அரிச்சந்திரன் contents.xml about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் கடவுள் துணை. அரிச்சந்திரன் ஏத்தப்பாட்டு. சென்னை சூளை பெரியநாயகியம்மன் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

காப்பு — வெண்பா. சீராரரிச்சந்திர தீரன்தமிழ்க்கதையை பேராரெழில்யேற்றம் பேசவே — யேராரும் வேழவிநாயகனுடனே விண்ணோருமே துதிக்க வாழவிநாயகனைப் பணிகுவாம். பிள்ளையாரேவாரும் பிழைவராமல்காரும் மழைவரக்கண்பாரும் மகாதேவன்மகனே விக்கினரேவாரும் சக்கரைக்கற்கண்டு முக்கனியுந்தேனும் முள்ளுடன்பிலாக்காய் முடிச்சுடன்கரும்பு அதிரசம்வகைகள் அவல்கடலைதேங்காய் அப்பனேவுனக்கு ஒப்புடன் படைப்பேன் உன்னைத்தொழு வோற்கு எண்ணுந் துணை செய்வாய் ஈஸ்வரன்மகனே (ஒருவதியாலொண்ணு) ஆரப்பூங்கோயில் அம்மனை த்தொழுதேன் அரிச்சந்திரபுராணம் என்னாலானமாத்திரம் ஏத்தப்பாட்டாய்பாட தப்புப்பிழையானால் சகலரும் பொருப்பீர் (இருபதியாலொண்ணு ) இந்திரருந்தேவர் ரிஷிகள் முனிவோரும் கொலுசபையிருந்தார் தேவேந்திரராஜன் முனியோரைக்கேட்டார் பொய்சொல்லாத பேர்கள் பூலோகத்தி லுண்டோ (முப்பதியாலொண்ணு) மூதலமரிந்த முனிவருமுரைத்தார் அயோததியையாளும் அரிச்சந்திரராஜன் என்னுடையசீஷன் பொய்யென்ற வசனம் நாவினால் உரையான் நல்ல துவதிஷ்டர் அவன்நாவு தப்பானென்று அவனுடைய னெஞ்சை அரித்தவன்போல் சொன்னாய் பித்தந்தலைக்கேரி பினத்துகிறாய்போடா (நாற்பதியரலொண்ணு) நான் பினத்தயில்லை நீயதட்டிசொன்னாய் சந்திரசூரியர் இவர்கள் தெற்கு வடக்கானால் சத்தியந்தவரான் என்னுடைய சீஷன் இருவர் முனியோரும் வாக்குவாதஞ்செய்தார் (ஐம்பதியாலொண்ணு) அரிந்தவர்முனிவர் நாரதரும்வந்தார் ஒருவருக்கொருவர் உயித்தியங்கள் வேண்டாம் நீங்களிருவரும் சபதம் இன்னதென்று சொல்வீர் சத்தியரிச்சந்திரன் பொய்யென்ற வசனம் நாவுரண்டுரைத்தால் இந்தரிஷி தபத்தை விட்டு நான் நீச்சகுலமாவேன் (அறுபதியாலொண்ணு) அரிச்சந்திரராஜன் ஒருபொய்சொல்லாமல் என் தபத்தில் பாதி போனா நானிளைத்து விட்டால் தாரேன் இவர்களிட்டசபதம் இந்திரனுங்கேட்டு தெய்வலோகம் போனார் வசிஷ்ட மாமுனியும் தபசுக்கு நடந்தார் (எழுபதியாலொண்ணு) ஏங்கிவிஸ்வாமித்திரன் தெய்வத்தை தொழுதான் மன்னனரிச்சந்திரன், சொர்னதானம் செய்ய ஜெயகண்டிகை போட்டார் தபசிபோல முனிவன் அரசனண்டை வந்தான் (எண்பதியாலொண்ணு) ஏனையாமுனியே உன்பாதமேசரணம் பக்ஷம்வைத்தருள்வீர் சத்தியரிச்சந்திரா நான் வேள்வி