<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="prabandam.xsl"?>

<thirumozi>

<heading>
<author>ஸ்ரீ தொண்டரடிப் பொடிகள் அருளிச்செய்த</author>
<title>திவ்யப் பிரபந்தம் (5/14)</title>
<number>5</number>
<total>2</total>
</heading>

<padiyam>

<title> திருமாலை</title>
<number>1</number>

<verse>
<line>காவலிற் புலனை வைத்து, கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து,</line>
<line>நாவலிட்டு உழிதர்கின்றோம் நமந்தமர் தலைகள் மீதே;</line>
<line>மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ! நின் நாமம் கற்ற</line>
<line>ஆவலிப்பு உடைமை கண்டாய், அரங்க மா நகருளானே!</line>
<number>1</number>
</verse>

<verse>
<line>பச்சை மா மலை போல் மேனி, பவளவாய், கமலச் செங்கண்</line>
<line>அச்சுதா! அமரர் ஏறே! ஆயர் தம் கொழுந்தே! என்னும்</line>
<line>இச் சுவை தவிர, யான் போய் இந்திர-லோகம் ஆளும்</line>
<line>அச் சுவை பெறினும் வேண்டேன், அரங்க மா நகருளானே!</line>
<number>2</number>
</verse>

<verse>
<line>வேத நூற் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்,</line>
<line>பாதியும் உறங்கிப் போகும்; நின்றகிற் பதினையாண்டு</line>
<line>பேதை பாலகன் அது ஆகும்; பிணி பசி மூப்புத் துன்பம்;</line>
<line>ஆதலால், பிறவி வேண்டேன்; அரங்க மா நகருளானே!</line>
<number>3</number>
</verse>

<verse>
<line>மொய்த்த வல்வினையுள் நின்று, மூன்று எழுத்து உடைய பேரால்</line>
<line>கத்திரபந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான்;</line>
<line>இத்தனை அடியர் ஆனார்க்கு இரங்கும் நம் அரங்கன் ஆய</line>
<line>பித்தனைப் பெற்றும், அந்தோ! பிறவியுள் பிணங்குமாறே.</line>
<number>4</number>
</verse>

<verse>
<line>பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியது ஓர் இடும்பை பூண்டு,</line>
<line>உண்டு இராக் கிடக்கும் அப்போது உடலுக்கே கரைந்து நைந்து,</line>
<line>தண் துழாய்-மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி ஆடி</line>
<line>தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர் சோறு உகக்குமாறே!</line>
<number>5</number>
</verse>

<verse>
<line>மறம் சுவர் மதில் எடுத்து, மறுமைக்கே வெறுமை பூண்டு,</line>
<line>புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும் போது அறிய மாட்டீர்;</line>
<line>அறம் சுவர் ஆகி நின்ற அரங்கனார்க்கு ஆட் செய்யாதே,</line>
<line>புறஞ் சுவர்க் கோலஞ் செய்து புள் கௌளவக் கிடக்கின்றீரே.</line>
<number>6</number>
</verse>

<verse>
<line>புலை-அறம் ஆகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்</line>
<line>கலை அறக் கற்ற மாந்தர் காண்பரோ? கேட்பரோ தாம்?</line>
<line>தலை அறுப்பு உண்டும் சாவேன், சத்தியம், காண்மின் ஐயா!</line>
<line>சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்.</line>
<number>7</number>
</verse>

<verse>
<line>வெறுப்பொடு சமணர் முண்டர் விதி இல் சாக்கியர்கள் நின்பால்</line>
<line>பொறுப்பு அரியனகள் பேசில், போவதே நோயது ஆகி;</line>
<line>குறிப்பு எனக்கு அடையும் ஆகில், கூடுமேல், தலையை ஆங்கே</line>
<line>அறுப்பதே கருமம் கண்டாய், அரங்க மா நகருளானே!</line>
<number>8</number>
</verse>

