﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="tevaram.xsl"?>

<tirumurai>

<heading>
<salutation>திருச்சிற்றம்பலம்</salutation>
<author>திருநாவுக்கரசர் அருளிய</author>
<title> தேவாரத் திருப்பதிகங்கள்</title>
<tirumurai>நான்காம் திருமுறை</tirumurai>
<number>4</number>
<total>113</total>
<file>(1/6)</file>
</heading>

<pathikam>

<place>திரு அதிகைவீராட்டானம்</place>
<number>1</number>
<pann>கொல்லி</pann>

<verse>
<line>கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-</line>
<line>  கொடுமைபல செய்தன நான் அறியேன்;</line>
<line>ஏற்றாய்! அடிக்கே இரவும் பகலும்</line>
<line>  பிரியாது வணங்குவன், எப்பொழுதும்;</line>
<line>தோற்றாது என் வயிற்றின் அகம்படியே</line>
<line>  குடரோடு துடக்கி முடக்கியிட,</line>
<line>ஆற்றேன், அடியேன்;- அதிகைக் கெடில</line>
<line>  வீரட்டானத்து உறை அம்மானே!</line>
<number>1</number>
</verse>

<verse>
<line>நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன்;</line>
<line>  நினையாது ஒருபோதும் இருந்து அறியேன்;</line>
<line>வஞ்சம்இது ஒப்பது கண்டு அறியேன்;</line>
<line>  வயிற்றோடு துடக்கி முடக்கியிட,</line>
<line>நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை</line>
<line>  நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்;</line>
<line>"எஞ்சேலும் !" என்னீர் - அதிகைக் கெடில</line>
<line>  வீரட்டானத்து உறை அம்மானே!</line>
<number>2</number>
</verse>

<verse>
<line>பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்!</line>
<line>  படுவெண்தலையில் பலி கொண்டு உழல்வீர்!</line>
<line>துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால்</line>
<line>  சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர்-</line>
<line>பிணிந்தார் பொடிகொண்டு மெய் பூச வல்லீர்!</line>
<line>  பெற்றம் ஏற்று உகந்தீர்! சுற்றும் வெண்தலை கொண்டு,</line>
<line>அணிந்தீர்! அடிகேள்! அதிகைக் கெடில</line>
<line>  வீரட்டானத்து உறை அம்மானே!</line>
<number>3</number>
</verse>

<verse>
<line>முன்னம்,  அடியேன் அறியாமையினான்</line>
<line>  முனிந்து, என்னை நலிந்து முடக்கியிட,</line>
<line>பின்னை, அடியேன் உமக்கு ஆளும்பட்டேன்</line>
<line>  சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர்;</line>
<line>தன்னை அடைந்தார் வினை தீர்ப்பது அன்றோ</line>
<line>  தலை ஆயவர்தம் கடன் ஆவதுதான்?-</line>
<line>அன்னம் நடையார் அதிகைக் கெடில</line>
<line>  வீரட்டானத்து உறை அம்மானே!</line>
<number>4</number>
</verse>

<verse>
<line>காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால்,</line>
<line>  கரை நின்றவர், "கண்டுகொள்!"  என்று சொல்லி,</line>
<line>நீத்து ஆய கயம் புக நூக்கியிட,</line>
<line>  நிலைக் கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன்;</line>
<line>வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன்;</line>
<line>  வயிற்றோடு துடக்கி முடக்கியிட</line>
<line>ஆர்த்தார் - புனல் ஆர் அதிகைக் கெடில</line>
<line>  வீரட்டானத்து உறை அம்மானே!</line>
<number>5</number>
</verse>

<verse>
<line>சலம் பூவொடு, தூபம், மறந்து அறியேன்;</line>
<line>  தமிழோடு இசைபாடல் மறந்து அறியேன்;</line>
<line>நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன்;</line>
<line>  உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன்;</line>
<line>உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய்!</line>
<line>உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய்!</line>
<line>  அலந்தேன், அடியேன்; - அதிகைக் கெடில</line>
<line>வீரட்டானத்து உறை அம்மானே!</line>
<number>6</number>
</verse>

<verse>
<line>உயர்ந்தேன், மனைவாழ்க்கையும் ஒண் பொருளும்</line>
<line>  ஒருவர் தலை காவல் இலாமையினால்;</line>
<line>வயந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால் ,</line>
<line>  வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர்</line>
<line>பயந்தே என் வயிற்றின் அகம்படியே</line>
<line>  பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திட, நான்</line>
<line>அயர்ந்தேன், அடியேன்;- அதிகைக் கெடில</line>
<line>  வீரட்டானத்து உறை அம்மானே!</line>
<number>7</number>
</verse>

<verse>
<line>வலித்தேன் மனைவாழ்க்கை, மகிழ்ந்து அடியேன்</line>
<line>  வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்;</line>
<line>சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை;</line>
<line>  சங்கவெண்குழைக் காது உடை எம்பெருமான்!</line>
<line>கலித்தே என் வயிற்றின் அகம்படியே</line>
<line>  கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன,</line>
<line>அலுத்தேன், அடியேன்:- அதிகைக் கெடில</line>
<line>  வீரட்டானத்து உறை அம்மானே!</line>
<number>8</number>
</verse>

<verse>
<line>பொன் போல மிளிர்வது ஓர் மேனியினீர்!</line>
<line>  புரிபுன்சடையீர்! மெலியும் பிறையீர்!</line>
<line>துன்பே, கவலை, பிணி, என்று இவற்றை</line>
<line>  நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்!</line>
<line>என்போலிகள் உம்மை இனித் தெளியார்;</line>
<line>  அடியார் படுவது இதுவே ஆகில்;</line>
<line>அன்பே அமையும் - அதிகைக் கெடில</line>
<line>  வீரட்டானத்து உறை அம்மானே!</line>
<number>9</number>
</verse>

<verse>
<line>போர்த்தாய், அங்கு ஓர் ஆனையின் ஈர் உரி தோல்!</line>
<line>  புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய்!</line>
<line>ஆர்த்தான் அரக்கன்தனை மால்வரைக்கீழ்</line>
<line>  அடர்த்திட்டு, அருள்செய்த அது கருதாய்</line>
<line>வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்,</line>
<line>  என் வேதனை ஆன விலக்கியிடாய் -</line>
<line>ஆர்த்து ஆர் புனல் சூழ் - அதிகைக் கெடில</line>
<line>  வீரட்டானத்து உறை அம்மானே!</line>
<number>10</number>
</verse>

</pathikam>


</tirumurai>

