அடுக்கு நிலைபோதம் contents.html about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் கடவுள் துணை. அடுக்கு நிலைபோதம். சென்னை பூமகள்விலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது 1923 நெ-24, தாண்டவராயப்பிள்ளைவீதி
Contents | Home

நூல். சொல்லிறந்தவிடமெங்கே முப்பாழெங்கே துவாரபாலகரெங்கே முதற்பாழெங்கே நல்வசங்குநதியெங்கே வைகுந்தமெங்கே நாரணனும் ஆலிலைமேற் படுத்ததெங்கே அல்லல்படும்ஐம்புத மொடுக்கமெங்கே ஆறஞ்சுயிதழ்ரெண்டு முளைத்ததெங்கே சொல்லவல்லாருண்டானா லவரைநாமும் தொழுதுகுருவெனப்பணிந் துவணங்கலாமே. — ௧ உந்தியெனுநிலையெங்கே அறுகோணமெங்கே ஒங்காரநிலையெங்கே வுற்றவிடமுமெங்கே மந்திரமுஞ்சாஸ்திரமும் பிறந்ததெங்கே மறைநாலும்விரித்தவயன் தானுமெங்கே முந்திவருங்கணபதியும் பிறந்ததெங்கே முக்கோணமுனையெங்கே யடிதானெங்கே இந்தவகைபொருளறிந்து சொல்வார்தம்மை இறையவனென்றேகருதி யியம்பலாமே. — ௨ பற்பதத்திபொங்கிவரும் வழிதானெங்கே பரிந்துமுறைகொண்டுநின்ற அறிவுமெங்கே உற்பனமாங்கருநின்று விளைந்ததெங்கே யொருபா தந்தாக்கிநின்ற வடையாளமெங்கே தற்பரமாயாகிநின்ற நிலைதானெங்கே சர்வவுயிராயெடுத்த சிவனுமெங்கே இப்பொருளையறிந்துரைக்கும் பெரியோர்தம்மை இறையவனென்றேகருதி யியம்பலாமே. — ௩ அடிமுடியுநடுவான நிலையுமெங்கே அறுசுவையுங்கொண்டொளித்த விடமுமெங்கே வடிவான வைந்தலைமா ணிக்கமெங்கே வரையானவூமையெனு மெழுத்துமெங்கே இடமாகஆடிநின்ற பாதமெங்கே இச்சையுடன்பேசிநின்ற எழுத்துமெங்கே அடைவாயிப்பொருளறிந்து சொல்வார்தம்மை அடிதொழுதுகுருவென்று நம்பலாமே. — ௪ சற்குருவுஞ்சந்நிதியு மானதெங்கே சாகாதகாலெங்கே வேகாத்தலையுமெங்கே முப்பொருளுமொருபொருளாய் நின்றதெங்கே முனையெங்கேதலையெங்கே முகமுமெங்கே நற்கமலமாயிரத்தெட் டிதழுமெங்கே நாலுகையொருபாத மானதெங்கே இப்பொருளையறிந்துரைக்கும் பெரியோர்தம்மை இறையவனென்றேகருதி யியம்பலாமே. — ௫ நஞ்சணிந்தான்முகந்தா னைந்துமெங்கே ஞானக்கண்மற்றக்கண் மூன்றுமெங்கே அஞ்சுவுயிர்தனைக்கொடுக்கும் யேமனெங்கே வாயிரங்கண்ணிந்திரனார் தாமுமெங்கே பஞ்சறிவால்நின்ற பராசத்தியெங்கே பதினாலுலோகமனு மதுதானெங்கே வஞ்சமறப்பொருளறிந்து சொல்வாராகில் வணங்கிகுருபரனென்று வாழ்த்தலாமே. — ௬ நகைபிறந்தவிடமெங்கே கோபமெங்கே நரகமேழாநரக மானதெங்கே திகைத்துமறந்திடமெங்கே நினைப்புமெங்கே தீராதகுறைவந்து சூழ்ந்ததெங்கே பகைத்தவிடந்தானெங்கே ஒழுக்கமெங்கே பகலிறவுயிருந்தவிடந் தானுமெங்கே வகைபொருளையறிந்துரைக்கும் பெரியோர்தம்மை வணங்கிகுருபரனென்று வாழ்த்தலாமே. — ௭ ஆறுகாலமுகமாறு மானதெங்கே அறுபத்துநாலுகலை நின்றதெங்கே சீறுகால்பனிரெண்டிற் கழிந்ததெங்கே செத்திடமுஞ்சாகா திருந்திடமுமெங்கே பூருவநீயிருந்துவந்து பிறந்திடர்தானெங்கே புத்திதனிலன்பத்தோ ரட்சரமுமெங்கே வேறுபொருளுறையா துள்ளபடியேசொல்வார் மெல்லடியிலேபணிந்து மெலியலாமே. — ௮ ஆதிகதிற்சந்திரனும் பிறந்ததெங்கே அவரொடுங்கிநிற்குமது விடமுமெங்கே சாதிபலவொன்றாகக் கண்டதெங்கே சத்திசிவமென் றுபிரி யாததெங்கே ஓதியுணர்ந்தேபூசை மறந்ததெங்கே வுச்சிட்டநிட்டத்தே விடமுமெங்கே சோதிபோல்ஞானமொரு பெற்றபேர்கள் சொல்லியதெல்லாமுடலிற் சொல்லுவாயே. — ௯ இருள்பிறந்தவிடமெங்கே ஒடுங்கிடமுமெங்கே இரண்டுதிருசங்குநின்ற விடமுமெங்கே அருள்பிறந்துபாடிநின்ற விடமுமெங்கே அறுத்தடைந்தவாசலொன்று கண்டதெங்கே திருபிறந்தவிடமெங்கே எழுகிணறுமெங்கே திருக்கிணத்தையெறைக்கின்ற ஏத்தமெங்கே விருப்பமுடனடுக்குநிலை போதகத்தை விளம்பினோம்மெஞ்ஞான அறிவுளோர்க்கே. — அடுக்குநிலைபோதம் முற்றிற்று.
Contents | Home