<verse>
<line>மற்றும் ஓர் தெய்வம் உண்டே? மதி இலா மானிடங்காள்!</line>
<line>உற்றபோது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர்;</line>
<line>அற்றம் மேல் ஒன்று அறியீர்; அவன் அல்லால் தெய்வம் இல்லை;</line>
<line>கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே.</line>
<number>9</number>
</verse>

<verse>
<line>நாட்டினான் தெய்வம் எங்கும்; நல்லது ஓர் அருள்தன்னால்</line>
<line>காட்டினான் திருவரங்கம், உய்பவர்க்கு உய்யும் வண்ணம்;</line>
<line>கேட்டீரே நம்பிமீர்காள்! கெருடவா கனனும் நிற்கச்</line>
<line>சேட்டைதன் மடியகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே!</line>
<number>10</number>
</verse>

<verse>
<line>ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து, உலகங்கள் உய்யச்</line>
<line>செருவிலே அரக்கர்கோனைச் செற்ற நம் சேவகனார்</line>
<line>மருவிய பெரிய கோயில் மதில்-திருவரங்கம் என்னா,</line>
<line>கருவிலே திரு இலாதீர்! காலத்தைக் கழிக்கின்றீரே.</line>
<number>11</number>
</verse>

<verse>
<line>நமனும் முற்கலனும் பேச, நரகில் நின்றார்கள் கேட்க,</line>
<line>நரகமே சுவர்க்கம் ஆகும் நாமங்கள் உடையன் நம்பி;</line>
<line>அவனது ஊர் அரங்கம் என்னாது, அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்</line>
<line>கவலையுள் படுகின்றார்: என்று அதனுக்கே கவல்கின்றேனே.</line>
<number>12</number>
</verse>

<verse>
<line>எறியும் நீர் வெறிகொள் வேலை மாநிலத்து உயிர்கள் எல்லாம்,</line>
<line>வெற்கொள் பூந்துளவ மாலை விண்ணவர்கோனை ஏத்த</line>
<line>அறிவு இலா மனிசர் எல்லாம், அரங்கம் என்று அழைப்பராகில்</line>
<line>பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே.</line>
<number>13</number>
</verse>

<verse>
<line>வண்டினம் முரலும் சோலை, மயிலினம் ஆலும் சோலை,</line>
<line>கொண்டல் மீது அணவும் சோலை, குயிலினம் கூவும் சோலை,</line>
<line>அண்டர்கோன் அமரும் சோலை, அணி திருவரங்கம் என்னா</line>
<line>மிண்டர்பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே.</line>
<number>14</number>
</verse>

<verse>
<line>மெய்யர்க்கே மெய்யன் ஆகும், விதி இலா என்னைப் போலப்</line>
<line>பொய்யர்க்கே பொய்யன் ஆகும்; புட்கொடி உடைய கோமான்</line>
<line>உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னை</line>
<line>ஐயப்பாடு அறுத்துத் தோன்றும்; அழகன் ஊர் அரங்கம் அன்றே.</line>
<number>15</number>
</verse>

<verse>
<line>சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோடு இசைந்த காலம்,</line>
<line>மாதரார் கயற்கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனைப்</line>
<line>போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து, தன்பால்</line>
<line>ஆதரம் பெருக வைத்த அழகன் ஊர் அரங்கம் அன்றே.</line>
<number>16</number>
</verse>

<verse>
<line>விரும்பி நின்று ஏத்த மாட்டேன், விதி இலேன், மதி ஒன்று இல்லை;</line>
<line>இரும்புபோல் வலிய நெஞ்சம் இறை-இறை உருகும் வண்ணம்</line>
<line>சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட</line>
<line>கரும்பினைக் கண்டு கொண்டு, என் கண்ணினை களிக்குமாறே!</line>
<number>17</number>
</verse>

<verse>
<line>இனி திரைத் திவலை மோத எறியும் தண் பரவை மீதே</line>
<line>தனி கிடந்து அரசு செய்யும் தாமரைக்கண்ணன் எம்மான்:</line>
<line>கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்</line>
<line>பனி-அரும்பு உதிருமாலோ! என் செய்கேன், பாவியேனே?</line>
<number>18</number>
</verse>

