காட்சிக்கண்ணி
contents.html
about_the_book.html
preface.html
ஏற்றப்பாட்டுகள்
௳
சிவமயம்.
திருவருட்பிரகாசவள்ளலாரென்னும்
சிதம்பரம்
இராமலிங்கசுவாமிகள் அருளிச்செய்த
காட்சிக்கண்ணி.
வாணீவிலாச அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது
1923
வெண்பா.
கந்தமுறுமெஞ்ஞானச் சோதியுமாய்வந்த
வித்தகஞ்சேராமலிங்க வேளுரைத்தவுத்தமஞ்சேர்
கர்த்தனருளாங்காட்சிக் கண்ணிகளைச்சிந்தித்தால்
அத்தமுடமுத்தியுல காம்.
சாமா-சாப்புதாளம்.
ஆணிப்பொன்னம்பலத்தே கண்டகாட்சிகள்
அற்புதக்காட்சியடி — அம்மா
அறபுதக்காட்சியடி — ௧
ஜோதிமலையொன்று தோன்றிற்றதிலொரு
வீதியுண்டாச்சுதடி — அம்மா
வீதியுண்டாச்சுதடி — ௨
வீதியிற்சென்றேனவ் வீதிநடுவொரு
மேடையிருந்ததடி — அம்மா
மேடையிருந்ததடி — ௩
மேடையிலேறினேன் மேடையிலங்கொரு
கூடமிருந்ததடி — அம்மா
கூடமிருந்ததடி — ௪
கூடத்தில்நாடவக் கூடமேலேழ்நிலை
மாடமிருந்ததடி — அம்மா
மாடமிருந்ததடி — ௫
ஏழ்நிலைக்குள்ளு மிருந்தவதிசயம்
என்னென்றுசொல்வேனடி — அம்மா
என்னென்றசொல்வேனடி — ௬
ஓர்நிலைதன்னி லொனி[ளி]ர்முத்துவெண்மணி
சீர்நிலமாச்சுதடி — அம்மா
சீர்நிலமாச்சுதடி — ௭
பாரோர்நிலையிற் கருநீலஞ்செய்ய
பவளமாச்சுதடி — அம்மா
பவளமாச்சு நடி — ௮
மற்றோர்நிலையில் மரசுகப்பச்சைசெம்
மாணிக்கமாச்சுதடி — அம்மா
மாணிக்கமாச்சுதடி — ௯
பின்னோர்நிலையிற் பெருமுத்துவச்சிர
பேர்மணியாச்சுரடி — அம்மா
பேர்மணியாச்சுதடி — ௰
லேறோர்நிலையில் மிகும்பவளத்திரள்
வெண்மணியாச்சுதடி — அம்மா
வெண்மணியாச்சுதடி — ௧௧
பகலோர்நிலையிற் பொலிந்தியகன்மணி
பொன்மணியாச்சுதடி — அம்மா
பொன்மணியாச்சுசடி — ௧௨
பதியோர்நிலையிற் பகர்மணியெல்லாம்
படிகமாச்சுதடி — அம்மா
படிகமாச்சு தடி — ௧௩
ஏழ்நிலைமேலே யிருந்ததோர்கம்பம்
இசைந்தபொற்றம்பமடி — அம்மா
இசைந்தபொற்றம்பமடி — ௧௪
பொற்றம்பம்கண்டேறும் போதுநான்கண்ட
புதுமையென்சொல்வேனடி — அம்மா
புதுமையென்சொல்வேனடி — ௧௫
ஏறும்போதங்கே பெதிர்ந்தவகைசொல்ல
என்னளவல்லவடி — அம்மா
என்னளவல்லபடி — ௧௬
அங்கங்கேசத்திக ளாயிரமாயிரம்
ஆகவந்தார்களடி — அம்மா
ஆகவந்தார்களடி — ௧௭
வந்துமயங்க மயக்காமனானருள்
வல்லபம்பெற்றேனடி — அம்மா
வல்லபம்பெற்றேனடி — ௧௮
வல்லபத்தால்வந்த மாதம்பத்தேறி
மணிமுடிகண்டேனடி — அம்மா
மணிமுடிகண்டேனடி — ௧௯
மணிமுடிமேலோர் கொடி முடிநின்றது
மற்றதுங்கண்டேனடி — அம்மா
மற்றதுக்கண்டேனடி — ௨௦
கொடிமுடிமேலாயிரத தெட்டுமாற்றுபெற்ற
கோயிலிருந்ததடி — அம்மா
கோயிலிருந்ததடி — ௨௧
கோயிலைக்கண்டங்கே கோபுரவாயிலிற்
கூசாதுசென்றேனடி — அம்மா
கூசாதுசென்றேனடி — ௨௨
கோபுரவாயிலுட் சத்திகள்சித்தர்கள்
கோடிபல்கோடியடி — அம்மா
கோடிபல்கோடியடி — ௨௩
ஆங்கவர்வண்ணம்வேல் வண்ணஞ்செவ்வண்ணமுன்
ஐவண்ணமாகுமடி — அம்மா
ஐவண்ணமாகுமடி — ௨௪
அங்கவரெல்லாயிங் காரிவரென்ன
அப்பாலேசென்றேனடி — அம்மா
அப்பாலேசென்றேனடி — ௨௫
அப்பாலேசென்றே னங்கோர்திருவாயில்
ஐவரிருந்தாரடி — அம்மா
ஐவரிருந்தாரடி — ௨௬
மற்றவர்நின்று வழிகாட்டமேலோர்
மணிவாயிலுற்றேனடி — அம்மா
மணிவாயிலுற்றேனடி — ௨௭
கண்ணிமவ்வாயிலிற் பெண்ணோடாணாக
இருவரிருந்தாரடி — அம்மா
இருவரிருந்தாரடி — ௨௮
அவகவர்காட்ட யணுகத்திருவாயிலில்
அன்போடுகண்டேனடி — அம்மா
அன்போடுகண்டேனடி — ௨௯
அந்[த்]திருவாயிலி லானந்தவல்லியேன்
அம்மையிருந்தாளடி — அம்மா
அம்மையிருந்தாளடி — ௩௦
அம்மையைக்கண்டே னவன[ள]ருள்கொண்டேன்
அமுதமுமுண்டேனடி — அம்மா
அமுதமுமுண்டேனடி — ௩௧
தாங்குமவரருளாளே நடராஜர்
சந்நிதிகண்டேனடி — அம்மா
சந்நிதிகண்டேனடி — ௩௨
சந்நிதியிற்சென்று நான்பெற்றபோது
சாமியறிவாரடி — அம்மா
சாமியறிவாரடி — ௩௩
ஆணிப்பொன்னம்பலத்தே கண்டகாட்சிகள்
அற்புதக்காட்சியடி — அம்மா
அற்புதக்காட்சியடி — ௩௪
வானத்தின்மீதுமயி லாடக்கண்டேன்
மயில்குயிலாச்சுதடி — அக்கச்சி
மயில்குயிலாச்சுதடி — ௧
துள்ளைவிட்டுத்தொடங்கினேன்மன்றாடும்
வள்ளலைக்கண்டேனடி — அக்கச்சி
வள்ளலைக்கண்டேனடி — ௨
சாதிச்சமயச் சழங்கைவிட்டேனருட்
சோதியைக்கண்டேனடி — அக்கச்சி
சோதியைக்கன்டேனடி — ௩
பொய்யையொழித்தப்புறப்பட்டேன்மன்றாடும்
ஐவரைக்கண்டேனடி — அக்கச்சி
ஐவரைக்கண்டேனடி — ௪
காட்சிக்கண்ணி முற்றிற்று.