செய்யபோரேன் நீகோடிபொன் தருவாய் திரவியங்கள் தந்தேன் எடுத்துக் கொண்டு போங்கள் உன்வசத்தில் தானே ஒருபொழுதிருந்தால் நாளைவந்து நானும் எடுத்துக் கொண்டு போரேன் (தொண்ணூருடலொண்ணு) துஷ்டன் விஸ்வாமித்திரன் சூதுசெய்தயோத்தி இட்டதோர்பயிரை பன்றிகளும்மானும் மிருகத்தா லழித்தான் காவல்காக்கும் பேரை கொசுகளும் கௌவி கொட்டச் சொல்லி விட்டான் நாட்டு குடியெல்லாம் இராசனோடே சொன்னார் (௱ — பிள்ளையாரேவாரி) பூபனரிச்சந்திரன் புத்திரனுங்கூட சத்தியகீர்த்தியும் சதுருடனே வேட்டை கானகத்திலுள்ள கனமிருகமெல்லாம் வெட்டியே கெலித்தான் வீரனரிச்சந்திரன் (ஒருவதியாலொண்ணு) உடையவளுங்கூட இரங்கினார் பூங்காவில் நித்திரையுஞ்செய்து சொர்ப்பனமுங்கண்டு தேவியுடன் சொன்னார் திரும்பினாரயோத்தி முனிவன்விஸ்வாமித்திரர் வானபெண்களை யனுப்பி ஆண்டகுடைகேட்டார் (இருபதியாலொண்ணு) இறையவன்குலத்தோன் அடித்தான் சவுக்காலே துடித்தான் விஸ்வாமித்திரன் அடித்தாயேயுந்தன் முடிதனிலுதைப்பேன் அய்யனேசரணம் மெய்யனேயுன்பாதம் கிரீடங்கள்பட்டு கொப்பளித்துப்போமே (முப்பதியாலொண்ணு) முனியோரே சரணம் குற்றங்கள் பொறுத்து பக்ஷம்வைத்தருள்வீர் அல்லவென்றால் குற்றம் அடியேனால் பொறுப்பீர் பொய்யென்ற வசனம் நாவினா லுரையேன் (நாற்பதியாலொண்ணு) இந்தநாடு நகர்சேனை இராச்சியம் போனாலும் பொய்யென்ற வசனம் கனவிலு முறையேன் நீ அப்படியேதாகும் அரசனரிச்சந்திரதீரா சொல்குற்றமுண்டோ சுவாமிவிஸ்வாமித்திரா நீ இல்லையென்று சொல்லு இது சத்தியந்தானையா நான் தாரைவார்த்து விட்டேன் (ஐம்பதியாலொண்ணு) அடியேன் யுன்வசத்தில் நான்வைத்த பொன்னை தாரும் முத்திரைகுலையாமல் இருக்குதந்த பொன்னும் நான் தாரைவார்த்துவிட்ட தனங்க ளென்னதாமோ நீ அப்படியே தாரும் அரசனரிச்சந்திரா ஆரெட்டுக்கிடுவில் நக்ஷத்திரகன்கையில் செலித்திவிடும் பிள்ளாய் (அறுபதியாலொண்ணு) அரிச்சந்திரராஜன் கௌசிகனார் கையில் பாரகடன்பட்டு பரதேசியாகி பிரதேசம் போரேன் காசிதேசம் போரேன் இந்த கடன் தீர நக்ஷத்திரகன் கையில் சிக்கினேன் சிவனே (எழுபதியாலொண்ணு ) இதற்கென்ன செய்வோ மென்று யேங்கி அரிச்சந்திரன் தாரேனென்று சொல்லி கூடவாரு மென்றான் பசிக்குது யெனக்கு நீசோறுபோடு மென்றான் இந்த கானகத்தில் சோறு தேடினால் வருமோ (எண்பதியாலொண்ணு) எட்டியே அடித்தான் கையில்கிட்டிகளை கட்டி பொன்குடுத்தால் தாரும் ஒருபொய்யாகிலும் சொல்லும் அண்ணாந்தாளை போட்டு