காவேரியம்மன் கும்மிப்பாடல் contents.html about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் கடவுள் துணை காவேரியம்மன் கும்மிப்பாடல். சென்னை சூளை சங்கநிதிவிளக்க அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

ஜெயப்பருவந்தன்னில் வந்துஅம்மன்தானே உற்பத்தியானவளாம் நெல்லிமரத்தின்கீழ் மகாவிஷ்ணுபிர்ந்தாகுந்தற்தனின்றவளாம். — ௧ பிர்மதேவருடன் கன்னிகையாம்அம்மன் பிர்மாதிகம்சந் தீர்த்தவளாம் அறுபத்தாயிரங்கோடி தீர்த்தோடம்மன் அடர்ந்துவார்த்தை பாருங்கடிஅம்மன் தொடர்ந்துவார்த்தை பாருங்கடி — ௨ பழனிதனிலே வந்திருந்துஅம்மன் பழனிநதியில்ஸ்நானஞ்செய்து பழனிமுருகரைக் கண்டுதெரிசித்துப்பக்தியுடன்வராள் பாருங்கடி அம்மன் சித்தியுடன்வாறாளபாருங்கடி — ௩ மதுரைதன்னிலே வந்திறங்கிஅம்மன் மலர்தாமரையில்ஸ் நானஞ்செய்து மாயசொக்கேசரைக் கண்டுதெரிசித்து மகிழ்ந்துவார்த்தை பருங்கடி அம்மன்புகழந்துவாரதைபாருங்கடி — ௪ கும்பகோணத்திலே வந்திறங்கிஅம்மன் கொடியபாவ நிவர்த்திபண்ணி கும்பகஜேந்திரனைக் கண்டுதெரிசித்துக் கொத்தளித்துவாருள்பருங்கடி அம்மன் தத்தளித்துவாறாள் பாருங்கடி — ௫ மாயூரந்தன்னில் வந்திரங்கிஅம்மன் மகேஸ்வரரைப்பூசைபண்ணி மாயலிங்கேசரை கண்டுதெரிசித்து மாட்சிபுடன்வாறாள் பாருங்கடி அம்மன்ஆச்சியிதோவாறாள் பாருங்கடி — ௬ பஞ்சவனந்தனில்வந்திரங்கிஅம்மன் பாவங்களெல்லாநிவர்த்திசெய்து பஞ்சகஜேந்திரனைக்கண்டு தெரிசித்துப் பாவையிதோவாறாள் பாருங்கடி அம்மன்பூவையிதோவாறாள் பாருங்கடி — ௭ சிதம்பரந்தனில் வந்திரங்கிஅம்மன் சிவகங்கையிலே ஸ்நானம்பண்ணி சபாநாதரைக்கண்டு தெரிசித்துச்சட்டமுடன்வாறாள் பாருங்கடி அம்மன்திட்டமுடன்வாறாள் பாருங்கடி — ௮ காஞ்சீபுரந்தனில் வந்திரங்கிஅம்மன் கம்மாநதியில் ஸ்நானஞ்செய்து ஏகாம்பரநாதரைக் கண்டுதெரிசித்து இப்பொழுதேவாறாள் பாருங்கடி அம்மன்மெய்ப்புடனேவாறாள் பாருங்கடி — ௯ காவேரியமமன் கும்மிப்பாடல் - முற்றிற்று.
Contents | Home