கண்ணாட்டிச்சிந்து.
contents.html
about_the_book.html
preface.html
ஏற்றப்பாட்டுகள்
௳
கடவுள் துணை
கண்ணாட்டிச்சிந்து
சென்னை
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது
1923
வெண்பா.
விண்ணாடரேத்தரிய வேலவன்மேல்வையமிசை
கண்ணாட்டிச்சிந்தாகக் கழறுதற்குத் — தண்ணாருஞ்
சோலைதிகழுந்தணிகை சுந்தரவிநாயகன்பொற்
றாளைவணங்கிச் சாற்றுவாம்
இந்துவழ்சுந்தரனார் தந்தவொய்யாரன்
கண்ணாட்டிதந்த வொய்யாரன்
செந்தணிகைவாழ்செங்கல்வ ராயகெம்பீரன்
கண்ணாட்டி ராயகெம்பீரன் — ௧
பச்சைமயிலேறிவரு முச்சிதவேலன்
கண்ணாட்டி உச்சிதவேலன்
இச்சையுடன்போற்றுபவர்க் கீந்திடுஞ்சீலன்
கண்ணாட்டி யீந்திடுஞ்சீலன் — ௨
கானக்குறவள்ளிமகிழ் கடம்பணிதோளன்
கண்ணாட்டி கடம்பணிதோளன்
வானவரிடர்தவிர்த்தே வயங்குந்தயாளன்
கண்ணாட்டி வயங்குந்தயாளன் — ௩
தெய்வகுஞ்சரிமகிழுஞ் செங்கதிர்வேலன்
கண்ணாட்டி செங்கதிரவேலன்
சைவமறையோனெனவுஞ் சாற்றுஞ்சுசீலன்
கண்ணாட்டி சாற்றுஞ்சுசீலன் — ௪
ஒன்னலர்வுரமெரித்தோ னுதவியபாலன்
கண்ணாட்டி உதவியபாலன்
தன்னிகரில்லாதகொடுந் தானவர்காலன்
கணனுட்டி தானவர்சாலன் — ௫
ஆணிப்பொன்னேரத்தினமே லாசைக்கிளியே
கண்ணாட்டி ஆசைக்கிளியே
மாணிக்கமேமாங்குயிலே வார்த்தையைக்கேளடி
கண்ணாட்டி வார்த்தையைக்கேளடி — ௬
சித்தர்முத்தர்பத்தர்பணி சேவற்கொடியோன்
கண்ணாட்டி சேவற்கொடியோன்
வெற்றிமயிலேறியேநம் வினைகள்தீர்ப்பவன்
கண்ணாட்டி வினைகள் தீர்ப்பவன் — ௭
சஞ்சிதஞ்சேரஞ்சுகமே நங்கையேமானே
கண்ணாட்டி நங்கையேமானே
கொஞ்சுங்கிளியாளேநாமுங் கூடியேபோவோம்
கண்ணாட்டி கூடியேபோவோம் — ௮
ரத்தினபுலாக்குகம்மல் முகத்தில்மின்னுதே
கண்ணாட்டி முகத்தில்மின்னுதே
முத்துமாலைமோகனமுங் கழுத்திற்றுன்னுதே
கண்ணாட்டி கழுத்திற்றுன்னுதே — ௯
தங்கத்தினில்கல்லிழைத்த வங்கிதோடாவாம்
கண்ணாட்டி வங்கித்தோடாவாம்
சங்கையில்லாமல்கரத்தில் தகதகென்னுவே
கண்ணாட்டி தகதகென்னுதே — ௰
பத்தரைமாற்றுதங்கத்தால் கைவளையலாம்
கண்ணாட்டி கைவளையலாம்
சித்திரவிசித்திரமொளிர் செம்பொன்மோதிரம்
கண்ணாட்டி செம்பொன்மோதிரம் — ௧௧
கல்லிழைத்தஒட்டியாணம் இடையில்மின்னுதே/line>
கண்ணாட்டி இடையில்மின்னுதே
பல்லொளிகள் முகத்தைப்போலே பளபளென்குதே
கண்ணாட்டி பளபளென்குதே — ௧௨
பாதமிரண்டில்சதங்கை கீதம்பாடுதே
