<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="prabandam.xsl"?>

<thirumozi>

<heading>
<author>ஸ்ரீ திருப்பாணாழ்வார் அருளிச்செய்த அமலனாதிபிரான்</author>
<title>திவ்யப் பிரபந்தம் (6/14)</title>
<number>6</number>
<total>1</total>
</heading>

<padiyam>

<title> அமலனாதிப்பிரான்</title>
<number>1</number>

<verse>
<line>அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆடுபடுத்த</line>
<line>விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்</line>
<line>நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதில் அரங்கத்து அம்மான் திருக்</line>
<line>கமல பாதம், வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே!</line>
<number>1</number>
</verse>

<verse>
<line>உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற</line>
<line>நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்</line>
<line>கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடி-யார் பொழில் அரங்கத்து அம்மான் அரைச்</line>
<line>சிவந்த ஆடையின் மேல், சென்றது ஆம் என சிந்தனையே!</line>
<number>2</number>
</verse>

<verse>
<line>மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள்</line>
<line>சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்</line>
<line>அந்தி போல் நிறத்து ஆடையும் அதந்மேல் அயனைப் படைத்தது ஓர் எழில்</line>
<line>உந்தி மேலது அன்றோ! அடியேன் உள்ளத்து இன்னுயிரே!</line>
<number>3</number>
</verse>

<verse>
<line>சதுர மா மதில் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து</line>
<line>உதிர ஓட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் ஓதவண்ணன்</line>
<line>மதுர மா வண்டு பாட மா மயில் ஆடு அரங்கத்து அம்மான் திரு வயிற்று</line>
<line>உதர பந்தம், என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே!</line>
<number>4</number>
</verse>

<verse>
<line>பாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னைத் தன்</line>
<line>வாரம் ஆக்கி வைத்தான்; வைத்தது அன்றி என் உள் புகுந்தான்;</line>
<line>கோர மாதவம் செய்தனன் கொல்? அறியேன் அரங்கத்து அம்மான் திரு</line>
<line>ஆர மார்வு அது, அன்றோ! அடியேனை ஆட்கொண்டதே!</line>
<number>5</number>
</verse>

<verse>
<line>துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய-</line>
<line>வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன்</line>
<line>அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மா நிலம் எழு மால் வரை முற்றும்</line>
<line>உண்ட கண்டம், கண்டீர்! அடியேனை உயக் கொண்டதே!</line>
<number>6</number>
</verse>

<verse>
<line>கையின் ஆர் சுரி சங்கு அன லாழியர் நீள் வரைபோல்</line>
<line>மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம்</line>
<line>ஐயனார் அணி அரங்கனார் அர-வின் அணைமிசை மேய மாயனார்</line>
<line>செய்ய வாய், ஐயோ! என்னைச் சிந்தை கவர்ந்ததுவே!</line>
<number>7</number>
</verse>

<verse>
<line>பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு</line>
<line>அரிய ஆதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்</line>
<line>கரிய ஆகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப்</line>
<line>பெரிய ஆய கண்கள், என்னைப் பேதைமை செய்தனவே!</line>
<number>8</number>
</verse>

<verse>
<line>ஆல மா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்</line>
<line>ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்</line>
<line>கோல மா மணி-ஆரமும் முத்துத் தாமமும் முடிவு இல்லது ஓர் எழில்</line>
<line>நீல மேனி, ஐயோ! நிறைகொண்டது என் நெஞ்சினையே!</line>
<number>9</number>
</verse>

<verse>
<line>கொண்டல்வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்</line>
<line>உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை</line>
<line>அண்டர்கோன் அணி-அரங்கன் என் அமுதினைக்</line>
<line>கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே.</line>
<number>10</number>
<line>அமலனாதிபிரான் முற்றும்.</line>
</verse>

</padiyam>


</thirumozi>

