ஏற்றப்பாட்டு
contents.xml
about_the_book.html
preface.html
ஏற்றப்பாட்டுகள்
௳
கடவுள் துணை.
இந்ததொண்டைநாட்டில்
மேழிற்குடியாளர் சுப்பிரமணியர்பேரில்
பாடியிறைக்கும்
ஏற்றப்பாட்டு.
சென்னை
பூமகள்விலாச அச்சுக்கூடுத்தில்
பதிப்பிக்கப்பட்டது
1923
நெ-24, தாண்டவராயப்பிள்ளை வீதி
காப்பு வெண்பா.
வையகத்திலுள்ள வளமுடையசென்னெலுக்குப்
பையஜலமிறைத்துப் பாங்குடனே — உய்யவிந்த
ஏற்றப்பாட்டைப்பாடி யென்குறைகள் தீருதற்கு
போற்றினேன் ஐங்கரன்றாட் போது.
———
விநாயகர் தோத்திரம்.
பிள்ளையாரேவாரும்
எண்ணும்பிள்ளையாரே
உன்னைத்தொழுவேனே
உனக்கடிமைநானே
எனக்கு தெய்வம் நீயே
ஐந்துகரத்தோனே
ஆனை முகத்தோனே
தும்பிமுகத்தோனே
தொந்திவயற்றோனே
பார்வதிகுமாரா
பரமனருள்பாலா
மாயன்மருகோனே
மங்கையுமைபாலா
இனிமறவேன்வேலா
———
(௨-ம்-பரியம்.)
இரண்டுடனேவாரி
எட்டுடனேவாரி
எப்படியும் நம்மை
ரட்சிப்பரேகர்த்தர்
கச்சிப்பெருந்தேவி
கரிவரதன்றேவி
கம்பன்மனையாட்டி
காமாட்சித்தாயார்
ஏலவாகுழலி
எகாம்பரனாதர்
உனை மறவேன் வேலா
———
(௰-ம்-பரியம்.)
ஒருபதியாலெட்டாம்
உலகமெல்லாமாதா
உமையவளொருத்தி
பரமன் மனையாட்டி
பார்வதிகௌரி
ஐங்கரனைப்பெற்ற
மங்கைசிவகாமி
இனிமறவேன்வேலா
———
(௨0-ம்-பரியம்.)
இருபதியாலெட்டாம்
இளங்குழவித்திங்கள்
பரமன்முடிமேலே
வீசுங்கொன்றைமாலை
ஈசர்முடிமேலே
கங்கையலை மோதும்
கர்த்தன் முடிமேலே
முருகனை மறவேன்
———
(௩0-ம்-பரியம்.)
முப்பதியாலெட்டாம்
மோகபாணம்விட்டான்
மூலபலமான
ராமபாணம்விட்டான்
ராவணனும்பட்டான்
கோதண்டம்வளைத்தான
கும்பகர்ணன்பட்டான்
இளையவனம்பாலே
இந்திரசித்தன்பட்டான்
நான்மறவேன்வேலா
———
(௪0-ம்-பரியம்.)
நாற்பதியாலெட்டாம்
நாரணன் பிறந்தான்
தேவகிமகனாய்ப்
பார்த்திபன்பிறந்தான்
பாரதப் போர் செய்ய
தனஞ்செயர்க்கு மூத்த
தருமனும்பிறந்தான்
விசையனுக்குமூத்த
வீமனும்பிறந்தான்
நரபதிக்கிளைய
நகுலசகாதேவர்
குந்திமக்களைவர்
குருகுலத்துமன்னர்
பாண்டுமக்களைவர்
பாஞ்சாலிக்கணவர்
அடிதொழுதேன்வேலா
———
(௫0-ம்-பரியம்.)
