கொசுப்பதம்
contents.html
about_the_book.html
preface.html
ஏற்றப்பாட்டுகள்
௳
கடவுள் துணை
கொசுப்பதம்
சென்னை சூளை
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது
1923
பல்லவி
துள்ளத்துள்ளத் துள்ளக்கடியாதே சொன்னேன்
சொட்டத்தலைக்கொசுவே
அநுபல்லவி
கள்ளப்பயலுக்குப் பிறந்தகொசுவே
காதுக்குள்ளேவந்து நயகயவென்கிறாய்
கொள்ளிக்கட்டைக்கொண்டு சுட்டுப்பொசிக்கிறேன்
கும்பிடுபோட்டுக்கொன டோடிப்பிழைத்துப்போ
சரணங்கள்
ஆட்டுத்தோழங்களு மாட்டுத்தோழங்களநே கமுண்டங்கே
நீவோடுநல்ல ஆக்கமில்லா மனைதோறும்
பெருஞ்சல தாரைக்குள்ளேயுங்கள்நாடு
ஓட்டைப்பழயமாடம் பாழுங்கிணறுகள் உங்கள்மனையரைவீடுநல்ல
ஆற்றங்கரைகளும் ஊற்றங்கரைகளு
முண்டங்கேபோய்விளையாடு
வாட்டமில்லாமல் சுகசரீரமுள்ள மன்னருடம்பெல்லாலாஞ்
சொன்னீரொழுகவே கூட்டங்கூட்டங்கூடிகடிக்கிறீருங்கள்
கொட்டென்றபுத்தியை விட்டு விடச்சொன்னேன். — துள்
திங்கள்செவ்வாய் புதன்வந்து கடித்தாலுஞ் சிரசுகாக்கினைவருமே
நமமைந்தேடி குருவென்னும் வியாழத்திற்கடிததால்
சீயென்றால் போலாயுன்பெருமை
சங்கையுடன்வெள்ளி சனியாற்கடித்தால் தப்பிப்பிழைப்பதுஅறுமை
நம்மைத்தானாதிவாரத்தில்வந்து கடித்தாலுன்
சடலம்பிழைப்பதுஞ் சிறுமைநீ
அங்கஞ்சிறுத்துக் குரும்பியெடுத்து ஆருக்குமாகாத
லோபிக்கொசுவே கங்கணங்கட்டிக்கடிக்கிறாய்
நீயென்னைக்கையாற்பிசைந்து கசக்கியெறிகுவேனே — துள்
உத்தரவில்லாமல் சென்னைபுரிதனி லூருக்குள்ளேவரலாமோ
உங்கள்ஒளிவு தெரியாமற்பட்டம்பகல்மட்டும்
ஒளித்திருக்கவுமாமோ
அத்திரவாளவிழியார்க்கு மெமக்குமெல்லமளி பொறுக்கவும்போமே
இழிவானயிசையுங் குணமுமெப்போதும்
ஏற்றுக்கொண்டரின்பமாமோ
சித்தங்களித்திடச்சொல்லும் முனிசாமிசெய்யும்பதந்தனை
மெய்யாகவேகேட்டு நத்திவந்தகொசு அத்தனையும்போக
நாளையிந்தவழிவாராம லோடிப்போ. — துள்
கொசுப்பதம் முற்றிற்று,