கேசவப்பெருமாள் பதிகம் contents.xml about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் ஸ்ரீ ஸ்ரீராமஜெயம். கேசவப்பெருமாள் பதிகம். சென்னை சூளை நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

சடகோபர்துதி — வெண்பா சீரார்தவமுனிவர் சேர்கான்பரியூர்வாழ் ஏராருங்கேசவன்ற னின்னடியிற் பேரார் திடமாகவோர் பதிகஞ் சிந்தையுடன்செப்பச் சடகோபனேயருணீ தா. ஆசிரியவிருத்தம். திருமணியிமைக்கு மகுடசேகரமுந் திருவருட் பொழியு நேத்திரமுந், தெருளணிமதியை யனையமா முகமுஞ் செப்புதற்கரிய செங்காமும், மருவியவேதச் சிலம்பொலிபதமும் வறியனேன்காண வந்தருள்வாய், கெருடவாகனனே கான்பரியூர்வாழ் கேசவா மாசிலாமணியே. — 1 தஞ்சமென்றடைந்த கஜேந்திரனிடுக்கந் தவிர்த்தி டவில்லையா முன்ன, மஞ்சிடாதுயருங் கிரிதனைத்தூக்கி யா[த]வரைக் காத்திடவிலையா, வஞ்சனையில்லாம லென்ற னைக்காக்க மனமிரங்காவித மென்னோ, கிஞ்சுகமுலவுங் கான்பரியூர்வாழ் கேசவா மாசிலாமணியே. — 2 கொடுமைசெய்பத்மா சூரனையெரித்த கொண்டல் வண்ணா வுனக்குகந்த, அடிமையென்றெண்ணா திருந்திடிலுன்னை அனைவரும்வைகுவ ரன்றோ, நெடுகிலுங்கவலை கொள்ளுமென்பலத்தை நீக்கியாண்டிடுவதுன் கடனாங், கெடுமையில்லாத கான்பரியூர்வாழ் கேசவா மாசிலாமணியே. — 3 மருமலற்குழலிற் சொருகுமின்மடவார் மயல்வலைப்பட் டகமகிழ்ந்து பொருடனையுலகி லீட்டிநின்றிவ்ய பொற்பதத் துணையினைமறந்து, கருங்கடற் றுரும்புபோ லலைந்திடுமிக் கடையனைக் காத்தருள் புரிகுவாய், கிருதுகள் வளருங் கான்பரியூர்வாழ் கேசவா மாசிலாமணியே. — 4 அரிகரிவீர ராகவாவேத வாதிநாராயணா முகுந்தா, கரிவரதா, கோபாலா கோவிந்தா கர்த்தனே மாயவாவுன்றன், விரிமலரடியைத் துதித்திடவறியா வினைய னேன்றன்னை யாள்குவையே, கிரிவளர்ந்தோங்குங் கான்பரியூர்வாழ் கேசவா மாசிலாமணியே. ­— 5 சுரந்தலைவலி காமாலைவெண் குட்டஞ் சோகைநீரிழிவு விப்புருகி, உரம்பெறுபேய் சூனியமுதலிய யாவுமுன் றிருச்சன்னிதி காணப், பரிதியைக்கண்ட பனியெனவகலும் பகரவுன்மகிமை யென்றாமோ, கிரண மாமதில்சூழ் கான்பரியூர்வாழ் கேசவா மாசிலாமணியே. — 6 தந்தை சொல்மிக்க மந்திரமிலெனச் சாற்றியமொழிதனை யகற்றி, அந்தநற்பிரக லாதனைக்காத்த வருநரசிங்கமே யரசே, எந்தையேயடியே னினிப்பிறவாம லிருந்திடநீ யருள்புரிவாய், கொந்துவானரஞ்சூழ் கான்பரியூர்வாழ் கேசவா மாசிலாமணியே. — 7 ஒன்றிரண்டல்லவே யென்குறை யெழுத வோலையிலடங்கிடா தந்தோ, வின்றுசன்னிதிமுன் னிருந்து சேய்கதற வெங்குவந்தா யுனக்கென்ன, வென்றுகேளாம லிருந்திடின் முனமிவ் வேழையேன் செய்தவப் பயனோ கின்னரர்துதிக்குங் கான்பரியூர்வாழ் கேசவா மாசிலாமணியே. — 8 ஒளிரு நெய்யுந்தண் டிருந்துழாயுங் கொண்டுள் ளோர்வினைகளை யோட்டத், தெளிவுடன்வழங்கி வருவதைக்கேட்டுத் தேடியான்வந்து நின்றேன், உன்னிரு கமலக் கடைக்கணானோக்கி நல்லருளீந்திடிற் பெரிதோ கிளானமுலவுங் கான்பரியூர்[வாழ்] கேசவா மாசிலாமணியே — 9 என்ன தீவினையைப் புரிந்தனனந்தோ வேழையே னின்னதென் றறியேன், பன்னுருமுனது மலர்ப்பதநாளும் பணியுமென் மனக்குறை யகற்ற, வின்னிலத்தேவந் தருள்புரியாம லிருப்பதுன்சீர்க் கழகாமோ கின்னரிமுழங்குங் கான்பரியூர்வாழ் கேசவா மாசிலாமணியே. — 10 அற்புதவிபீஷணற்கு முன்னபயமளித்த வைகுந்த வாசாநின், பொற்புறுமலர்த்தாடு திக்கவுநாவிற் பொருந்திடக் கல்வியும் புகழுஞ், சற்பனரிணக்கமும் பெருநிதியுந்தமியனுக் கீந்துகாத்தனிப்பாய், கெற்பனங்கள்சூழ் கான்பரியூர்வாழ் கேசவா மாசிலாமணியே. — 11 கேசவப்பெருமாள் பதிகம் முற்றிற்று.
Contents | Home