<verse>
<line>குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி</line>
<line>வடதிசை பின்பு காட்டித் தெந்திசை இலங்கை நோக்கிக்</line>
<line>கடல் நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு</line>
<line>உடல் எனக்கு உருகுமாலோ! என் செய்கேன் உலகத்தீரே?</line>
<number>19</number>
</verse>

<verse>
<line>பாயும் நீர் அரங்கந் தன்னுள் பாம்பு-அணைப் பள்ளிகொண்ட</line>
<line>மாயனார் திரு நன் மார்வும் மரகத-உருவும் தோளும்</line>
<line>தூய தாமரைக் கண்களும் துவர்-இதழ்ப் பவள-வாயும்</line>
<line>ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலல் ஆமே?</line>
<number>20</number>
</verse>

<verse>
<line>பணிவினால் மனமது ஒன்றிப் பவள-வாய் அரங்கனார்க்குத்</line>
<line>துணிவினால் வாழ மாட்டாத் தொல்லை நெஞ்சே! நீ சொல்லாய்:</line>
<line>அணியின் ஆர் செம்பொன் ஆய அருவரை அனைய கோயில்</line>
<line>மணி அனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கல் ஆமே?</line>
<number>21</number>
</verse>

<verse>
<line>பேசிற்றே பேசல் அல்லால், பெருமை ஒன்று உணரல் ஆகாது;</line>
<line>ஆசற்றார் தங்கட்கு அல்லால், அறியல் ஆவானும் அல்லன்;</line>
<line>மாசற்றார் மனத்துளானை வணங்கி நாம் இருப்பது அல்லால்,</line>
<line>பேசத்தான் ஆவது உண்டோ ? பேதை நெஞ்சே! நீ சொல்லாய்.</line>
<number>22</number>
</verse>

<verse>
<line>கங்கையிற் புனிதம் ஆய காவிரி நடுவுபாட்டுப்</line>
<line>பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்</line>
<line>எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தது ஓர் கிடக்கை கண்டும்</line>
<line>எங்ஙனம் மறந்து வாழ்கேன்? ஏழையேன், ஏழையேனே!</line>
<number>23</number>
</verse>

<verse>
<line>வெள்ள-நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கந் தன்னுள்</line>
<line>கள்வனார் கிடந்தவாறும் கமல நன் முகமும் கண்டும்</line>
<line>உள்ளமே! வலியை போலும்! ஒருவன் என்று உணர மாட்டாய்;</line>
<line>கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே!</line>
<number>24</number>
</verse>

<verse>
<line>குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை தன்னை</line>
<line>ஒளித்திட்டேன், என்கண் இல்லை; நின்கணும் பத்தன் அல்லேன்;</line>
<line>களிப்பது என் கொண்டு? நம்பீ! கடல்வண்ணா! கதறுகின்றேன்;</line>
<line>அளித்து எனக்கு அருள்செய், கண்டாய், அரங்க மா நகருளானே!</line>
<number>25</number>
</verse>

<verse>
<line>போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன்;</line>
<line>தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன்;</line>
<line>காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன்; அது தன்னாலே</line>
<line>ஏதிலேன் அரங்கர்க்கு; எல்லே! என் செய்வான் தோன்றினேனே?</line>
<number>26</number>
</verse>

<verse>
<line>குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித்</line>
<line>தரங்க நீர் அடைக்கல் உற்ற சலம் இலா அணிலும் போலேன்;</line>
<line>மரங்கள் போல் வலிய நெஞ்சு வஞ்சனேன், நெஞ்சு தன்னால்</line>
<line>அரங்கனார்க்கு ஆட் செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே.</line>
<number>27</number>
</verse>