கண்ணாட்டி கீதம்பாடுதே
சீதமதிமுகத்தைக்கண்டென் சித்தம்வாடுதே
கண்ணாட்டி பித்தம்வாடுதே — ௧௩
சந்திரகாந்திசரிகைசேலை தளதளென்குதே
கண்ணாட்டி தளதளென்குதே
சுந்திரவடிவழகி சிந்தைசோருதே
கண்ணாட்டி சிந்தைசோருதே — ௧௪
நெத்தியில்திலர்தபொட்டு நிகங்நிகென்னுதே
கண்ணாட்டி நிகங்நிகென்னுதே
குத்தினிரவிக்கையது மெத்தஜொலிக்குதே
கண்ணாட்டி மெத்தஜொலிக்குதே — ௧௫
மல்லிகைமுல்லைமுடிக்கு மாங்குயிலாளே
கண்ணாட்டி மாங்குயிலாளே
வல்லிலேநம்வல்வினைகள் தீர்ந்திடும்பாராய்
கண்ணாட்டி தீர்ந்திடும்பாராய் — ௧௬
சதுர்மறைபுகலுமிந்த சரவணப்பொய்கை
கண்ணாட்டி சரவணப்பொய்கை
விதியின்படியேயதனில் மூழ்குவோம்வாராய்
கண்ணாட்டி மூழ்குவோம்வாறாய் — ௧௭
வேலவனைச்சேவைசெய்ய வினைகள்தீருமே
கண்ணாட்டி வினைகள்தீருமே
பாலசுப்ரமணியதேவன் பதங்கள்வாய்க்குமே
கண்ணாட்டிபதங்கள் வாய்க்குமே — ௧௮
அணியணியாயிருக்குமன்ன சத்திரம்பாறாப்
கண்ணாட்டி சத்திரம்பாறாய்
பணிமணிகள்விற்குமிந்த பக்குவம்பாறாப்
கண்ணாட்டி பக்குவம்பாராய் — ௧௯
வேதியர்கள்வேள்விசெய்புஞ் சாலைகள்பாராய்
கண்ணாட்டி சாலைகள்பாராய்
சீதமதர்பூத்தொளிருஞ் சோலைகள்பாராய்
கண்ணாட்டி சோலைகள்பாராய் — ௨௦
ஆறுமுகம்பவனிவரும் அற்புதம்பாராய்
கண்ணாட்டி அற்புதம்பாறாய்
வீறுசேர்முரசதிரும் விந்தையைத்தேறாய்
கண்ணாட்டி விந்தையைத்தேறாய் — ௨௧
அடியவர்கண்கூட்டமதை அன்னமேபாறாப்
கண்ணாட்டி அன்னமேபாறாய்
வடிவழகிகடைகளிதோ வயங்குதுசீராய்
கண்ணாட்டி வயங்குதுசீறாய் — ௨௨
மனதின்படிவேணகெல்லாம் வாங்குவோம்வாறாய்
கண்ணாட்டி வாங்குவோம்வாறாய்
கனமுலவுங்கருங்குயிலே கவலையேன்கூறாய்
கண்ணாட்டி கவலையேன்கூறாய் — ௨௩
கார்த்திகையின்பெருமையதை கருதப்போகுமோ
கண்ணாட்டி கருதப்போகுமோ
நாற்றிசையோர்போற்றிசெய்யும் நன்கதைப்பாறாய்
கண்ணாட்டி நன்கதைப்பாறாய — ௨௪
அன்பர்கள்துதித்திரங்கும் ஆனந்தம்பாறாய்
கண்ணாட்டி ஆனந்தம்பாறாய்
இன்மயிலேமனைக்கு ஏகுவோம்வாறாய்
கண்ணாட்டி ஏகுவோம்வாறாய் — ௨௫
பக்தியுடன்கங்காதரன் பாடுந்தமிழுக்கு
கண்ணாட்டி பாடுந்தமிழுக்கு
சித்தமகிழ்ந்தேயருளுஞ் செங்கல்வராயன்
கண்ணாட்டி செங்கல்வராயன் — ௨௬
மாமலர்ப்பதங்கள்வாழி மணமறைவாழி
கண்ணாட்டி மணமரை[றை]வாழ்
பூமியிலிதைப்பகரும் புண்ணியர்வாழி
கண்ணாட்டி புண்ணியர்வாழி
கண்ணாட்டிச்சிந்து. முற்றிற்று.