அடித்தால் நானென் செய்வேன் அடிதனை நிறுத்தி தனையெடுக்கச் சொன்னான் (தொண்ணூருடலொண்ணு) தோளிலேயெடுத்து காசிக்கிநடந்தான் உன்னை நானெடுக்க என்னை வேதாளமரிக்க வெட்டினேன் வாளால் கிட்டவரவொட்டாமல் அக்கினிமரிக்க அவித்தாள் சந்திரமதி அதற்கப்பரமே போனார் (௨௱ — பிள்ளையாரேவாரி) பூபனரிச்சந்திரன் காசிதீர்த்தங் கண்டான் ஸ்தானங்களை செய்தார் தலங்களைப் பார்த்தார் இடந்தனில் கெருடன் எதிர்வரக்கண்டார் நரையான்வலமாக நன்மையாச்சு தென்றார் (ஒருவதியாலொண்ணு) உலகமாளும் இராசன் உத்தமியுங்கூட சத்தியகீர்த்தியும் புத்திரனுங்கூட வீகமரக்கனியும் முல்லையிருவாக்ஷி அன்னங்கள் மயில்கள் ஆடும் பூங்காவனம் காசிவிஸ்வநாதா பாதமோ நான் கண்டேன் (இருபதியாலொண்ணு) ஈஸ்வரன் மகனே விக்கினரேதெண்டம் நந்திகேஸ்வரரே விஸ்வநாதரேசரணம் சத்தியந் தப்பாமல் தவமுனிவறுணத்தை நீவெற்றியாயளிப்பாய் விஸ்வநாதரே தொழுதேன் (முப்பதியாலொண்ணு) முடி பொறுத்தமன்னன் அடிபேனைத் தொழுதாய் அல்லல்விட்டு நீயும் அரசாளுவாய்பின்பு அவர்வாக்குகேட்டு வீதி அலங்காரம் பார்த்து காசிபட்டணத்தில் உன்மனைவியை விற்று பொன்னைத் தறுவாயே (நாற்பதியாலொண்ணு) நாடுநகர் தோற்று நக்ஷத்திரகன் கையில் அடிபட்டு நான்னொந்தேன் காசிவிஸ்வநாதரே இந்தவீதினில் பெண்டை வித்து தரவேணும் அன்னை தானிருக்க என்னை நீரும்வித்து அந்தரிஷிகடனை தீரும் (ஐம்பதியாலொண்ணு) அன்னைச்சந்திரமதியே கொள்ளுவாரு முண்டோ அக்கினிபகவான் அந்தணரைப்போலே வந்தடுமைக் கொண்டான் ஏந்திழையாள் பாலன் மாங்குயிலைப்போலே மரையவன்பின் போனார் (அறுபதியாலொண்ணு ) அன்னையை நான் விற்று சொன்னதோர் கடனை செலித்தி விட்டேனையா நீதந்தபொருளெல்லாம் தரகுபணமாச்சு தவமுனிறுணத்தை தாருமரிச்சந்திரா யென்னையே நான் விற்று ரீஷிருணத்தை தாரேன் (எழுபதியாலொண்ணு) என்னை கொள்ளுவாரு முண்டோ பின்னுங் காசிதன்னில் பூபன்எமராஜன் புலையனாகவந்து அடுமையாக கொண்டான் நீசொன்ன பொருள் தந்து சுவாமிநக்ஷத்ரய்யா ஒரு பொய்சொல்ல மாட்டாமல் என் பெண்டுபிள்ளைவிற்றேன் நான் புலையனுக் கமைந்தேன் (எண்பதியாலொண்ணு) என்ன செய்வேனையா கன்றை நானறுத்தேன் கையறுத்துக் கொண்டேன் வீரபாகன்வந்து தாருமா றென்றேசி மயானத்திலிருந்து பிணஞ்சுடுபணமும் முழத்துணி யனுப்பி வாய்க்கரிசிதின்று நீகாத்திரும் வென்றான் (தொண்ணூருடலொண்ணு) அவன் சொற்படி தவரேன் அவனப்படியிருக்க மறையவனும் சந்திர மதிதனையழைத்து திதிவருகுதென்று ஊர்பிள்ளைகளும் போனார் உன்பிள்ளையும்கூட