<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="prabandam.xsl"?>

<thirumozi>

<heading>
<author>ஸ்ரீ ஆண்டாள் அருளிசெய்த திருமொழி</author>
<title>திவ்யப் பிரபந்தம் (2/14)</title>
<number>2</number>
<total>14</total>
</heading>

<padiyam>

<title> திருப்பாவை</title>
<number>1</number>

<verse>
<line> மார்கழித் திங்கள் மதிநிரைந்த நன்னாளால்;</line>
<line> நீராடப் போதுவீர் போதுமினோ,நேரிழையீர்!</line>
<line> சீ மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!</line>
<line> கூர் வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன்குமரன்</line>
<line> ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்</line>
<line> கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்,</line>
<line> நாராயணனே நமக்கே பறை தருவான்;</line>
<line> பாரோர் புகழப் படிந்து-ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> வைத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்</line>
<line> செய்யும் கிரிசைகள் கேளீரோ:பார்கடலுள்</line>
<line> பையிற் துயின்ற பரமன் அடி பாடி,</line>
<line> நெய் உண்ணேம், பல் உண்ணேம், நாட்காலே நீராடி,</line>
<line> மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,</line>
<line> செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,</line>
<line> ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி</line>
<line> உய்யுமாறு எண்ணி உகந்து-ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி</line>
<line> நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்,</line>
<line> தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து</line>
<line> ஒங்கு பெருஞ் செந்நெலூடு கயலுகளப்</line>
<line> பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்</line>
<line> தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி</line>
<line> வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்கள்:</line>
<line> நீங்காத செல்வம் நிறைந்து- ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்;</line>
<line> ஆழியுள் புக்கு, முகந்துதொடு, ஆர்த்து ஏறி,</line>
<line> ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து,</line>
<line> பாழியந் தோள் உடைப் பற்பநாபன்கையில்</line>
<line> ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து,</line>
<line> தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்</line>
<line> வாழ உலகினில் பெய்திடய்: நாங்களும்</line>
<line> மார்கழி நீர் ஆட மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்</line>
<line> தூய பெருநீர் யமுனைத்துறைவனை</line>
<line> ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்</line>
<line> தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது,</line>
<line> வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,</line>
<line> போய பிழையும் புகுதருவன் நின்ரனவும்</line>
<line> தீயினில் தூசு ஆகும்; செப்பு-ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> புள்ளும் சிலம்பின காண், புள்-அரையன் கோயிலில்</line>
<line> வெள்ளை விளை சங்கின்பேர்-அரவம் கேட்டிலையோ?</line>
<line> பிள்ளாய்! எழுந்திரய், பேய்முலை நஞ்சு உண்டு</line>
<line> கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி</line>
<line> வெள்ளத்து அரவிற் துயில் அமர்ந்த வித்தினை</line>
<line> உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்</line>
<line> மெள்ள எழுந்து அரி என்ற பேர்-அரவம்</line>
<line> உள்ளம் புகுந்து குளிர்ந்து-எலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> கீசு கீசு என்று எங்கும் ஆனைசாத்தன் கலந்து</line>
<line> பேசின பேச்சு- அரவம் கேட்ட்லையோ? பேய்ப் பெண்ணே</line>
<line> காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து</line>
<line> வாச நறுங் குழல் ஆய்ச்சியர் மத்தினால்</line>
<line> ஓசை படுத்த தயிர்-அரவம் கேட்டிலையோ?</line>
<line> நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன்மூர்த்தி</line>
<line> கேசவனைப் பாடவும் நீ கேட்டெ கிடாத்தியோ?</line>
<line> தேசம் உடையாய்! திற-ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> கீவானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு</line>
<line> மேய்வான் பரந்தன் காண்; மிக்கு உள்ள பிள்ளைகளும்</line>
<line> போவான் போகின்றரைப் போகாமல் காத்து உன்னைக்</line>
<line> கூவுவான் வந்து நின்றேம்; கோதுகலம் உடைய</line>
<line> மா வாய் பிளந்தானை மல்லரை மாட்டித்ய</line>
<line> தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்,</line>
<line> ஆவா என்று ஆராய்ந்து அருள்- ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கு எரியத்</line>
<line> தூமம் கமழத் துயில்-அணைமேல்கண்வளரும்</line>
<line> மாமான் மகளே! மணிக் கதவம் தள் திறவாய்,</line>
<line> மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்</line>
<line> ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ?</line>
<line> எமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?</line>
<line> மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று</line>
<line> நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!</line>
<line> மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?</line>
<line> நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மா</line>
<line> போற்றப் பறை தரும் புண்ணியனால்; பண்டு ஒருநாள்</line>
<line> கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும்</line>
<line> தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?</line>
<line> ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!</line>
<line> தேற்றமாய் வந்து திற-ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து</line>
