலைநுதற்பாவைமாதர்கள் — ௰
பீதங்ககொலுசுகள் கைகட்குப்
பேரொலிசெய்த்தரித்து
பாதநளினங்களில் ரத்தினப்
பாடசத்தண்டைகொலுசும் — ௧௧
குருவுள்ளபணிகள் பூ[ட்]டி — சிரசிற்கு
குப்பிசடைபிள்ளைமாட்டி
இராகமல்லிகைமுல்லையுஞ் — சம்பங்கி
இருவாட்சிபாரிஜாதம் — ௧௨
குருவேறுதவனமருவு — மாரமுட
குழலதனிற்சூட்டிமிகவே
அரிச்சந்தனதிப்புனுகு — ஜவ்வாது
ஆமோதகற்பூரமும் — ௧௩
உறமாகஸ்தூரியுங் — கலந்துமே
ஒப்புடன்கூட்டிபெண்கள்
அரியுரகந்தன்னிலுங் — கண்டத்தி
லமரிக்கையாய்பூசினார் — ௧௪
முத்துகிருஷ்ணனவனுக்கேநெற்றியின்
மோக்கஸ்தூரிதிலர்தம்
சித்தினிகள வெத்துயாலஞ் — சேர்ப்பித்து
திருஷ்டிகழிபொட்டுவைத்தார் — ௧௫
பேரிமத்தளகங்கமுந் — தாளமொடு
பேரெலுயெக்காளபடகம்
வாரிபோற்குமுறசெய்தே — நாகசுர
வாத்தியமுடிக்கினார்கள் — ௧௬
ரம்பையூர்வசிமேன்கைதிலோத்தமை
ரமணீயநடனமாட
தும்புருவுநாரதர்களே யாழிலெழு
சி[சொ]ரசுதிகளோடுபாட — ௧௭
பந்துஜனமொருலட்சமும் — வேதாந்த
பார்ப்பார்களோருலட்சமுஞ்
சுந்தரிக்கொருலக்ஷமும — பிராமண
சுமங்கலிலொருலக்ஷமும் — ௧௮
அந்தமாசபையைநோக்கி பூமழைக
ளமரமாதவர்கள் பொழிய
வந்தியக்கவியல்பகழ் — கிருஷ்ணரிட
வைபவம்பாருமீர்காள் — ௧௯
நவமோகனாங்கனுக்கே — கோபிகைகள்
நாகரீகஞ்செய்து
புவனிதனிலேயுள்ளவர்துதிசெய்யும்
புருஷோத்தமனைவேண்டினார் — ௨௦
பவரோகவயிததியனம்மா — இக்கிருஷ்ணன்
பக்துரைக்கார்ப்பானம்மா
கமலநாபனைதொட்டிலில் வைத்தனர்
ச[க]ஞ்சைமுகவனிதைமார்கள் — ௨௧
வாலிமங்களமினசத்தார் கோபிகா
லாவண்ணிய பெண்கள்கூடி
பாலன்றொட்டினிலிருக்க பத்தியுடன்
பலவிதங்கூறினாரே — ௨௨
வாலிவைகுந்தவாசரி — ஸ்ரீஹரி
மாக்ஷுமிமனோவுல்லாசா
வாலிபன்னகசயனே நந்தசுத
வாலிஸ்ரீபரம்புருஷ — ௨௩
வாலிமச்சரவதாரா — ஸ்ரீகிருஷ்ண
வாலிகூர்மவதாரா
வாலிவராஹவதாரா — பவதுரித
வாலிசிம்ஹாவதாரா — ௨௪
வாலிகுறளாவதார — கோவிந்த
வாலிபரசுராமனே
வரலிராமாவதாரா — பலாரம
வாலிகிருஷ்ணாவதாரா — ௨௫
வாலிகிருஷ்ணாவதாரா — ருஷிகேச
வாலிகற்கியாவதாரா
வாலிசகவிரூபனே — மரபவனி
ரட்சிததசதவகுணன — ௨௬
தேவகிவசதேவரின் — புத்திரா
திவ்யமங்களமூர்ததியே
தேவாதிதேவர்செய்யுத துதிபெற்ற
தேவனேதிக்குநீயே — ௨௭
காவலாகருணாநி — ஸ்ரீகிருஷ்ண
கலியாணகுணஸ்ரீபதி
பாவமறவருள்செய்யுவா — முரஹரி
பவபத்ரவநுவரசே — ௨௮
நந்தகோபன்யசோதையின் — புத்ரனாய்
நல்லிருளிலேயடைந்தே
சந்ததம்பசுநிரைகளைபாலித்து
தயிர்தளவிலுண்டபெரியோய் — ௨௯
நந்தகோபன்மலையிலே — திருமாது
நடனங்களபுரியகண்டு
இந்துமுக[ய]சோதைதன்யபாலனை
யீந்திடம்மகிழ்ந்தமலதாய் — ௩௦
என்னநோன்புநூற்றளோ — பூர்வத்தி
லியாதுதபஞ்செய்தாளோ
என்ன புண்ணியஞ்செய்தாளோ — அ[ய]சோதைதா
னென்னதர்மஞ்செய்தாளோ — ௩௧
சமயசு[சொ]ரூபனுடைய — நிதிகட்கு
சரியாதபுகழ்வதம்மா
சோமரவிபிரமனரனுந் தேவர்களுந்
துதிசெய்யலேவிறந்தான் — ௩௨
வேதவேதியருக்கெல்லாம் — கோதானம்
வேணலட்சங்கொடுத்தே
வாதனங்கனகரஜீத — வஸ்திரம்
வரையாதுதான்கொடுத்தார் — ௩௩
கந்தபுஷ்பாதிகளையே அனைவதற்குங்
கனமாகவேபக்கிர்ந்து
நந்தநந்தனைக்கண்டு — அசோதைதா[னும்]
நந்தனுமுளங்களித்தார் — ௩௪
க்ஷீராப்திசயனனாக கிருஷ்ணனிட
சீலச்சரித்ரமதையே
கோறிடய கூறினோருங்கேட்போருங்
குவைவினிதிபெற்றுவாழ்வார் — ௩௫
தாயுதா திசையேகுமே — சுபுத்ர
தனதானியம் பெருகுமே — சொல்லடி
ஈறிலாச்சக்திவருமே — சொல்லிடி
லிகபாசௌக்கியந்தருமே — ௩௬
கோயமரநகரில்வளமும் — புஜபல
கோத்திறந்தனிற்பிறந்த
பாயஞ்சின்னரெளது — ஆந்திரப்
பாஷையிற்பாடியதையே — ௩௭
ஸ்ரீவிசிஷ்டாத்துவைத — சித்தாந்த
சென்னை பிரபோதசங்கம்
நேயமாபதிலொருவனாம் — வைனவரி
னிமளதாட்டூளியணியும் — ௩௮
சமச்சிவாயன்தமிழால்பாடுங்
கோபாலலாலிதன்னை
பூவிலுளளோர்களன்பாய் — சொல்லிடில்
புகழ்பெற்றுவாழ்வர்மாதோ — ௩௯
லாலிலாலையலாலி — ஸ்ரீகிருஷ்ண
லாலிலாலையலாலி
பாலசகிமார்கள்லாலி — கோவிந்த
பாதயுகமங்கள — லாலி
ஸ்ரீகிருஷ்ருஷணலாலி முற்றிற்