தெற்பையும்யெலையும் பரித்துவரச்சொல்லி அனுப்படி நீசந்தி (௩௱ — பிள்ளையாரேவாரி) பிள்ளையையனுப்பி வனத்துக்கவர் போக வழிசயனம் பார்த்தாள் இடந்தனில் நரையான் எதிர்வரக்கண்டாள் வலந்தனில் கெருடன் வருகுதே மகனே ஆகாதசயனம் ஆகுதே மகனே (ஒருவதியாலொண்ணு) உன்னை நாநனுப்பி நான் என்னமா யிருப்பேன் நீசெடியில் நுழையாமல் கடிகிவருவாயே காட்டிலவரோடி கரரெலைபிரண்டை காய்கரியிலைகள் நேராகப்பரித்தார் லோகிதனைக்காணோம் (இரு தியாலொண்ணு) அவனெங்கேயென்று தேடி வழியில் கண்டவரை கேட்டாள் தெற்பையும் பரித்தான் தீண்டிற்றே அரவம் ல்லதென்று சொல்லி நடந்தோடிவந்து சந்திரமதிக்கி வந்து சேதி சொன்னார் (முப்பதியாலொண்ணு) முனிவன் விஸ்வாமித்திரர் சதியென்றறியேனே இதற்கென்ன செய்வேனென்று அவள் ஏங்கியே புலம்பி மறையவனைக் கேட்டாள் நீவீட்டுவேலைசெய்து பார்த்துவாடியென்றார் அவளப்படியே செய்து அழுதவள் புலம்ப போவென்றவர் சொன்னார் (நாற்பதியாலொண்ணு) நடந்தாள் புலம்பி நாடுவிட்டுக் காடு வனத்தில்கண்டபேரை வழிகேட்டுப்போனாள் அருமைமகனான லோகிதனைக் கண்டாள் உந்திவுண்ணச்செல்லி சந்தியும் புலம்ப (ஐம்பதியாலொண்ணு) அப்பனேமகனே ஆருயிர் புதல்வா என்மகனே வாடா எழுந்திருடா வென்று ஏந்து கொங்கைமேலே தாங்கி அணைந்தாளே தகப்பனைப் பிரிந்தாய் வனத்திலே யிரந்தாய் (அறுபதியாலொண்ணு) ஆரோயிவர்பிள்ளை வேரேயெனக்குண்டோ பஞ்சணை மெத்தைமேல் படுக்கெண்ணா படுக்காய் கொஞ்சித்தழை மேலே கூசாமல்படுத்தாய் கௌசிகமுனியால் வீடுனாடிழந்தோம் (எழுபதியாலொண்ணு) என்னைப்பணிந்தோரை நான்பணியலாச்சே மரையவர்க்கடுமை மகனேவிலைப்பட்டோம் காட்டிலே அரவம் கடித்துதே மகனே தந்தை தாய்மறந்தேன் வந்து நானழுதேன் (எண்பதியாலொண்ணு) ஏந்துகொங்கைபாலை நீசாந்துவுண்ணவாராய் பொன்னினால் தீபிட்டி பிடிப்பார்கள் தாதி மின்னியநிமலி பூச்சிவிளக்காச்சே பெற்று நான் வளர்த்து பூமிக்கிரையிட்டேன் பொன்னான மேனி மண்ணின் மேல் புரண்டாய் (தொண்ணூருடலொண்ணு) துன்னும் விஸ்வாமித்திரா நாநென்ன செய்வேனையா எனக்குரிமை செய்வாய் என்று நானிருந்தேன் உன்னுயிரைப்போக்கி உனக்கு துரிமைசெய்வேன் பிள்ளையில்லாப்பாவின் பெருமலடியானேன் விதிவச மிதுவோ விஸ்வாமித்திரன்மாய்கை (௪௱ — பிள்ளையாரேவாரி) பிள்ளையையெடுத்து புலம்பியே நடந்தாள் இது முன் செய்த வினையோ செந்தணலடைக்க வந்தேனே மகனே சுடலையிலிருந்து புலையனும் யெழுந்தான் (ஒருவ தியாலொண்ணு) ஓடியவன்வந்து