<line> செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும்</line>
<line> குற்றம் ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே!</line>
<line> புற்றரவு-அல்குற் புனமயிலே! போதராய்,</line>
<line> சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்</line>
<line> முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாடச்</line>
<line> சிற்றாதே பேசாதே, செல்வப் பெண்டாட்டி! நீ</line>
<line> எற்றுக்கு உறங்கும் பொருள்?-ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> கனைத்து இளங் கற்று- எருமை கன்றுக்கு இரங்கி</line>
<line> நினைத்து முலை வழியே நின்று பால் சோர</line>
<line> நனைத்து இல்லம் சேறு ஆக்கும் நற் செல்வன் தங்காய்!</line>
<line> பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி,</line>
<line> சினத்தினால் தென் இலங்கைக் கோமானை செற்ற</line>
<line> மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்;</line>
<line> இனித் தான் எழுந்திராய், ஈது என்ன பேர் உறக்கம்!</line>
<line> அனைத்து இல்லத்தாரும் அறிந்து-ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்</line>
<line> கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைபாடிப் போய்</line>
<line> பிள்ளைகள் எல்லாரும் பாவைக்-களம் புக்கார்;</line>
<line> வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று;</line>
<line> புள்ளும் சிலம்பின காண்; போது-அரிக் கண்ணினாய்!</line>
<line> குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே</line>
<line> பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்</line>
<line> கள்ளம் தவிர்ந்து கலந்து-ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்</line>
<line> செங்கழுநீர் வாய் நெக்ழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்;</line>
<line> செங்கற்பொடிக் கூறை வெண்பாற் தவத்தவர்</line>
<line> தங்கள் திருக்கோயிற் சங்கிடுவான் போதந்தார்;</line>
<line> எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்</line>
<line> நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!</line>
<line> சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்</line>
<line> பங்கயக் கண்ணானைப் பாடு-ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!</line>
<line> சில் என்று அழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;</line>
<line> வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாய் அறிதும்;</line>
<line> வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக!</line>
<line> ஒல்லை நீ போதாய், உனக்கு என்ன வேறு உடையை?</line>
<line> எல்லாரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்:</line>
<line> வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க</line>
<line> வல்லானை மாயனைப் பாடு-ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய</line>
<line> கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண</line>
<line> வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்,</line>
<line> ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை</line>
<line> மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;</line>
<line> தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;</line>
<line> வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ</line>
<line> நேய நிலைக் கதவம் நீக்கு-ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்</line>
<line> எம்பெருமன் நந்தகோபாலா! எழுந்திராய்;</line>
<line> கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே!</line>
<line> எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்;</line>
<line> அம்பரம் ஊடு அறுத்து ஒங்கி உலகு அளந்த</line>
<line> உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்;</line>
<line> செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!</line>
<line> உம்பியும் நீயும் உகந்து-ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> உந்து மத களிற்றன் ஓடாத தோள்-வலியன்</line>
<line> நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!</line>
<line> கந்தம் கமழும் குழலீ! கடை திறல்வாய்;</line>
<line> வந்து எங்கும் கோழி அழைத்தன காண், மாதவிப்</line>
<line> பந்தர்மேல் பல்கால் குயில்-இனங்கள் கூவின காண்,</line>
<line> பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்</line>
<line> செந்தாமைக் கையால் சிர் ஆர் வ்ளை ஒலிப்ப</line>
<line> வந்து திறவாய் மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> குத்து விளக்கு எரியக் கோட்டுக்காற் கட்டில்மேல்</line>
<line> மெத்தென்ற பஞ்ச-சயனத்தின் மேல் ஏறிக்</line>
<line> கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்</line>
<line> வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய்திறவாய்;</line>
<line> மைத்து டடங்கண்ணியை! நீ உன் மணாவளை</line>
<line> எத்தனை போதும் துயில் எழ ஓட்டாய் காண்,</line>
<line> எத்தனை யேலும் பிரிவு ஆற்றகில்லாயால்;</line>
<line> தத்துவம், அன்று தகவு-ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று</line>
<line> கப்பன் தவிர்க்கும் கலியே! துயில் எழாய்;</line>
<line> செப்பம் உடையாய்! திறல் உடையய்! செற்றார்க்கு</line>
<line> செப்பம் கொடுக்கும் விமலா! துயில் எழாய்;</line>
<line> செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்</line>
<line> நப்பின்னை நங்காய்! திருவே! துயில் எழாய்;</line>
<line> உக்கமும் தட்டோ ளியும் தந்து உன் மணாளனை</line>
<line> இப்போதே எம்மை நீர் ஆட்டு_ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப</line>
<line> மாற்றாத்தே பால் சொரியும் வள்ளற் பெரும் பசுக்கள்</line>
<line> ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;</line>
