கற்பகவல்லியம்மை பதிகம் contents.xml about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் சிவமயம் திருமயிலைக் கற்பகவல்லியம்மை பதிகம். சென்னை சூளை நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

காப்பு — வெண்பா. காரூர்பொழில்மயிலைக் கற்பகவல்லிக்கன்பார்ச் சீரூர்பதிகம்யான் செப்பவருள் — நீரூரும் கூத்தரடையாயளந்த கோபாலனார்மருகா கூத்தரடையானைமுகா கூர்ந்து. நூல். மேகநிகரானகுழ லழகும்விற்கணையினுதல் விழியினழகும் பசியசெம், பூகமொப்பாகும் கழுத்தழகுமப்புயப் போதனையினடியினழகும், சோகமிக்கிழிஞர்சூழு விழைகடையனேனுளத் துயரறக்காண்ப தென்றோ, மாகாளவியசோலை மயிலைகபாலீசர்பான் மருவுகற்பகவல்லியே. — ௧ பூசனை செயடியர்வினை பொடிபடுத்திடுமன்ன பூரணிபுராந்தகியுனை, நேசமுடனேதுதித் துனதுநாமங்களென் னெஞ்சிற்பதித்தவுலகப், பாசமதறக்கருணை கூர்சவுந்தரிபரா சத்திபார்வதி பகவதி, வாசவனோடமர்துதி மயிலைக்கபாலீசர்பான் மருவுகற்பகவல்லியே. — ௨ பூதரவிலேந்துபரி பூரணிதயாபரி புராதனிபவானி பொல்லா, வேதமுடையேநினது பாதமலரேத்தவர் மீது கிருபையிலாவிடிலெனந், காதரவதேதுபுக லந்தரி திரியம்பகி யகோரிபைரவிவராகி, மாதர்கண்டிக்கு மயிலைக்கபாலீசர்பான் மருவுகற்பகவல்லியே. — ௩ அண்டரண்டங்களுக் கோரன்னையேயென்றநாவி யேயாரமுதமே, தண்டமிழ்சொன்மாலை சாத்துவோர் க்கருளுந் தயாபரி புராண கௌரி, விண்டையன்றொழு நளின சரணிசர்ப்பாபரணி விமலையென்வினைக ளைகுவாய், மண்டலந்துதிசெய் மயிலைக்கபாலீசர்பான் மருவுகற்பகவல்லியே. — ௪ பழுதினற்பத்தர்தம துதையமாகுஞ்செய்ய பதுமவாசனிபூதல, முழுதுமுன்மிருநாழி நெற்கொண்டிர ட்சிக்க முக்கணி திரிசூலியினியெப், பொழுதினருள் கூர்ந்தெனது புன்கணறமாற்றுவாய் புங்கவீபுவனேஸ்வரீ, மழுவலனிலங்கு மயிலைக்கபாலீசர்பான் மருவுகற்பகவல்லியே. — ௫ வீரியபிராமிசிவ காமிகருணாகரி விணாடர்கடுதிக்கு மிகுசிங், காரிவிஸ்வேஸ்வரி சுபாகரி குணாகடாக்ஷ வீக்ஷணி புனிதையோங், காரியுபகாரி ஒய்யாரிவரையனருள் கௌமாரியடியேனையாள், வாரியுடைநிலவு மயிலைக்கபாலீசர்பான் மருவுகற்பகவல்லியே. — ௬ சங்கரிசதானந்தி சுந்தரிசர்வேஸ்வரீ சகஸ்த்ராபி தானிவாமி, சிங்கவாகனநீலி யந்தரீதுரந்தரீ திரோப தைதிரிபுரசுந்தரி, திங்களணி செஞ்சடில தேவிபகவதி சச்சி தானந்தியகிலஜனனீ, மங்களா கரியருள்செய் மயிலைக்கபாலீசர்பான் மருவுகற்பகவல்லியே. — ௭ பாம்பரிசனார்த்தனர் சகோதரிசுகாரம்ப பர்வதே ஸ்வரிசுபத்திரி, ரந்தரிநிராதாரி நீதசுந்தரிநிமலை நித்யகல்யாணிநனினக், கரந்தனிற்கிளளையேந் தம்பிகையுரந்தரி கராசலாம்பரியானெனும், வாங்கடந்தருள்செய் மயிலைக்கபாலீசர்பான் மருவுகற்பகவல்லியே. — ௮ சத்தியம்பிகையம்மை யயிராணியமலைசிவை சாமளையுருத்திரையுமை, பத்தியொடு தொழுமடி யவர்க்கரு ளிமயவல்லி பரைபராசத்திவிமலை, நித்திய நிரஞ்சனி நிதானி மரகதவல்லி நிற்குனி[ணி]மனோன்மணிமலர், வத்திரயாமலை யருள்செய் மயிலைக்கபாலிசர்[பான்] மருவுகற்பகவல்லியே. — ௯ அம்புவியின்மைந்தர்பிழை யா[யா]மலாள்வது அன்னைதன்கடனாதலா, னம்பினேனுன்றனிரு நளினபொற்பாதமதை நாயினுங் கடையனேன்யா, னென்பிரா னரனார்த மிடமேவுமன்னையே ஏங்கிடாதெனையாளுவாய்; வ[ம்]பவிழ்மலர்ச்சோலை மயிலைக்கபாலீசர்[பான்] மருவுகற்பகவல்லியே. — ௰ திருமயிலைக் கற்பகவல்லியம்மை பதிகம் முற்றிற்று.
Contents | Home