﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="tevaram.xsl"?>

<tirumurai>

<heading>
<salutation>திருச்சிற்றம்பலம்</salutation>
<title> தேவாரத் திருப்பதிகங்கள் </title>
<author>சுந்தரர் அருளிய</author>
<tirumurai>ஏழாம் திருமுறை</tirumurai>
<number>7</number>
<total>101</total>
<file>(1/6)</file>
</heading>

<pathikam>

<place>திரு வெண்ணெய்நல்லூர்</place>
<tirumurai>7</tirumurai>
<number>1</number>
<pann>இந்தளம்</pann>

<verse>
<line>பித்தா! பிறை சூடீ! பெருமானே! அருளாளா!</line>
<line>எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை</line>
<line>வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள்</line>
<line>அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?</line>
<number>1</number>
</verse>

<verse>
<line>நாயேன் பலநாளும் நினைப்பு இன்றி, மனத்து உன்னை</line>
<line>பேய் ஆய்த்திரிந்து எய்த்தேன்; பெறல் ஆகா அருள் பெற்றேன்</line>
<line>வேய் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள்</line>
<line>ஆயா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?</line>
<number>2</number>
</verse>

<verse>
<line>மன்னே! மறவாதே நினைக்கின்றேன், மனத்து உன்னை</line>
<line>பொன்னே, மணிதானே, வயிர ,ம், மே, பொருது உந்தி</line>
<line>மின் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள்</line>
<line>அன்னே! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?</line>
<number>3</number>
</verse>

<verse>
<line>முடியேன்; இனிப் பிறவேன்; பெறின் மூவேன்; பெற்றா ஊர்தீ!</line>
<line>கொடியேன் பலபொய்யே உரைப்பேனைக் குறிக்கொள், நீ,</line>
<line>செடி ஆர்  பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள்</line>
<line>அடிகேள்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?</line>
<number>4</number>
</verse>

<verse>
<line>பாதம் பணிவார்கள் பெறும் பணம் ,ம், அது பணியாய்</line>
<line>ஆதன் பொருள் ஆனேன்; அறிவு இல்லேன்; அருளாளா</line>
<line>தாது  பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள்</line>
<line>ஆதி! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?</line>
<number>5</number>
</verse>

<verse>
<line>தண் ஆர் மதிசூடீ! தழல் போலும் திருமேனீ</line>
<line>எண்ணார் புரம் மூன்றுய்ம் எரியுண்ண ,ந், நகைசெய்தாய்</line>
<line>மண் ஆர்  பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள்</line>
<line>அண்ணா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?</line>
<number>6</number>
</verse>

<verse>
<line>ஊன் ஆய், உயிர் ஆனாய், உடல் ஆனாய்; உலகு ஆனாய்</line>
<line>வான் ஆய்; நிலன் ஆனாய்; கடல் ஆனாய்; மலை ஆனாய்</line>
<line>தேன் ஆர்  பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள்</line>
<line>ஆனாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?</line>
<number>7</number>
</verse>

<verse>
<line>ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ணச் சில தொட்டாய்</line>
<line>தேற்றாதன சொல்லித் திரிவேனோ? செக்கர்வான் நீர்</line>
<line>ஏற்றாய்  பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள்</line>
<line>ஆற்றாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?</line>
<number>8</number>
</verse>

<verse>
<line>மழுவாள் வலன் ஏந்தீ! மறை ஓதீ! மங்கைபங்கா!</line>
<line>தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே</line>
<line>செழுவார்;  பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள்</line>
<line>ஆரூரன்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?</line>
<number>9</number>
</verse>

<verse>
<line>கார் ஊர் புனல் எய்தி, கரை கல்லித் திரைக்கையால்</line>
<line>பார் ஊர் புகழ் எய்தி, திகழ் பல் மா மணி உந்தி</line>
<line>சீர் ஊர்  பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள்</line>
<line>ஆரூரன் எம்பெருமாற்கு ஆள்  அல்லேன் எனல் ஆமே?</line>
<number>10</number>
</verse>

</pathikam>

</tirumurai>
