﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="tevaram.xsl"?>

<tirumurai>

<heading>
<salutation>திருச்சிற்றம்பலம்</salutation>
<title> தேவாரத் திருப்பதிகங்கள் </title>
<author>திருநாவுக்கரசர் அருளிய</author>
<tirumurai>ஆறாம் திருமுறை</tirumurai>
<number>6</number>
<total>99</total>
<file>(1/6)</file>
</heading>

<pathikam>
<place>கோயில்</place>
<number>1</number>
<title>பெரிய திருத் தாண்டகம்</title>

<verse>
<line>அரியானை, அந்தணர்தம் சிந்தையானை,</line>
<line> அருமறையின் அகத்தானை, அணுவை, யார்க்கும்</line>
<line>தெரியாத தத்துவனை, தேனை, பாலை,</line>
<line> திகழ் ஒளியை, தேவர்கள்தம் கோனை, மற்றைக்</line>
<line>கரியானை, நான்முகனை, கனலை, காற்றை</line>
<line> கனைகடலை, குலவரையை, கலந்து நின்ற</line>
<line>பெரியானை, பெரும்பற்றப்புலியூரானை</line>
<line> பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே  </line>
<number>1</number>
</verse>

<verse>
<line>கற்றானை, கங்கை வார்சடையான் தன்னை</line>
<line> காவிரி சூழ் வலஞ்சுழியும் கருதினானை</line>
<line>அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வானை</line>
<line> ஆரூரும் புகுவானை, அறிந்தோம் அன்றே;</line>
<line>மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை</line>
<line> வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்-</line>
<line>பெற்றானை, பெரும்பற்றப்புலியூரானை</line>
<line> பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே  </line>
<number>2</number>
</verse>

<verse>
<line>கருமானின் உரி அதளே உடையா வீக்கி</line>
<line> கனைகழல்கள் கலந்து ஒலிப்ப, அனல் கை ஏந்தி</line>
<line>வரு மானத் திரள்தோள்கள் மட்டித்து ஆட,</line>
<line> வளர்மதியம் சடைக்கு அணிந்து, மான் நேர் நோக்கி</line>
<line>அரு மான வாள்முகத்தாள் அமர்ந்து காண,</line>
<line> அமரர்கணம் முடி வணங்க ஆடுகின்ற</line>
<line>பெருமானை பெரும்பற்றப்புலியூரானை</line>
<line> பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே  </line>
<number>3</number>
</verse>

<verse>
<line>அருந்தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன் தன்னை</line>
<line> அமரர்கள்தம் பெருமானை, அரனை, மூவா-</line>
<line>மருந்து அமரர்க்கு அருள்புரிந்த மைந்தன்தன்னை</line>
<line> மரிகடலும் குலவரையும் மண்ணும் விண்ணும்</line>
<line>திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும்</line>
<line> திரி சுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய</line>
<line>பெருந்தகையை, பெரும்பற்றப்புலியூரானை</line>
<line> பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே   </line>
<number>4</number>
</verse>

<verse>
<line>அருந்துணையை, அடியார்தம் அல்லல் தீர்க்கும் </line>
<line> அருமருந்தை; அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி</line>
<line>வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு</line>
<line> வான் புலன்கள் அகத்து அடக்கி, மடவாரொடும்</line>
<line>பொருந்து அணைமேல் வரும் பயனைப் போக மாற்றி</line>
<line> பொது நீக்கி தனை நினைய வல்லோர்க்கு என்றும்</line>
<line>பெருந்துணையை; பெரும்பற்றப்புலியூரானை</line>
<line> பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே   </line>
<number>5</number>
</verse>

<verse>
<line>கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன்தன்னை</line>
<line> கன வயிரக்குன்று அனைஉய காட்சியானை</line>
<line>அரும்பு அமரும் பூங்கொன்றைத்தாரான்தன்னை</line>
<line> அருமரையோடு ஆறு அங்கம் அயினானை</line>
<line>சுரும்பு அமரும் கடிபொழில்கள் சூழ் தென் ஆரூர்ச்</line>
<line> சுடர்க்கொழுந்தை, துளக்கு இல்ல விளக்கை, மிக்க</line>
<line>பெரும்பொருளை, பெரும்பற்றப்புலியூரானை</line>
<line> பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே  </line>
<number>6</number>
</verse>

<verse>
<line>வரும் பயனை, எழுநரம்பின் ஓசையானை</line>
<line> வரை சிலையா வானவர்கள் முயன்ற வாளி</line>
<line>அரும் பயம் செய் அவுணர் புரம் எரியக் கோத்த</line>
<line> அம்மானை, அலைகடல் நஞ்சு அயின்றான் தன்னை</line>
<line>சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில்</line>
<line> துளன்காத சிந்தையராய்த் துறந்தோர் உள்ளப்</line>
<line>பெரும்பயனை, பெரும்பற்றப்புலியூரானை</line>
<line> பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே  </line>
<number>7</number>
</verse>

<verse>
<line>கார் ஆனை ஈருரிவைப்போர்வையானை </line>
<line> காமரு பூங் கச்சி ஏகம்பன்தன்னை,</line>
<line>ஆரேனும் அடியவர்கட்கு அணியான்தன்னை,</line>
<line> அமரர்களுக்கு அறிவு அரிய அளவு இலானை</line>
<line>பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்</line>
<line> பயில்கின்ற பரஞ்சுடரை, பரனை, எண் இல்</line>
<line>பேரானை பெரும்பற்றப்புலியூரானை</line>
<line> பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே   </line>
<number>8</number>
</verse>

<verse>
<line>முற்றாத பால்மதியம் சூடினானை</line>
<line> மூ உலகம் தான் ஆய முதல்வன்தன்னை</line>
<line>செற்றார்கள் புரம் மூன்றும் செற்றார்ன்தன்னை</line>
<line> திகழ் ஒளியை, மரகதத்தை, தேனை, பாலை</line>
<line>குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன் தன்னை</line>
<line> கூத்து ஆட வல்லானை, கோனை, ஞானம்</line>
<line>பெற்றார்கள் பெரும்பற்றப்புலியூரானை</line>
<line> பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே   </line>
<number>9</number>
</verse>

<verse>
<line>கார் ஒளிய திருமேனிச் செங்கண் மாலும்</line>
<line> கடிக்கமலத்து இருந்த ,அ, யனும், கடணா வண்ணம்</line>
<line>சீர் ஒளிய தழல்பிழம்பு ஆய் நின்றா தொல்லைத்</line>
<line> திகழ் ஒளியை, சிந்தைதன்னை மயக்கம் தீர்க்கும்</line>
<line>ஏர் ஒளியை; இரு நிலனும், விசும்பும், விண்ணும்,</line>
<line> ஏழுலகும், கடந்து அண்டத்து அப்பால் நின்ற</line>
<line>பேர் ஒளியை; பெரும்பற்றப்புலியூரானை</line>
<line> பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே   </line>
<number>10</number>
</verse>

</pathikam>

</tirumurai>
