ஆத்திசூடிசிந்து contents.html about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் கடவுள் துணை. ஆத்திசூடிசிந்து ஓரடித்தங்கப்பண் சென்னை — சூளை சங்கநிதிவிளக்க அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

வெண்பா சென்னைவளரச்சுத் தலைவர்களே செப்பக்கேள் நன்னெறியாமிச்சிந்தை நாடியே — இன்னொருவர் அச்சிடவந்தாலும் அவர்க்குவிடைதாரா இச்சிறுவன் விண்ணப்பமிது பொல்லாமனதே புகழில்லாப்புண் மன கல்லாதேமனதே கெட்டமனதே கழறுவேன்கேனினிதாய் அத்திமுகத்தோனை — அனுதினமறவாதே ஆதிசிவமூர்த்தி — அடிகள்மறவாதே இவ்வுலகில்யாவருக்கும் — இடரினைத்தேடாதே ஈநனர்தமைசேர — எள்ளைவுநினையாதே உலகத்திலெந்தாளும் — குலப்பழுபேசாதே ஊமைகுருடர்முதல் — வொருத்தரைமேசாதே எவர்க்குப்பிரியவனாய் — இருக்கவேயெண்ணுவாய் ஏழையர்தமைக்கண்டு — ஏளனஞ்செய்யாதே ஐயமெனவந்தோரை — நையவேபேசாதே ஒருத்தர்க்கென்னாளும் — ஒருதீங்குந்தேடாதே ஓதுவித்தோன்தனக்கு — ஒர்குறையுஞ்செய்யாதே ஔவியம்பேசி — அகலத்திற்றிரியாதே அக்கரையாய்பொருளை மனதே அன்பாகத்தேடிடுவாய் கட்டினமனைவிதன்னை — கண்ணீர்சோரவையாதே காசுபணஞ்சேர்த்து — கணுகக்கிட்டலையாதே கிள்ளைமுதல்பட்சிக்கும் — கேடுநினைக்காதே கீழ்மக்களோடு — கிட்டியுரவாடாதே குற்றம்நினைந்தால் — சுற்றமும்பொய்யாதே கூரானவார்த்தைகூறி — கொடுமைவிளைக்காதே கெடுக்கும்தூர்நேசரிடம் — அடுத்துநீசேராதே கேட்டுங்கேளாமலே — கிட்டிசண்டைசெய்யாதே கைப்பொருளைநம்பிமெய்ப் — பொகு[ரு]ளைவிக்காதே கொம்பனைமார்சண்டைதனில் — வம்புதீர்க்கபோகாதே கோபத்தையெந்நாளும் — குடியரசுக்கொள்ளாதே சத்தியத்திற்குட்படுவாய் — மனதே அசத்தியத்திற்குட்படாதே சரதிப்போர்தம்மிடஞ் — கார்ந்துரலாடாதே சிறுவர்களோடுநீ — சினேகிக்கமாடாதே சீரில்லாவார்த்தைகளே — செவிதனிற்கொள்ளாதே சுகத்திலிருக்கும்போது — அகததைபபடைக்காதே சூதுவாதும்பேசி — வேதனைக்குள்ளாகாதே செப்புபேரிவ்வுடலைச் — சதமென் றுபெண்ணாதே சேதிசொல்லவந்தோரைச் — சீறிமுழியாதே சையெனவேயாரும் — சாற்றத்திரியாதே சொல்லும்பெரியோர்தம் — சொல்லைநீதட்டாதே சோம்பருடையரோடு — தேங்கித்திரியாதே சௌரியந்தன்னைப்பேசி மனமே சங்கைகொண்டு நின்றிடாதே தந்தையதுவார்த்தை — தள்ளிநடக்கொணாது தாயின்மனபெரிய — தாய்வகைச்சொல்லொணாது திருடர்களோடுநீ — சினேகஞ்செய்யொணாது தீவினையாமென்னுந் — தீங்கைநினைக்கொணாது துன்னும்பெரியோரை — தூஷணைசெய்யொணாது தூரிக்கலப்போரைத் — துணைவரென்றெண்றொணாது