கபாலீசர் பதிகம் contents.xml about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் கடவுள் துணை மைலாப்பூர் கபாலீசர் பதிகம். சென்னை சூளை நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

காப்பு — வெண்பா. மண்டலத்தோர்சூழ மயிலைவாழ்கபாலீசர் தண்டமிழ்ப்பாமாலைதனைச் சாற்றவே — அண்டம்பூ தாடுணைவனோடுசரந் தாங்கிமகிழ்கூர்ந்திடுகூத் தாடுமிளங்களிரே யாள். சொல்லரிய சதுர்மறையின் முடிவிலின திணையடிக டுகிபுரியுமடியரினமா, நல்வர்களுளமதனி னடனமிடு தெய்வமே நாதனே நாயடியனே, னல்லல்கள றக்கரு ணைபுரிகின்ற நாளெந்த நாளோ வருந்திலேன்சீர், மல்லல்வன மோங்குதிரு மயிலையம் பதியினி[த] மருவுறுகபாலீசனே. — ௧ கூவிளநறுங்கொன்றை மாலைபுனைசங்கரா குவலய மெலாந்தருமுமா, தேவியொரு புடைமேவு தேவனே சிறியனின் றிருவடி தொழாத பொல்லாப், பாவியெ னினுங்கடைக் கண்பார்த் திரட்சைசெய் பரமுனக்கே பங்கய, வாவிசூழ்ந் திலகுதிரு மயிலையம் பதியினி[க] மருவுறுகபாலீசனே. — ௨ கஞ்சனெடுகண்ணனுங் காணவரிதாயமுக்கண்ணனே கடலில்வந்த, நஞ்சணிகளாசருதி நாயகா நாயினே னானிலந்தன்னிதமுஞ், சஞ்சலப்படுதனின் றண்ணருட்கழகோ சதானந்தனே சம்புவே, மஞ்சளவுசோலைசூழ் திருமயிலையம்பதியின் மருவுறுகபாலீசனே. — ௩ மின்னுசெஞ்சடை தன்னி லரவமோடறுகுமதிவே ணியுமணிந்தவிமலா, என்னுடையமனவிரு ளகற்றிநின்னதுதா ளிணைக்கன்பனாக்கியருள, இன்னுமெத்தனை நாட்கள் செல்லுமோ வறிகிலே னென்செய்வ னெந்த நாளு, மன்னுதிருமயிலையம் பதியிலுறை யடியார்க[க்] மருவுறுகபாலீசனே — ௪ ஐயனேயெனக்கருள்செ யப்பனேயென்றுநின தினையடிக டொழுபவர்வினை, நையவேயருள் செய்யுநாக பூஷணனேவி ணாடர்கடுதிக்கு மழுமான், கையனே கடையனேன் கவலைதீர்த்தாள்வ தெக்காலமோ வறிகி லேன்யான், வையமேத்தித் துதிசெய் திருமயிலையம்பதியிள்[ல்,ன்] மருவுறுகபாலீசனே. — ௫ பானன்மொழியாளுமையோர் பாகனே பரமனே பகவனே பாபஅரனே, ஞானசொரூபாவடியர் நாடுபுனி தாசெய்ய நளிம்பாதாதற்பரா, யீனனெனை யாளவுன் னுளமிரங்காவண்ணமே தெனக்குளவு புகலாய், வானமளாவியமாடமல்கு திருமயிலையம்பதியின்[ல்] மருவுறுகபாலீசனே. — ௬ பொங்குகடல் சூழுமிப் புடவிதனிலுழலுமென் புந்தியை மயக்கிடுமலக், கம்[ங்]குலறநின்கருணை யெனுஞான வொளிதா[ந்]து காத்திடா விடிலடியனே, னெங்குசென் றார்க்குரைப் பேனெனுட்குறையெலா மினியேனு நீக்கி யருள்வாய், மங்குறவாழ்புன்னை வளர் திருமயிலையம்பதியின்[ல்] மருவுறுகபாலீசனே. — ௭ கறைமிடற்றண்ணலே கரைதிரையிலாதவுயர் கருணையங்கடலேபசுஞ், சிறையுடைக்கலபவுரு வாயம்மை பூசித்த செல்வமேசிறியனேனுட், குறைகளைந் தாளற்கு னுளமினுமிரங்காக[க்] கொள்கையேதோ வறிகிலேன், மறையவாசசெயமகநீடு திருமயிலையம்பதியின்[ல்] மருவுறுகபரலீசனே. — ௮ காரிகையர் காமவா ரிதிபடிந்தேறவொரு கரையறி கிலாதுழலுமிப், பூரியனினடியர்பணி விடைபுரியவருள் செய்பரி பூரணாகமழ்கடுக்கைத், தாரிலகுமணிமார்பனே சுந்தரசேகரசதா சிவபராமாதமும், மாரிபொழி திருமயிலையம்பதியினடியார்க[க்] மருவுறுகபாலீசனே. — ௯ அளவரியவொருபரம் பொருளாகி நின்றிலகு மப்பனே வொப்பிலாயென், னுளமதனிலுறுதுயர்க ளுரைசெய வென்வசமலநி னுளமறியு மருள்புரிவையே, கோ மளவுமையோடொரு விடையிலடியர்துய ரகலவரும் வள்ளலேதெள்ளமுதமே, வளமைமிகு திருமயிலையம்பதியிலடியர்க[க்] மருவுறுகபாலீசனே. ­— ௰ திருமயிலைக் கபாலீசர்பதிகம் முற்றிற்று.
Contents | Home