ஆரடி நீயென்றான என்மைந்தனுமிரந்தான் தணல்மூட்ட வந்தேன் கூலிகாசிதந்து நீமூட்டடி தணலை வகையில்லை யென்றாள் மங்கிலியங்கேட்டான் வாணவர் முனிவர் மகாதேவருங் காணார் (இருபதியாலொண்ணு) என்னுனடய தாலி இந்த நீச்சன் கண்டானையா என்னிட புருஷன் காண்பதேயல்லாமல் அரனயனைனெந்து அழுதவன் புலம்ப நாவிலுரந்தாலி காணவு மெண்ணாதே ஒரு பொய்சொல்லமாட்டாமல் போனானேமகன் தான் (முப்பதியாலொண்ணு) முன்செய்தவினையோ மன்னவன் மகனே என்றவள் புலம்ப மதிதயன்மகளும் இவர்மன்ன நென்றறிந்து மயானங்காற்கவந்த வகையெனக்கு சொல்லு (நாற்பதியாலொண்ணு) என்னாயகியை விற்று நற்பொருள் தரகு சம்பலமாச் சென்றார் என்னையே நான் விற்று ரிஷிறுணத்தை தந்தேன் செத்தமா டுரிததேன் இந்தசுடலை தன்னைக்கார்த்தேன் (ஐம்பதியாலொண்ணு) அசத்தியம் வாராமல் காப்பண முந்தந்தால் தகனஞ்செய்து வைப்பேன் அழுது மெள்ள போயி மரையவனைக் கேட்டாள் கெதியில்லை யென்றான் தக்கன் விஸ்வாமித்திரன் காசிமகாராசன் பாலனை முரித்து (அறுபதியாலொண்ணு) அழுதவள் வரச்சே வழியினிலே போட்டான் அவள் ஏங்கியே புலம்பி தாங்கியேயெடுத்தாள் தன்மைந்தனைக் காணாமல் மதவல்லியும் புலம்ப காசிமகாராசன் அந்தகள்ளரை பிடிக்க தூதர்களைவிட்டான் (எழுபதியாலொண்ணு) ஏந்திழையைக்கேட்டு ராசன்முன்னே விட்டார் அவள் வாக்குகளை கேட்டார் குழந்தைகையிலிருக்க நானில்லை யென்றால் போமோ மயானங்கொண்டு நீங்கள் வீரபாகன்கையால் சிரந்துணித் துவாரும் (எண்பதியாலொண்ணு) ஏந்திழையை வெட்டி சேதியை யனுப்பும் சந்திரமதியை தலைகுனியச் சொல்லி சந்திரவாளாலே தாங்கியவன் யோங்க வானவருந்தேவர் வந்துகைபிடிக்க எந்தன்கைபிடித்த ஈசனேசரணம் (தொண்ணூருடலொண்ணு) உன் துன்பமெல்லாம் போச்சே உன் சீமையுனக்காச்சே சத்தியம் வுனக்கே தரணியரிச்சந்திரா ஒருபொய் சொல்லமாட்டாமல் பெண்டு பிள்ளை வித்தாய் நீபுலயனுக்கமுந்தாய் வாய்க்கரிசி தின்றாய் இந்த ராச்சியமோயாண்டாய் இந்தநாடு நகையாதோ ஆனகுரைசோரும் வாருமரிச்சாதிரா உன்னை வாங்கினவன்யேமன் மாண்டுபோன பிள்ளை கலகலென் றெழுந்தான் ஈஸ்வரனுமம்மன் இந்திரனும் தேவர் மாயவனுமம்மன் வசிட்டமாமுனியும் அயோத்தியே சென்று அரிச்சந்திரராசனுக்கும் சந்திரமதிக்கும் பட்டமேதரித்தார் பாரெல்லாமளித்தார் மங்களமேபாடி வாழ்த்தி சேஷையிட்டார் சோபனமேபாடி தெய்வலோகம் போனார் இந்தகதை கேட்டார் பஞ்சபூதமொன்றாய் தஞ்சமுடன்வாழ்வார் அரிச்சந்திரன் ஏத்தப்பாட்டு முற்றிற்று
Contents | Home