அன்பதியாலெட்டாம்
அண்ணாமலைதன்னில்
உண்ணாமுலைத்தாயார்
பண்ணினாள்தவசு
பாகம்பெறவேண்டி
உமையவள் தவசை
பரமனும்மகிழ்ந்து
பெருமானருளாலே
பெற்றாளிடப்பாகம்
ஆறுமுகவேலா
——————————
———
(௬0-ம்-பரியம்)
அறுபதியாலெட்டாம்
அம்பலத்திகூத்து
ஆடினார்பரமன்
தந்திரமாய்க்காளி
தானாடினாள்கூட
தேவரெல்லாங்கூடி
திருநடனம்பார்த்தார்
தோராமலேகாண்
வாதாடினாள்கூட
சிவபெருமானப்போ
துக்கிநின்றார்காலை
நாணிநின்றாள் காளி
தேவர்சபைமுன்னே
ஏழைபங்குவேலா
———
(௭0-ம்-பரியம்)
எழுபதியாலெட்டாம்
எழில்பெரியகாஞ்சி
நார்தனிலேவாழும்
கம்பன்மனையாட்டி
காமாட்சித்தாயார்
ஆற்றுமணல்சேர்த்து
அரனைபூசைசெய்தாள்
கம்பாநதிவெள்ளங்
கரைபுரண்டுஓட
உமையவள்பயந்து
தழுவினாள்சிவனை
தையல்முலைரெண்டும்
அரன்மேலழுந்த
கைவளைத்தழும்பு
கர்த்தன்மேலழுந்த
பரமனதுகண்டு
திருவுளமகிழ்ந்தார்
எண்ணுந்துணைவேலா
———
(௮0-ம்-பரியம்)
எண்பதியாலெட்டாம்
எங்கும்புகழ்பெற்ற
கங்கைநதிசூழ்ந்த
காசிவிஸ்வநாதர்
தேவர்துதிசெய்யும்
மாதுமையாள்பாகன்
அன்னபூரணியாம்
அன்னவிசாலாட்சி
தொழுதனடிவேலா
———
(கூ0-ம் பரியம்)
தொண்ணூறோடேவெட்டாம்
தோகைமயிலேறி
வேலாதோவாறார்
பச்சைமயிலேறி
சுப்ரமணியர்வாறார்
கானமயிலேறி
கந்தரதோவாறார்
வெற்றிமயிலேறி
வேலாதோவாறார்
(௱-ம்-பரியம் முற்றும்.)
———
வள்ளிபுலம்பாய
பிள்ளையாரேவாரும்
பிள்ளையாகப்பெற்ற
பேயன்மைந்தனல்லோ
ஆயவனைநீலி
அறுமுகவன்கொண்ட
குறத்திமகளாலும்
குறைவுவந்துசேர்ந்து
மறைக்கதெய்வயானை
மணம்புரிந்துவுங்கள்
குலத்திலொருபெண்ணை
வலப்புரத்தில்வைத்து
முடுக்காய்கலியாணம்
தொடுத்துகட்டதாலி
வயறுவுப்பினாலும்
பேயன்மகனென்று
பெண்கொடுக்கமாட்டார்
இரண்டெனேவாரி
எட்டுடனேவாரி
எ[ண்]ன்கு[ண]னத்தோன்மைந்தன்
ஏழைகள் மேல்பட்சம்
ஏத்திவையும்நாதா
ஐந்துடனேயொன்று
ஐயமற்றபாதம்
ஒழுக்கமழைபேய்ந்து
ஓங்குங்குடிபயிர்கள்
ஓங்கிமிகவயல்கள்
ஓய்தலில்லாநெற்கள்
கண்களித்துப்பார்த்து
களிப்புடனேகொய்து
காளைகளால்துவைத்து
காணுந்தொம்பைறொப்ப
கீழ்மறையோர்க்கீந்து
கீர்த்திமிகப்பெற்று
குறைகலில்லாவாழ்வை
குழந்தைமனையோடு
கூட்டிவையும் நாதா
உனை மறவேன்வேலா
———
(௰-ம்-பரியம்)
ஒருபதியாலெட்டாம்
ஒருமழைதவக்கம்
பயிரெல்லாம் வதக்கம்
ஒருமழைபெய்யாதோ
பயிர்களை தீறாதோ
