﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="tevaram.xsl"?>

<tirumurai>

<heading>
<salutation>திருச்சிற்றம்பலம்</salutation>
<title>தேவாரத் திருப்பதிகங்கள்</title>
<author>திருஞானசம்பந்தர்</author>
<tirumurai>மூன்றாந் திருமுறை</tirumurai>
<number>3</number>
<total>126</total>
<file>(1/6)</file>
</heading>

<pathikam>

<place>கோயில்</place>
<pann>காந்தாரபஞ்சமம்</pann>
<number>1</number>

<verse>
<line>ஆடினாய், நறூநய்யொடு, பால், தயிர்! அந்தணர் பிரியாத சிற்றம்பலம்</line>
<line>நாடினாய், இடமா! நறுங்கொன்றை நயந்தவனே!</line>
<line>பாடினாய், மறையோடு பல்கீதமும்! பல்சடைப் பனி கால் கதிர் வெண்திங்கள்</line>
<line>சூடினாய்!--அருளாய், சுருங்க எம தொல்வினையே!</line>
<number>1</number>
</verse>

<verse>
<line>கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய்! எருது ஏறினாய்! நுதல்--</line>
<line>பட்டமே புனைவாய்! இசை பாடுவ பாரிடமா,</line>
<line>நட்டமே நவில்வாய்! மறையோர் தில்லை, நல்லவர், பிரியாத சிற்றம்பலம்</line>
<line>இட்டமா உறைவாய்!--இவை மேவியது என்னை கொலோ?</line>
<number>2</number>
</verse>

<verse>
<line>நீலத்து ஆர் கரிய மிடற்றார், நல்ல நெற்றிமேல் உற்ற கண்ணினார், பற்று</line>
<line>சூலத்தார், சுடலைப் பொடி-நீறு அணிவார், சடையார்,</line>
<line>சீலத்தார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால், கழல் சேவடி கைதொழ,--</line>
<line>கோலத்தாய்!--அருளாய்! உன காரணம் கூறுதுமே.</line>
<number>3</number>
</verse>

<verse>
<line>கொம்பு அலைத்து அழகு எய்திய நுண் இடை, கோல வாள்மதி போலும் முகத்து இரண்டு</line>
<line>அம்பு அலைத்த கண்ணாள் முலை மேவிய வார்சடையாந்-</line>
<line>கமபலைத்து எழு காமுறு காளையர் காதலால் கழல்சேவடி கைதொழ,</line>
<line>அம்பலத்து உறைவாந்-அடியார்க்கு அடையா, வினையே.</line>
<number>4</number>
</verse>

<verse>
<line>தொல்லையார் அமுது உண்ண, நஞ்சு உண்டது ஓர் தூ மணிமிடறா! பகுவாயது ஓர்</line>
<line>பல்லை ஆர் தலையில் பலி ஏற்று உழல் பண்டரங்கா!--</line>
<line>தில்லையார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால், கழல்சேவடி கைதொழ,</line>
<line>இல்லை ஆம் வினைதாந்-எரிய(ம்) மதில் எய்தவனே!</line>
<number>5</number>
</verse>

<verse>
<line>ஆகம் தோய் அணி கொன்றையாய்! அனல் அங்கையாய்! அமரர்க்கு அமரா! உமை</line>
<line>பாகம் தோய் பகவா! பலி ஏற்று உழல் பண்டரங்கா!</line>
<line>மாகம் தோய் பொழில் மல்கு சிற்றம்பலம் மன்னினாய்! மழுவாளினாய்! அழல்</line>
<line>நாகம் தோய் அரையாய்!--அடியாரை நண்ணா, வினையே.</line>
<number>6</number>
</verse>

<verse>
<line>சாதி ஆர் பலிங்கி(ன்)னொடு வெள்ளிய சங்க வார்குழையாய்! திகழப்படும்</line>
<line>வேதியா! விகிர்தா! விழவு ஆர் அணி தில்லை தன்னுள்</line>
<line>ஆதியாய்க்கு இடம் ஆய சிற்றம்பலம் அம் கையால்-தொழ வல் அடியார்களை</line>
<line>வாதியாது அகலும், நலியா, மலி தீவினையே.</line>
<number>7</number>
</verse>

<verse>
<line>வேயின் ஆர் பணைத்தோளியொடு ஆடலை வேண்டினாய்! விகிர்தா! உயிர்கட்கு அமுது</line>
<line>ஆயினாய்! இடுகாட்டு எரி ஆடல் அமர்ந்தவனே!</line>
<line>தீயின் ஆர் கணையால் புரம்மூன்று எய்த செம்மையாய்! திகழ்கின்ற சிற்றம்பலம்</line>
<line>மேயினாய்!--கழலே தொழுது எய்துதும், மேல் உலகே.</line>
<number>8</number>
</verse>

<verse>
<line>தாரின் ஆர் விரி கொன்றையாய்! மதி தாங்கு நீள்சடையாய்! தலைவா! நல்ல</line>
<line>தேரின் ஆர் மறுகின் திரு ஆர் அணி தில்லைதன்னுள்,</line>
<line>சீரினால் வழிபாடு ஒழியாதது ஓர் செம்மையால் அழகு ஆய சிற்றம்பலம்</line>
<line>ஏரினால் அமர்ந்தாய்!--உன சீர் அடி ஏத்துதுமே.</line>
<number>9</number>
</verse>

<verse>
<line>வெற்று அரை உழல்வார், துவர் ஆடைய வேடத்தார், அவர்கள் உரை கொள்ளன்மின்!</line>
<line>மற்று அவர் உலகின்(ன்) அவலம்(ம்) அவை மாற்றகில்லார்;</line>
<line>கற்றவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் காதலால் கழல்சேவடி கைதொழ</line>
<line>உற்றவர், உலகின் உறுதி கொள வல்லவரே.</line>
<number>10</number>
</verse>

<verse>
<line>நாறு பூம்பொழில் நண்ணிய காழியுள் நால்மறை வல்ல ஞானசம்பந்தன்,</line>
<line>ஊறும் இந்தமிழால், உயர்ந்தார் உறை தில்லை தன்னுள்</line>
<line>ஏறு தொல்புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை, இசையால் சொன்ன பத்து இவை</line>
<line>கூறும் ஆறு வல்லார், உயர்ந்தாரொடும் கூடுவரே.</line>
<number>11</number>
</verse>

</pathikam>


</tirumurai>