<verse>
<line>உம்பரால் அறியல் ஆகா ஒளியுளார், ஆனைக்கு ஆகிச்</line>
<line>செம் புலால் உண்டு வாழும் முதலைமேல் சீறி வந்தார்;</line>
<line>நம் பரம் ஆயது உண்டே? நாய்களோம் சிறுமை ஓரா</line>
<line>எம்பிராற்கு ஆட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே.</line>
<number>28</number>
</verse>

<verse>
<line>ஊர் இலேன், காணி இல்லை, உறவு மற்று ஒருவர் இல்லை;</line>
<line>பாரில் நின் பாத மூலம் பற்றிலேன்; பரம மூர்த்தி!</line>
<line>காரொளி வண்ணனே! என் கண்ணனே! கதறுகின்றேன்;</line>
<line>ஆர் உளர் களைகண்? அம்மா! அரங்க மா நகருளானே!</line>
<number>29</number>
</verse>

<verse>
<line>மனத்தில் ஓர் தூய்மை இல்லை, வாயில் ஓர் இன்சொல் இல்லை;</line>
<line>சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன்; வாளா</line>
<line>புனத்துழாய் மாலையானே! பொன்னி சூழ் திருவரங்கா!</line>
<line>எனக்கு இனிக் கதி என் சொல்லாய்? என்னை ஆளுடைய கோவே!</line>
<number>30</number>
</verse>

<verse>
<line>தவத்துளார் தம்மில் அல்லேன்; தனம் படைத்தாரில் அல்லேன்;</line>
<line>உவர்த்த நீர் போல எந்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்;</line>
<line>துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கு அறத் துரிசன் ஆனேன்;</line>
<line>அவத்தமே பிறவி தந்தாய், அரங்க மா நகருளானே!</line>
<number>31</number>
</verse>

<verse>
<line>ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திரு அரங்கந் தன்னுள்</line>
<line>கார்த் திரள் அனைய மேனிக் கண்ணனே! உன்னைக் காணும்</line>
<line>மார்க்கம் ஒன்று அறியமாட்டா மனிசரில் துரிசனாய</line>
<line>மூர்க்கனேன் வந்து நின்றேன்: மூர்க்கனேன், மூர்க்கனேனே.</line>
<number>32</number>
</verse>

<verse>
<line>மெய் எல்லாம் போக விட்டு, விரிகுழலாரிற் பட்டுப்</line>
<line>பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போழ்க்கனேன் வந்து நின்</line>
<line>ஐயனே! அரங்கனே! உன் அருள் என்னும் ஆசை தன்னால்</line>
<line>பொய்யனேன் வந்து நின்றேன்: பொய்யனேன், பொய்யனேனே.</line>
<number>33</number>
</verse>

<verse>
<line>உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லாக்</line>
<line>கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு</line>
<line>உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று</line>
<line>வெள்கிப்போய் என்னுள்ளே நான் விலவு அறச் சிரித்திட்டேனே.</line>
<number>34</number>
</verse>

<verse>
<line>தாவி அன்று உலகம் எல்லாம் தலைவிளாக்கொண்ட எந்தாய்!</line>
<line>சேவியேன் உன்னை அல்லால் சிக்கெனச் செங்கண் மாலே!</line>
<line>ஆவியே! அமுதே! எந்தன் ஆருயிர் அனைய எந்தாய்!</line>
<line>பாவியேன் உன்னை அல்லால்; பாவியேன், பாவியேனே.</line>
<number>35</number>
</verse>

<verse>
<line>மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே! மதுர ஆறே!</line>
<line>உழைக் கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு</line>
<line>உழைக்கின்றேற்கு, என்னை நோக்காது ஒழிவதே! உன்னை யன்றே</line>
<line>அழைக்கின்றேன், ஆதிமூர்த்தி! அரங்க நகருளானே!</line>
<number>36</number>
</verse>

<verse>
<line>தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திருவரங்கத்துள் ஓங்கும்</line>
<line>ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயும் ஆவார்?</line>
<line>எளியது ஒர் அருளும் அன்றே என் திறத்து? எம்பிரானார்</line>
<line>அளியன் நம் பையல் என்னார், அம்மவோ! கொடியவாறே!</line>
<number>37</number>
</verse>

