preface cover.html preface.html nUl.html ஏரெழுபது மகாகவி கம்பர் முகவுரை.
பொருளடக்கம் | ஏரெழுபது (நூல் அறிமுகம்) | அகெடமி

மகாகவியாகிய கம்பர் வேளாளர்மேற் பாடிய ஏரெழுபது என்னும் நூலை உரையுடன் வெளிக்கொணரும் பணியை அடியே னிடம் ஒப்படைத்தனர் திருவாளர். V. M. நரசிம்மன் (பொறியியல் வல்லுநர்) அவர்கள். இவரது தந்தையாரும் அடியேனது ஞானாசிரியருமாகிய ஸ்ரீ. உ. வே. வை. மு. கோபாலகிருஷ்ணமா சாரியர் ஸ்வாமிகள் இந்நூலுக்குப் பாயிரத்துள் முதல் ஆறுசெய் யுட்கள் நீங்கலாகவும், நூலகத்து ஆறுசெய்யுட்கள் நீங்கலாகவும் (செய்யுள் எண்: 22, 24, 41, 51, 67, 69) விழுமிய உரை கண்டிருந் தமை பிரசித்தம். அக்குறைபாட்டினை நிறைசெய்ய விடுபட்ட அச்செய்யுட்களுக்கும் அடியேன் பதவுரை விசேடவுரைகள் எழுதி, முன்னரிட்ட உரைகளையும் செவ்வன் பார்வையிட்டுச் செப்பஞ்செய்து, ஒருவிரிவுரை நூலாக இவ் ஏரெழுபது இஞ் ஞான்று வெளியிடப்படுகிறது. இவ்வுரையாக்கத்தில் குணங்கள் காணப்படின் அவை என் ஆசிரியப்பெருந்தகையின் ஆசியினாலேற் பட்டவையெனவும், குற்றங்கள் காணப்படின் அவை என் மந்த புத்தியாலேற்பட்டவை யெனவும் கொண்டமையுமாறு வேண்டு கின்றேன். எனது காலத்தையெல்லாம் வீணாக்காமல் தமிழ்த்துறையிற் செலுத்தி எனக்குத் தோன்றாத்துணையாய்நின்று திருவருள் புரியும் வாழ்த்து அருட்பெருங்கடலை அநவரதமும் எண்ணியெண்ணி கின்றேன். பிலவங்க ௵ புரட்டாசி ௴ 1967 திருவல்லிக்கேணி, ஸி. ஜெகந்நாதாசார்யர்.
பொருளடக்கம் | ஏரெழுபது (நூல் அறிமுகம்) | அகெடமி