<line> ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்</line>
<line> தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய்;</line>
<line> மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்</line>
<line> ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே</line>
<line> போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து-ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான</line>
<line> பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே</line>
<line> சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்;</line>
<line> கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப் போலே</line>
<line> செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?</line>
<line> திங்களூம் ஆதித்தியனும் எழுந்தாற்போல்</line>
<line> அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்,</line>
<line> எங்கள்மேல் சாபம் இழிந்து-ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்</line>
<line> சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து</line>
<line> வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி</line>
<line> மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்</line>
<line> போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்</line>
<line> கோயில் நின்று இங்ஙனே போந்தருளி, கோப்பு உடைய</line>
<line> சீரிய சிங்காசனத்து இருந்து, யாம் வந்த</line>
<line> காரியம் ஆராய்ந்து அருள்-ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> அன்று இவ் உலகம் அளந்தாய்! அடி போற்றி!</line>
<line> சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி!</line>
<line> பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!</line>
<line> கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி!</line>
<line> குன்று குடையா எடுத்தாய்! குணம் போற்றி!</line>
<line> வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி!</line>
<line> என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்</line>
<line> இன்று யாம் வந்தோம் இரங்கு-ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> ஒருத்தி மகனாப் பிறந்து, ஓர் இரவில்</line>
<line> ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்</line>
<line> தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த</line>
<line> கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்</line>
<line> நெருப்பு என்ன நின்ற நெடுமாலே! உன்னை</line>
<line> அருத்தித்து வந்தோம்; பறை தருதி யாகில்,</line>
<line> திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி</line>
<line> வருத்தமுந் திர்ந்து மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> மாலே! மணிவண்ணா! மார்கழி நீர் ஆடுவான்</line>
<line> மேலையார் செய்வனகள் வேண்டுவன, கேட்டியேல்:</line>
<line> ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன</line>
<line> பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே</line>
<line> போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே;</line>
<line> சாலப் பெரும் பறையே, பல்லாண்டு இசைப்பாரே,</line>
<line> கோல விளாக்கே, கொடியே, விதானமே;</line>
<line> ஆலின் இலையாய்! அருள்-எலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! உந்தன்னைப்</line>
<line> பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம்:</line>
<line> நாடு புகழும் பரிசினால் நன்றாகச்</line>
<line> சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப் பூவே,</line>
<line> பாடகமே, என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம்;</line>
<line> ஆடை உடுப்போம், அதன்பின்னே பாற் சோறு</line>
<line> மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்</line>
<line> கூடியிருந்து குளிர்ந்து-ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> கறவைகள் பின் சென்று காஅனம் சேர்ந்து உண்போம்,</line>
<line> அறிவு ஒன்றும் இல்லாத அய்க் குலத்து உந்தன்னைப்</line>
<line> பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;</line>
<line> குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா! உந்தன்னோடு</line>
<line> உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது;</line>
<line> அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னைச்</line>
<line> சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே</line>
<line> இறைவா! நீ தாராய் பறை- ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து, உன்</line>
<line> பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்:</line>
<line> பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்து நீ</line>
<line> குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;</line>
<line> இற்றைப் பறைக்கொள்வான் அன்று காண் கோவிந்தா!</line>
<line> எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உந்தன்னோடு</line>
<line> உற்றோமே ஆவாஓ; உன்க்கே நாம் ஆட்செய்வாஓம்;</line>
<line> மற்றை நம் காமங்கள் மாற்று-ஏலோர் எம்பாவாய்.</line>
</verse>

<verse>
<line> வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்</line>
<line> திங்கள்-திருமுகத்துச் சேயிழையார் சேன்று இறைஞ்சி</line>
<line> அங்குப் பறைகொண்ட-ஆற்றை அணி புதுவைப்</line>
<line> பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான்கோதை சொன்ன</line>
<line> சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே</line>
<line> இங்கு இப் பரிசு உரைப்பார் ஏரிரண்டு மால் வரைத் தோள்</line>
<line> செங்கண்-திருமுகத்துச் செல்வத் திருமாலல்</line>
<line> எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.</line>
<line> திருப்பாவை முற்றும்.</line>
</verse>

</padiyam>


</thirumozi>

