<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="prabandam.xsl"?>

<thirumozi>

<heading>
<author>ஸ்ரீ குலசேகரர் அருளிச்செய்த திருமொழி</author>
<auth-title> பெருமாள் திருமொழி</auth-title>
<title>திவ்யப் பிரபந்தம் (3/14)</title>
<number>3</number>
<total>10</total>
</heading>

<padiyam>

<title> அரங்கப்பெருமானை என்று கண்டு மகிழ்வேன் எனல்</title>
<number>1</number>


<verse>
<line> இருள் இரியச் சுடர்-மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த</line>
<line> அரவு-அரசப் பெருஞ் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை-அணையை மேவித்</line>
<line> திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக் கையால் அடி வருடப் பள்ளிகொள்ளும்</line>
<line> கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என் கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே!</line>
<number>1</number>
</verse>

<verse>
<line> வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த  செந்தீ</line>
<line> வீயாத மலர்ச் சென்னி விதானமே போல் மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன்கீழ் </line>
<line> காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்னமாலை, கடி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்</line>
<line> மாயோனை மணத்தூணே பற்றி நின்று என் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!</line>
<number>2</number>
</verse>

<verse>
<line> எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு</line>
<line> எம்மாடும் எழிற்கண்கள் எட்டினோடும் தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற  செம்பொந்</line>
<line> அம்மாந்தன் மலர்க் கமலக் கொப்பூழ் தோன்ற அணி-அரங்கத்து அரவணையிற்  பள்ளிகொள்ளும்</line>
<line> அம்மாந்தன் அடியிணைக் கீழ் அலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்றுகொலோ அணுகும்  நாளே!</line>
<number>3</number>
</verse>

<verse>
<line> மாவினை வாய் பிளந்து உகந்த மாலை, வேலை வண்ணனை, என் கண்ணனை, வன்  குன்றம் ஏந்தி</line>
<line> ஆவினை அன்று உயக் கொண்ட ஆயர்-ஏற்றை, அமரர்கள் தம் தலைவனை, அந் &gt; தமிழி இன்பப்</line>
<line> பாவினை, அவ் வடமொழியை, பற்று-அற்றார்கள் பயில் அரங்கத்து அரவணையிற்  பள்ளிகொள்ளும்</line>
<line> கோவினை, நா உற வழுத்தி எந்தன் கைகள் கொய்ம்மலர் தூய் என்றுகொலோ கூப்பும் நாளே!</line>
<number>4</number>
</verse>

<verse>
<line> இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி  ஏத்த,</line>
<line> துணையில்லாத் தொல் மறை நூல்-தோத்திரத்தால் தொல் மலர்க்கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த,</line>
<line> மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ மதில்-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்</line>
<line> மணிவண்ணன் அம்மானைக் கண்டுகொண்டு என் மலர்ச் சென்னி என்றுகொலோ வணங்கும் நாளே!</line>
<number>5</number>
</verse>

<verse>
<line> அளி மலர்மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை அமரர்கள் தம் குழுவும் அரம்பையரும் மற்றும்</line>
<line> தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும் உந்தித் திசை திசையில் மலர் தூவிச்  சென்று சேரும்</line>
<line> களி மலர் சேர் பொழில்-அரங்கத்து உரகம் ஏறிக் கண்வளரும் கடல்வண்ணக் கமலக் கண்ணும்</line>
<line> ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு என் உள்ளம்  என் உள்ளம் மிக என்றுகொலோ உருகும் நாளே!</line>
<number>6</number>
</verse>

<verse>
<line> மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி வன் புலன்கள் அடக்கி இடர்ப் பாரத் துன்பம்</line>
<line> துறந்து இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லாத் தொல் நெறிக்கண் நிலைநின்ற தொண்டரான</line>
<line> அறம் திகழும் மனத்தவர்தம் கதியை, பொன்னி அணி அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்</line>
<line> நிறம் திகழும் மாயோனை, கண்டு என் கண்கள் நீர் மல்க என்றுகொலோ நிற்கும் நாளே!</line>
<number>7</number>
</verse>

<verse>
<line> கோல் ஆர்ந்த நெடுநெஞ்சார்ங்கம் கூனற்சங்கம் கொலையாழி கொடுந்தண்டு கொற்ற ஒள் வாள்</line>
<line> கால்ஆர்ந்த கதிக்கருடன் என்னும் வென்றிக் கடும்பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப,</line>
<line> சேல் ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்</line>
<line> மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி வல்வினையேன் என்றுகொலோ வாழும் நாளே!</line>
<number>8</number>
</verse>

<verse>
<line> தூராத மனக்காதல்-தொண்டர் தங்கள் குழாம் குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி</line>
<line> ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும்</line>
<line> சீர் ஆர்ந்த முழவு-ஓசை பரவை காட்டும் திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்</line>
<line> போர் ஆழி அம்மானைக் கண்டு துள்ளிப் பூதலத்தில் என்றுகொலோ புரளும் நாளே!</line>
<number>9</number>
</verse>

<verse>
<line> வன்பெரு வானகம் உய்ய, அமரர் உய்ய, மண் உய்ய, மண்-உலகில் மனிசர் உய்ய,</line>
<line> துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லாச் சுகம் வளர அகம் மகிழும் தொண்டர் வாழ,</line>
<line> அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளிகொள்ளும் அணி-அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்</line>
<line> இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும் இசைந்து உடனே என்றுகொலோ இருக்கும் நாளே!</line>
<number>10</number>
</verse>

<verse>
<line> திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவுபாட்டுத் திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்</line>
<line> கடல் விளங்கு கருமேனி அம்மான் தன்னைக் கண்ணாரக் கண்டு உகக்கும் காதல்தன்னால்</line>
<line> குடை விளங்கு விறல்-தானைக் கொற்ற ஒள் வாள் கூடலர்கோன் கொடைக் குலசேகரன் சொற் செய்த</line>
<line> நடை விளங்கு தமிழ்-மாலை பத்தும் வல்லார் நலந்திகழ் நாரணநடிக்கீழ் நண்ணுவாரே.</line>
<number>11</number>
</verse>

</padiyam>


</thirumozi>