தெய்வமதில்லையெனச் — செப்பவுமெண்ணாது தேவியைவிட்டுவிட்டு — தெரிவிற்றிரியொணாது தையலார்மங்கையவள தன்சொல்லைகேட்கொணாது தொல்லைஎன்றில்லரத்தை துறந்துமேசெல்லொணாது தோப்புந்தடாகம்பூந் — தோட்டமழிக்கொணாதி நல்லோர்மனதுநோக — மனமே நாட்டிற்றரியொணாது நாவலர்கள்தமக்கு — நவின்றதைத்தரவேண்டும் நித்தமிரப்போர்க்கு — நினைலாய்த் தரவேண்டும் நீதியநீதியை — நிதானித்தரியவேண்டும் நுட்ப[ம்]தரயொருவர் — பெட்பையரியவேண்டும் நூல்களபுராணமதை — நுடகருத் தரியவேண்டும் நெஞ்சுருதியாக — நிலத்துலறையொணாது நேத்திருந்தாரென்று — நிசமேவொண்ணொணாது நையவொருவரைப் — பையவேபேசொணாது ணெத்துசொல்லாரையும் நுணுக்கமாய்சொல்லொணா[து] பத்தமில்லர்க்கொடிய மனதே பகருவேனின்னமுங்கேள் பாதகத்தொழிலைப் — பார்க்கவுமொண்ணாது பிறர்மனையின் மேல் — பிரியம்வைக்கவொண்ணாது பீட்டையவென்றால் — பெரியோர்கள்நேசந்தேடு புலலர்கள்தம்மோடு — புணர்ந்தேகவொண்ணாது பூமியிலிரப்போரை — புகுந்தடிக்கவொண்ணாது பெண்ணாசையாலேநீ — பித்தனாகவொண்ணாது பேடியென்றேயுலகில் — பேர்வகிக்கவொண்ணாது பைநாகத்தோடுநீ — பரிக்ஷிக்கவொண்ணாது பொறுமையெந்நாளும்நீ — பொருந்தியிருக்கவேண்டும் போகாதயிடத்திற்கு — போகவுமொண்ணாது மண்ணின்மீதினில்நின்று — மனதே வழக்கோரஞ்சொல்லொணாது மாமியார்வீட்டினில் — மருவியிருக்கொணாது மித்துர்க்குத்துரோசும் — நினைக்கவேயொண்ணாது மீண்டொருவர்வத்தாலும் — விளம்பவேயொண்ணாது முன்னோர்மொழியை — முனிந்தழிக்கவொண்ணாது மூடர்கள்தம்மோடு — கூடவேயொண்ணாது மெல்லியரைவிட்டு — வேரிடஞ்சொல்லொணாது மேழியதனை — வெறுக்கவேயொண்ணாது மையனசுகண்ணிதம் — வலையிற்சிக்கொணாது மொழிந்ததோர்சொல்லை — மறக்கவுமொண்ணாது மோசமதுசெய்து — காசைசேர்க்கொண்ணாது வஞ்சகரோடுறவு மனதே வையாதோருநாளுமே வாதஞ்சொல்லேனென்று ­— வழங்கியலையேதே விலையைக்குறைக்காதே — வீண்வம்புபேசாதே வீணானவார்த்தைகூறி — காலம்ஒழிக்கொணாதே வுண்டதோர்வீட்டுக்கு ­— ரெண்டகம்நினையாதே வூரார்ருடைமைக்கு — பேராசைகொள்ளாதே வெஞ்சமரின்முன்னே — வேடிக்கையாய்நில்லாதே வேந்தன்றன்சொல்லைநீ — வெறுத்துநீதள்ளாதே வையகத்தோர்சொல்லும் — வழியைத் தடுக்காதே ஒருவர் பேச்சைநீ — ஒருவரோடுகூறாதே ஓதுமிராசாத்னம் — உரைத்ததைதள்ளாதே ஔவைசொன்னதுமிதுவே மனதே ஐயனருள்பெற்றுவாழி வேதியர்குலமும்வாழி வேந்தர்கள் தானும்வாழி ஆதிபிலவ்வைசொன்ன அருந்தமிழ்நீதிவாழி கோதிலாக்குணம்படைத்த சூ[கு]வலயத்தோர்கள்வாழி நீதிநன்னெறிகற்றோர்க[ள்]நீடூழிவாழிவாழி முற்றிற்று.
Contents | Home