கீதாம்ருதம் contents.xml about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் கடவுள் துணை. கீதாமிர்தசாரம். மாம்பழக்கவிச்சிங்க நாவலர் இயற்றியது சென்னை சூளை ஸ்ரீ பாரதி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

ஜாவளி-இ-ம்-பியாக்-தாளம்-ரூபகம். கந்தநாதா யிந்தவேளை கருணை செய்ய வேணுமே — கந்த தொந்தமுடைய பந்தவிடைய துன்பத்தழுந்தி வெம்பினேன் சிந்தை தெளிவ தெந்தன் வகையின் செம்பொற்பாத நம்பினேன் — கந்த பண்டுகருநூ தொண்டர் தமது பாவந்தீர்க்க வல்லையா அண்டுமெளிமை கண்டுமெனையா ளாததென்ன சொல்லையா — கந்த சோதிப்பது சாதிப்படிக்கை சோரவிடு தன்னீதியோ ஏதித்தனை யென் மீதிற்கொடுமை யேழைநான் விரோதியா — கந்த மதுரமாக மாம்பழஞ்சொன் மகிழ்குஞ்சரி மனோகரா பதுமமா துரிதமுலாவும் பழனிமலை கிருபாகரா — கந்த இ-ம்-மோகனம்-கல்யாணி-தாளம்-சாப்பு. பல்லவி. என் முகம் பார்த்தருளையா — நான் ஏழையுனக்கடிமை யென்பதும் பொய்யா அநுபல்லவி. வன்மமென்ன பழனி மலைமுருகோனே வகையொன்றும் தெரியாமல்வாடுகிறேனே — என் சண்டாளனிவனென்று தள்ளாதேயென்னைத் தண்டாயுதநீயன்றித் திக்குண்டோபின்னை — என் தவரெத்தனை செய்திருந் தாலுமிங்குடனே யவைமுற்று மனம்பொறுத் தாள்வதுன்கடனே — என் வருத்துதேயடிக்கடி மாயாவிகாரந் திருத்தியூள் வினைவலி தீர்த்திந்தநேரம் — என் ஒன்றாவிரண்டாசும்மா வோயாததுன்ப மென்றாலினியெந்தகா ளெய்குவதுன்பம் — என் மாம்பழந்தமிழ்புனை வள்ளிசமேதா பூம்பதந்தொழுநெறி புகலலாகாதா — என் இராகம்-செஞ்சுருட்டி-தாளம் - ஆதி. பல்லவி. வா வா வா பொன் மயூரமீதியென் முன் — வா அநுபல்லவி. தேவாதிதேவா பழனித் தெண்டாயுதபாணி யென்முன் — வா வா சரணங்கள். நன்னிலைகாணா தலைந்த நான்மிகவுமட்டி யென்னினுநீயா லொண்ணாதா வென்னவினியட்டி யென்முன் — வா வா பாதவர்ச்சனை செய்யாத பாவியேனானாலும் ஆதரிக்க வேணுந்தவ றாதேயொருகாலு மென்முன் — வா வா எத்தனைசொன்னாலுநெஞ் சிரக்கம்யிரதா கத்தநிவிஷயசிற் சொரூபனந்த போசாவென்முன் — வா வா தஞ்சமுனையன் றியில்லாத தாமசமேனப்பா அஞ்சலென்றிடலாகாதா வந்தனைவெறுப்பாயென் முன் — வா வா வள்ளிதெய்வானை விழி வண்டுநுகர்தேனே தெள்ளியகவி மாம்பழத் தியானிக்கும்பெம்மானே யென்முன் — வா வா இ-ம்-பீய்-அல்லது பியாக்- தாளம் ஆதி. பல்லவி. ஆதரித்தென்னையினி பாண்டருள்தாயே அசட்டைசெய்வது நீதியலநீயே அநுபல்லவி. மாதவத்தவரும் பூதலத்தெவரும் வழுத்தும்பழனி மலைவடிவேலா சாதனைத்தொழிலேனோ சோதனைக்கெதிர்நானோ சரிவள்ளிதெய்வ குஞ்சரிலோலா — ஆதரி கனவினுந்தாயி மனமெனும்பாவி கலங்குவது கொஞ்ச மேகனதொல்லை வனசமும்பொருவாத வுனதுரஞ்சிதபாத வணக்கத்துக்கிணக்கமாய் வருவதில்லை — ஆதரி தடியரைநாடி வடிதமிழ்பாடி சஞ்சரித்தாலலுந் தளர்வொன்றா கடினமதுநின் சொந்தவடிமை கதியேனெந்தக் காலமுமுனக்கடைக் கலமன்றோ. — ஆதரி வாக்கினிலடுத்தும் பாக்கியங்கொடுத்து மாம்பழக்கவிச் சிங்கமதிதோற்ற காக்குமறுமுகவா நீக்குந்துக்கவா கன்மவஜன்மசமுநிமக் கரையேற்றி — ஆதரி இ-ம்-மாஞ்சு -அல்லது-உசேனி-தாளம்-ரூபகம். பல்லவி. வடிவே லரசேதான் வருத்தஞ்சகிச்க மாட்டேனெனை ரட்சி அநுபல்லவி. அடியேநா னுன் னடைக்கலமித்ததி அஞ்சவிடாதேயையா பழனிப்பதி — வடிவே சரணங்கள. அல்லும்பகலும் புண்ணாகுதேபாவிநெஞ் சையோவென் செய்வேன் சொல்லுந்தமிழேன் றுதிசெவிகேளாதோ சும்மாகபடத்தொழிலிதுதானேதோ — வடிவே உனது தயவு என்மே லுண்டாயிருந்தா லொரு தாழ்வுமில்லையே ஜெனனசாகரத்திற் சுழன்றேபுத்தி தேறாதயர்தேனோ திவ்வியபராசத்தி — வடிவே என்றுந் துணை நீதானென்று துணிந்தே னெல்லா முனைச்சார்ந்தே சென்றிந்திரனிடர் தீர்த்தகுகாமுதிர் செந்தமிழ்மாம்பழந் தியானித்திடுங்கதிர் — வடிவே இ-ம்-தோடி-தாளம்-ஆதி. பல்லவி. ஆதிசரவண பவகுகனே ஓம் அர அர சிவசிவ — ஆதி அநுபல்லவி. சோதிமலை முடிவின் மீதினயனமிடுந் தூயபரமசுக நேயமுனிவர்புகல் — ஆதி சரணங்கள. பந்துஜெனனமர ணந்தனில்விழும் பாரமொழிந்துனது பதமலர்தாளுஞ் சிந்தையுதவியருள் செய்யவயல் சூழுந் திருமருவியசிவகிரிமிசைவாழும் — ஆதி மதமொருவினைபுரி விதமிகமீறும் மயில்விலகிடவரு முயர்கதிதேறும் அதிகமதியதுதந் தான்விடையேறும் அரனதுசெவிதனி லொருபொருள்கூறும் — ஆதி வந்தனுதினந்தொழி மதுரப்பிரபந்த மாம்பழந் தமிழின் மகிழவுமிகுந்த சுந்தரஞான சொரூபகந்த துங்கவன்வனசுப மங்களமாய் — ஆதி கீதாமிர்தசாரம் முற்றிற்று.
Contents | Home