<verse>
<line>தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திருவரங்கத்துள் ஓங்கும்</line>
<line>ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயும் ஆவார்?</line>
<line>எளியது ஒர் அருளும் அன்றே என் திறத்து? எம்பிரானார்</line>
<line>அளியன் நம் பையல் என்னார், அம்மவோ! கொடியவாறே!</line>
<number>37</number>
</verse>

<verse>
<line>மேம் பொருள் போக விட்டு, மெய்ம்மையை மிக உணர்ந்து,</line>
<line>ஆம் பரிசு அறிந்துகொண்டு, ஐம்புலன் அகத்து அடக்கிக்</line>
<line>காம்பு அறத் தலை சிரைத்து, உன் கடைத்தலை இருந்து வாழும்</line>
<line>சோம்பரை உகத்தி போலும்; சூழ் புனல் அரங்கத்தானே!</line>
<number>38</number>
</verse>

<verse>
<line>அடிமையிற் குடிமை இல்லா அயல் சதுப்பேதிமாரிற்</line>
<line>குடிமையிற் கடைமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்,</line>
<line>முடியினில் துளபம் வைத்தாய்! மொய் கழற்கு அன்பு செய்யும்</line>
<line>அடியரை உகத்தி போலும்; அரங்க மா நகருளானே!</line>
<number>39</number>
</verse>

<verse>
<line>திருமறுமார்வ! நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து</line>
<line>மருவிய மனத்தர் ஆகில், மா நிலத்து உயிர்கள் எல்லாம்</line>
<line>வெருவு உறக் கொன்று சுட்டிட்டு ஈட்டிய வினையரேலும்</line>
<line>அருவினைப் பயன துய்யார்; அரங்க மா நகருளானே!</line>
<number>40</number>
</verse>

<verse>
<line>வானுளார் அறியல் ஆகா வானவா என்பர் ஆகில்,</line>
<line>தேனுலாம் துளப மாலைச் சென்னியாய் என்பர் ஆகில்,</line>
<line>ஊனம் ஆயினகள் செய்யும் ஊனகாரகர்களேலும்</line>
<line>போனகம் செய்த சேடம் தருவரேல், புனிதம் அன்றே.</line>
<number>41</number>
</verse>

<verse>
<line>பழுது இலா ஒழுகல்-அற்றுப் பல சதுப்பேதிமார்கள்!</line>
<line>இழிகுலத்தவர்களேலும் எம் அடியார்கள் ஆகில்,</line>
<line>தொழுமின் நீர், கொடுமின், கொண்மின், என்று நின்னோடும் ஒக்க</line>
<line>வழிபட அருளினாய் போல்; மதில்-திருவரங்கத்தானே!</line>
<number>42</number>
</verse>

<verse>
<line>அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்</line>
<line>தமர்களிற் தலைவராய சாதி-அந்தணர்களேலும்</line>
<line>நுமர்களைப் பழிப்பர் ஆகில், நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே</line>
<line>அவர்கள்தாம் புலையர் போலும்; அரங்க மா நகருளானே!</line>
<number>43</number>
</verse>

<verse>
<line>பெண் உலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்</line>
<line>எண் இலா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப,</line>
<line>விண் உளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த</line>
<line>கண்ணறா! உன்னை என்னோ? களைகணாக் கருதுமாறே!</line>
<number>44</number>
</verse>

<verse>
<line>வள எழும் தவள மாட மதுரை மா நகரந் தன்னுள்</line>
<line>கவள மால் யானை கொன்ற கண்ணனை அரங்க-மாலைத்</line>
<line>துளவத் தொண்டு ஆய தொல் சீர்த் தொண்டரடிப் பொடி சொல்</line>
<line>இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே!</line>
<number>45</number>
<line>திருமாலை முற்றும்.</line>
</verse>

</padiyam>


</thirumozi>