குடிவளமாகாதோ
இனிமறவேன் வேலா
———
(௨0-ம்-பரியம்)
இருபதியாலெட்டாம்
இருபுறமுஞ்சோலை
மதுரைவளநாடு
பக்கமெல்லாஞ்சோலை
பாண்டிவளநாடு
சுற்றிலெல்லாஞ்சோலை
சோழவளநாடு
முருகனைமறவேன்
———
(௩0-ம்-பரியம்)
முப்பதியாலெட்டாம்
முப்புரமெரித்தார்
தற்பரன்சிரித்தான்
தேவரெல்லாங்கூடி
தேவருருவானார்
சூரியனும்திங்கள்
சுழலும்வண்டியானார்
வேதமொருநான்கும்
வெண்புரவியானார்
சாரதிபிரமன்
சமைந்தார்தேரோட்ட
ஆதிசேடன்தன்னை
நாரியாகப்பூட்டி
மேருமலைதன்னை
வில்லாகவளைத்து
மாயவனார்தம்மை
பாணமாய்த்தொடுத்து
போர்செய்யதானும்
புறப்பட்டார் சிவனார்
நான்மறவேன்வேலா
———
(௪0-ம்-பரியம்)
நாற்பதியாலெட்டாம்
நாகலோகமாளும்
ஆதிசேடமூர்த்தி
அந்தரத்தையாளும்
இந்திரனரசன்
மண்ணுலகையாளும்
அண்ணல்ரகுராமன்
அடிதொழுதேன்வேலா
———
(௫0-ம்-பரியம்)
அன்பதியாலெட்டாம்
ஆருருச்சிவனார்
தேரோடுந்தெருவில்
தொண்டர்சுந்தர்க்காக
தூதாகநடந்தார்
பா[வை]வவதன்மனைக்கு
பாதினாளிரவில்
திருவடிசிவக்க
சென்றாரேசிவனார்
ஆறுமுகவேலா
———
(சு0-ம்-பரியம்)
அறுபதியாலெட்டாம்
அலைகடல்கடைய
விஸமதில்பிறக்க
அமரர்கள்நடுங்க
சரணமென்றடைய
தஞ்சமென்றவாக்கு
அஞ்சலென்றருளி
அமுதுண்டார்விடத்தை
ஆதிசிவனாரும்
ஏழைபங்குவேலா
———
(௭0-ம்-பரியம்)
எழுபதியாலெட்டாம்
எருமைக்கிடாயேறி
எமதர்மனும்வந்து
திருக்கடையூர்தன்னில்
சிவனைபூசைசெய்யும்
பதினாறுவயது
பாலன்மார்க்கண்டனை
பாசம்போட்டிழுத்தார்
பாலனும்நடுங்க
கர்த்தன் கோபங்கொண்டு
காலனையுதைத்தான்
பூமியும்நடுங்க
காலனும்விழுந்தான்
எண்ணும்பதினாறாய்
அண்ணல்வரம்தந்தார்
எண்ணுந்துணைவேலா
———
(௮0-ம்-பரியம்)
எண்பதியாலெட்டாம்
ஏழை ரகுராமன்
சீதைமணவாளன்
கோசலைகுமாரன்
கோதண்டவில்லாளி
அயோத்திநகறாளும்
ஆண்மையுள்ளராமர்
தொழுதனடிவேலா
———
(௯0-ம்-பரியம்)
தொண்ணூறோடெட்டாம்
தென்மதுரை சொக்கர்
மண்சுமந்தாரப்போ
வைகையணைகட்ட
வாங்கிக்கொண்டார்கூலி
வாணிச்சிகைபிட்டு
வாயிலிட்டுப்போவார்
பிட்டுமாண்டிடுமாம்
ஒருதட்டுமண்போட்டு
மறுபடியும் வருவார்
வாணிச்சிகைபிட்டுக்கு
ஓடிவந்துநிற்பார்
ஓடிபலம்பாய
———
(௱ம்-பரியம்)
பிள்ளையாரேவாரும்
பிடித்தேனையாஎற்றம்
விக்கினரேவாரும்
விட்டுவிட்டேன்ஏற்றம்
ஆக-பரியம்—௨0—க்கு இலக்கம்—௧0௩.
ஏற்றப்பாட்டு முற்றிற்று.