﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="tevaram.xsl"?>

<tirumurai>

<heading>
<salutation> திருச்சிற்றம்பலம்</salutation>
<author> திருநாவுக்கரசர் அருளிய</author>
<title> தேவாரத் திருப்பதிகங்கள்</title>
<tirumurai> ஐந்தாம் திருமுறை</tirumurai>
<number>5</number>
<total>100</total>
<file>(1/6)</file>
</heading>

<pathikam>

<place>கோயில்</place>
<number>1</number>
<title>திருக் குறுந்தொகை</title>

<verse>
<line>அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்</line>
<line>பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை</line>
<line>என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற</line>
<line>இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே?</line>
<number>1</number>
</verse>

<verse>
<line>அரும்பு அற்றப் பட ஆய் மலர் கொண்டு, நீர்</line>
<line>சுரும்பு அற்றப் படத் து,வி, தொழுமினோ</line>
<line>கரும்பு அற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன்</line>
<line>பெரும்பற்றப்புலியூர் எம்பிரானையே!</line>
<number>2</number>
</verse>

<verse>
<line>அரிச்சு உற்ற ,வ், வினையால் அடர்ப்புண்டு, நீர்</line>
<line>"எரிச் சுற்றக் கிடந்தார்" என்று அயலவர்</line>
<line>சிரிச்சு உற்றுப் பல பேசப்படாமுனம்</line>
<line>திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்மினே!</line>
<number>3</number>
</verse>

<verse>
<line>அல்லல் என் செயும்? அருவினை என் செயும்?</line>
<line>தொல்லை வல்வினைத் தொந்தம்தான் என் செயும்?</line>
<line>தில்லை மா நகர்ச் சிற்றம்பலவனார்க்கு</line>
<line>எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே</line>
<number>4</number>
</verse>

<verse>
<line>ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுது எலாம்</line>
<line>நான் நிலாவி இருப்பன், என் நாதனை</line>
<line>தேன் நிலாவிய சிற்றம்பலவனார்</line>
<line>வான் நிலாவி இருக்கவும் வைப்பரே</line>
<number>5</number>
</verse>

<verse>
<line>சிட்டர், வானவர், சென்று வரம் கொளும்</line>
<line>சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம்பலத்து உறை</line>
<line>சிட்டன் சேவடி கைதொழச் செல்லும் அச்</line>
<line>சிட்டர்பால் அணுகான், செறு காலனே</line>
<number>6</number>
</verse>

<verse>
<line>ஒருத்தனார்; உலகங்கட்கு ஒரு சுடர்</line>
<line>திருத்தனார்; தில்லைச் சிற்றம்பலவனார்</line>
<line>விருத்தனார்; இளையார், விடம் உண்ட எம்</line>
<line>அருத்தனார்; அடியாரை அறிவரே</line>
<number>7</number>
</verse>

<verse>
<line>விண் நிறைந்தது ஓர் வெவெ அழலின் உரு</line>
<line>எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா</line>
<line>கண் நிறைந்தது அடிபொழில் அம்பலத்</line>
<line>துள் - நிறைந்தது நின்று ஆடும், ஒருவனே</line>
<number>8</number>
</verse>

<verse>
<line>வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்தம்</line>
<line>வல்லை வட்டம் மதில் மூன்று உடன்மாய்த்தவன்</line>
<line>தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை</line>
<line>ஒல்லை, வட்டம் கடந்து, ஓடுதல் உண்மையே</line>
<number>9</number>
</verse>

<verse>
<line>நாடி, நாரணன் நான்முகன் என்று இவர்</line>
<line>தேடியும், திரிந்தும் காண வல்லரோ</line>
<line>மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து</line>
<line>ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே?</line>
<number>10</number>
</verse>

<verse>
<line>மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன்</line>
<line>சதுரன், சிற்றம்பலவன், திருமலை</line>
<line>அதிர ஆர்த்து எடுத்தான் முடிபத்து இற</line>
<line>மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்மினே!</line>
<number>11</number>
</verse>

</pathikam>


</tirumurai>

