ஞானவுடற் கூறு.
contents.html
about_the_book.html
preface.html
ஏற்றப்பாட்டுகள்
௳
கடவுள் துணை.
ஞானவுடற் கூறு
சென்னை
பூமகள்விலாச அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது
1923
வெண்பா
சுழியறியார்க்கென்னநலஞ் சுகமறியார்க்கென்னகுரு
வழியறியார்க் கென்னவெய்தும் — வாறுகாண்
சுழியறியாமூலமறிந் தவ்வழியில்முத்தியடையார்க்கு
நமன்காலமவர்க்கேமரணங் காண்
சந்தணம்பூசிநீ சாகப்போறாய் — உன்னை
சேர்ந்தபந்துக்கள் ளீமத்திற்கொண்டுபோய்
செந்தணலாக்குவார் மானிடனே — ௧
அஞ்சடிவெட்டி அடிபடைபோட்டு
அதற்குமேல்வீடு கட்டுகிறாய் — நீ
கட்டினவீட்டுக்கு காரணமாரணங்
கண்டதுண்டோசொல்லு மானிடமே — ௨
எட்டுகட்டுவீடு கட்டுகிறாய்நீ
எங்கெங்கேதனத்தைப் புதைக்கிறாய் — நீ
புதைத்ததனத்தை யின்னாருதென்று
பிரித்துச்சொல்லடா மானிடமே — ௩
மட்டக்குதிரைமே லேறிக்கொண்டுநீ
பட்டணமெங்கும் சுற்றுகிறாய்
பொட்டெனவேஏம னோலைவந் தால்
புரப்பட்டுபோவாயே மானிடமே — ௪
கிணத்தைச்சுற்றிப்பில் முளைத்ததுபோல
கிளைக்குதேநீர் செய்தபாவம் — நீ
செய்தபாவம் துலைக்கவேதான்
விஷ்ணுவைத்தேட்டா மானிடமே — ௫
பருப்போடும்பர மானந்தத்தோடும்
பசும்நெய்போட்டுநீ உண்ணுகிறாய்
நெருப்பிலேபோட்டு கொளுத்திவிட்டால் — நீ
நீராய்போவாயே மானிடமே — ௬
ஆத்திரத்தாலே பணங்காசைதேடிநீ
மூத்திரக்குழியில் மாளுகிறாய் — நாளை
சூஸ்திரத்தாரையை கண்டுவிட்டால்
சொல்லாமல்போவாயே மானிடமே — ௭
அரியாதவஸ்துவை அரியலாமென்றார்
அரியனாம்பலனை அரியுமென்றார்
மதுறாநெல்லூர் சாமிகளெல்லோரும்
வெறுத்துசொல்வாயே மானிடமே — ௮
ஞானவுடற்கூறு — முற்றிற்று.