﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="tevaram.xsl"?>

<tirumurai>

<heading>
<salutation>திருச்சிற்றம்பலம்</salutation>
<author>திருஞானசம்பந்தர் அருளிய</author>
<authorabbr>sam</authorabbr>
<title>தேவாரத் திருப்பதிகங்கள்</title>
<tirumurai>முதல் திருமுறை</tirumurai>
<number>1</number>
<total>136</total>
<file>(1/6)</file>
</heading>

<pathikam>

<place>திருப் பிரமபுரம்</place>
<number>1</number>
<pann>நட்டபாடை</pann>

<verse>
<line>தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,</line>
<line>காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்</line>
<line>ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,</line>
<line>பீடு உடைய பிரமாபுரம் மேவிய, பெம்மான் இவன் அன்றே!</line>
<number>1</number>
</verse>

<verse>
<line>முற்றல் ஆமை இள நாகமொடு ஏனமுளைக் கொம்பு அவை பூண்டு,</line>
<line>வற்றல் ஓடு கலனாப் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்</line>
<line>கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்த,</line>
<line>பெற்றம் ஊர்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான் இவன் அன்றே!</line>
<number>2</number>
</verse>

<verse>
<line>நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண்மதி சூடி,</line>
<line>ஏர் பரந்த இன வெள் வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்</line>
<line>"ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது" என்னப்</line>
<line>பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!</line>
<number>3</number>
</verse>

<verse>
<line>விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை ஓட்டில்</line>
<line>உள் மகிழ்ந்து, பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்</line>
<line>மண் மகிழ்ந்த அரவம், மலர்க் கொன்றை, மலிந்த வரைமார்பில்</line>
<line>பெண் மகிழ்ந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான் இவன் அன்றே!</line>
<number>4</number>
</verse>

<verse>
<line>"ஒருமை பெண்மை உடையன்! சடையன்! விடை ஊரும்(ம்) இவன்!" என்ன</line>
<line>அருமை ஆக உரை செய்ய அமர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்</line>
<line>"கருமை பெற்ற கடல் கொள்ள, மிதந்தது ஒர் காலம்(ம்) இது" என்னப்</line>
<line>பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!</line>
<number>5</number>
</verse>

<verse>
<line>மறை கலந்த ஒலிபாடலொடு ஆடலராகி, மழு ஏந்தி,</line>
<line>இறை கலந்த இனவெள்வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்</line>
<line>கறை கலந்த கடி ஆர் பொழில், நீடு உயர் சோலை, கதிர் சிந்தப்</line>
<line>பிறை கலந்த, பிரமாபுரம் மேவிய, பெம்மான் இவன் அன்றே!</line>
<number>6</number>
</verse>

<verse>
<line>சடை முயங்கு புனலன்(ன்), அனலன்(ன்), எரி வீசிச் சதிர்வு எய்த,</line>
<line>உடை முயங்கும் அரவோடு உழிதந்து, எனது உள்ளம் கவர் கள்வன்</line>
<line>கடல் முயங்கு கழி சூழ் குளிர்கானல் அம் பொன் அம் சிறகு அன்னம்</line>
<line>பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!</line>
<number>7</number>
</verse>

<verse>
<line>வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த</line>
<line>உயர் இலங்கை அரையன் வலி செற்று, எனது உள்ளம் கவர் கள்வன்</line>
<line>துயர் இலங்கும்(ம்) உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம்</line>
<line>பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!</line>
<number>8</number>
</verse>

<verse>
<line>தாள் நுதல் செய்து, இறை காணிய, மாலொடு தண்தாமரை யானும்,</line>
<line>நீணுதல் செய்து ஒழிய(ந்) நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர் கள்வன்</line>
<line>வாள்நுதல் செய் மகளீர் முதல் ஆகிய வையத்தவர் ஏத்த,</line>
<line>பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!</line>
<number>9</number>
</verse>

<verse>
<line>புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற, நெறி நில்லா</line>
<line>ஒத்த சொல்ல, உலகம் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்</line>
<line>"மத்தயானை மறுக(வ்), உரி போர்த்தது ஒர்மாயம்(ம்) இது!" என்ன,</line>
<line>பித்தர் போலும், பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!</line>
<number>10</number>
</verse>

<verse>
<line>அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய,</line>
<line>பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை,</line>
<line>ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன்(ன்) உரை செய்த</line>
<line>திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதுஆமே.</line>
<number>11</number>
</verse>

</pathikam>

</tirumurai>
